Powered By Blogger

27 டிசம்பர் 2008

வடலூர் வள்ளார் இராமலிங்க அடிகள் போதித்த பசித்திரு

பசித்திரு:-
பசித்திரு, தனித்திரு விழித்திரு என்னும் தாரக் மந்திரத்தை வடலூர் வள்ளார்பிரானகிய இராமலிங்க அடிகள் முதன் முதலில் மக்களுக்கு போதித்தார். அதன் பின்னர்தான் அருளார்கள் பலரும் இதனை எடுத்தியம்பமுற்பட்டனர். ஆன்மீக நாட்டம் கொண்டோர் அதாவது இறைவனது திருவடிகளைப் பற்றி கொள்ளவேண்டும். தனித்திருக்க வேண்டும். விழித்திருக்க வேண்டும் எனப் பொருள் கூறப்பெறுகிறது.இவ்வாறு பசித்து, தனித்து , விழித்து இருந்தால் பதவி கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. அதாவது சிவபதவியோ, வைகுண்ட பதவியோ கிடைக்கும் எனவும் கூறப் பெறுகிறது.இவ்வாறு இருந்தவர்கள் இப்பதவிகளைப் பெற்றார்களா என்று தெரியவில்லை. பசித்திரு, விழித்திரு, தனித்திரு எனும் சொற்களுக்குரிய உண்மைப் பொருளை உணர முற்படுவதே நமது எண்ணமாகும். பசித்திரு என்பது பட்டினி கிடப்பது அன்று. வயிற்றைக் காயப்போடுதல் மிகச்சிறந்தமருந்தாகும் என்பார்கள் சித்த வைத்திய, ஆயுர்வேத மருத்துவர்கள். இல்லாமையினால் பட்டினி கிடப்பதற்கும் - எல்லாமிருந்து உண்ணாமல் நோன்பு நோற்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இது உடலைப் பொருத்த விஷயமன்று.உணர்வைப் பொருத்தது. மனதின் ஆளுமையில் அடங்குவது. எண்ணங்களின் தொகுதிதான் மனம். ஏதும் இல்லாமையினால் பட்டினி கிடப்பது இறப்பிற்கு சமமாகும். எல்லாம் இருந்தும் புலன் அடக்க, உணர்ச்சி அடங்கி, உணர்வு விழித்து உயிர் தழைக்க இருக்கும் நோன்பிற்கு [விரதம்] என்பதே உண்ணா நோன்பு. இதுவே பசித்து இருத்தல். இவ்வாறு இருத்தல் உடலுக்கு நல்லது. ஊனுடம்பு ஆலயம், உடல் நலமானால் உள்ளம்வளமாகும். உள்ளம் வளமானால் உயிர் தளிர்க்கும். பசித்திருத்தல் உடல் தொடர்புடையது. இந்நிலையில் உடலுக்கு நன்மை பயக்கும். மிதமான உணவே நீண்ட ஆயுளுக்கும், நோயற்ற வாழ்வுக்கும் வழியாகும்.
நாள் தோறும் ஒருவர் பசித்திருந்து - பசித்திருப்பது அறமாகிய உண்ணா நோன்பினை ஒருவர் மேற்கொண்டால் உடல் நிலை என்னவாகும்? விரைவில் இந்த உடல் அழிந்து இறந்து விடுவார். இவ்வாறு உடல் அழிந்துவிடும் ஒன்றையா ஆன்றோர்களும், சித்தர்பெரியோர்களும் சொல்லியிருப்பார்கள். குரு இட்டும், தொட்டும், சுட்டிக்காட்டாத வித்தை கைவசம் ஆகாது என்பார்கள். குரு வழி செவிச் செல்வத்தைப் பெறாதவர்கள் ஆன்மீகத்தில் அதன் எல்லையை அடையமுடியாது. குரு தயவின்றி நடுக்கண் புருவப்பூட்டுத் திறக்காது. எனவே குருவேசிவம். மெய்வழிச் செல்லும் மெய்க்குரு முன்னிலையில் சீடன் பதித்திருக்கவேண்டும். ஏனெனில் குரு ஞானச் செல்வத்தை வாரி வழங்கும்போது அதனைச் செவி வாயாக, நெஞ்சில் கொள்ளுவதற்கு உடல் பசித்திருக்க வேண்டும். பசித்திருந்து ஞானத்தைக் கேட்க வேண்டும்.உடல் தள்ர்ச்சியுறாமல் இருக்க அரை வயிறுஉண்டால் போதும். அபோதுதான் புலன்கள் விழிப்போடு ஒருமைப்பட்ட மனத்தோடும், ஞானச் செல்வத்தைச் செவிமடுக்கும். எனவே பசித்திருத்தல் என்பது இல்லாமையினால்பட்டினி கிடப்பது அன்று. சில குறிக்கோள்களை முன்வைத்து உண்ணா நோன்புஇருத்தலும் அன்று.ஞானச் செல்வத்தைச் செவிவழி அருந்திட ஞானப்பசி மூதுர உடல் பசி மறந்து வாய்மூடிஇரு செவி திறந்து கேட்டிருக்கும் நிலையே பசித்திருத்தல். குருவின் உபதேசத்தால் மெய்யாகிய அறிவைக் காட்டித் தருகிற போது இதுவரை மன அறிவால் படித்தவை,கேட்டவை, உணர்ந்தவை அனைத்தும் மெய்யைக் காண, அறிய, உணரத்தடையாக அமையும். எனவே யதார்த்த உள்ளத்தோடு செவி மூலமாக ஞானத்தைப் பருக, கேட்கவேண்டும். பசித்திருக்கும் ஞானப் பசியும் இதுவேயாகும்.

பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை

1. வாழ்க்கை ஒரு சவால்
அதனை சந்தியுங்கள்.

2. வாழ்க்கை ஒரு பரிசு
அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.

3. வாழ்க்கை ஒரு சாகசப் பயணம்
அதனை மேற்கொள்ளுங்கள்.

4. வாழ்க்கை ஒரு சோகம்
அதனை கடந்து வாருங்கள்.

5. வாழ்க்கை ஒரு துயரம்
அதனை தாங்கிக் கொள்ளுங்கள்.

6. வாழ்க்கை ஒரு கடமை
அதனை நிறைவேற்றுகள்.

7. வாழ்க்கை ஒரு விளையாட்டு
அதனை விளையாடுங்கள்.

8. வாழ்க்கை ஒரு வினோதம்
அதனை கண்டறியுங்கள்.

9. வாழ்க்கை ஒரு பாடல்
அதனை பாடுங்கள்.

10. வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம்
அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

11. வாழ்க்கை ஒரு பயணம்
அதனை புகழுடன் முடித்துவிடுங்கள்.

12. வாழ்க்கை ஒரு உறுதிமொழி
அதனை நிறைவேற்றுங்கள்.

13. வாழ்க்கை ஒரு காதல்
அதனை அனுபவியுங்கள்.

14. வாழ்க்கை ஒரு அழகு
அதனை ஆராதியுங்கள்.

15. வாழ்க்கை ஒரு உணர்வு
அதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

16. வாழ்க்கை ஒரு போராட்டம்
அதனை எதிர்கொள்ளுங்கள்.

17. வாழ்க்கை ஒரு குழப்பம்
அதனை விடைகாணுங்கள்.

18. வாழ்க்கை ஒரு இலக்கு
அதனை எட்டிப் பிடியுங்கள்.

ஓம் என்னும் பிரணவம்

ஓம் என்னும் பிரணவம்:-
எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே. அந்தஒலியே பிரவணம் எனப்படும். வாயைத் திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வெளியிடும்போது ‘ஓ’ என்ற உருவமற்ற ஒலி பிறக்கின்றது. அவ்வொலியின் கடைசியில் வாயை மூடும்போது ‘ம்’ என்ற ஒலி தோன்றுகிறது. இந்த ஓம் - ஓம் என்ற ஒலியையே பிரவணம் என்று கூறுவர். உலகம் தோன்றுவதற்கு முன்பு பிரவண ஒலியே நிலவி இருந்தது என்றும் பிரணவத்திலிருந்து விந்துவும் விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன. ஓம் என்பது பிரணவ மந்திரமாகும்இது அ + உ+ ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே ‘ஓம்’. மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது.மனித வடிவமும் அருள் வடிவம்தான்.ஓம் என்ற பிரவணன்"அ" என்பது எட்டும்"உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம்.உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்த்தாவது போல் உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு.அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது.மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். [உள் மூச்சு வெளி மூச்சு ]" உ எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு." ம் ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும்அத்துடன் " ஓம் " என்ற பிரணவம் தத்துவத்துடன் விளங்கும்.அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை x x = .

இதனை சிலர் இப்படியும் கூறுவார்கள்:
அ என்பது முதல்வனான சிவனையும் உ என்பது உமையவள் எனப்படும் சக்தியினையும் சிவனும் சக்தியும் இணைந்த சிவசக்தியினையும் குறிக்கும்.இச்சிவசக்திவடிவமே சொரூபமே வரி வடிவில் “ஓ” என பிள்ளையார்சுழியாகவும் “உ” எனவும் உள்ளது. வழிப்படும் உருவவாக “சிவலிங்கமும்” ஒலி எழுத்தாக சொல்லும்போது ஓங்காரம், பிரணவம் என்று ஆன்றோர்களும் சான்றோர்களும் சொல்கிறார்கள்.

இதனை திருமூலர் திருமந்திரத்தில் :
" ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம் ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம் ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே "முதல் வரிக்கு ஓம் என்பதை உச்சரிக்கும் பொழுது ஒரே சொல்லாகவும் இரண்டாம் வரிக்கு அன்னையின் கருவில் பிண்டம் தரிக்கும் பொழுதும் அது தாயின் வயிற்றிற்குள் காணும் காட்சி ஓம் என்றே தோன்றும் மூன்றாம் வரிக்கு ஒரே உச்சரிப்பாயினும் மூன்றெழுத்தையும் அதன்விளக்கத்தையும் பேதங்கள் பலவாறாகவும் நான்காவது வரிக்கு இதைசதா உச்சரித்து தியானிப்பதால் முக்தி - உயர்ந்த சித்தியும் கிட்டும் என்பதை பாடல் நமக்கு உணர்த்துகிறது.முதல் எழுத்து:"ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்அருவுருவாய் நின்ற பாசிவமுமாகிதோதியென்ற சிவனிடமாய்ச் சத்தியாகித்தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி "என்னும் சுப்பிரமணிய ஞானத்திலிருந்து அறியலாம்.

சட்டை முனியும் தனதுசூத்திரத்தில் :
" ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சுஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு "- என்றும் குறிப்பிட்டுள்ளார். சிவன் சக்தி சிவசக்தி மூலத்தைக் குறிக்கும் ஓங்கார மந்திரத்திற்க்கும்முதல் எழுத்தாகவும் இதுவே " அ " உள்ளது. அத்துடன் எழுத்துக்களைக்குறிக்குங்கால் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் சமஸ்கிருதம் முதலிய மொழியிலும் இதுவே முதல் எழுத்து.
"அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு" என்ற வள்ளுவர் முதல் குறள் மூலமும்.
அகஸ்த்திய பெருமான் தனது மெய்ஞான சுத்திரத்தில் அவ்வாகி உவ்வாகி மவ்வுமாகி ஐம்பத்தோ ரெழுத்துக்கு தியாகி" "அகாமுதல் அவ்வைமுத்தும் தியாகும் அறிந்தோர்க்கு இதிலேதான் வெளியதாகும்" என்று பாடியுள்ளத்தின் மூலம் நன்கு அறியலாம்.
உருவமும்- உடலும்.உடம்பை உருவைக் குறிக்கும் போது ஏற்கனவே குறித்தப்பிட்டபடி இதுவே கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக் காரணமாய் விளங்குகிறது. ஆண்டவன் அவ்வெழுத்தின் உருவமாய் உடம்பினுள் அமைந்துள்ளார்என்பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களது சூத்திரம் மூலம் விளங்கும்.

"கண்டது அவ்வென்னுங் கடைய தோரட்சாம் பிண்டத்துக் குற்பத்தி பிறக்கு மிதிலே"- மச்சைமுனி தீட்சை ஞானம்
"உந்தியினுள்ளெ அவ்வும் உவ்வுமாய் மவ்வுமாகிவிந்துவாய் நாதமாகி விளங்கிய சோதிதன்னை "- அகஸ்தியர் முதுமொழி ஞானம்.
மேலும் இது வாயைத் திறந்தவுடன் நாக்கு அல்லது மேல் வாயைத்தீண்டாமலேயே தொண்டையின் மூலமாய் பிறக்கும் ஓசை பேசும் போது உண்டாகும் எல்லா ஒலியையும் விட மிகவும் இயற்கையானது.

இது பற்றி யூகிமுனி தனது வைத்திய சிந்தாமணில்::;
"அவ்வென்னும் அட்சாத்தில் நாடிதோன்றும்அந்நாடி தானின்று தத்துவந் தோன்றும்எவ்வென்னு மெலும்பு தசை புடை நரம்பும்ஈலிட்டு பழுவோடிரண்டு கொங்கையுமாம் முவ்வென்று முட்டுக்கால் விளையீரெட்டாம் முட்டியமைத் தங்ஙனே யோருருமாக்கி"என்று கூறியுள்ளதன் மூலம் உருவம் உடம்பிற்கும் இதுவே முதல்காரணமென நன்கு தெளிந்துணரலாம். ஓங்காரம் பிரவணம். இது எல்லா எழுத்து ஒலிகட்கும் முதலாக விருந்துஅகத்தும், புறத்தும் இயற்கையாய் ஒலிக்கும் ஓசை. இது உந்தியின் கீழ் தங்கிநிற்கும். இதை விளக்கும்படி திருமூலர் ஓங்காரம் உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும்நீங்கா வகாரமும் நீள் கண்டத் தாயிடும்" என்று கூறியுள்ளார். ஓங்காரத்தி தத்துவம் அ உ ம் எனமித்து ஒலி எழுப்புவது. அகாவொலி முதற்பிரிந்து படைத்தற் தொழிலையும், உகாரவொலி பின்தோன்றிக் காத்தல் தொழிலையும் மகாரவொலி முடிவாதலின் அழித்தற்தொழிலையும் ஆக முத்தொழிலையும் ஒருங்கேஇணைத்து அடக்கி நிற்கும்.
ஓம் எனும் தாரக மந்திரத்தை தனிமையாக இருந்து ஏகாந்த தியானம்செய்தால் இதன் பலன் அதிகம். ஐம்புலன்களின் தொழில்கள் இயக்கம்அடைந்து மனது நிலைபெறும். ஐம்புலக் கதவு அடைபடும். தன்னையும்,உலகையும் மறந்து நிற்க சாபாசங்கள் மறந்து மனம் நிலைப்படும். குறுகிக் கிடந்த மனம் விசாலமடையும். மெய்ஞான விசாரணை விளைந்து அதனால் வாழ்க்கையும் வேதனைகளும் இல்லாத ஒன்றாகிவிடும்.இந்த விரிந்த அண்டப்பார்வை உண்டாகும் "ஓம்" என தியானிப்பதால் அநேக சித்திகள் கைகூடும். அதனால் ஒழுக்கம் ஏற்பட்டு உண்மை அறிவு இன்னதென்று நன்கு நமக்கு விளங்கும். இதன் மூலம் ஒளியை தரிசித்து மனத்திருப்தி மெய் முகம் ஆகியவற்றில்ஒரு தெளிந்த பிரகாசமிக்க ஒளி அறிவு உயர்ந்து மற்றோருக்கு வழிகாட்டும்தன்மை நீங்களும் காணலாம். ஆனால் முயன்றால் நிச்சயம் சாதித்துவிடலாம்.ஒரே சமயத்தில் மனதின் வெவ்வேறு ஓட்டங்களை நாம் விரும்பிய பாதைகளில் செல்லுமாறு செய்வதுதான் அடிப்படையானது. அப்படிஒரு சாதனையைப் பழக்கப் படுத்திக்கொள்ளும்போது ஒரே நேரத்தில் மூன்று நான்கு காரியங்களிலாவது மனதை கவனத்தைச் செலுத்தலாம். வேகமாக சிந்திக்கலாம். சிந்தனையின் பல படிகளைத் தாண்டி முடிபுகளை விரைவாக அடையலாம். போன்றவை எளிதானவைதானே! பலர் காயகல்பம் பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள். இதைஉண்டவர்கள் நரை திரை மாறி பொன்போல் உடல் ஒளிர்ந்து – சாவில்லாது என்றும் இளமையுடன் வாழலாம் என்பர்கள். ஆயினும் அந்த காயகல்பம் கிடைப்பது அரிது. இருப்பினும் நாம் காயகல்பம் பெற ஒரு வழி உண்டு. அதிகாலை எழுந்ததும் இரவில் படுக்கபோகும் பொழுதும் நாள் தவறாது பத்து நிமிட மணித்துளிகள் “ஓம்” என்னும் மந்திரத்தை மனதால் உச்சரிக்கவேண்டும். உச்சரிக்கும் போது நமது மூக்கின் வலப்பகுதி துவார வழியாககாற்றை சுவாசித்து இடப்பக்க மூக்குத் துவார வழியாக காற்றை வெளியிடவேண்டும்.
இப்படி சூரிய பகுதியில் உஷ்ணமாக உள்ள காற்றை சந்திரப்பகுதியில்குளிர்ச்சிப்படுத்தி வெளியேற்றும் பொழுது “ஓம்” என்ற மந்திரத்தை மனதால்நினைந்தவாறு தொடர்ந்து செய்து வரவேண்டும். இங்ஙனம் வெளிச்செல்லும் பிராணன்குறைந்து குறைந்து இறுதியில் உள்ளேயே சுழலத் தொடங்கும். உள் சுழற்சியால்மூலாதாரத்தில் பாம்பு வடிவில் உறங்கிக் கொண்டுடிருப்பதாக சொல்லப்படும் குண்டலி அல்லது குண்டலினி என்னும் சக்தி எழுப்பும். குண்டலியும் அடியுண்ட நாகம் போல் ஓசையுடன் எழும். இவ்வாறு எழும்பும் குண்டலினி ஆறு தரங்களில் பொருந்தி சகஸ்ராரத்தில் சென்று அமுதமாக மாறிக் கீழ்வரும். சித்தர்கள் விந்து விட்டவன் நெந்து கெடுவான் என்பார்கள். காரணம் இந்த விந்துதான் பிரணாயத்தின் மூலம் குண்டலி வழி சகஸ்ராரத்தில் அடைகிறது. மேல் ஏறினால் பேரின்பம். கீழ் இறங்கினால் சிற்றின்பம். யோகியர் நாவை மடித்து இதனை உண்ணுவார். இந்த ஒரு சொட்டு அமுதம் சுவைத்தால் பசி தாகம் தூக்கம் இல்லாது பன்னிரண்டு ஆண்டுகள் தவமிருக்கலாம். அதுவே சிவநீர் என்பார்கள். இதனை விழுங்கினால் நாமும் காயசித்தி பலனை அடையலாம்.

இதனை திருமூலர் :
"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லைகாற்றைப் பிடிக்கும் கணக்கறி வாள்ர்க்குக்கூற்றை உதைக்கும் குறியது வாமே " - என்கிறார்.இருகாலும் என்பது இரு காற்று வழி. இடகலை பிங்கலை. அவ்வாறு இரண்டாகப்பிரிக்காது இரு வழியாகவும் மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கிப்புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு காற்றை முறையாக ஏற்றிஇறக்கும் கணக்கை இவ்வுகத்தார் அறியவில்லை. அவ்வாறு அறிந்தவர்கள் எமனைஎதிர்த்து உதைக்கும் ஆற்றல் அறிந்தவர்கள். வாழும் கலை என்று மனிதரை நீண்ட நாள் வாழ வைக்கும் கலையினை நம் பண்டைப் பெருமைக்குரிய சித்தர்கள் 'தாம் பெற்ற இன்பம் இவ்வையகம்பெறுக என்ற நோக்கில் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.காயசித்தியின் பெருமையினை காகபுசண்டர் பாடலைக் காண்போம் :
பாரப்பா பன்னிரண்டு முடிந்துதானால் பாலகன் போலொரு வயது தானுமாச்சுநேரப்பா இருபத்தி நான்கு சென்றால் நேர்மையுள்ள வயது மீரண்டாகும் சீரப்பா முப்பத்தி ஆறுமானால் சிறப்பாக மூன்று வயதாச்சுதப்போதாரப்பா பன்னிரண்டுக்கோர் வயதாய்த்தான் பெருக்கி வயததுவை எண்ணிக்கொள்ளே.... ஒன்றில்லாமல் ஒன்றிலில்லை. இதனை மெய்பிக்கவே சிவனும் - சக்தியும். உலக மாந்தர்களும் அவ்வாறு எண்ணி ஒழுகல் வேண்டும். ஆணும் - பெண்ணும்சேர்ந்ததே வாழ்வு. வாழ்வில் இன்ப - துன்பம் எல்லாவற்றிலும் இருவருக்கும் சமபங்கு உண்டு என்பதை மெய்பிக்கவே விளக்கவே அர்த்தநாரீஸ்வரர் உருவமாக சரிபாதி உடல்.

23 டிசம்பர் 2008

மகாகவி பாரதியின் - தேடிச் சோறுநிதந் தின்று

தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி –
மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்
செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக்
கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே -
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ? நின்னைச் சில வரங்கள்
கேட்பேன் - அவைநேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்மூளாதழிந்திடுதல்
வேண்டும் - இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங்
கவலையறச் செய்து - மதிதன்னை மிகத் தெளிவு செய்து -
என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!

மகாகவி பாரதி காதலைப் பற்றி இப்படிச் சொல்கிர்றான்.

காதலினாலுயிர் வாழும் – இங்கு
காதலினால் உயிர் வீரத்தில் ஏறும்
காதலினால் அறிவுண்டாகும் – இங்கு
காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்
ஆதலினால் அவள் கையைப் – பற்றி
அற்புதம் என்றிரு கண்ணிடை ஒற்றி
வேதனை இன்றி இருந்தேன்……..

பாரதியின் காற்று வெளியிடைக் கண்ணம்மா

காற்று வெளியிடைக் கண்ணம்மா – நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் –அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் – நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும் – பத்து

மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் – இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் – எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே – இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்
(காற்று)

நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! – எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் – துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்எனக் கொண்ட பொழுதிலே – என்றன்

வாயினிலே அமு தூறுதே – கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே
கண்ணம்மா ம்ம்ம்
கண்ணம்மா ம்ம்ம் – கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே – உயிர்த்
தீயினிலே வளர் சோதியே – என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! – இந்தக்
(காற்று)

பாரதியாரின் நின்னையே ரதியென்று

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி - கண்ணம்மா
தன்னையே சசியென்று சரணம் எய்தினேன்
(நின்னையே)

பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே
கண்ணம்மா

மாரனம்புகள் என் மீது வாரி வாரி வீசநீ
கண் பாராயோ வந்து சேராயோ
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா

யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம் எனக்குன் தோற்றம்
மேவுமே இங்கு யாவுமே
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
(நின்னையே)

பாரதி நினைத்த புதுமை பெண்கள் (இன்று ?)

போற்றி போற்றி!ஓர் ஆயிரம் போற்றி! நின்
பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றிகாண்
சேற்றி லேபுதி தாக முளைத்த தோர்
செய்ய தாமரைத் தேமலர் போலோளி
தோற்றி நின்றனை பாரத நாடைலே;
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை,மாதரசே! எங்கள்
சாதி செய்த தவப்பயன் வாழி நீ!1

மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின்
வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல்
நாதந் தானது நாரதர் வீணையோ?
நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ?
வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே
மேன்மை செய்தெமைக் காத்திடச் சொல்வதொ?
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமொ?
தையல் வாழ்கபல் லாண்டுபல் லாண்டிங்கே!2

அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமையாக்க முயல்பவர் பித்தராம்;
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே,
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்
தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!3

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ!4

நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்;
நீசத் தொண்டு மடமையும் கொண்டதாய்
தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்
சாலவே யரி தாவதொர் செய்தியாம்;
குலத்து மாதர்குக் கற்பியல் பாகுமாம்;
கொடுமை செய்தும் அறிவை யழித்துமந்
நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்;
நங்கை கூறும் வியப்புகள் கேட்டீரோ!5

புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்
சதுமறைப்படி மாந்தர் இருந்தநாள்
தன்னி லேபொது வான் வழக்கமாம்;
மதுரத் தேமொழி மங்கையர் உண்மைதேர்
மாத வப்பெரி யோருட னொப்புற்றே
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய
முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம்.6

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டீரோ!7

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேசமோங்க உழைத்திடல் வெண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்.8

சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்;
சவுரி யங்கள் பலபல செய்வராம்;
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ!9

போற்றி,போற்றி! ஜய ஜய போற்றி!இப்
புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே!
மாற்றி வையம் புதுமை யுறச்செய்து
மனிதர் தம்மை அமர்க ளாக்கவே
ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னைநல்
அருளி நாலொரு கன்னிகை யாகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம். 10

பாரதியின் முரசு

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே!

வேதம் என்றும் வாழ்கஎன்று கொட்டு முரசே!

நெற்றி யொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள்

நித்த சக்தி வாழ்க வென்று கொட்டு முரசே!

ஊருக்கு நல்லது சொல்வேன் - எனக்

குண்மை தெரிந்தது சொல்வேன்;

சீருக் கெல்லாம் முதலாகும் - ஒரு

தெய்வம் துணைசெய்ய வேண்டும். 1

வேத மறிந்தவன் பார்ப்பான், பல

வித்தை தெரிந்தவன் பார்ப்பான்.

நீதி நிலைதவ றாமல் - தண்ட

நேமங்கள் செய்பவன் நாய்க்கன்.2

பண்டங்கள் விற்பவன் செட்டி - பிறர்

பட்டினி தீர்ப்பவன் செட்டி

தொண்டரென் றோர்வகுப் பில்லை, - தொழில்

சோம்பலைப் போல்இழி வில்லை.3

நாலு வகுப்பும்இங் கொன்றே; - இந்த

நான்கினில் ஒன்று குறைந்தால்

வேலை தவறிச் சிதைந்தே - செத்து

வீழ்ந்திடும் மானிடச் சாதி.4

ஒற்றைக் குடும்பந் தனிலே - பொருள்

ஓங்க வளர்ப்பவன் தந்தை;

மற்றைக் கருமங்கள் செய்தே - மனை

வாழ்ந்திடச் செய்பவள் அன்னை;5

ஏவல்கள் செய்பவர் மக்கள்! - இவர்

யாவரும் ஓர்குலம் அன்றோ?

மேவி அனைவரும் ஒன்றாய் - நல்ல

வீடு நடத்துதல் கண்டோம்.6

சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில்

தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.

நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு

நித்தமும் சண்டைகள் செய்வார்.7

சாதிக் கொடுமைகள் வேண்டாம்; - அன்பு

தன்னில் செழித்திடும் வையம்;

ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; - தொழில்

ஆயிரம் மாண்புறச் செய்வோம்.8

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி

பேணி வளர்த்திடும் ஈசன்;

மண்ணுக் குள்ளே சிலமூடர் - நல்ல

மாத ரறிவைக் கெடுத்தார்.9

கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்திக்

காட்சி கெடுத்திட லாமோ?

பெண்க ளறிவை வளர்த்தால் - வையம்

பேதைமை யற்றிடுங் காணீர். 10

தெய்வம் பலபல சொல்லிப் - பகைத்

தீயை வளர்ப்பவர் மூடர்;

உய்வ தனைத்திலும் ஒன்றாய் - எங்கும்

ஓர்பொருளானது தெய்வம். 11

தீயினைக் கும்பிடும் பார்ப்பார், - நித்தம்

திக்கை வணங்கும் துருக்கர்,

கோவிற் சிலுவையின் முன்னே - நின்று

கும்பிடும் யேசு மதத்தார். 12

யாரும் பணிந்திடும் தெய்வம் - பொருள்

யாவினும் நின்றிடும் தெய்வம்,

பாருக்குள்ளே தெய்வம் ஒன்று; - இதில்

பற்பல சண்டைகள் வேண்டாம். 13

வெள்ளை நிறத்தொரு பூனை - எங்கள்

வீட்டில் வளருது கண்டீர்;

பிள்ளைகள் பெற்றதப் பூனை, - அவை

பேருக் கொருநிற மாகும். 14

சாம்பல் நிறமொரு குட்டி - கருஞ்

சாந்து நிறமொரு குட்டி,

பாம்பு நிறமொரு குட்டி - வெள்ளைப்

பாலின் நிறமொரு குட்டி. 15

எந்த நிறமிருந்தாலும் - அவை

யாவும் ஒரேதர மன்றோ?

இந்த நிறம்சிறி தென்றும் - இ·து

ஏற்ற மென்றும் சொல்லலாமோ? 16

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் - அதில்

மானுடர் வேற்றுமை யில்லை;

எண்ணங்கள் செய்கைக ளெல்லாம் - இங்கு

யாவர்க்கும் ஒன்றெனல் காணீர். 17

நிகரென்று கொட்டு முரசே! - இந்த

நீணிலம் வாழ்பவ ரெல்லாம்;

தகரென்று கொட்டு முரசே - பொய்ம்மைச்

சாதி வகுப்பினை யெல்லாம். 18

அன்பென்று கொட்டு முரசே! - அதில்

ஆக்கமுண் டாமென்று கொட்டு;

துன்பங்கள் யாவுமே போகும் - வெறுஞ்

சூதுப் பிரிவுகள் போனால். 19

அன்பென்று கொட்டு முரசே! - மக்கள்

அத்தனைப் பேரும் நிகராம்.

இன்பங்கள் யாவும் பெருகும் - இங்கு

யாவரும் ஒன்றென்று கொண்டால். 20

உடன்பிறந் தார்களைப் போலே - இவ்

வுலகில் மனிதரெல் லாரும்;

இடம்பெரி துண்டுவை யத்தில் - இதில்

ஏதுக்குச் சண்டைகள் செய்வீர்? 21

மரத்தினை நட்டவன் தண்ணீர் - நன்கு

வார்த்ததை ஓங்கிடச் செய்வான்;

சிரத்தை யுடையது தெய்வம், - இங்கு

சேர்த்த உணவெல்லை யில்லை. 22

வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர்! - இங்கு

வாழும் மனிதரெல் லோருக்கும்;

பயிற்றி உழுதுண்டு வாழ்வீர்! - பிறர்

பங்கைத் திருடுதல் வேண்டாம். 23

உடன்பிறந் தவர்களைப் போலே - இவ்

வுலகினில் மனிதரெல் லாரும்;

திடங்கொண் டவர்மெலிந் தோரை - இங்குத்

தின்று பிழைத்திட லாமோ? 24

வலிமை யுடையது தெய்வம், - நம்மை

வாழ்ந்திடச் செய்வது தெய்வம்;

மெலிவுகண் டாலும் குழந்தை - தன்னை

வீழ்த்தி மிதத்திட லாமோ? 25

தம்பி சற்றே மெலிவானால் - அண்ணன்

தானடிமை கொள்ள லாமோ?

செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி - மக்கள்

சிற்றடி மைப்பட லாமோ? 26

அன்பென்று கொட்டு முரசே! - அதில்

யார்க்கும் விடுதலை உண்டு;

பின்பு மனிதர்க ளெல்லாம் - கல்வி

பெற்றுப் பதம்பெற்று வாழ்வார். 27

அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள்

அத்தனை பேருக்கும் ஒன்றாய்.

சிறியரை மேம்படச் செய்தால் - பின்பு

தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும். 28

பாருக்குள்ளே சமத்தன்மை - தொடர்

பற்றுஞ் சகோதரத் தன்மை

யாருக்கும் தீமைசெய் யாது - புவி

யெங்கும் விடுதலை செய்யும். 29

வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு

வாழும் மனிதருக் கெல்லாம்;

பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்

பாரை உயர்த்திட வேண்டும். 30

ஒன்றென்று கொட்டு முரசே!-அன்பில்

ஓங்கென்று கொட்டு முரசே!

நன்றென்று கொட்டு முரசே!இந்த

நானில மாந்தருக் கெல்லாம். 31

பாரதியின் பாப்பாப் பாட்டு

ஓடி விளையாடு பாப்பா! - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
கூடிவிளையாடு பாப்பா! - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா!1

சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வன்னப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!2

கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா!
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா!3

பாலைப் பொழிந்து தரும், பாப்பா! - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா!
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா! 4

வண்டி இழுக்கும் நல்ல குதிரை, - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு, - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா!5

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!6

பொய்சொல்லக் கூடாது பாப்பா! - என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத்துணை பாப்பா! - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா!7

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!8

துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்த தெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா! 9

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா! - தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!
தேம்பி யழுங்குழந்தை நொண்டி - நீ
திடங்கொண்டு போராடு பாப்பா! 10

தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா! - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா! 11

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா!
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா! 12

வடக்கில் இமயமலை பாப்பா! - தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா! 13

வேத முடையதிந்த நாடு - நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு
சேதமில் லாதஹிந்துஸ் தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா! 14

சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!
நீதி,உயர்ந்தமதி,கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.15

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்
வயிர முடைய நெஞ்சு வேணும் - இது
வாழும் முறைமையடி பாப்பா! 16

பாரதியார் கவிதைகள் - பல்வகைபாடல்கள்

இதில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும்

அச்சம் தவிர்.
ஆண்மை தவறேல்.
இளைத்தல் இகழ்ச்சி.
ஈகை திறன்.
உடலினை உறுதிசெய். 5

ஊண்மிக விரும்பு.
எண்ணுவ துயர்வு.
ஏறுபோல் நட.
ஐம்பொறி ஆட்சிகொள்.
ஒற்றுமை வலிமையாம். 10

ஓய்த லொழி.
ஔடதங் குறை.
கற்ற தொழுகு.
காலம் அழியேல்.
கிளைபல தாங்கேல். 15

கீழோர்க்கு அஞ்சேல்.
குன்றென நிமிர்ந்துநில்.
கூடித் தொழில் செய்.
கெடுப்பது சோர்வு.
கேட்டிலும் துணிந்துநில். 20

கைத்தொழில் போற்று.
கொடுமையை எதிர்த்து நில்.
கோல்கைக் கொண்டு வாழ்.
கவ்வியதை விடேல்.
சரித்திரத் தேர்ச்சிகொள். 25

சாவதற்கு அஞ்சேல்.
சிதையா நெஞ்சு கொள்.
சீறுவோர்ச் சீறு.
சுமையினுக்கு இளைத்திடேல்.
சூரரைப் போற்று. 30

செய்வது துணிந்து செய்.
சேர்க்கை அழியேல்.
சைகையிற் பொருளுணர்.
சொல்வது தெளிந்து சொல்.
சோதிடந் தனையிகழ். 35

சௌரியந் தவறேல்.
ஞமலிபோல் வாழேல்.
ஞாயிறு போற்று.
ஞிமிரென இன்புறு.
ஞெகிழ்வத தருளின். 40

ஞேயங் காத்தல் செய்.
தன்மை இழவேல்.
தாழ்ந்து நடவேல்.
திருவினை வென்றுவாழ்.
தீயோர்க்கு அஞ்சேல். 45

துன்பம் மறந்திடு.
தூற்றுதல் ஒழி.
தெய்வம் நீ என்றுணர்.
தேசத்தைக் காத்தல்செய்.
தையலை உயர்வு செய். 50

தொன்மைக்கு அஞ்சேல்.
தோல்வியிற் கலங்கேல்.
தவத்தினை நிதம் புரி.
நன்று கருது.
நாளெலாம் வினைசெய். 55

நினைப்பது முடியும்.
நீதிநூல் பயில்
நுனியளவு செல்.
நூலினைப் பகுத்துணர்
நெற்றி சுருக்கிடேல். 60

நேர்படப் பேசு.
நையப் புடை.
நொந்தது சாகும்.
நோற்பது கைவிடேல்.
பணத்தினைப் பெருக்கு. 65

பாட்டினில் அன்புசெய்.
பிணத்தினைப் போற்றேல்.
பீழைக்கு இடங்கொடேல்.
புதியன விரும்பு.
பூமி யிழந்திடேல். 70

பெரிதினும் பெரிதுகேள்.
பேய்களுக்கு அஞ்சேல்.
பொய்ம்மை இகழ்.
போர்த்தொழில் பழகு.
மந்திரம் வலிமை. 75

மானம் போற்று.
மிடிமையில் அழிந்திடேல்.
மீளுமாறு உணர்ந்துகொள்.
முனையிலே முகத்து நில்.
மூப்பினுக்கு இடங்கொடேல். 80

மெல்லத் தெரிந்து சொல்.
மேழி போற்று.
மொய்ம்புறத் தவஞ் செய்.
மோனம் போற்று.
மௌட்டியந் தனைக் கொல். 85

யவனர்போல் முயற்சிகொள்.
யாவரையும் மதித்து வாழ்.
யௌவனம் காத்தல் செய்.
ர.த்திலே தேர்ச்சிகொள்.
ராஜஸம் பயில். 90

ரீதி தவறேல்.
ருசிபல வென்றுணர்.
ரூபம் செம்மை செய்.
ரேகையில் கனி கொள்.
ரோதனம் தவிர். 95

ரௌத்திரம் பழகு.
லவம் பல வெள்ளமாம்.
லாகவம் பயிற்சிசெய்.
லீலை இவ் வுலகு.
(உ)லுத்தரை இகழ். 100

(உ)லோகநூல் கற்றுணர்.
லௌகிகம் ஆற்று.
வருவதை மகிழ்ந்துண்.
வானநூற் பயிற்சிகொள்.
விதையினைத் தெரிந்திடு. 105

வீரியம் பெருக்கு.
வெடிப்புறப் பேசு.
வேதம் புதுமைசெய்.
வையத் தலைமைகொள்
வௌவுதல் நீக்கு. 110

பாரதியார் கவிதை

ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து,
மோனத் திருக்கு முழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் தந்தை; எனப்பல மதத்தினர்
உருவாகத் தாலே உணர்ந்துண ராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே;
அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.

18 டிசம்பர் 2008

சில மருத்துவ குறிப்புகள்

இங்கே சில பொருட்களின் தன்மைகள்

உடற்சூட்டை தணிப்பவை

பச்சைப்பயிறு , மோர் , உளுந்தவடை , பனங்கற்கண்டு , வெங்காயம் , சுரைக்காய் , நெல்லிக்காய் , வெந்தயக்கீரை , மாதுளம் பழம் நாவற்பழம் , கோவைக்காய் , இளநீர்

ருசியின்மையைப் போக்குபவை

புதினா , மல்லி , கறிவேப்பிலை , நெல்லிக்காய் , எலுமிச்சை , மாவடு , திராட்சை , வெல்லம் , கருப்பட்டி , மிளகு , நெற்பொறி

சிவப்பணு உற்பத்திக்கு

புடலைங்காய் , பீட்ரூட் , முருங்கைக்கீரை , அவரை , பச்சைநிறக் காய்கள் , உளுந்து , துவரை , கம்பு , சோளம் கேழ்வரகு ,பசலைக்கீரை

மருந்தை முறிக்கும் உணவுகள்

அகத்தி , பாகற்காய், வேப்பிலை , நெய் , கடலைப்பருப்பு , கொத்தவரை , எருமைப்பால் . சோம்பு , வெள்ளரிக்காய்

விஷத்தை நீக்கும் உணவுகள்

வெங்காயம் , பூண்டு , சிறுகீரை , வேப்பிலை , மிளகு , மஞ்சள் , காயம்பித்தம் தணிப்பவைசீரகம் , கருப்பட்டி , வெல்லம் , சுண்டைவற்றல் செவ்விளநீர் , அரைக்கீரை , எலுமிச்சை

நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

வாய் துர்நாற்றத்தால் சங்கடமா? எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும், வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய்துர்நாற்றம் நீங்கும்.

தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா? வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில் ஒரு நெல்லை வைத்து விழுங்க, முடி வெளியேறி பேதியும் நிற்கும்.


வேனல் கட்டி தொல்லையா? வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.

தினமும் சப்போட்டா பழம் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அண்டாது.

பொன்னாங்கண்ணி கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். உடம்பில் உள் சூடும் குறையும். இக்கீரையின் தைலத்தை தலை முழுகப் பயன்படுத்தி வந்தால் கண் நோய் அண்டாது. உடல் சூடு தணியும்.

அரைக் கீரை தைலமும் உடல் சூட்டைத் தணிக்கும்.

பாகற்காய் வற்றலை உணவுடன் உண்டு வந்தால் மூலம், காமாலை நோய் தீரும்.

ஹோட்டல்களில் சாப்பிடுவதால் ஏற்படும் நாக்குப் பூச்சித் தொல்லை, சிறுவர்களுக்கு ஏற்படும் வயிற்றுப்பூச்சித் தொல்லை நீங்க சுண்டைக்காயை உணவுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

இரவு உணவில் சுண்டைக்காய் வற்றலை சேர்த்து வந்தால் ஆஸ்துமா, நெஞ்சு சளி, காச நோய் நீங்கும். வயிற்றுப் போக்கும் நிற்கும்.

கற்கண்டு, இஞ்சி சாறு சேர்த்து அருந்திவர நீரிழிவு நோய் கட்டுப்படும்.

இஞ்சி ஊறுகாய் ஜீரணத்துக்குப் பயன்படும். பித்தத்தைத் தணிக்கும்.

மருதாணி இலையை எலுமிச்சைச் சாற்றில் கலந்து அரைத்து கட்டினால் குதிகால் வாதம், பாத எரிச்சல் தீரும்.

வெள்ளை கரிசலாங் கண்ணி தைலத்தைத் தலைக்குத் தேய்த்து வந்தால் முடி கறுக்கும்.

கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழா நெல்லி ஆகிய இலைகளை சம அளவில் அரைத்து பாக்கு அளவில் எடுத்து மோரில் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.

கீழாநெல்லி செடியின் வேரை பசுமையாக 20 கிராம் எடுத்து அரைத்து பால், தயிர், மோர் என ஏதாவது ஒன்றுடன் கலந்து பருகினால் கை, கால் வலி நீங்கும். தேனில் கலந்து பருகி வர அம்மை நோய் தணியும்.

அரச இலையை அரைத்து பூசி வந்தால் கால் வெடிப்பு, ரணம் குணமாகும்.

அகலில் வேப்பெண்ணெயை விட்டு இரவில் எரித்து வந்தால் கொசுக்கள் பறந்துவிடும்.

துளசி இலையை வாயில் போட்டு மென்று தின்றால் பல் வலி, கூச்சம் நீங்கும். சில இலைகளைக் கசக்கி முகர்ந்து பார்த்தால் மூக்கடைப்பு நீங்கும்.

பிஞ்சு வில்வக் காயை அரைத்து தயிரில் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி, ரத்த பேதி குணமாகும்.

அறுகம்புல்லை அரைத்து காய்ச்சிய பாலில் கலந்து தினமும் காலையில் பருகி வந்தால் ரத்த மூலம் நிற்கும்.

வேப்பிலையை அரைத்து கட்டி வந்தால் ஆறாத ரணமும் ஆறும். உடையாத பழுத்த கட்டியும் உடையும்.

வேப்பங்கொட்டையினுள் உள்ள பருப்பை மை போல் அரைத்து வெந்நீரில் கலந்து குடித்தால் நஞ்சு நீங்கும்.

முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருந்து வாட்டுகிறதா?

ஆரஞ்சு விழுது இருக்க கவலையேன்.

ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன், கசகசா விழுது - 1 டீஸ்பூன்,சந்தனப் பவுடர் - 2 சிட்டிகை...

இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள்.

தினமும் இரவு தூங்கப் போகும்போதுபருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள்.இந்த சிகிச்சையால் வடு மறைவதுடன், பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டியே பார்க்காது.

இவர்கள் இப்படி சொன்னார்கள்

IF WE CANNOT LOVE THE PERSON WHOM WE SEE,... HOW CAN WE LOVE GOD,
WHOM WE CANNOT SEE ? - MOTHER THERESA .

IF YOU WIN YOU NEED NOT EXPLAIN .......... BUT IF YOU LOSE YOU SHOULD
NOT BE THERE TO EXPLAIN - ADOLPH HITLER

IF YOU START JUDGING PEOPLE YOU WILL BE HAVING NO TIME TO
LOVE THEM - MOTHER THERESA

I'M NOT IN COMPETITION WITH ANYBODY BUT MYSELF.......... MY
GOAL IS TO BEAT MY LAST PERFORMANCE - BILL GATES

DON'T COMPARE YOURSELF WITH ANYONE IN THIS WORLD.......IF YOU
DO SO, YOU ARE INSULTING YOURSELF - ALEN STRIKE .

NEVER EXPLAIN YOURSELF TO ANYONE.......BECAUSE THE PERSON WHO
LIKES YOU DOES NOT NEED IT.........AND THE PERSON WHO DISLIKES
YOU WON'T BELIEVE IT - AUTHOR UNKNOWN

THE DREAM IS NOT WHAT YOU SEE IN SLEEP......DREAM IS WHICH
DOES NOT LET YOU SLEEP. -
DR. ABDUL KALAM (Former President of the Republic of India)


NO MAN IS RICH ENOUGH TO BUY HIS PAST - - OSCAR WILDE

IF YOU WANT REAL PEACE,.... DON'T TALK TO YOUR FRIENDS,...TALK WITH YOUR ENEMIES - MOTHER THERESA

WINNING DOESN'T ALWAYS MEAN BEING FIRST,..... WINNING MEANS
YOU'RE DOING BETTER THAN YOU'VE DONE BEFORE - BONNIE BLAIR

EVERYONE THINKS OF CHANGING THE WORLD,....... BUT NO ONE THINKS
OF CHANGING HIMSELF . - - - LEO TOLSTOY

I WILL NOT SAY I FAILED 1000 TIMES,........ I WILL SAY THAT I DISCOVERED THERE ARE 1000 WAYS THAT CAN CAUSE FAILURE. THOMAS EDISON

NEVER BREAK FOUR THINGS IN YOUR LIFE,
a) TRUST,
b) PROMISE,
c) RELATIONSHIP and
D) HEART
BECAUSE WHEN THEY BREAK THEY DON'T MAKE NOISE BUT PAIN A LOT - CHARLES

IN A DAY, WHEN YOU DON'T COME ACROSS ANY PROBLEMS YOU CAN BE SURE THAT YOU ARE TRAVELLING IN A WRONG PATH - SWAMI VIVEKANANDA

THREE SENTENCES FOR GETTING SUCCESS:
A) KNOW MORE THAN OTHER
B) WORK MORE THAN OTHER
C) EXPECT LESS THAN OTHER
- WILLIAM SHAKESPEAR

LOVE YOUR JOB BUT NEVER FALL IN LOVE WITH YOUR COMPANY BECAUSE YOU NEVER KNOW WHEN IT STOPS LOVING YOU - DR. ABDUL KALAM

IF SOMEONE FEELS THAT THEY HAD NEVER MADE A MISTAKE IN THEIR LIFE,THEN IT MEANS THEY HAD NEVER TRIED A NEW THING IN THEIR LIFE - ALBERT EINSTEIN

எனக்கு இதனை தமிழில் மொழி மாற்றம் செய்ய தெரியவில்லை அதற்க்காக மன்னிக்கவும்.....
நமக்கு ஆங்கிலம் கொஞ்சம் தடுங்கினத்தோம்

செளந்தர்யலஹரி

செளந்தர்யலஹரி ஸ்ரீ ஆதிசங்கரர் அவர்கள் அருளியது. இவை அம்பாள் ஸ்லோகங்கள்.


இந்த ஸ்லோகங்களை சொல்லி வந்தால் உங்கள்வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் வேண்டுதலுக்காக ஒவ்வொரு ஸ்லோகத்திலும் தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான ஸ்லோகங்களை கூறி வேண்டியதை பெறலாம். எல்லா ஸ்லோகங்களையும் சொல்வது சாலச் சிறந்தது.


சொளந்தர்லஹரி அழகு வெள்ளம் எனற் பெயரில் கிருபானந்தவாரியார் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.
ஆதிசங்கரர் சமஸ்கிருதத்தில் அருளியதும், அதன் தமிழாக்கமும் இங்கு அளிக்கப்படுகிறது. இந்த ஸ்லோகங்களை கூறி அம்மன் அருள் பெறுங்கள்.


*சுபம், திருவும் சித்தி பெற* சமஸ்கிருதம்
சிவ: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திது -மபிந
அதஸ் -த்வா - மாராத்யாம் ஹரி - ஹர -விரிஞ்சாதிபி - ரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதம்க்ருத - புண்ய: ப்ரபவவதி// (1)

*தமிழாக்கம்:*
திங்களைச் சடையில் தரித்திடும் சிவன்பால்
தேவிநீ அன்புடன் ஒன்றித்
தங்கிடி லன்றி இயங்கிடும் திறமும்
இறைவனே இழந்திடும் என்னில்
கங்கைவார் சடையன் அயன்திரு மாலூம்
கைதொழுதேந்தியே போற்றும்
பங்கயச் செல்வி, புண்ணிய மிலார் நின்
பாதமே தொழுவதும் எளிதோ

*உலகம் உன்வசம்* சமஸ்கிருதம்
த தீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண- பங்கேருஹ - பவம்
விரிஞ்சி: ஸஞ்சிவன் விரசயதி லோகா -நவிகலம்ந
வஹத்யேனம் செளரி: கதமபி ஸஹஸ்ரேண - சிரஸாம்
ஹர: ஸம்ஷுத்யைநம் பஜதி பஸிதோ தூலந -விதிம் (2)

*தமிழாக்கம்:*
தாயுன்றன் பாதத் துகளினைக் கொண்டு
சதுர்முகன் உலகினைப் படைக்க
தூயதோர் ஆதி சேடன துருவில்
சுடர்முடி ஆயிரம் கொண்ட
மாயவன் உன்றன் மலரடித் துகளாம்
மாபெரு முலகுகள் சுமக்க
நாயகன் சிவனும் மேனியி லதனை
நலமுறப் பூசியே மகிழ்வான்.

*சகல கலையும் அமையும்*சமஸ்கிருதம்
அவித்யானா - மந்தஸ்திமிர- மிஹிர - த்வீப - நகரீ
ஜடானாம் சைதன்ய -ஸ்தபக - மகரந்த -ஸ்ருதிஜரீ
தரித்ராணாம் - சிந்தாமணி -குண நிகா ஜன்மஜலதெள
நிமக்னானாம் தம்ஷ்ட்ரா முரரிபு - வராஹஸ்ய பவதி (3)

*தமிழாக்கம்:*
அறிவிலார் உளத்தே அகத்திருள் மடிய
அருணநல் உதயமாய்த் தோன்றும்
செறிந்திடு கற்பக மலர் மகரந்தம்
தேர்ந்த நல் ஞானமாய் இலகும்
வறியவர் துயர் துடைத்திடும் சிந்தா
மணியென விளங்கிடும், ஆழி
பிறவினின் றெடுக்க முராரியின் வராகப்
பிறையெயி றாகுமத் துகளே!

*பயநிவர்த்தி ரோக நிவர்த்தி* சமஸ்கிருதம்
த்வதன்ய: பாணிப்யா - மபயவரதோ தைவதகண:
த்வமேகா நைவாசி ப்ரகடித - வராாபீத்யபிநயா
பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்சாஸமதிகம்
சரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபுணெள (4)

*தமிழாக்கம்:*
விஞ்சையே புரியும் திருவடியுடையாய்
வேறுள தெய்வங்கள் எல்லாம்
அஞ்சுவோர் தமக்கு அஸ்தமே காட்டி
அபயமே தருவதற் கழைக்கும்
மஞ்சுபா ஷிணியே நீயெதும் காட்டி
மனிதரை அழைத்திலை எனினும்
தஞ்சமென் றுந்தன் தாளினை அடைந்தார்
சகலமும் பெற்றுவாழ்ந் திடுவார்.

*குடும்ப ஒற்றுமை நிலவும்* சமஸ்கிருதம்
ஹரிஸ்-த்வா-மராத். ப்ரணத -ஜன செளபாக்ய - ஜனனீம் புரா நரீ பூத்வா புரரிபுமபி ஷோப -மன்யத் ஸ்மரோஸ்பி த்வாம் நத்வா ரதி -நயன- லேஹ்யன வபுஷா முனீனா -மப்- யந்த- ப்ரவதி ஹி மோஹாய மஹேதாம் (5)

*தமிழாக்கம்:*
மாந்தருக்கே செளபாக்கிய மருள்வோய் மாலுனைப் பூசனை புரிந்து போந்துதன் எழிலார் மோகினி வடிவா புராரியும் மயங்கிடப் புரிந்தாள் ஏந்திநின் பாதம் போற்றிய காமன் இரதியும் மயங்கெழில் வெய்தி சாந்தமார் முனிவர் தம்மையும் மயக்கும் சதுரனாய் ஆயின னன்றே.


நன்றி:

உடற்பாகங்கள் உயிர் வாழும் நேரம்

மனிதன் உயிரிழந்த பின்பும் அவனது உடற்பாகங்கள் உயிர் வாழும் நேரம்:

கண் - 31 நிமிடம்

மூளை - 10 நிமிடம்

கால்- 4 மணித்தியாலம்

தசை - 5 நாட்கள்

இதயம் - சில விநாடிகள்

தொடர்ந்து சொல்லிப் பாருங்கள்

ஓடுற நரியில
ஒரு நரி முட நரி
முட நரி பிடரியில்
ஒரு பிடி நரை மயிர்.


கடலோரம் உரல் உருளுது

கடலோரம் உரல் உருளுது!


புட்டும் புதுப் பிட்டு
தட்டும் புதுத் தட்டு
பிட்டைக் கொட்டிற்று
தட்டைத் தா.


வீட்டுக்கிட்ட கோரை
வீட்டுக்கு மேல கூரை
கூரை மேல நாரை.


துள்ளும் கயலோ
வெள்ளம் பாயும்
உள்ளக் கவலை
எள்ளிப் போகும்.


கருகும் சருகும் உருகும்
துகிரும் தீயில் பட்டால்!

பலாச் சுளைக் கணக்கு

"பலாவின் சுளையறிய வேண்டுமெனில் - ஆங்கு
சிறு முள்ளுக் காம்பருக் கெண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுவை" (ஆதாரம் கணக்கதிகாரம்)

பலாப்பழத்தின் காம்புக்கு அருகிலுள்ள சிறு முள்ளுகளை எண்ணி அதனை ஆறால் பெருக்கி வரும் விடையை ஐந்தால் வகுக்க கிடைக்கும் ஈவே பலாச் சுளையாகும்.

உதாரணம்:
காம்பைச் சுற்றியுள்ள சிறு முள்ளின் எண்ணிக்கை 100 எனில்
100 x 6 = 600
600 x 5 = 120
பலாச்சுளைகளின் எண்ணிக்கை = 120 ஆகும்.

உங்களுக்கு பொறுமை இருந்தால் பலாபழாத்தின் மேல் உள்ள சிறு முள்ளுகளை எண்ணி கணக்கு போட்டு பாருங்களேன்.............

தந்திரக் கணக்கு

1. ஒரு இலக்கத்தை நினைவில் வைத்துக் கொள்ளவும். ( y )

2. அதனை இரு மடங்காக மாற்றவும். ( y X 2 )

3. 50 க் கூட்டவும். ( Y x 2 ) + 50

4. அதனை இரண்டால் வகுக்கவும்.

( Y x 2 ) + 50
2
5. நினைவில் வைத்திருந்த இலக்கத்தைக் கழிக்கவும்.

6. விடை 25

உதாரணம்:

1. 5

2. 5 x 2 = 10

3. 10 + 50 = 60

4. 60
2
= 30

5. 30 - 5

6. 25

அதாவது மூன்றாவது படிமுறையில் கூறப்பட்ட 50 இன் அரைவாசியே 25 ஆகும்.
இவ் இலக்கத்தை விரும்பியவாறு மாற்றம் செய்யலாம்.

தந்திரக் கணக்குகள்

"புலம் மூன்றில் மேய்ந்து வழி ஐந்திற் சென்று
இனமான ஏழ்குளம் நீருண்டு - கடினமான
கா ஒன்பதிற் சென்று காடவர்கோன் பட்டணத்தில்
போவது வாசற்பத்திற் புக்கு" (கணக்கதிகாரம் நூலில் இருந்து)


மூன்று புலத்தில் மேய்ந்த யானைகள், ஐந்து வழியாகச் சென்று, ஏழு குளத்தில் நீருண்டு, ஒன்பது மாதத்தடியில் நின்று, பத்து வாசலில் பிரிந்து சென்றது என்றால் மொத்த யானைகள் எத்தனை?

விடை: யானைகளின் மொத்த எண்ணிக்கை - 630
(3,5,7,9,10 ஆகிய எண்களின் மீ.சி. ம. 630)

3 x 5 x 7 x 9 x 10 = 9450

தலைகீழான சொற்கள்

சொற்களை வலமிருந்து இடமாகவே தமிழில் எழுதிப் படிப்போம், ஆனால் சில சொற்களை இடமிருந்து வலமாகவும் வாசிக்கலாம்.

விகடகவி, திகதி போன்ற சொற்கள் உள்ளன, இவை மட்டுமன்றி சொற்கூட்டமாக, வசனமாக, பாடல் வரிகளாகவும் தமிழ் மொழியில் தலைகீழாக அமைந்து உள்ளன.

தேவாரம் பாடிய ஞானசம்பந்தர் "மாலை மாற்று" எனும் பதிகத்தையும் பாடியுள்ளார்,

"யாமாமா நீயாமா மாயாழீ காமா காணாகா

கானா காமா காழீயா மாமாயா நீ மாமாயா"

இவ் வரிகள் சம்பந்தரின் மாலை மாற்று பதிகத்தில் உள்ளதாகும்.இதன் பொருள் சாதாரண மனிதனால் எதுவும் செய்ய முடியாது, மகா சக்தி வாய்ந்த இறைவனால் தான் அனைத்தையும் ஆட்டுவிக்க முடியும்.

இதே போன்று ஆங்கிலத்திலும் வரிகள் உள்ளன.

"LIVE NOT ON EVIL"

பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை

1. வாழ்க்கை ஒரு சவால்
அதனை சந்தியுங்கள்.

2. வாழ்க்கை ஒரு பரிசு
அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.

3. வாழ்க்கை ஒரு சாகசப் பயணம்
அதனை மேற்கொள்ளுங்கள்.

4. வாழ்க்கை ஒரு சோகம்
அதனை கடந்து வாருங்கள்.

5. வாழ்க்கை ஒரு துயரம்
அதனை தாங்கிக் கொள்ளுங்கள்.

6. வாழ்க்கை ஒரு கடமை
அதனை நிறைவேற்றுகள்.

7. வாழ்க்கை ஒரு விளையாட்டு
அதனை விளையாடுங்கள்.

8. வாழ்க்கை ஒரு வினோதம்
அதனை கண்டறியுங்கள்.

9. வாழ்க்கை ஒரு பாடல்
அதனை பாடுங்கள்.

10. வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம்
அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

11. வாழ்க்கை ஒரு பயணம்
அதனை புகழுடன் முடித்துவிடுங்கள்.

12. வாழ்க்கை ஒரு உறுதிமொழி
அதனை நிறைவேற்றுங்கள்.

13. வாழ்க்கை ஒரு காதல்
அதனை அனுபவியுங்கள்.

14. வாழ்க்கை ஒரு அழகு
அதனை ஆராதியுங்கள்.

15. வாழ்க்கை ஒரு உணர்வு
அதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

16. வாழ்க்கை ஒரு போராட்டம்
அதனை எதிர்கொள்ளுங்கள்.

17. வாழ்க்கை ஒரு குழப்பம்
அதனை விடைகாணுங்கள்.

18. வாழ்க்கை ஒரு இலக்கு
அதனை எட்டிப் பிடியுங்கள்.

17 டிசம்பர் 2008

அது தப்பில்ல

தப்பு செய்!!!
ஆனா தப்பா செய்யாதே!!!
தப்பு செஞ்சா தப்பில்ல, அதையே
தப்பா செஞ்சா தான் தப்பு!!!!
இந்த காலத்துல,
தப்பு செய்றவன் தைரியசாலி, புத்திசாலி.
தப்பு செய்ய பயப்படுறவன் கோழை, பயந்தாங்கோலி.
தப்பே செய்யாதவன் மனுசனே இல்ல.
அதனால எல்லாரும் தப்ப தப்பில்லாம தப்பாம செய்யனும்.
அது தப்பில்ல!!!!!!!!!!...........

தமிழ்ப் பழமொழிகள்

அகத்தினழகு முகத்தில் தெரியும்
அம்மாவைக் குளிக்குமிடத்தில் பார்த்தால் மகளை வீட்டில் பார்க்கவேண்டியதில்லை
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு
அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
அடியாத மாடு படியாது.
அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.
அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.
அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
ஆழம் தெரியாமல் காலை விடாதே.
ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை (அ) ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
ஆனைக்கும் அடிசறுக்கும்.
இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி
எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
எறும்பூரக் கல்லும் தேயும்.
ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.
கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.
கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
கழுதை அறியுமா கற்பூர வாசனை?
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
காக்காய் பிடித்தாவது காரியம் சாதித்துக்கொள்
காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.
காகம் திட்டி மாடு சாகாது.
காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.
குரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொப்பிலே கொப்பிலே தாவுமாம்.
குரைக்கிற நாய் கடிக்காது.
கூட்டுற வெலக்குமாத்துக்குக் குஞ்சரம்னு பேராம்
கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.
கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்து கொக்கைப் பிடிப்பதுபோல
கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.
கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.
கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.
சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்.
சாமியே சைக்கிள்ல போகும்போது பூசாரி கேட்டானாம் புல்லட்
சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.
சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.
சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?
சோளியன் குடுமி சும்மா ஆடுமா?
தடியெடுத்தவன் தண்டக்காரன்.
தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.
தன் வினை தன்னைச் சுடும்.
தனிமரம் தோப்பாகாது.
தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.
தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.
தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.
தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல்.
நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?
நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.
நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல்.
நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
நிறைகுடம் தளம்பாது.
தாட்சண்யவான் தரித்திரவான்
பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.
பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
பனை மரத்தடியில் பால் குடித்தது போல.
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.
பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.
புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான்.
புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.
பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.
பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
மக வாழ்ற வாழ்க்கைக்கு மாசம் பத்துக்கட்டு விலக்குமாரு
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.
முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
மைத்துணன் உதவி மலைபோல
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.
யானை படுத்தாலும் குதிரை மட்டம்
யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
வழியோடு போய் வழியோடு வந்தால் அதிகாரி சுண்டைக்காய்க்குச் சமம்
விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.
விரலுக்குத் தக்கதே வீக்கம்.
விளையும் பயிரை முளையிலே தெரியும்.
வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
வெளுத்ததெல்லாம் பாலல்ல.
வேலிக்கு ஓணான் சாட்சி.
வைக்கோற் போர் நாய் போல.

16 டிசம்பர் 2008

எனக்கு தெரிந்தும் என்னால் பின்பற்ற முடியாதவை

Answer the phone by LEFT ear.

Do not drink coffee TWICE a day.

Do not take pills with COOL water.

Do not have HUGE meals after 5pm.

the amount of OILY food you consume.

Drink more WATER in the morning, less at night.

Keep your distance from hand phone CHARGERS .

not use headphones/earphone for LONG period of time.

Best sleeping time is from 10pm at night to 6am in the morning.

Do not lie down immediately after taking medicine before sleeping.

When battery is down to the LAST grid/bar, do not answer the phone as the radiation is 1000 times.

பத்து உபயோகமான தகவல்கள்

* The First Secret: The power of Love.
Love begins with our thoughts. We become what we think. Loving thoughts create loving experiences and loving relationships. Affirmations can change our beliefs and thoughts about ourselves and others. If we want to love someone, we need to consider their needs and desires. Thinking about your ideal partner will help recognize him or her when you meet.

* The Second Secret: The power of Respect.
cannot love anyone or anything unless you first respect them. The first person you need to respect is yourself. To begin to gain self-respect ask yourself,“What do I respect about myself? ” To gain respect for others, even those you may dislike, ask yourself, “What do I respect about them?”

* The Third Secret: The power of Giving.
If you want to receive love, all you have to do is give it! The more love you give, the more you will receive. To love is to give of yourself, freely andunconditionally. Practice random acts of kindness. The secret formula of a happy, lifelong relationship is to always focus on what you can give instead of you can take.

* The Fourth Secret: The power of Friendship.
To find true love you must first find a true friend. To love someone completely you must love them for who they are not what they look like. Friendship is thesoil through which love’s seeds grow. If you want to bring love into a relationship, you must first bring friendship.

* The Fifth Secret: The power of Touch.
Touch is one of the most powerful expressions of love, breaking down barriers and bonding relationships. Touch changes our physical and emotional states andmakes us more receptive to love.

* The Sixth Secret: The power of Letting go.
If you love something, let it be free. Even in a loving relationship, people need their space. If we want to learn to love, we must first learn to forgiveand let go of past hurts and grievances. Love means letting go of our fears, prejudices, egos and conditions.

* The Seventh Secret: The power of Communication.
To love someone is to communicate with them. Let the people you love know; that you love and appreciate them. Never be afraid to say, “I love you.” Never let an opportunity pass to praise and acknowledge someone. Always leave someone you love with a loving word … it could be the last time you see them.

* The Eighth Secret: The power of Commitment.
If you want to have love in abundance, you must be committed to it. Commitment is the true test of love. If you want to have loving relationships, you must be committed to loving relationships. When you are committed to someone or something, quitting is never an option. Commitment distinguishes a fragilerelationship from a strong, loving one.

* The Ninth Secret: The power of Passion.
Passion ignites love and keeps it alive. Lasting passion does not come through physical attraction alone. It comes from deep commitment, enthusiasm, interest and excitement. The essence of love and happiness are the same, all we need to do is to live each day with passion.

* The Tenth Secret: The power of Trust.
You cannot love someone completely unless you trust them completely. Act as if your relationship with the person you love will never end. Trust is essential inall loving relationships. Trust yourself, trust others and trust the world. It is the foundation for LOVE.

கபில தேவர்
இயற்றிய
இன்னா நாற்பது

முக் கட் பகவன் அடி தொழாதார்க்கு இன்னா;

பொற்பனை வெள்ளையை உள்ளாது ஒழுகு இன்னா

மறப்பு இன்னா; ஆங்கு இன்னா,

சத்தியான் தாள் தொழாதார்க்கு.

பந்தம் இல்லாத மனையின் வனப்பு இன்னா;

தந்தை இல்லாத புதல்வன் அழகு இன்னா;

அந்தணர் இல் இருந்து ஊண் இன்னா; ஆங்கு இன்னா,

மந்திரம் வாயா விடின். 1

பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா;

ஆர்த்த மனைவி அடங்காமை நற்கு இன்னா

இல் புடைவை உடை இன்னா;

ஆங்கு இன்னாகாப்பு ஆற்றா வேந்தன் உலகு. 2

கொடுங் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா;

நெடுநீர்ப் புணை இன்றி நீந்துதல் இன்னா

மொழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,

தடுமாறி வாழ்தல் உயிர்க்கு. 3

எருது இல் உழவர்க்குப் போகு ஈரம் இன்னா;

கருவிகள் மாறிப் புறங்கொடுத்தல் இன்னா;

திருவுடையாரைச் செறல் இன்னா; இன்னா,

பெரு வலியார்க்கு இன்னா செயல். 4

சிறை இல் கரும்பினைக் காத்து ஓம்பல் இன்னா;

உறை சோர் பழங் கூரை சேர்ந்து ஒழுகல் இன்னா;

முறை இன்றி ஆளும் அரசு இன்னா; இன்னா,

மறை இன்றிச் செய்யும் வினை. 5


அற மனத்தார் கூறும் கடு மொழி இன்னா;

மற மனத்தார் ஞாட்பில் மடிந்து ஒழுகல் இன்னா;

இடும்பை உடையார் கொடை இன்னா; இன்னா,

கொடும்பாடு உடையார் வாய்ச் சொல். 6

ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா;

நாற்றம் இலாத மலரின் அழகு இன்னா;

தேற்றம் இலாதான் துணிவு இன்னா; ஆங்கு இன்னா,

மாற்றம் அறியான் உரை. 7

பகல் போலும் நெஞ்சத்தார் பண்பு இன்மை இன்னா;

நகை ஆய நண்பினார் நார் இன்மை இன்னா;

இகலின் எழுந்தவர் ஓட்டு இன்னா; இன்னா,

நயம் இல் மனத்தவர் நட்பு. 8

கள் இல்லா மூதூர் களிகட்கு நற்கு இன்னா;

வள்ளல்கள் இன்மை பரிசிலர்க்கு முன் இன்னா;

வண்மை இலாளர் வனப்பு இன்னா; ஆங்கு இன்னா,

பண் இல் புரவிப் பரிப்பு. 9

பொருள் உணர்வார் இல்வழிப் பாட்டு உரைத்தல் இன்னா;

இருள் கூர் சிறு நெறி தாம் தனிப்போக்கு இன்னா;

அருள் இல்லார் தம் கண் செலவு இன்னா; இன்னா

இல்லார் வண்மை புரிவு. 10

உடம்பாடு இல்லாத மனைவி தோள் இன்னா;

இடன் இல் சிறியாரோடு யாத்த நண்பு இன்னா;

இடங்கழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,

கடன் உடையார் காணப் புகல். 11

தலை தண்டமாகச் சுரம் போதல் இன்னா

சுமந்து உண்பான் பெருமிதம் இன்னா;

புலை உள்ளி வாழ்தல் உயிர்க்கு இன்னா; இன்னா,

முலை இல்லாள் பெண்மை விழைவு. 12


மணி இலாக் குஞ்சரம் வேந்து ஊர்தல் இன்னா;

துணிவு இல்லார் சொல்லும் தறுகண்மை இன்னா;

பணியாத மன்னர் பணிவு இன்னா; இன்னா,

பிணி அன்னார் வாழும் மனை. 13

வணர் ஒலி ஐம்பாலார் வஞ்சித்தல் இன்னா;

துணர் தூங்கு மாவின் படு பழம் இன்னா

பாவை அன்னார் பிரிவு இன்னா; இன்னா,

உணர்வார் உணராக்கடை. 14

புல் ஆர் புரவி மணி இன்றி ஊர்வு இன்னா;

கல்லார் உரைக்கும் கருமப் பொருள் இன்னா

நல்ல விழைவு இன்னா; ஆங்கு இன்னா,

பல்லாருள் நாணுப் படல். 15

உண்ணாது வைக்கும் பெரும் பொருள் வைப்பு இன்னா

பகைவர் புணர்ச்சி நனி இன்னா;

கண் இல் ஒருவன் வனப்பு இன்னா; ஆங்கு இன்னா,

எண் இலான் செய்யும் கணக்கு. 16

ஆன்று அவிந்த சான்றோருள் பேதை புகல் இன்னா;

மான்று இருண்ட போழ்தின் வழங்கல் பெரிது இன்னா;

நோன்று அவிந்து வாழாதார் நோன்பு இன்னா; ஆங்கு இன்னா,

ஈன்றாளை ஓம்பா விடல். 17

உரன் உடையான் உள்ளம் மடிந்திருத்தல் இன்னா;

மறன் உடையான் ஆடையால் மார்பு ஆர்த்தல் இன்னா;

சுரம் அரிய கானம் செலவு இன்னா; இன்னா,

மன வறியாளர் தொடர்பு. 18

குலத்துப் பிறந்தவன் கல்லாமை இன்னா;

நிலத்து இட்ட நல் வித்து நாறாமை இன்னா;

நலத்தகையார் நாணாமை இன்னா; ஆங்கு இன்னா,

கலத்தல் குலம் இல் வழி. 19

மாரி நாள் கூவும் குயிலின் குரல் இன்னா;

வீரம் இலாளர் கடு மொழிக் கூற்று இன்னா;

மாரி வளம் பொய்ப்பின், ஊர்க்கு இன்னா;

ஆங்கு இன்னாமூரி எருத்தால் உழவு. 20

ஈத்த வகையால் உவவாதார்க்கு ஈப்பு இன்னா;

பாத்து உணல் இல்லாருழைச் சென்று உணல் இன்னா

இடத்துப் பிணி இன்னா; ஆங்கு இன்னா,

ஓத்து இலாப் பார்ப்பான் உரை. 21

யானைஇல் மன்னரைக் காண்டல் நனி இன்னா;

ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் முன் இன்னா;

தேன் நெய் புளிப்பின் சுவை இன்னா; ஆங்கு இன்னா,

கான் யாறு இடையிட்ட ஊர். 22

சிறை இல்லா மூதூரின் வாயில் காப்பு இன்னா;

துறை இருந்து ஆடை கழுவுதல் இன்னா;

அறை பறை அன்னார் சொல் இன்னா;

இன்னா,நிறை இலான் கொண்ட தவம். 23

விளக்கம்

முக்கண்களுடைய சிவபெருமானின் திருவடிகளை வணங்காதவர்களுக்கு துன்பமுண்டாம். அழகிய பனைக் கொடியையுடையவனாகிய பலராமனை நினையாமல் இருத்தல் துன்பமாம். திகிரிப்படையை உடையவனாகிய மாயோனை மறத்தல் துன்பமாம். அவ்வாறே சக்தியான் வேற்படையை உடையவனாகிய முருகக் கடவுளின் திருவடிகளைத் தொழாதார்க்கு துன்பம் உண்டாகும்.

சுற்றமில்லாத இல்வாழ்க்கையான் அழகு துன்பமாம்.

தந்தையில்லாத புதல்வனின் அழகு துன்பமாம். துறவோர்

வீட்டிலிருந்து உண்ணுதல் துன்பமாம். அவ்வாறே

மந்திரங்கள் பயன் தராவிட்டால் துன்பமாம்.1


பார்ப்பாருடைய வீட்டில் நாயும் கோழியும் இருத்தல் துன்பமாம்.

கட்டிய மனைவி கணவனுக்கு அடங்காமை துன்பமாம். பகுப்பு

இல்லாத புடைவையை உடுத்தல் துன்பமாம். அவ்வாறே

காப்பாற்ற அரசன் இல்லாத நாடு துன்பமாகும்.2


கொடுங்கோல் அரசனது கீழ் வாழ்தல் துன்பமாம். தெப்பம்

இல்லாமல் பெரிய ஆற்றினைக் கடந்து செல்லுதல் துன்பமாம்.

வன்சொல் கூறுவோரது தொடர்பு துன்பமாம். உயிர்கள் மனம்

தடுமாறி வாழ்தல் துன்பமாம்.3

எருது இல்லாத உழவர்க்கு அருகிய ஈரம் துன்பமாம்.

கருவிகளை இழந்து போரில் புறமுதுகிடுதல் துன்பமாம். செல்வம்

உடையவர்களிடம் கோபம் கொள்ளுதலும்,

திறனுடையவர்களுக்குத் தீங்கு செய்தலும் துன்பமாம்.4


வேலியில்லாத கரும்புப் பயிரைப் பாதுகாத்தல் துன்பமாம்.

மழைத்துளி ஒழுகுதலையுடைய பழைய கூரையையுடைய

மனையில் வாழ்தல் துன்பமாம். நீதி இல்லாமல் ஆளுகின்ற

அரசரது ஆட்சி துன்பமாகும். வெளிப்படையாகச் செய்யும் வேலை

துன்பமாகும்.5


அறத்தை விரும்பும் நெஞ்சத்தினர் கூறும் கடும் மொழியும்

துன்பமாம். வீரத்தன்மையுடையவர்கள் போரில் சோம்பலுடன்

இருத்தல் துன்பமாம். வறுமை உடையவரது கொடை தன்மை

துன்பமாகும். கொடுமையுடையாரது வாயிற் சொல்லும்

துன்பமாகும்.6


வலியில்லாதவன் கையிற்பிடித்த ஆயுதம் துன்பமாகும்.

மணமில்லாத மலரின் அழகு துன்பமாகும். தெளிவு இல்லாதவன்

செய்யும் வேலை துன்பமாகும். அவ்வாறே சொற்களின் நுட்பத்தை

அறியாதவனது சொல்லும் துன்பமாகும்.7


ஞாயிறு போலும் நெஞ்சத்தை உடையவர்கள் பண்பில்லாமல்

இருத்தல் துன்பமாகும். நகுதலையுடைய நட்பினர்

அன்பில்லாதிருத்தல் துன்பமாகும். போரிலே புறமுதுகிடுதல்

துன்பமாகும். நீதியில்லாத மனத்தினை உடையவர்களது நட்பு

துன்பமாகும்.8


கள் இல்லாத மூதூரில் கள்ளுண்டு களிப்பார்க்கு மிகவும்

துன்பமாகும். வள்ளல்கள் இல்லாதிருத்தல் இரவலர்க்கு மிகவும்

துன்பமாகும். ஈகைக் குணமில்லாதவர்களுடைய அழகு

துன்பமாகும். அவ்வாறே கலனை இல்லாத புரவி தாங்குதல்

துன்பமாகும்.9


பொருள் அறியும் அறிவுடையார் இல்லாத இடத்தில்

பாட்டுரைத்தல் துன்பமாகும். இருள் நிறைந்த சிறிய வழியில்

தனியாக போகுதல் துன்பமாகும். அருள் இல்லாதவர்களிடம்

இரப்போர் செல்லுதல் துன்பமாகும். அதுபோலப் பொருள்

இல்லாதவர்கள் ஈதலைப் புரிதல் துன்பமாகும்.10


உள்ளம் பொருந்தாத மனைவியின் தோளினைச் சேர்தல்

துன்பமாகும். விரிந்த உள்ளமில்லாத சிறுமையுடையாருடன்

நட்பு கொள்ளுதல் துன்பமாகும். மிக்க காமத்தினை உடையாரது

சேர்க்கை துன்பமாகும். கடன் கொடுத்தவரைக் காணச்

செல்லுதல் துன்பமாம்.11


தலை அறுபடும்படி காட்டினிடை செல்லுதல் துன்பமாகும்.

வலையை நம்பி வாழ்பவனின் செருக்கு துன்பமாகும். புலாலை

விரும்பி உண்ணுதல் துன்பமாகும். முலை இல்லாதவள் பெண்

தன்மையை விரும்புதல் துன்பமாகும்.12


மணியில்லாத யானையின் மீது ஏறிச் செல்லுதல் அரசனுக்குத்

துன்பமாகும். பகையை வெல்லுந் துணிவில்லாதவர்கள் கூறும்

வீர மொழிகள் துன்பமாகும். வணங்கத்தகாத அரசனை

வணங்குதல் துன்பமாகும். நோயுள்ளவர் வீட்டில் வாழ்வது

துன்பமாகும்.13


கருமையான கூந்தலையுடைய மகளிர் தம் கணவனை

வஞ்சித்தல் துன்பமாகும். கொத்தாகத் தொங்குகின்ற மாம்பழம்

கனிந்து விழுந்தால் துன்பமாம். வேற்றுமையின்றி கூடிய

பெண்ணைப் பிரிந்து செல்வது துன்பமாம். அறிந்து கொள்ளக்

கூடியவர்கள் அறியாவிட்டால் துன்பமாம்.14


புல்லை உண்கின்ற குதிரையின் மணியில்லாமல் ஏறிச்

செல்லுதல் துன்பமாம். கல்வியில்லாதவர் உரைக்கும் காரியத்தின்

பொருள் துன்பமாம். பொருள் இல்லாதவர் விரும்பும் விருப்பம்

துன்பமாம். அவ்வாறே பலர் நடுவே வெட்கப்படுதல் துன்பமாம்.15


உண்ணாது சேர்த்து வைக்கும் பெரும் பொருள் துன்பமாம். உளம்

பொருந்தாத பகைவர்களின் சேர்க்கை துன்பமாகும். கண் இல்லாத

ஒருவனின் உடல் அழகு துன்பமாகும். அவ்வாறே பயிலாதவன்

இயற்றும் கணக்கு துன்பமாம்.16


கல்வி கற்ற சான்றோர் நிறைந்த சபையில் அறிவில்லாதவன்

செல்லுதல் துன்பமாகும். மயங்கிய மாலைப் பொழுதில் வழியில்

செல்லுதல் துன்பமாகும். துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு

மனம் அடங்கி வாழாதவர்களுக்கு வாழ்க்கை துன்பமாம்.

அவ்வாறே தாயைக் காப்பாற்றாமல் வருதல் துன்பமாம்.17

நல்ல அறிவுடையவர்கள் மனம் ஒடிந்து இருத்தல் துன்பமாம்.

வீரமுள்ள ஆட்களை உடையவன் முன்பு மார்பு தட்டுதல் (வீரம்

பேசுதல்) துன்பமாம். அடர்ந்த காட்டில் செல்லுதல் துன்பமாகும்.

மன வறுமையுடையாரது சேர்க்கை துன்பமாகும்.18


நற்குடியில் பிறந்து கல்வியைப் பெறாமல் இருத்தல் துன்பமாகும்.

பூமியில் இட்ட நல்ல விதைகள் முளைக்காமை துன்பமாகும்

மகளிர் வெட்கப்படாமை துன்பமாகும். அவ்வாறே

ஒவ்வாத குலத்தில் திருமணம் செய்வது துன்பமாகும்.19


மழைக்காலத்தில் குயிலினது குரலோசை துன்பமாகும்.

அன்பில்லாதவரது கடுமொழி துன்பமாகும். மழை பெய்யவில்லை

என்றால் ஊருக்கும் துன்பம். அவ்வாறே எருமையால் உழவுத்

தொழில் செய்தால் துன்பமாகும்.20


கொடுத்த அளவினால் மகிழாதவர்களுக்குப் பொருள் கொடுத்தல்

துன்பமாம். பகுத்து உண்ணுதல் இல்லாதவனிடம் சென்று

உண்ணுதல் துன்பமாம். முதுமையுற்ற பருவத்தில்

நோய்ப்படுத்துதல் துன்பமாம். அவ்வாறே வேதத்தை ஓதுதல்

இல்லாத அந்தணனின் செயல் துன்பமாம்.21


யானைப் படையில்லாத அரசரைப் பார்த்தல் மிகவும்

துன்பமாகும். உடலைத்தின்று உடல் வளர்ப்பது மிகவும்

துன்பமாகும். தேனும் நெய்யும் புளித்துவிட்டால் துன்பமாம்.

அவ்வாறே காட்டாறுக்கு இடையில் உள்ள ஊர் மிகவும்

துன்பமாம்.22


மதில் இல்லாத ஊரைக் காப்பது துன்பமாம். குடிநீர்த் துறையில்

ஆடை கழுவுதல் துன்பம். பாறை போன்றாரது சொல் மிகவும்

துன்பமாம். ஐம்பொறிகளை அடக்கிக் கொள்ளத் தெரியாதவனது

தவம் துன்பமாகும்.23