Powered By Blogger

17 டிசம்பர் 2012

மறைக்கப் பட்ட வரலாற்று உண்மை



மறைக்கப் பட்ட வரலாற்று உண்மை !

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் ? இந்தியர்களே நன்றி மறப்பது நன்றன்று !!!
இந்தியாவிற்கு சுதந்திரம் அடைய காரணமானவர் மாவீரன் சுபாஷ் சந்திரபோஸ் தான் .
அவரது அர்ப்பணிப்பும் தியாகமும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டியவை திட்டமிட்டு மறைக்க பட்டுவிட்டது .
இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யாரோ ?
அந்த பேரையும் புகழையும் அனுபவிப்பது யாரோ ?

சுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு .
சுருக்கமாக : அகிம்சை முறையில் போராடி கொண்டு இருந்த காந்தியிடம் சந்திரபோஸ் சொன்னார் . அகிம்சை முறையில் போராடினால் பல ஆண்டுகளாக இந்த போராட்டம் இழுத்து கொண்டே போகும் . கோடிகணக்கான இந்தியர்களை வெறும் இருபதாயிரம் வெள்ளையனைக் கொண்ட ராணுவம் அடிமை படுத்தி வைத்து இருக்கிறாது . ஏன் அந்த ராணுவத்தை அடித்து விரட்ட கூடாது . அவர்களை நான் ஆயுத ரீதியாக எதிர்கொள்ள திட்ட மிட்டு இருக்கிறேன் . உங்களின் கருத்து என்ன என்று காந்தியிடம் கேட்ட போது அகிம்சையை போதிக்கும் நான் இதை ஒருநாளும் ஏற்று கொள்ள மாட்டேன் என்று சொன்னார் . இருவருக்கும் நிறைய கருத்து மோதல் வந்த பின்னர் சந்திரபோஸ் அவர்கள் தனித்து போராட தயாராகினார் .

முதல் கட்டமாக தமிழ்நாடுக்கு வந்தார் . வந்து துடிப்பான இளைஞ்சர்களை சந்தித்து . வெள்ளையனை நாம் ஆயுத ரீதியாக தான் எதிர்கொள்ள வேண்டும் அதற்காக நாம் ராணுவ கட்டமைப்பை உருவாக்க வேண்டும் . என்று இளைஞர்களிடம் பிரச்சாரம் செய்தார் . பிறகு இதே பிரச்சாரத்தை இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கும் சென்று இளைஞ்சர்களின் ஆதரவை திரட்டினார் . ஆனால் அது அவருக்கு தோல்வியிலே முடிந்தது யாரும் ஆயுதம் எடுத்து போராட முன் வரவில்லை மீண்டும் தமிழகம் வந்த போது .

தமிழகத்தில் உள்ள ஆயிர கணக்கான இளைஞர்கள்
சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் போராட்டதிற்கு ஆதரவளித்தார்கள் . அந்த இளைஞர்களுக் கெல்லாம் மறைமுகமாக பயிற்சி அளிக்கப்பட்டது . தமிழகத்தில் காந்தியின் ஆதரவாளர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து கொண்டே போனது . தமிழர்கள் சுபாஷ்சந்திரபோசின் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு ராணுவத்தில் இணைய ஆரம்பித்தார்கள் .

அப்போது சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் ஆயுத புரட்சி ஒன்று ஆரம்பித்து உள்ளார்கள் என்று வெள்ளையர்களுக்கு தெரியவர . இவர்களை எல்லாம் வெள்ளையர்கள் வேட்டையாட ஆரம்பித்துள்ளார்கள் .

சந்திரபோஸின் இயக்கத்தில் பெரும் தமிழ் இளைஞர்கள் இணைந்து கொண்டதை அறிந்த காந்தியின் ஆதரவாளர்கள் . சுபாஷ் சந்திரபோசை காட்டி கொடுக்கவும் ஆரம்பித்தார்கள். அதனால் அவரால் இந்தியாவில் இருந்துகொண்டு செயல்பட முடியாமல் போனது . வெள்ளையர்களிடம் இருந்து தப்பித்து சுபாஷ்சந்திரபோஸ் வெளிநாடுக்கு சென்றார் .

சில வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து தனது போராட்டத்தின் ஆதரவை திரட்டினார் . ஒவ்வொரு நாடாக சென்று போருக்கான ஆயுத தளவாடங்களை ஹிட்லர் மூலம் சேகரித்தார் . எல்லாம் தாயாரான பின்பு இந்தியாவில் இருக்கும் வெள்ளையர்களின் ராணுவ முகாம்களின் எண்ணிக்கை எங்கே இருக்கிறது எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று உளவு பார்த்து தகவல் அறிந்து கொண்ட பின்னர் .

தமிழ் நாட்டில் இருக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கு தகவல் அனுப்பினார் . நான் வெளிநாட்டில் மிகப்பெரிய ராணுவ கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறேன் . இந்த ராணுவத்தில் இணைந்து நமது நாட்டு விடுதலைக்காக ஆயுதம் எடுத்து போராட விரும்புபவர்கள் . என்னுடன் இணைந்து கொள்ளலாம் என்று தகவல் அனுப்பி இருந்தார். இந்தியா முழுவதும் இந்த தகவல் பரவியது . இதை அறிந்த தமிழக தேச பற்றாளர்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் படகு மூலம் வெளிநாட்டுக்கு செல்ல ஆரம்பிதார்கள் .

அங்கே எல்லோருக்கும் போர்ப் பயற்சி அளிக்கப்பட்டது . அப்போது போராளிகளிடம் சுபாஷ்சந்திரபோஸ் பேசினார் . எமது தேசத்தில் வெறும் இருபது ஆயிரம் வெள்ளையனின் ராணுவம் இருக்கிறது . நாம் இங்கு மிகப்பெரிய ராணுவ கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறோம் . அவர்களை நாம் கப்பல் மூலம் சென்று டெல்லி வரை தாக்க போகிறோம் டெல்லியில் தான் வெள்ளையனின் முழு பலமும் இருக்கிறது எனவே டெல்லி வரை நாம் சென்று தாக்க போகிறோம் என்று சொன்னார் . ஆனால் இந்த ராணுவத்தில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பது குறிப்பிட தக்கது .

ஒரு பக்கம் காந்தியின் அகிம்சை போராட்டம் நடந்து கொண்டிருந்தது . சுபாஷ்சந்திரபோஸ் திட்டமிட்டபடி யுத்த ஆயுத கப்பல்கள் மூலம் சென்று டெல்லி வரை வெள்ளையர்களின் ராணுவத்தை அடித்தார்கள் . அப்போது வெள்ளையர்கள் பாரிய உயிரிழப்புக்களை சந்தித்தார்கள் . வெள்ளையர்களுக்கு வெளிநாட்டில் இருந்து வரும் ஆயுத உதவிகளை தடுத்தார்கள் முக்கியமான கடல்வழி பாதை சுபாஷ் சந்திர போஸின் கட்டுபாட்டுக்குள் வந்தது . அதனால் தொடர்ந்து வெள்ளையர்களால் யுத்தம் செய்யஇயலாமல் ஆயுத பற்றாகுறை வந்தது. பொருளாதார பிரச்சனையும் அவர்களுக்கு வந்தது. தொடர்ந்து அவர்கள் இந்தியாவில் இருப்பது பற்றி கேள்விகுறியானது .

சுபாஷ்சந்திரபோஸ் ராணுவத்தோடு நடந்து கொண்டிருக்கும் சண்டையில் வெள்ளையர்கள் தோல்வி அடைந்து கொண்டே வந்தார்கள். இந்த தோல்வியை அவர்களால் ஒப்பு கொள்ள முடியவில்லை. அதனால் வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தார்கள் .
ஆனால் இந்தியா முழுவதும் சுபாஷ்சந்திரபோஸ் அவர்களின் ராணுவ போராட்டம் தெரியவந்தது .

அதனால் காந்தி வழியில் போராடி கொண்டிருந்தவர்களுள் பெரும்பாலானோர் சந்திரபோஸ் அவர்களின் பின்னால் செல்ல ஆரம்பித்தார்கள். இதனால் வெள்ளையர்களுக்கு தொடர்ந்து இந்தியாவில் இருக்க முடியாத நிலைமை ஏற்ப்பட்டது . ஆயுத போராட்டத்தை காந்தி அவர்கள் கடுமையாக எதிர்த்து வந்தார் சுபாஷ் சந்திர போஸ் மக்களை தவறான வழியில் கொண்டு செல்கிறார் என்றும் கூறி வந்தார் .

காந்தியின் ஆதரவாளர்களால் சுபாஷ்சந்திரபோஸ் காட்டி கொடுக்க பட்டார் . அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள் வெள்ளையர்கள் . ஆனால் சிறையில் வேலை செய்தவர்களின் உதவியுடன் சுபாஷ் சந்திர போஸ் தப்பித்து வந்தார் . அதன் பிறகு
ஆயுத போராட்டம் கடும் தீவிரம் அடைந்து வந்தது
வெள்ளையர்கள் வெளியேறும் நிலைமையும் வந்தது .


ஆனால் நாங்கள் ராணுவ ரீதியாக தோற்கடித்து இந்தியாவில் விரட்டியடிக்க பட்டோம் என்று வந்து விடக் கூடாது என்பதற்காக . அப்படி ஒரு அவமானம் வந்து விட கூடாது என்பதற்காக காந்தியை நாடினார்கள் வெள்ளையர்கள் .

வெள்ளையர்கள் அகிம்சைரீதியாக போராடும் காந்தியை சந்தித்து நாங்கள் உங்கள் அகிம்சை போராட்டத்தால் உங்களுக்கு சுதந்திரம் கொடுக்க போகிறோம் நாங்கள் இந்தியாவை விட்டு போக போகிறோம் என்று சொன்னார்கள் . காந்தியின் அகிம்சை பெயரை சொல்லி வெள்ளையன் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்து விட்டு வெளியேறினான் .

ஆனால் தற்போது இந்திய அரசாங்கமும் இந்திய மக்களும் சுபாஷ்சந்திரபோஸை மறந்து விட்டார்கள் . அவரின் மகத்தான போராட்ட வரலாற்றை திட்ட மிட்டு மறைத்து விட்டார்கள். காரணம் காந்தியின் அகிம்சை போராட்டம் பாதித்து விடும் இந்த வரலாறு மறைந்து விடும் என்பதற்காக .

இந்தியர்களே தமிழர்களே நன்றி மறப்பது நன்றன்று.. எனவே இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த சுபாஷ்சந்திரபோஸ் அவர்களுக்கு எங்கள் வீர வணக்கம் இந்நாளில் அந்த வீரனை நினைவு கொள்வோம்.

அருணாசல சிவன்

செயசெய அருணாத்திரி சிவய நம ...
செயசெய அருணாத்திரி மசிவயந ...
செயசெய அருணாத்திரி நமசிவய திருமூலா ...
செயசெய அருணாத்திரி யநமசிவ ...

செயசெய அருணாத்திரி வயநமசி ...
செயசெய அருணாத் திரி சிவய நமஸ்த்து என மாறி ...
செயசெய அருணாத் திரி தனின் விழி வைத்து ...
அர கர சரணாத்திரி என உருகி ...
செயசெய குரு பாக்கியம் என மருவி சுடர் தாளை ...
சிவசிவ சரணாத் திரிசெய செயென ...
சரண் மிசை தொழுது ஏத்திய சுவை பெருக ...
திருவடி சிவ வாக்கிய கடல் அமுதைக் குடியேனோ ...
செயசெய சரணாத் திரி என முநிவர் கணம் ...
இது வினை காத்திடும் என மருவ ...
செட முடி மலை போற்று அவுணர்கள் அவிய சுடும் வேலா ...
திரு முடி அடி பார்த்திடும் என இருவர்க்கு ...
அடி தலை தெரியாப்படி நிண அருண சிவ சுடர் ...
சிகி நாட்டவன் இரு செவியில் புகல்வோனே ...
செயசெய சரணாத் திரி எனும் அடியெற்கு ...
இரு வினை பொடியாக்கிய சுடர் வெளியில் ...
திரு நடம் இது பார்த்திடும் என மகிழ் பொன் குரு நாதா ...
திகழ் கிளி மொழி பால் சுவை இதழ் அமுத ...
குற மகள் முலை மேல் புது மணம் மருவி ...
சிவகிரி அருணாத்திரி தலம் மகிழ் பொன் பெருமாளே. ...

அஜயஜெய அருணாசலா, சிவயநம,
அஜயஜெய அருணாசலா, மசிவயந,
அஜயஜெய அருணாசலா, நமசிவய, மூலப் பொருளே,
அஜயஜெய அருணாசலா, யநமசிவ,
அஜயஜெய அருணாசலா, வயநமசி,
அஜயஜெய அருணாசலா, சிவயநமஸ்த்து என்று மாறி மாறிச் செபித்து,
ஜெயஜெய என்று கூறி அருணாசலத்தில் கண்ணை வைத்து,
ஹர ஹர திருவடி மலையே (சிவ மலையே) என்று கூறித் தியானித்து,
ஜெய ஜெய என்னும் இந்த மந்திரம் எங்கள் குரு தந்த பாக்கியம் என்று என் உள்ளம் பொருந்தி, பேரொளியாக விளங்கும் திருவடியை
சிவசிவ திருவடி மலையே ஜெயஜெய எனப் புகழ்ந்து,
திருவடி (சிவமலை) யின் மீது வீழ்ந்து தொழுது போற்றிய இன்பம் பெருக
அந்தத் திருவடியின் (ஆண்டவனது) சிவ மந்திரமாகிய பாற்கடலில் இருந்து கிடைத்த அமுதம்போன்ற இன்பரசத்தைப் பருகி மகிழேனோ?
ஜெய ஜெய திருவடி மலையே என்று முனிவர்களின் கூட்டங்கள்
இத் திருமலை வினையினின்றும் நம்மைக் காத்திடும் என்று கூடிப் பொருந்திட,
தங்கள் உடலையும் முடியையும் கிரெளஞ்சம், ஏழு குலகிரிகள் என்னும் மலைகள் காப்பாற்றுவதாக நினைத்த அசுரர்கள் மடிந்து விழச்செய்து சுட்டெரித்த வேலாயுதனே,
திருமுடியையும் திருவடியையும் கண்டு பிடியுங்கள் எனக் கூறி திருமால், பிரமன் ஆகிய இருவருக்கும்
அடியும் முடியும் தெரியாதவண்ணம் நின்ற செந்நிறச் சிவ சுடராகிய
நெருப்புக் கண்ணை உடைய சிவபெருமானுடைய இரண்டு காதுகளிலும் (பிரணவ மந்திரத்தை) உபதேசம் செய்தவனே,
ஜெயஜெய திருவடி மலையே (சிவமலையே) எனத் துதிக்கின்ற அடியேனுக்கு,
எனது (நல்வினை, தீவினை ஆகிய) இரு வினைகளையும் பொடியாக்கிய ஒளி வெளியில்
திருநடனம் இதோ பார்ப்பாயாக எனக் கூறி மகிழ்ந்திடும் அழகிய குரு நாதனே,
விளங்கும் கிளி மொழி போலவும், பாலின் சுவை போலவும், வாயிதழின் ஊறல் அமுதம் போலவும் அமைந்த
குறப் பெண்ணாகிய வள்ளியின் மார்பின் மீது உள்ள புது மணத்தைச் சுகித்து,
சிவ மலையாகிய அருணாசலத் தலத்தில் மகிழ்கின்ற அழகிய பெருமாளே.

சிவபெருமான்

சிவபெருமான்

 கருத்திற்கு எட்டாத,
வண்ணமில்லாத,
குணமில்லாத,

அறியமுடியாப் பொருளாய்,
எங்கும் நீக்கமற நிறைந்துள்ளவராய்,
அழியா சோதியாய் அமைந்துள்ளவர் சிவபெருமான்.

அவர் அனைத்து ஆன்மாக்களிலும் ஆணவம் மட்டும் நிலையாக இருப்பதை அறிந்தார். அதனை அகற்ற அருள் செய்தார். அதனால் ஞானத்தை கொடுத்து அதன் மூலமாக ஆணவம், கன்மம், மாயையை அகற்றி இறுதியில் தூய்மையான தன்னை வந்து அடையும்படி செய்தார். எனவே ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், மறைத்தல், அருளல் என ஐந்து வகையானத் தொழில்களைச் செய்து வந்தார்.ஊழிக்காலத்தில் உலகிலுள்ள அனைத்து உயிரிகளும் தன்னிடம் ஒடுங்க, தன் தேவியும் அவரிடம் ஒடுங்கி விடுவார். இவர் மட்டுமே அழியாமல் இருப்பவர் என ஆகமங்களும் வேதங்களும் கூறுகின்றன.

இவர் எத்தனை ஊழிக்காலங்கள் வந்தாலும் அனைத்தும்
இவரிடமே ஆரம்பிக்கின்றன,
இவரிடமே முடிகின்றன.
இவர் தனியானவர் முதன்மையானவர்.
இவரிமிருந்தே அனைத்து விதமான சக்திகளும் பிறக்கின்றன.
இவரிடமே தஞ்சமடைகின்றன.
இவரை வணங்கியே அனைத்து தேவர், மூர்த்திகளும் அனைத்து வகையான செல்வங்களையும் பெற்றனர்.
இவர் உலகின் முதன்மையானவராவர்.

லிங்கம் விளக்கம்

லிங்கம் விளக்கம்: நம்முடைய புராணங்களும், வேதங்களும் பரசிவத்தை கீழ்கண்டவாறு விவரிக்கின்றது. .

மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களும் இல்லாதது. மனம்,சொல்,செயல் இவற்றிற்க்கு மேல் வேறொரு <உயர்வான நிலை இல்லை எனுமளவிற்கு உயர்ந்தது. உருவமற்றது. ஆகவே இன்னதென நம்மால் சுட்டிக்காட்ட இயலாதது. அதுவே அனைத்துமானது, பற்பல குணாதிசயங்களைக் கொண்டது. நிறமில்லாதது, அழிவென்பதே இல்

லாதது, ஈரேழு உலகங்களும் தோன்ற, அழிய காரணமாயிருப்பது, இதுதான் எனக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நிலையை நமக்கு கொடுக்காதது. இத்தகைய நம் அனைவரையும் இயக்க வைக்கும் சக்தியை நாம் பரமசிவம் என்றால் எல்லோரும் அறிந்தது என பொருள் படும்.

மேற்சொன்னவாறு ஐம்புலனில்லாத எட்டாத நிலையைக் கொண்ட, இதற்கு மேல் வேறொரு உயர்ந்த நிலையினை சுட்டிக்காட்ட முடியாத, உலகம் தோன்ற, அழிய காரணமான இதனை உருவம் உள்ளது, அதாவது சகளம் என்றும், உருவமற்றது அதாவது நிட்களம் என்றும் பிரிக்கலாம். மேற்ச்சொன்ன சகலநிட்கள நிலையையே நாம் லிங்கம் என்போம். லிங்கம் சிவரூபம் அதாவது மேலேயுள்ளது. அது பொருந்தியிருக்கும் பீடம் சக்தி வடிவமாகும். பொதுவாக லிங்கத்தை ஞான சக்தியின் மறுவடிவமாக கொள்ளலாம். இத்தகைய ஞான சக்தியின் மறுவடிவமான லிங்க உருவமே சிவபெருமானின் உடலாகும். லிங்கம் மூவகைப்படும் . அவ்வியக்தம், வியக்தம், வியக்தாவியக்கம். இதில் கை, முகம் வெளிப்படாமல் இருப்பது அவ்வியக்தம், வெளிப்படுவது வியக்தம். அருவுருவத் திருமேனியுடையது வியக்தாவியக்தம். சிவலிங்கத்தின் உருண்டையாக இருக்கும் பகுதி ருத்ரபாகம் என்றழைக்கப்படும். பீடத்தின் கீழாக உள்ள நான்கு மூலையும் பிரம்ம பாகம் என்றழைக்கப்படும். பீடத்தில் லிங்கம் பொருந்தியுள்ள எட்டு மூலையும் திருமால் பாகம் என்றழைக்கப்படும். ருத்ரபாகம் ஆணாகவும், திருமால் பாகம் பெண்ணாகவும் பிரமபாகம் பேடு எனவும் குறிக்கப்படும்.

கன்ம சாதாக்கியம் என்பதற்கேற்ப லிங்கத்தின் நடுவே சதாசிவனும், மேற்கே ஈசனும், வடக்கே பிரம்மனும், தெற்கே திருமாலும், கிழக்கே ஈசனும் அமைந்திருக்கின்றனர். இத்தகைய சிறப்பு பெற்ற லிங்கத்தைப் பற்றி மகாலிங்க தலம் எனும் சிறப்புப் பெற்ற ஊர் மயிலாடுதுறை அருகே உள்ள இடைமருதூர் ஆகும். இங்கு சிவபெருமான் தானே லிங்கம் அமைத்து, தானே பூஜித்து, பூஜைக்குறிய வழிமுறைகளை வகுத்தும் தந்துள்ளார். இங்கு காவிரி நதி வில்வத்தால் சிவனைப் பூஜித்தாள். நம்மிடமுள்ள மும்மலங்களை அகற்றும் வல்லமையுடையவர் இவர். பிரமஹத்தி தோஷ பரிகார தலமாகும். வில்வார்ச்சனையும், தயிர் அன்ன நைவேத்தியமும் செய்தால் மூளை, மனம் சம்மந்தப்பட்டவை தீரும். அக உடல் தூய்மையடையும். இறைவன் பெயர் மகாலிங்கேஸ்வரர். இறைவி பெயர் பெருநலமுலையம்மையார் என்பதாகும்.

முகலிங்கம்

முகலிங்க மூர்த்தி

சிவலிங்கத்திற்கென தனியானதொரு கீர்த்தி உண்டு எனலாம். சிவலிங்கத்தில் முகம் இருந்தால் நாம் அதை முகலிங்கம் என்போம். அத்தகைய முகலிங்கம் நான்கு வகைப்படும். அவை ஆட்யம், அநாட்யம், சுரேட்டியம், சர்வசமம் என்பனவையாகும். இதில் ஆடயம் என்பது 1001 லிங்கமுடையது. சுரேட்டியம் என்பது 108 லிங்கமுடையது. அநாட்டிய , சுரேட்டிய லிங்கங்கள் திருமுகங்களைப் பெறாதவையாகும்.சர்வசமம் என்பது ஐந்து முக வேதங்களைப் பெறும். ஈசானம், தத்புருடம், அகோரகம், சத்யோஜாதம், வாமம் என ஐந்தும் அடங்கும். முகலிங்கம் எதை விளக்குகிறது எனில் விளக்கும் ஒளியும் போல பிரிக்க முடியாத இறைவன் உள்ளார் என்று விளக்குகிறது. பிரம்ம, விஷ்ணு, ருத்ர, மகேஸ்வர, சதாசிவமே முகலிங்கம் எனப்படுகிறது. இந்த ஐவரும் ஐந்தொழில்களை நடத்துகின்றவர். இவற்றிற்கு ஆதார சக்தியாக உள்ளவன் இறைவன் அவனையே நாம் முகலிங்கத்தின் மூலமாக தரிசிக்க முடியும்.

முகலிங்க மூர்த்தியை தரிசிக்க நமக்கு மூன்று இடங்கள் அமைந்துள்ளது.

1. திருவக்கரை
2. கச்சபேஸ்வரர்
3. கொட்டையூர்

இதில் திருவக்கரையில் அமைந்துள்ள சங்கரமௌலீஸ்வரர் கோயிலில் முகலிங்கமூர்த்தி சிறப்பு பெற்றது. எப்படியெனில் சதுரமான அடி பாகத்தின் மீது அமைந்துள்ள வட்ட வடிவமான ஆவுடையாரின் மேல் மும்முகத்துடன் மூலவர் காட்சிக்கொடுக்கிறார். இங்குள்ள கோயில் தீர்த்தத்தில் நீராடி வில்வத்தால் அர்ச்சிக்க விரோதிகள் ஒழிந்து நட்பு பாராட்டுவர், இல்லையெனில் சிவனின் கட்டளைக்குக் கீழ்ப்படியும் வக்கிர காளியம்மன் அவர்களை கண்டிப்பாள். என்று நம்பிக்கை நிலவுகிறது. மேலும் பிரதோஷ காலங்களில் தும்பைப் பூ அர்ச்சனையும், சுத்த அன்னம் நைவேத்தியமும் செய்ய நல்வாழ்வு கிட்டும் என்பது உறுதி. மேலும் காஞ்சியிலுள்ள கச்சபேஸ்வரர் கோயிலிலும் முகலிங்கம் உள்ளது. மற்றொன்று கும்பகோணம் அருகே அமைந்துள்ள கொட்டையூரில் உள்ளது. இங்குள்ள முகலிங்க மூர்த்தி மிகுந்த சக்தி வாய்ந்தவர். அவரை சக்கரையால் அபிஷேகம் செய்தால் அனைத்திலும் ஜெயம் உண்டாகும் என்பது ஐதீகம்.

சிவன் - ஐந்து முகங்கள்



சிவன் தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம், ஈசானம் என்கிற ஐந்து முகங்களைக் கொண்டவர்.

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்கிற ஐந்து தொழில்களையும் செய்பவர். திருநீறு, ருத்ராக்ஷம், பஞ்சாக்ஷரம் ஆகிரயவற்றில் விருப்பமுடையவர். ருத்ரம், சமகம் முதலான மகாமந்திரகளால் மனம் மகிழ்பவர். கோபமான வடிவில் ருத்ரனாகவும், சாந்தமான வடிவில் தக்ஷிணாமூர்த்தியாகவும் திகழ்பவர்.

சிவன
ுக்கு அவதாரங்கள் இல்லை என்றாலும், காரியார்த்த காரணமாக உருவங்களைக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இவற்றில் தக்ஷனை கொல்வதற்காக வீரபத்திரர்; தாருகவனத்து ரிஷிகளின் கர்வத்தை அடக்க பிட்சாடண மூர்த்தி; மார்க்கண்டேயனுக்காக யமனைக் கொல்ல காலசம்ஹாரமூர்த்தி; பிரம்மாவைத் தண்டிக்க பைரவர்; ஞான வடிவாக அம்பலம் தன்னில் ஆனந்த நடமாடும் தில்லைக் கூத்தன் நடராஜ வடிவம் - இப்படியாக பல வடிவங்களில் சிவனை தரிசித்து மகிழ்ந்திட ஏதுவாகிறது. பதஞ்சலி முதலான முனிவர்கள் தரிசித்து மகிந்த குஞ்சித பாதம் தில்லை சிற்சபேசனின் பொற்பாதமன்றோ!

இதய ஆகாசம் - அதை தகராகாசம் என்பார்கள் - வெளியே வான்வெளி ஆகாசம் போலவே விரிந்து பரந்தது இந்த இதய ஆகாசமும். பரமாகாச சொரூபியான பரமன், ஆன்ம சிற்றணுவிலும் தகராகாத்திலும் திகழ்கிறார். "த்" என உச்சரிக்கையில், நுனிநாக்கு மேற்பல் அடியைத் தீண்டி நிற்பதுபோல, அகமதில் இறையதை உணர்த்தப்பெறும் இடம் தகராகாசம் ஆகும். "த"கரம் எனும் மெய்யெழுத்து, தமிழ் நெடுங்கணக்கில் ஏழாவது வரிசையில் இருப்பதுபோல், ஆறறிவுக்கும் மேற்பட்ட ஏழாவது அறிவு - மெய்யறிவு இந்த தகராகாசத்தில் சித்தியாகின்றதோ! தகரகன நடனபதி என்றும் தகராலய மூர்த்தி என்றும் வழங்கப்படுபவன் நதிப்புனை ஈசன். ஈசனின் திருவருளால் வள்ளாலாரெனும் அருட்கொடைவள்ளல் பெருமான் அருட்பெரும்ஜோதி அகவலதில் தான் பெற்ற காட்சியனுபவத்தை "உபய பக்கங்களும் ஒன்றெனக் காட்டிய அபய சிற்சபையில் அருட்பெரும்ஜோதி" எனப்பாடி மகிழ்கின்றார்.

சிவபெருமான் கோலங்கள்

சிவபெருமானுக்கு போகநிலை, வேகநிலை, யோகநிலை என்று மூன்று விதமான கோலங்கள் உண்டு.

மனைவி மக்களுடன் வீடு வாசல் என்று வாழும் வாழ்க்கையே போக வாழ்க்கை. இந்த விதத்தில் இறைவனும் கல்யாண சுந்தரனாக, உமா மகேஸ்வரராக அருள் செய்கிறார்.

தீமைகளைப் போக்கும் விதத்தில் சம்ஹார மூர்த்தியாக அவர் வேகவடிவமும் எடுக்கிறார். கஜசம்ஹாரர், மன்மத தகன மூர்த்தி, ருத்திர மூர்த்தி என்ற வடிவங்களில் தீமைகளைப்

போக்குகிறார்.

மிக உயர்ந்த நிலை ஞானநிலை. ஞானமூர்த்தியாக வரும்போது மவுனமே பிரதானம். இதுவே தென்முகக்கடவுளான தெட்சிணாமூர்த்தி ஆகும்.

இந்த மூன்று கோலங்களையும் ஒருசேர அருளுவதே நடராஜர் வடிவாகும்.

அதாவது, உல்லாசமாக தேவியுடனும், கோபத்துடன் ருத்ரமூர்த்தியாக சம்ஹார தாண்டவமும், பெருங்கூட்டத்துடன் ஹாஸ்யமாகவும் இவர் ஆடுகிறார். இவரது ஆட்டத்தில் நவரசங்களும் உண்டு.

இந்நடனத்தின் போது படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் (உறக்கத்தின் போது உணர்வற்று இறந்தவனைப் போல் நாம் மாறி விடுகிறோம். அந்நேரத்தில் நம் உயிரைப் பாதுகாப்பது இறைவனே. இதையே "மறைத்தல்' தொழில் என்பர்) அருளல் என்னும் ஐந்தொழில்களையும் செய்து, இந்த உலகத்தை இயக்குகிறார்.

சிவன் காயத்ரி மந்திரம்

துன்பங்கள் நீங்க சிவன் காயத்ரி மந்திரம்
 


ஓம் தத்புருஷாய ....வித்மஹே மஹாதேவாய
தீமஹி தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சதாசிவாய ......வித்மஹே ஜடாதராய
தீமஹி தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் பஞ்சவக்த்ராய .வித்மஹே அதிசுத்தாய
தீமஹி தன்னோ ருத்ரஹ்... ப்ரசோதயாத்

ஓம் கௌரீநாதாய ..வித்மஹே சதாசிவாய
தீமஹி தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்

ஓம் சிவோத்தமாய .வித்மஹே மஹோத்தமாய
தீமஹி தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்

ஓம் தன்மஹேசாய .வித்மஹே வாக்விசித்தாய
தீமஹி தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்

ஓம் மஹாதேவாய ..வித்மஹே ருத்ரமூர்த்யே
தீமஹி தன்னோ சிவ ப்ரசோதயாத்

ஓம் பஸ்மாயுதாய ...வித்மஹே தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய
தீமஹி தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்

ஓம் சூலஹஸ்தாய .வித்மஹே மஹா தேவாய
தீமஹி தன்னோ ஈசஹ் ப்ரசோதயாத்

ஓம் சிவாய நம


ஓம் சிவாய நம

சி - சிவன்
வா - அருள்
ய - உயிர்
நம - மும்மலங்கள் [மாயை,ஆணவம்,கர்வம்]

ஸ்தூலபஞ்சாட்சரம்-------- நமசிவாய
சூட்சுமபஞ்சாட்சரம்---------சிவயநம
அதி சூட்சுமபஞ்சாட்சரம்--சிவய சிவ
காரண பஞ்சாட்சரம்-------- சிவ சிவ

இம்மந்திரத்தை சொல்லி இறைவனை வேண்டும்போது, கர்வம், ஆணவம் மற்றும் உலக மாயையிலிருந்து விடுபடலாம்.

"நமசிவய" என்னும் ஐந்தெழுத்து மந்திரம்

"நமசிவய" என்னும் ஐந்தெழுத்து மந்திரம் சிவனின் மூல மந்திரம்.
சிவம் என்றால் காரணமில்லாத மங்களம் என்று பொருள்.

யஜுர் வேதத்தின் நடு நாயகமானது ஸ்ரீருத்திரம். அதன் நடுநாயகமே "நமசிவய". தீக்கை பெற்றிருந்தாலும், பெறாவிடினும் "நமசிவய" என தாயைக் கூவியழைக்கும் சேய்போல் அழைக்க யாவருக்கும் உரிமை உண்டு. கடல் தன்மயமாய் இருந்துகொண்டு அதில் வந்து சேரும் நீரையெல்லாம் தன்மயமாக்குவதைப்போல்,

சிவனும் தம்மைக் கூவியழைப்பவர்களை எல்லாம் சிவமயமாக்குகிறார்.

பிரபஞ்சம் நாதம் அல்லது ஓசையின் தூலவடிவே. இறைவன் நாதமாயும், நாதத்திற்கு அப்பாற்பட்டும் உள்ளான்.

திருமந்திரம்
நாதத்தின் அந்தமும் நாற்போத அந்தமும்
வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவா னந்தமுந்
தாதற்ற நல்ல சதாசிவா னந்தத்து
நாதப் பிரமஞ் சிவநட மாகுமே."


"நாதத் துவங்கடந் தாதி மறைநம்பி
பூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர்
நேதத் துவமும் அவற்றொடு நேதியும்
பேதப் படாவண்ணம் பின்னிநின் றானன்றே."


நாதத்தின் நாயகனை நாதத்தால்தான் கட்ட இயலும். "நமசிவய" என்னும் மூலமந்திரத்தை ஓதவேண்டும்.


மந்திரத்தை வாய்விட்டுச் சொல்லுதல் தூலஜபம். ஒலி வெளிவராமலும் நாவசைந்து ஓதுதல் சூக்கும ஜபம். நாவசையாது, ஒலி வெளிவராது உள்ளுக்குள்ளே (உள்ளுக்கு உள்ளே) ஓதுதல்தான் உன்னத காரண நிலை.


நாதத்தின் தலைவன் நாதன். அப்படிப்பட்ட நாதனின் தாள் வாழ்க.இது பக்தி மார்க்கத்தில் உள்ளவருக்கு.


இதன் ஞான நிலை:

சிவவாக்கியர்
நவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய்
சிவ்விரண்டு தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய்
யவ்விரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில்
செவ்வைஒத்து நின்றதே சிவாயநம அஞ்செழுத்துமே!"


தாள் என்பது சிவனின் மலர்ப்பாதம்.
நம் உடலில் மலர் போன்ற பகுதி நம் கண்களே.
அதுவே இறையின் மலர்ப்பாதங்கள்.


இவைகளைப்(சூரியகலை, சந்திரகலை) பயன்படுத்தி, அக்கினி கலையுடன் கூட "நமசிவய" எனும் மந்திரம் நம்முடலினுள்ளே கேட்கும்.

லிங்கம் என்பது அடையாளம்

லிங்கம் என்பது அடையாளம் (குறி) என்று பொருளாகும். 

லிம் - அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒடுங்குமிடம் என்று பொருள்.
கம் - ஒடுங்கிய அனைத்தும் மீண்டும் தோன்றுமிடம் என்று பொருள். காணவே முடியாது என்று கருதப்படும் இறைவனை காண்பதற்கு உரிய அடையாளமே லிங்கம். 


இது சிவனின் திருவுருவமாகும்.
இந்த உயிர்கள் வாழும் அண்டமும், அந்த அண்டம் தோன்றும் பிரபஞ்சமும் லிங்க வடிவமே. 


லிங்கத்தில் தோன்றிய உயிர்கள் மீண்டும் அந்த லிங்கத்தையே வணங்கி வழிபட்டு மீண்டும் அந்த லிங்கத்தின் உள்ளேயே சரணடைய வேண்டும் என்று ரிஷிகள் லிங்க வழிபாட்டில் கூறுகிறார்கள்.

லிங்கத்தில் மும்மூர்த்திகளும் அடக்கம்: சிவலிங்கத்தில் ஆவுடையின் மேல்பகுதி சிவபாகமாகவும், நடுப்பகுதி விஷ்ணுபாகமாகவும், அடிப்பகுதி பிரம்மபாகமாகவும் காணப்படுகிறது.

சிவலிங்கத்தின் வகை:
சிவலிங்கமானது பரார்த்த லிங்கம், இஷ்டலிங்கம் என இருவகைப்படும். இதில் பரார்த்த லிங்கத்தில்.

லிங்கம் ஐந்து வகையுண்டு.

1. சுயம்புலிங்கம்: தானே தோன்றுவது
2. கானலிங்கம்: அம்மன், விநாயகர், முருகன், ஆகியோரால் பிரதிஷ்டை செய்யப்படுவது.
3.தைவீகலிங்கம்: பிரம்மா, விஷ்ணு, ஆகியோரால் பிரதிஷ்டை செய்யப்படுவது.
4. ஆரிடலிங்கம்: ரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்படுவது.
5. மானுடலிங்கம்: மானிடர்களால் அமைக்கப்படுவது.

அடுத்தது இஷ்ட லிங்கம்: இந்த லிங்கம் குருபரம்பரையின் உபதேசப்படி தீட்சை பெற்ற சீடர், அடியேன் இந்த உடலில் உயிர் உள்ளவரை சிவபூஜை செய்யாது உணவு உண்ண மாட்டேன் என்று சத்திய பிரமாணம் செய்து வழிபடுவதாகும். சிவலிங்கத்தின் வகை:

சிவலிங்கமானது பரார்த்த லிங்கம், இஷ்டலிங்கம் என இருவகைப்படும். இதில் பரார்த்த லிங்கத்தில். லிங்கம் ஐந்து வகையுண்டு.

1. சுயம்புலிங்கம்: தானே தோன்றுவது
2. கானலிங்கம்: அம்மன், விநாயகர், முருகன், ஆகியோரால் பிரதிஷ்டை செய்யப்படுவது.
3.தைவீகலிங்கம்: பிரம்மா, விஷ்ணு, ஆகியோரால் பிரதிஷ்டை செய்யப்படுவது.
4. ஆரிடலிங்கம்: ரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்படுவது.
5. மானுடலிங்கம்: மானிடர்களால் அமைக்கப்படுவது.

அடுத்தது இஷ்ட லிங்கம்: இந்த லிங்கம் குருபரம்பரையின் உபதேசப்படி தீட்சை பெற்ற சீடர், அடியேன் இந்த உடலில் உயிர் உள்ளவரை சிவபூஜை செய்யாது உணவு உண்ண மாட்டேன் என்று சத்திய பிரமாணம் செய்து வழிபடுவதாகும்.

கால பைரவன்


 
விரித்த பல் கதிர்கொள் சூலம்
வெடிபடு தமரு கம்கை
தரித்ததோர் கோலகால பயிரவனாகி
வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு
ஒண்திருமேனி வாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வனாரே

- இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் கால பைரவரின் அருள் கிடைக்கும்.

தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம்

தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம்
****************************
*****************************
ஆதிசங்கரர் தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம் சங்கரனே ரமண பகவானுள் இருந்து தமிழில் கூறுவதாக அருளியது.
**********************************************
*********
 
 மவுனமாம் உரையாற் காட்டும் மாப்பிரம வத்துவாலன்
சிவ நிலைத்தவர் சற்சீடர் செறி குருவரன் சிற்கையன்
உவகையோர் உருவன் தன்னுள் உவப்பவன் களி முகத்தன்
அவனையாம் தென்பால் மூர்த்தி அப்பனை ஏத்துவோமே

உலகு கண்ணாடி ஊர் நேருறத் தனுள் அஞ்ஞானத்தால்
வெளியினிற் துயிற் கனாப்போல் விளங்கிடக்கண்டு ஞான
நிலையுறு நேரம் தன்னை ஒருவனாய் எவன் நேர் காண்பன்
தலையுறு குருவாம் அந்தத் தக்ஷிணாமூர்த்தி போற்றி

வித்துளே முளைபோல் முன்னம் விகற்பமில் இச்சகம் பின்
கற்பித மாயா தேய கால கர்மத்தால் பற்பல
சித்திரம் விரிப்பன் யாவன் சித்தனும் மாயிகன் போல்
சத்தியாற் குருவாம் அந்தத் தக்ஷிணாமூர்த்தி போற்றி

எவன் ஒளி உண்மையின்மை இயை பொருள் இலங்கு நேரே
எவன் அது நீ யானாய் என்று இசைத்துணர்த்துவன் சேர்ந்தோரை
எவனை நேர்காணின் மீண்டும் இப் பவக் கடல் வீழ் வில்லை
தவர் உறு குருவாம் அந்தத் தக்ஷிணாமூர்த்தி போற்றி

பலதுளைக் குடத்துள் தீபப் பாய் கதிர்போல் யாற் ஞானம்
விழிமுதற் பொறிவாய்ப் பாய்ந்து வெளி சரித்து அறிந்தேன் என்ன
விளங்கிடும் எவனைச் சார்ந்து விளங்கும் இவ் அவனியாவும்
சலமறு குருவாம் அந்தத் தக்ஷிணாமூர்த்தி போற்றி

உடல் உ யிர் பொறிகள் புந்தி ஒன்று பாழ் அகமாத் தேர்வர்
மடந்தையர் பாலர் அந்தர் மடையரேய் மூடவாதி
மடமையால் விளையும் அம் மாமயக்கமே மாய்க்கும் ஞானத்
தடையறு குருவாம் அந்தத் தக்ஷிணாமூர்த்தி போற்றி

இராகு பற்றி இரவி திங்கள் என உளன் மாயை மூடப்
பரா உளம் ஒடுங்கத் தூங்கிப் பரவிட உணரும் காலம்
புரா உறங்கினன் நான் என்று போதனாம் எவன் புமானாய்ச்
சராசர குருவாம் அந்தத் தக்ஷிணாமூர்த்தி போற்றி

குழவி முன் நனவுமுன்னாக் கூறு பல் அவத்தை எல்லாம்
சுழலினும் கலந்திருந்தே சொலிக்கும் உள் அகமா நாளும்
கழல் விழுவோர்க்கு யார் தன்னைக் காட்டுவன் சிற் குறிப்பால்
தழல் விழிக் குருவாம் அந்தத் தக்ஷிணாமூர்த்தி போற்றி

உலகை யார் இப்புமான் நோக்குறும் பல நனாக் கனாவிற்
கலங்கியே மாயையாலே காரிய காரணம் பின்
தலைவனும் தாசன் சீடன் குரு மகன் தந்தை யாதி
தலமுறு குருவாம் அந்தத் தக்ஷிணாமூர்த்தி போற்றி

மண் புனல் அனல் கால் வானம் மதி கதிரோன் புமானும்
என்றொளிர் சராசரம் சேர் இது எவன் எட்டு மூர்த்தம்
எண்ணுவார்க்கு இறை நிறைந்தோன் எவனின் அன்னியம் சற்று இன்றாம்
தண் அருட் குருவாம் அந்தத் தக்ஷிணாமூர்த்தி போற்றி

சருவமும் தானா நன்றாய்ச் சாற்றும் இத் தோத்திரத்தின்
சிரவணம் தன்னால் அர்த்த சிந்தனம் தியானம் கானம்
புரிவதால் எல்லாம் தானாம் பூதி சேர் ஈசன் தன்மை
மருவிடும் மற்றும் எட்டாம் மடிவ்று செல்வம் தானே.

கோயில் திரு அகவல் - பட்டினத்தார் பாடல்

கோயில் திரு அகவல் - பட்டினத்தார் பாடல்

நினைமின் மனனே ! நினைமின் மனனே
சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே ! நினைமின் மனனே !

அலகைத் தேரின் அலமரு காலின்
உலகப்பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க !

பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்; 10

அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்;
உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்;
என்றிவை அனைத்தும் உணர்ந்தனை; அன்றியும்;
பிறந்தன பிறந்தன பிறவிகள் தோறும்
கொன்றனை அனைத்தும், அனைத்து நினைக்கொன்றன.

தின்றனை அனைத்தும், அனைத்து நினைக் கொன்றன;
பெற்றனை அனைத்தும், அனைத்து நினைப் பெற்றன;
ஓம்பினை அனைத்தும், அனைத்து நினை ஓம்பின;
செல்வத்துக் களித்தனை, தரித்திரத்து அழுங்கினை;
சுவர்க்கத்து இருந்தனை, நரகில் கிடந்தனை; 20

இன்பமும் துன்பமும் இருநிலத்து அருந்தினை;
ஒன்றொன்று ஒழியாது உற்றனை; அன்றியும்,
புற்புதக் குரம்பைத் துச்சில் ஒதுக்கிடம்
என்னநின் றியங்கும் இருவினைக் கூட்டைக்
கல்லினும் வலிதாகக் கருதினை; இதனுள் 25

பீளையும் நீரும் புறப்படும் ஒருபொறி;
மீளுங் குறும்பி வெளிப்படும் ஒரு பொறி
சளியும் நீரும் தவழும் ஒருபொறி;
உமிழ்நீர் கோழை ஒழுகும் ஒருபொறி;
வளியும் மலமும் வழங்கும் ஒருவழி; 30

சலமும் சீயும் சரியும் ஒருவழி;
உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறும்
சட்டகம் முடிவில் சுட்டெலும் பாகும்
உடலுறு வாழ்க்கையை உள்ளுறத் தேர்ந்து,
கடிமலர்க் கொன்றைச் சடைமுடிக் கடவுளை.

ஒழிவருஞ் சிவபெரும் போகஇன் பத்தை,
நிலுலெனக் கடவா நீர்மையொடு பொருந்தி
எனதற நினைவற இருவினை மலமற
வரவொடு செலவற மருளற இருளற
இரவொடு பகலற இகபரம் அற ஒரு 40

முதல்வனைத் தில்லையுள் முனைத்தெழுஞ் சோதியை
அம்பலத் தரசனை ஆனந்தக் கூத்தனை
நெருப்பினில் அரக்கென நெக்குநெக் குருகித்
திருச்சிற் றம்பலத்து ஒளிருஞ் சீவனை,
நினைமின் மனனே ! நினைமின் மனனே !

சிவபெரு மானைச் செம் பொனம்பலவனை
நினைமின் மனனே ! நினைமின் மனனே !

திருச்சிற்றம்பலம்

சிவவாக்கியர் பாடல்: பெரிய ஞானக்கோவை

சிவவாக்கியர் பாடல்: பெரிய ஞானக்கோவை

ஆதியான அஞ்சிலும் அனாதியான நாலிலும்
சோதியான மூன்றிலும் சொரூபமற்ற ரெண்டிலும்

நீதியான தொன்றிலும் நிறைந்து நின்ற வஸ்துவை
ஆதியான தொன்றுமே யற்றதஞ் செழுத்துமே

சக்தி நீ தயவு நீ தயங்கு சங்கினோசை நீ
சித்தி நீ சிவனும் நீ சிவாய மாமெழுத்து நீ
முத்தி நீ முதலும் நீ மூவரான தேவர் நீ
அத்திபுர மும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே

ஆறு நாடு தேடினும் ஆனை சேனைதேடினும்
கோடிவாசி தேடினும் குறுக்கே வந்து நிற்குமோ
ஓடி இட்ட பிச்சையும் உகந்து செய்த தர்மமும்
சாடிவிட்ட குதிரைபோல் தர்மம் வந்து நிற்குமே

கண்ணிலே இருப்பவனே கருங்கடல் கடந்துமால்
விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே
தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன்
என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே

அண்டமேழு முழலவே யனிந்தயோனி யுழலவே
பண்டு மாலயனுடன் பரந்து நின்றுழலவே
எண்டிசை கடந்து நின்றிருண்ட சக்தியுழலவே
அண்டரண்ட மொன்றதாய் ஆதி நடமாடுமே

அகார காரணத்திலே யனேகனேக ரூபமாய்
உகார காரணத்திலே யுருத்தரித்து நின்றனன்
மகார காரணத்திலே மயங்குநின்ற வையகம்
சிகார காரணத்திலே தெளிந்ததே சிவாயமே

பூவும் நீரும் என்மனம் பொருதுகோயில் என்னுளம்
ஆவியோடு லிங்கமா யகண்ட மெங்குமாகிலும்
மேவுகின்ற ஐவரும் விளங்கு தீப தீபமாய்
ஆடுகின்ற கூத்தனுக்கோர் அந்தி சந்தியில்லையே

ஒன்று மொன்று மொன்றுமே யுலகனைத்து மொன்றுமே
அன்று மின்று மொன்றுமே அனாதியான தொன்றுமே
கன்றல் நின்ற செம்பொனைக் களிம்பறுத்து நாட்டினால்
அன்று தெய்வ மும்முள அறிந்ததே சிவாயமே

ஐயன் வந்து மெய்யகம் புகுந்தவாற தெங்கனே
செய்ய திங்களங்குரும்பை நீர்புகுந்த வண்ணமே
ஐயன்வந்து மெய்யகம் புகுந்து கோவில்கொண்டபின்
வையகத்தில் மாந்தரோடு வாய் திறப்பதில்லையே

ஆதியுண்டு அந்தமில்லை யன்று நாலு வேதமில்லை
ஜோதியுண்டு சொல்லுமில்லை சொல்லிறந்ததேதுமில்லை
ஆதியான மூவரில் அமர்ந்திருந்த வாயுவும்
ஆதியன்று தன்னையும் யாரறிவாரண்ணலே

மூன்று மூன்று மூன்றுமே மூவர் தேவர் தேடிடும்
மூன்று மஞ்செழுத்துமாய் முழங்கு மவ்வெழுத்துளே
ஈன்ற தாயும் அப்பரும் இயங்குகின்ற நாதமும்
தோன்று மண்டலத்திலே சொல்ல வெங்குதில்லையே

கானமற்ற காட்டகத்தில் வெந்தெழுந்த நீறுபோல்
ஞானமற்ற நெஞ்சகத்தில் வல்லதேது மில்லையே
ஊனமுற்ற ஜோதியோடு உணர்வு சேர்த்தடக்கினால்
தேனதத்தினூரல் போல் தெளிந்ததே சிவாயமே

தங்கமொன்று ரூபம்வேறு தன்மையான வாறுபோல்
செங்கண்மாலு மீசனும் சிறந்திருந்த தெம்முளே
விங்களங்கள் பேசுவாய் விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்ற நாமம் நாமறிந்த நாமமே

தாய் தந்தை குருவும் நீ சகல தேவகணங்கள் நீ
சிந்தை நீ தெளிவும் நீ சித்தி முக்தி தானும் நீ
விந்தும் நீ வினையும் நீ மேலதாய வேதம் நீ
எந்தை நீ இறைவன் நீ என்னையாண்ட ஈசன் நீ

சித்தமற்று சிந்தையற்று சீவனற்று நின்றிடம்
சக்தியற்று சம்புவற்று ஜாதி பேதமற்றுநன்
முக்தியற்று மூலமற்று மூல மந்திரங்களும்
வித்தை யித்தை யீன்றவிதத்தில் விளைந்ததே சிவாயமே

நல்லதல்ல கெட்டதல்ல நடுவில் நின்றதொன்றுதான்
நல்லதென்ற போது நல்லதாகி நின்றபின்
நல்லதல்ல கெட்டதென்றால் கெட்டதாகுமாதலால்
நல்லதொன்று நாடிநின்று நாமஞ் சொல்லவேண்டுமே

பார்த்து நின்ற தம்பலம் பரமனாடுந் தம்பலம்
கூத்து நின்ற தம்பலம் கோரமான தம்பலம்
வார்த்தையான தம்பலம் வன்னியான தம்பலம்
சீற்றமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே

விண்ணினின்று மின்னெழுந்து மின்னோடுங்குவாறு போல்
எண்ணுள் நின்று எண்ணுமீசன் என்னகத்திருக்கையால்
கண்ணினின்று கண்ணில் தோன்றும் கண்ணறி விலாமையால்
எண்ணுள்நின்ற என்னையும் நானறிந்ததில்லையே

உருக்கலந்த பின்னலோ வுன்னை நானறிந்ததும்
இருக்கிலென் மறக்கிலென் இணைந்திருந்தபோதெல்லாம்
உருக்கலந்து நின்றபோது நீயும் நானும் ஒன்றலோ
திருக்கலந்த போதலோ தெளிந்ததே சிவாயமே

சிவாய வென்ற வக்ஷரம் சிவனிருக்கு மக்ஷரம்
உபாய மென்று நம்புதற்கு உண்மையான வக்ஷரம்
கபாடமற்ற வாசலைக்கடந்து போன வாயுவை
உபாய மிட்டழைத்துமே சிவாய வஞ்செழுத்துமே

சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து தேவராகலாம்
சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து வானமாவலாம்
சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து கொண்டவான் பொருள்
சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து கொள்ளுமுண்மையே

மூதுரை - ஔவையார்

கடவுள் வாழ்த்து
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கோல் என வேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால். 1
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர். 2
இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவில் இனியவும்-இன்னாத
நாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு. 3
அட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளவாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு
சுட்டாலும் வெண்மை தரும். 4
அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா . 5
உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ - கற்றூண்
பிளந்திறுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான். 6
நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகுமாம் குணம் . 7
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று. 8
தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது. 9
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. 10
பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்டபேர்
ஆற்றல் உடையார்க்(கு) ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல். 11
மடல் பெரிது தாழை மகிழ் இனிது கந்தம்
உடல்சிறியர் என்று இருக்க வேண்டா - கடல்பெரிது
மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும். 12
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - அவைநடுவே
நீட்டோ லை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டாதவன் நன்மரம். 13
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி. 14
வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக்(கு) ஆகாரம் ஆனால்போல் - பாங்கறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல் இட்ட கலம். 15
அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு. 16
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு. 17
சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்(று)
அல்லாதார் கெட்டால் அங் கென்னாகும்? - சீரிய
பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால். 18
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி - தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன். 19
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு. 20
இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும். 21
எழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே
கருதியவா றாமே கருமம் - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை. 22
கற்பிளவோ(டு) ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம். 23
நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்தாற்போல்
கற்றாரைக் கற்றாறே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம். 24
நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்
அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர். 25
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு. 26
கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்
அல்லாத மாந்தர்க்(கு) அறம்கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே
இல்லிற்(கு) இசைந்து ஒழுகாப் பெண். 27
சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடா (து;) ஆதலால் - தம்தம்
தனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால்
மனம்சிறியர் ஆவரோ மற்று. 28
மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமும் எல்லாம் -திருமடந்தை
ஆகும்போ(து) அவளோடும் ஆகும்; அவள்பிரிந்து
போம்போ(து) அவளோடு (ம்) போம். 29
சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம். 30

கணக்கதிகாரம் : மன வேகம்


 
மன வேகத்தை அளந்த முதல் ஆய்வாளன் தமிழன் :

கணக்கதிகாரம் புத்தகம் 15 ஆம் நூற்றாண்டில் காரி என்பவரால் தோன்றிய நூல் இதை தமிழரின் கணித கோட்பாடுகள் என்றே உரைக்கலாம்.
இது தற்கால கணித முறைகளில் இருந்து முழுவதும் மாறுபட்டு விளக்கப்பட்டுள்ளது . தூரம், காலம், நேரம், எடை போன்ற அணைத்து அளவுகளும் மற்ற பொருட்களுடன் ஒப்பிட்டு அனைவருக்கும் புரியும்படி விளக்கப்பட்டுள்ளது .

இதில் நீட்டலளவை (தூரத்தை) அளக்கும் ஒரு அட்டவனையை கண்டேன், அதில் "யோசனை" என்ற ஒரு அளவை காணமுடிகிறது . அதைப் பற்றிச் சற்றே யோசித்த வாரே இருந்தேன். அந்த யோசனை அளவை பற்றி ஒரு யோசனை கிட்டியது. இந்த கணக்கதிகரத்தில் அணைத்து அளவுகளும் ஒரு புற பொருளுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றனர். ஆக, யோசனை என்று ஒரு அளவு எப்படி இருக்கும் என்று கணித்து பார்க்க எண்ணினேன்.

1850 ஆம் வருடம் "ஹெர்மன் வோன் ஹெல்ம்வோல்ட்ச" ( Hermann von Helmholtz ) என்ற புகழ் பெற்ற அறிவியலாளர் ஒரு தவளையின் கால்களில் மின்சாரத்தை அளக்கும் கருவியை பொருத்தி அதன் மனதின் வேகத்தை அளக்க முடியும் என்று நிருபித்தார்.

அதற்கு பின்பு வந்தவர்கள் அதன் சரியான மனதின் வேகத்தின் அளவை கண்டுபிடித்தனர் (Speed of Thought). அவை 50 மீட்டர் /நொடி என்று அளவிட பட்டது/ எனினும் வேகமாக கடக்கும் தசைகள் இதே தகவலை 100 மீட்டர் /நொடி என்ற அளவிலும் கடக்குமாம்.

சரி இவை ஒரு பக்கம் இருக்க அந்த யோசனை என்ற அளவையும் தற்போதிய கணித அளவையும் ஒப்பிட்டுப் பாப்போம்.

1 மொழம் = 46.6666 சென்டிமீட்டர் (Cm )
1 சிறுகோல் = 559.9992 சென்டிமீட்டர் (Cm )
1 கூப்பிடுதூரம் = 279999.6 சென்டிமீட்டர் (Cm )
1 காதம் = 1119998.4 சென்டிமீட்டர் (Cm )
1 யோசனை = 4479993.6 சென்டிமீட்டர் (Cm )

சென்டிமீட்டரை கிலோமீட்டராக மாற்றினால்

1 யோசனை = 44.799936 கிலோமீட்டர் (இது காலத்தை குறிக்காத அளவு)


இப்பொழுது அவர்கள் கூறியபடி 50 மீட்டர்/நொடி என்று கால அளவுடன் கணக்கிட்டால்

50 மீட்டர்/நொடி என்பதை கிலோமீட்டர் கணக்கில் பார்த்தல்

180 km/hr

எனினும் இவர்கள் அறிவித்த இந்த அளவு உணர்ந்து, சிந்தித்து, முடிவெடுத்து, செயல்படுதல் என்ற நான்கு செயல்பாட்டை ஒருகிணைந்த அளவே. இங்கு யோசனை என்ற அளவு சிந்தித்தல் என்ற பகுதியில் வரும். ஆகவே,

180 / 4 = 45 கிலோமீட்டர் / hr என்றே வருகிறது .

45 கிலோமீட்டர் / hr = 1 யோசனை

எனவே காலத்தைக் குறிக்காத ஒரு யோசனையின் அளவு இவர்கள் அறிவித்த அளவுடன் பொருந்துகிறது.

இதே போல்,

நூற்று ஐம்பதாயிரம் யோசனை = 1 கதிரவநியங்குகிற மட்டு (6719990.4 km)
இரண்டு கதிரவநியங்குகிற மட்டு = 1 விண்மீன் மண்டலம் (13439980.8 Km )

15 டிசம்பர் 2012

நாம் மறந்து போன விளையாட்டு (தட்டாங்கல்)

தட்டாங்கல்:

பெரும்பான்மை இருவரும் சிறுபான்மை பலருமான மகளிர் சிறு கற்களைக் கையால் தட்டிப்பிடிக்கும் விளையாட்டு, தட்டாங்கல். இது பண்டைக் காலத்தில் கழங்கு கொண்டு ஆடப்பட்டதினால், கழங்கு என வழங்கியதாகத் தெரிகின்றது. கழங்காவது கழற்காய் அல்லது கழற்சிக்காய். கழற்சிக்காய் என்பது இன்று கெச்சக்காய் என மருவி வழங்குகின்றது.

"செறியரிச் சிலம்பிற் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடும்" (புறம். 36)

"மகளிர்.... முத்தவார்மணற்
பொற்கழங் காடும்." (பெரும்பாண். 327 - 35)

தட்டாங்கல் கீழ்வருமாறு பலவகைப்படும். அவையனைத்தும் வீட்டுள்ளும் வீட்டுமுற்றத்திலும் விளையாடப் பெறும்.

I. மூன்றாங்கல்
ஆட்டின் பெயர் : மூன்று கற்களைக் கொண்டு ஆடும் ஆட்டு மூன்றாங்கல்.
ஆடுமுறை : மூன்று கற்களுள் ஒன்றைக் கீழ்வைத்து ஏனையிரண்டையும் கையில் வைத்துக்கொண்டு, அவற்றுள் ஒன்றை மேலெறிந்து இன்னொன்றைக் கீழ்வைத்து முந்திக் கீழ்வைத்ததை எடுத்துக்கொண்டு, மேலெறிந்ததைப் பிடித்தல் வேண்டும். பின்பு மீண்டும் ஒன்றை மேலெறிந்து, கையிலுள்ளதைக் கீழ்வைத்துக் கீழிருந்ததை எடுத்துக் கொண்டு மேலெறிந்ததைப் பிடித்தல் வேண்டும். இவ்வாறே பன்னிருமுறை தொடர்ந்து தவறாது ஆடிவிடின், பழமாம். பன்னிருமுறைக்கும் கீழ்வருமாறு பாட்டுப் பாடப்படும்.

(1) ஒன்றாவது ஒன்றாங்காய்.
(2) இரண்டாவது இரத்தினக்கிளி (அல்லது ஈச்சங்காய்.)
(3) மூன்றாவது முத்துச்சரம்.
(4) நாலாவது நாற்காலி.
(5) அஞ்சாவது பஞ்சவர்ணம்.
(6) ஆறாவது பாலாறு.
(7) ஏழாவது எழுத்தாணி.
(8) எட்டாவது கொட்டாரம்.
(9) ஒன்பதாவது ஓலைப்பூ.
(10) பத்தாவது பனங்கொட்டை.
(11) பதினொன்றாவது தென்னம் பிள்ளை.
(12) தென்னைமரத் தடியிலே தேரோடும் பிள்ளையார்.
ஒருத்தி ஆடும்போது தவறிவிடின், அடுத்தவள் ஆடல் வேண்டும். ஆடினவள் மறுமுறையாடும்போது, மீண்டும் முதலிலிருந்தே ஆடல் வேண்டும்.

II. ஐந்தாங்கல் (ஒருவகை)
ஆட்டின் பெயர் : ஐந்து கற்களைக்கொண்டு ஆடும் ஆட்டு ஐந்தாங்கல்.
ஆடுமுறை : முந்தியாடுபவள், இந்த ஆட்டிற்குரிய ஐந்து கற்களையும் ஒருங்கே சிதறி, அவற்றுள் ஒன்றை எடுத்து மேலே போட்டுக், கீழிருப்பவற்றுள் ஒன்றையெடுத்துக் கொண்டு பிடித்தல்வேண்டும். பின்பு, கையிலிருப்பவற்றுள் ஒவ்வொன்றை மேலே போட்டுப்போட்டு, ஒவ்வொரு தடவையும் கீழிருப்பவற்றுள் ஒவ்வொன்றை யெடுத்துக்கொண்டு பிடித்தல் வேண்டும்.

பின்பு மீண்டுஞ் சிதறி ஒரு கல்லையெடுத்து மேலெறிந்து, கீழிருப்பவற்றுள் இரண்டை எடுத்துப் பிடித்தல் வேண்டும். அதன்பின், கையிலிருப்பவற்றுள் ஒன்றை மேலெறிந்து, கீழிருக்கும் ஏனையிரண்டையும் எடுத்துக்கொண்டு பிடித்தல் வேண்டும். இங்ஙனம் ஐந்துமுறை சிதறிப் பிடிக்கும்போது, மூன்றாம் முறை ஒன்றும் மூன்றுமாகவும், நாலாம் முறை நாலையும் ஒருங்கேயும், ஐந்தாம் முறை மூன்றும் ஒன்றுமாகவும், கீழிருக்குங் காய்களை எடுத்தல்வேண்டும். இம் முறைகள் முறையே, ஒன்றாங்கொட்டை, இரண்டாங்கொட்டை, மூன்றாங் கொட்டை, நாலாங்கொட்டை, ஐந்தாங்கொட்டை என அவ்வவ் விறுதியிற் கூறப்படும். அதன்பின் நாலு கற்களைக் கைக்குள் வைத்துக்கொண்டு, ஒரு கல்லை இரு தடவை மேலே போட்டுப் பிடித்தல் வேண்டும். முதல்தடவை ஆட்காட்டி விரலால் நிலத்தில் இழுத்துக் 1"கோழி கொக்காம்" என்றும், இரண்டாம் தடவை குத்துக்கையால் நிலத்திற் குத்திக் "குத்துவிளக்காம்" என்றும், மேலெறிந்த கல்லைப் பிடிக்கு முன் சொல்லவேண்டும். பின்பும், அவ்வாறொரு கல்லை இரு தடவை மேலெறிந்து பிடித்தல்வேண்டும். முதல்தடவை பிடிக்குமுன் ஏனை நாலுகற்களையும் கீழே வைத்து "வைத்து எடுப்பாம்" என்றும், மறுதடவை பிடிக்குமுன் அந் நான்கையும் வாரிக்கொண்டு "வாரிக்கொண்டாம்" என்றும், சொல்லவேண்டும்.

பின்பு, இரு கைகளையும் சேர்த்துக் கூட்டுக்கையாக வைத்துக்கொண்டு, ஐங்கல்லும் கீழே விழாதவாறு, "தப்பு தாளம் தலைவலி மோளம்" என்று நாற்சீர்படச் சொல்லிக் கொண்டு, வலக்கையைப் புறங்கையும் அகங்கையும் புறங்கையும் அகங்கையுமாக இருதடவை புரட்டி வைத்தல் வேண்டும். அதன் பின், ஐங்கல்லையும் மேலெறிந்து பிடித்து அவற்றுள் ஒன்றைச் சொக்கல் வேண்டும். சொக்குதலாவது சிலுப்புதல்.

பின்பு ஐங்கல்லையும் போட்டுப் புறங்கைமேல் தாங்கி, அவற்றுள் எதிரி பிடிக்கச்சொன்ன கல்லைப் பிறவற்றுடன் மேலெறிந்து பிடித்துக்காட்டல் வேண்டும். காட்டியபின் அதைத் தனியாய் எடுத்துவைத்துவிட்டு, ஏனை நான்கனுள் ஒன்றை மேலெறிந்து மூன்றைக் கீழே வைத்துவிட்டுப் பிடித்து, மீண்டும்அதை மேலெறிந்து கீழே வைத்த கல்லை வாரிக்கொண்டு பிடித்தல் வேண்டும்; அல்லது, வலக் குடங்கையிலுள்ள நாற்கற்களையும் இவ்விரண்டாக இரு தடவை சற்றே மேலெறிந்து, அவற்றைப் புறம்மேனோக்கிய இடக்குடங்கையால் உடனுடன் பிடித்துக் கொள்ள வேண்டும். இங்ஙனஞ் செய்யின் பழமாம். ஒருத்தி ஆடும்போது, மேலெறிந்து பிடிக்குங் கல் தவறினாலும், கீழிருக்குங் கல்லை யெடுக்கும்போது பிற கல்லைத் தொட்டுவிட்டாலும், அவள் நின்றுவிடவேண்டும். அதன்பின் அடுத்தவள் ஆடுவாள். ஒருத்தி ஒரே ஆட்டையில் மறுமுறை அல்லது வழிமுறை ஆடும்போது, முன்பு விட்டதிலிருந்து ஆடுவாள். இவை எல்லாவகைக்கும் பொதுவாம். ஆட்டை முடிந்தபின், வென்றவள் தோற்றவளின் கைகட் கிடையில் ஒரு கல்லை வைத்து, மேற்கைமேல் மூன்று தடவை குத்துவது வழக்கம். இது எல்லா வகைக்கும் பொது. ஆட்டின் பயன் : கையும் கைநரம்பும் இந்த ஆட்டால் உரம்பெறும். இதுவும் பொதுவரம்.
ஐந்தாங்கல் (மற்றொரு வகை)
நாலாங் கொட்டைக்குப்பின், ஐங்கல்லையுங் கீழிட்டு அவற்றுள் ஒன்றை முன்னதிற்போல் நான்கு தடவை மேலே போட்டுப் போட்டு அதை ஒவ்வொரு தடவையும் கீழிருக்குங் கல்லை ஒவ்வொன்றாய் இடப்பக்கமாகச் சற்றுத் தள்ளித் தள்ளிப் பிடித்தல் வேண்டும். பின்பு, மறுபடியும் எல்லாவற்றையும் கீழிட்டு அவற்றுள் ஒன்றை முன்போற் பலதடவை மேலெறிந்து, அதை முற்பட்ட ஒவ்வொரு தடவையும் கீழிருக்குங் கற்களுள் நீங்கியிருப்ப வற்றை ஒவ்வொன்றாக நெருங்க வைத்துப் பிடித்து, இறுதியில் கீழிருப்ப வற்றையெல்லாம் ஒருங்கே வாரிப் பிடித்தல் வேண்டும். அதன்பின் இரு பாதங்களையும் கூட்டிவைத்து, அவற்றின் மேல் மூலைக்கொன்றாக நான்மூலைக்கும் நாலு கல்வைத்து, ஏனையொன்றை நான்குதடவை மேலெறிந்து, அதை ஒவ்வொரு தடவையும் பாதங்களின் மேலுள்ள கல்லை ஒவ்வொன்றாய் இருபாத இடைக்குள் தள்ளித் தள்ளிப் பிடித்தல் வேண்டும்.
பிறகு மீண்டும், ஐங்கல்லையும் கீழிட்டு அவற்றுள் ஒன்றை முன்போல் நான்கு தடவை மேலெறிந்து, அதை ஒவ்வொரு தடவையும், கீழிருக்குங் கற்களை ஒவ்வொன்றாய் இடப்புறம் நிலத்திற் பொத்திச் சற்றே திறந்துவைக்கப்பட்டிருக்கும் இடக் குடங் கைக்குள் தள்ளித் தள்ளிப் பிடித்தல் வேண்டும்.

பின்பு, ஐங்கல்லையும் போட்டுப் புறங்கைமேல் தாங்கி, அவற்றுள் எதிரி சுட்டியதைப் பிறவற்றுடன் மேலெறிந்து பிடித்துக் காட்டி, அதைத் தனியே எடுத்துவைத்துவிட்டு, ஏனை நான்கனுள் ஒன்றை மேலெறிந்து, மூன்றைக் கீழே வைத்துப் பிடித்து, மீண்டும் அதை மேலெறிந்து கீழுள்ளவற்றை வாரிப் பிடித்தல் வேண்டும். அதோடு பழம்.

III. ஏழாங்கல் (ஒருவகை)
ஏழாங்கல்லின் இவ்வகை ஏறத்தாழ ஐந்தாங்கல்லின் முதல்வகை போன்றதே.
ஏழு கல்லையும் உருட்டி அவற்றுள் ஒன்றையெடுத்து மேலெறிந்து ஒன்றாங்கொட்டை முதல் ஏழாங்கொட்டை வரை யாடல் வேண்டும். ஒன்றாங் கொட்டையில் ஒவ்வொன்றாகவும், இரண்டாங்கொட்டையில் இவ்விரண்டாகவும், மூன்றாங்கொட் டையில் மும்மூன்றாகவும், நாலாங் கொட்டையில் இரண்டும் நாலுமாகவும், ஐந்தாங்கொட்டையில் ஐந்தும் ஒன்றுமாகவும், ஆறாங்கொட்டையில் ஆறும் ஒரேயடியாகவும், ஏழாங்கொட் டையில் ஒன்றும் இரண்டும் மூன்றுமாகவும், கீழிருக்குங் கற்கள் எடுக்கப்பெறும்.

பின்பு, முறையே, இழுத்தல் குத்தல் வைத்தல் வாரல் நான்கும் "தப்பு-தாளம்-தலைவலி-மோளம்" நான்கும் நிகழும்.
அதன்பின், எல்லாக் கற்களையும் மேலெறிந்து புறங்கையால் தாங்கவேண்டும். மூன்று கல்மட்டும் புறங்கைமேல் நிற்பின், அவை 'கட்டான் கருங்கல்' எனக் கீழே போடப்படும். அதற்கு மேலுங் கீழும் நிற்பின் சொக்க வேண்டும். மீண்டும் எல்லாவற்றையும் முன்போற் புறங்கையில் தாங்கி, எதிரி சுட்டியதைப் பிடித்துக்காட்டித் தனியாக வைத்துவிட்டு, எஞ்சியவற்றுள் ஒன்றை மேலெறிந்து ஐந்தைக் கீழ்வைத்துப் பிடித்து, மீண்டும் அதை மேலெறிந்து கீழுள்ளவற்றை வாரிப் பிடித்தல்வேண்டும்; பிடித்துவிடின் பழம்.

ஏழாங்கல் (மற்றொரு வகை)
ஒரு கல்லை வைத்துக்கொண்டு எஞ்சிய ஆறு கல்லையும் உருட்டி ஒன்றாங்கொட்டை முதல் ஏழாங்கொட்டை வரை ஆடல் வேண்டும். ஒன்றாங்கொட்டையில் ஒவ்வொன்றாகவும், இரண்டாங்கொட்டையில் இவ்விரண்டாகவும், மூன்றாங்கொட் டையில் மும்மூன்றாகவும், நாலாங்கொட்டையில் நாலும் இரண்டுமாகவும், ஐந்தாங்கொட்டையில் ஐந்தும் ஒன்றுமாகவும், ஆறாங்கொட்டையில் ஆறும் ஒரேயடியாகவும், ஏழாங்கொட் டையில் ஒன்றும் இரண்டும் மூன்றுமாகவும், கீழிருக்குங் கற்கள் எடுக்கப்படும். கீழிருந்தெடுக்குங் கற்களை ஒரே கைக்குள் அடக்க இயலாதார், இருகையையும் பயன்படுத்திக் கொள்வதுமுண்டு. ஆயின், இது அத்துணைச் சிறப்பினதன்று; அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டதுமன்று :
கீழிருக்குங் கற்கள் தூரத்தூர இருந்தால், கைக்கல்லைப் பக்கத்தில் வைத்துவிட்டுத் தொலைவிலுள்ள கல்லை எடுத்துக் கொள்ளலாம்.

ஏழுகொட்டைக்கும் பின்வருமாறு பாட்டுப் பாடப்படும்:
(1) "பொறுக்கி சிறுக்கி போ(கி)றாளாம் தண்ணீர்க்குத் தண்ணீர்க் குடமெடுத்து."
(2) (அல்லது, வேறு ஏதேனுமொன்று.) "இரண்டு இரும்பு, ஏழடிக் கரும்பு."
(3) "மூன்று முக்கோடு, முருகன் செங்கோடு".
(4) "நான்கு நடலம், தேங்காய்ப் புடலம்."
(5) "ஐவர் அரைக்கும் மஞ்சள் தேவர் குளிக்கும் மஞ்சள்."
(6) "ஆக்கூர் அடிவாழை, அண்ணன் தம்பி பெருவாழை."
(7) "ஏழண்ணன் காட்டிலே, எங்களண்ணன் ரோட்டிலே, மஞ்சள் சாரட்டிலே."

இன்னொரு பாட்டுப் பின்வருமாறு :
(1) "தூப்பொறுக்கி தூதுளங்காய்
மாப்பொறுக்கி மாதுளங்காய்
கல் பொறுக்கி கடாரங்காய்."
(2) "ஈர் ஈர்த்திக்கொள்
பூப்பறித்துக்கொள்
பெட்டியில் வைத்துக்கொள்."
(3) "முக்கோண வாசலிலே
முத்துத்தட்டுப் பந்தலிலே."
(4) "நான்கு டோங்கு டம்மாரம்
நாங்களாடும் பம்பரம்."

(அல்லது)
"நான்கு டோங்கு
நாலுவெற்றிலை வாங்கு"
(5) "ஐவர் அரைக்கும் மஞ்சள்
தேவர் குளிக்கும் மஞ்சள்."
(6) "கூறு கூறு சித்தப்பா
குறுக்கே வந்த பெரியப்பா."
(7) "ஏழை எண்ணிக் கொள்
எண்ணெய் மரம் சேர்த்துக்கொள்
பெண்ணை அழைத்துக் கொள்." 1

ஏழாங்கொட்டைக்குப் பின், ஒரு கையில் முக்கல்லும் இன்னொரு கையில் நாற்கல்லுமாக வைத்துக்கொண்டு, நாற்கல்லுள் ஒன்றை மேலெறிந்து 
எஞ்சிய இருமூன்றையுங் கீழ்வைத்து மேலெறிந்து கல்லைப் பிடித்து, பின்பு மீண்டும் அதை மேலெறிந்து அதைக் கீழ்வைத்த இருமூன்றையும் இருகையாலும் வாரிக்கொண்டு பிடித்தல் வேண்டும்.
இது சிறுபுதை எனப்படும். இதை ஆடும்போது பாடும் பாட்டு "புதை புதைக்கிற பம்பரம், செட்டி சிதம்பரம்" என்பதாகும்.
இதன்பின், இருகையிலும் மும்மூன்று கல்லை வைத்துக் கொண்டு, ஏனையொன்றை மேலெறிந்து, ஆட்காட்டி விரலால் நிலத்தில் இழுத்துப் பிடித்தல்வேண்டும்.
பின்பு, ஒரு கல்லை மேலெறிந்து ஆறுகல்லைக் கீழ் வைத்துப் பிடித்தபின், மீண்டும் ஒன்றை மேலெறிந்து ஏனை ஆறையும் ஒருங்கே வாரிப் பிடித்தல் வேண்டும். இது பெரும்புதை எனப்படும்.
இதையடுத்துத் "தப்பு - தாளம் - தலைவலி - மேளம்" நான்கும் நிகழும். பின்னர் ஒரு கல்லைக் கீழிட, அதை எதிரி எடுத்துக் கொடுத்தல் வேண்டும். இது பழத்தின் ஒப்பக்குறியாம்.

IV. பல நாலொரு கல்
ஒன்பதும் பதின்மூன்றும் பதினேழும் இருபத்தொன்றும் போல் பல நாலொடு ஒன்றுசேர்ந்த கற்களை மேலெறிந்து, புறங்கையில் தாங்கிப், பிடிக்குமளவு வைத்துக்கொண்டு மிகுதியைக் கீழிட்டுவிட்டு, புறங்கையிலுள்ளவற்றை மேலே போட்டு அகங்கையிற் பிடித்து, அவற்றினின்று நந்நான்காய் இடக்கையாற் பிடித்துக் கீழே நந்நான்காய் வைத்தல் வேண்டும். இவ்வகையிற் பெரும்பாலும் ஒரு நான்கைத்தான் பிடித்தல் கூடும்.
பின்பு, வலக்கையிலுள்ளவற்றுள் ஒரு கல்லை மேலேறிந்து அதைக் கீழேயுள்ளவற்றுள் ஒன்றையோ பலவற்றையோ எடுத்துக்கொண்டு பிடித்தல்வேண்டும். இங்ஙனம் கீழே கல்லுள்ள வரை (அல்லது தவறும் வரை) திரும்பத் திரும்ப ஆடவேண்டும். கையிற் பலகற்கள் சேர்ந்துவிட்டால், உடனே இடக்கையால் ஒரு நான்கை அல்லது பல நான்கைப் பிடித்து நந்நான்காய்க் கீழே வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு எல்லாக் கற்களையும் பிடித்து நந்நான்காய்க் கீழே வைத்தபின், இறுதியில் எஞ்சியுள்ள ஒற்றைக்கல்லை மேலேபோட்டுப் புறங்கையில் தாங்கி, அதை மீண்டும் மேலெறிந்து நிலத்தைத் தொட்டு, அது கீழேவிழுமுன் அதைக் கையாலழுத்தி நேரே வீழ்த்தி மூடிவிடல் வேண்டும். இது அமுக்குதல் அல்லது மூடுதல் எனப்படும். இதோடு ஒரு பழமாம்.
முதலாவது புறங்கையால் தாங்கும்போது எல்லாக் கற்களையும் கீழே விட்டுவிட்டாலும், பிடிக்கும்போது கல் தவறினாலும், நான்காய் அல்லது நந்நான்காய்ப் பிடிக்கும்போது கூடக் குறையப் பிடிபட்டாலும், கீழுள்ள கல்லை எடுக்கும்போது மற்றக் கல் அலுங்கினாலும், ஆட்டம் நின்றுவிடும். பின்பு அடுத்தவள் ஆடவேண்டும்.
ஒரே ஆட்டையில், அடுத்தவள் ஆடினாலும், ஆடினவளே மறுமுறை ஆடினாலும், நந்நான்காய்ப் பிடித்து வைக்கப்பட்ட கற்களை விட்டுவிட்டு மற்றக் கற்களைக் கொண்டுதான் ஆடவேண்டும். ஒருத்தி கடைசிக் கல்லை அமுக்கும்போது தவறிப்போய் அடுத்தவள் அதைச் சரியாய் அமுக்கிவிட்டால், அவளுக்குத்தான் பழம்.

V. பன்னிரு கல்
பன்னிரு கற்களை மேலெறிந்து அவற்றைப் புறங்கையில் தாங்கி, அவற்றுள் ஒன்றைமட்டும் இருவிரற் கிடையில் இடுக்கிக்கொண்டு ஏனையவற்றைக் கீழே விட்டுவிட்டு, அவற்றை ஒவ்வொன்றாகவோ இவ்விரண்டாகவோ மும்மூன்றா கவோ, ஒன்றும் பலவுமாகவோ, வேறிரு விரலால் இடுக்கிப் பிடித்துக் கீழே வைத்து எல்லாவற்றையும் பிடித்தபின் புறங்கையிலுள்ளதை அமுக்கி, அதையும் மற்றவற்றொடு சேர்த்து மும்மூன்றாக நாற்கூறிட்டு, ஒவ்வொன்றினின்றும் ஒவ்வொரு கல்லை எடுத்துவிடவேண்டும். இக் கூறுகட்கு 'உட்டைகள்' என்று பெயர். நாலுட்டையினின்றும் ஒவ்வொரு கல்லை நீக்கியபின், எட்டுக் கல் எஞ்சி நிற்கும். அவ் வெட்டையும் முன்போன்றே ஆடி, மீண்டும் மும்மூன்றாக உட்டை வைத்து ஒவ்வொரு கல்லை நீக்கியபின், ஆறு கல் எஞ்சிநிற்கும். இவ்வாறே தொடர்ந்து ஆடின், இறுதியில் இருகல் எஞ்சும். அவற்றுள் ஒன்றை மேலேயெறிந்து
இன்னொன்றைக் கீழே வைத்துப்பிடித்து, பின்பு மீண்டும் அதை மேலேயெறிந்து கீழேவைத்ததை எடுத்துப் பிடித்தல் வேண்டும். இங்ஙனம் மும்முறை செய்தபின், மேலெறிந்த கல்லை, மூன்று தடவை சிலுப்பியும், மூன்று தடவை மேலேறிந்து நிலந்தொட்டுப் பிடித்தும், பின்னும் மூன்று தடவை மேலெறிந்து நிலமும் மார்புந் தொட்டுப் பிடித்தும், முடிப்பின் பழமாம்.
சிலுப்புதலாவது, அகங்கையிலுள்ளதைப் புறங்கையிலிட்டு வெட்டிப்பிடித்தல்.
ஆடும்போது தவறும் வகையும், அதன்பின் நிகழுஞ் செய்தியும், முற்கூறியவையே.

VI. பல கல்
ஒன்பது முதல் இருபத்தைந்துவரை ஒற்றைப்படையான ஏதேனும் ஒரு தொகைக் கற்களை, மேலே போட்டுப் புறங்கையால் தாங்கி ஒருகல் தவிர மற்றவற்றை யெல்லாங் கீழே போட்டுவிட்டு, அவ் வொரு கல்லை மேலேயெறிந்து உள்ளங்கையாற் பிடித்து, அதை மீண்டும் மேலேயெறிந்து, கீழே கிடக்குங் கற்களுள் இரண்டு நான்கு ஆறு எட்டு என இரட்டைப்படையாக எடுத்துக்கொண்டு, மேலேயெறிந்த கல்லையும் பிடித்தல் வேண்டும். இங்ஙனம் ஒவ்வோர் எடுப்பிற்கும், முன்னும் பின்னும், ஒரு கல்லை மேலெறிதலும் அதைப் பிடித்தலும் முறையே நிகழும்.
இருகல் எடுப்பின் காய்; நான்கு ஆறு எட்டு ஆயின் பழம். பழக்கற்களெல்லாவற்றையும் தன் பங்கில் வைத்துக்கொண்டு, காய்க்கற்களிற் பாதியை விளையாட்டிற் போட்டுவிடல்வேண்டும். ஆட்டை முடிந்தபின், கூடுதலான கற்களைப் பிடித்திருப்பவள் கெலித்தவளாவள்.
பிற இயல்புகளும் செய்திகளும் முற்கூறியவையே.

VII. பதினாறாங் கல்

பதினாறு கற்களைக்கொண்டு ஆடுவது பதினாறாங்கல். இது பலவகையாய் ஆடப்பெறும். வடார்க்காட்டு வட்டாரத்தார் இதை ஆடுவர்.