Powered By Blogger

21 ஜனவரி 2015

‘300’ (ஆண்டுகளுக்கு முந்தைய) பருத்தி வீரர்கள்:



உங்களில் பெரும்பாலனவர்கள் ‘300 பருத்தி வீரர்கள்’ என்ற ஆங்கில படத்தை பார்த்திருப்பீர்கள்,அதில் வெறும் 300 வீரர்கள் கொண்ட ‘ஸ்பார்ட்டா’ நாட்டின் வீரர்கள் பலலட்சம் வீரர்களை கொண்ட பாரசீக படைகளை தலை தாழாமல் எதிர்த்து வீரத்துடன் போரிட்டு வீழ்வார்கள்.அந்த படத்தை,அவர்களின் வீரத்தை சிலாகித்து விசிலடித்து பார்த்த நமக்கு உண்மையில் நாம் யார் என்பது தெரியாது.

நம் வரலாறு,1805யில் தூக்கிலிடப்பட்ட ‘பழஸிராஜா’ முதல் விடுதலை போராட்ட வீரர் என்கிறது,1857-யில் நடந்த ‘சிப்பாய்க் கலகம்’ இந்தியாவின் முதல் விடுதலைப்போர் என்று வர்ணிக்கிறது.1840களில் போராடிய ஜான்சிராணியை முதல் விடுதலைப்போராளி என்கிறது.அவர்களின் வீரம் மறுப்பதற்கு இல்லை,ஆனால் வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு மாபெரும் சுத்த தமிழ் வீரனை இந்நாளில் நினைவு கூறாவிட்டால் மிச்சம் வாழும் மத்த தமிழர்களும் மொத்தமாய் அழிந்து போவோம்.

செப்டம்பர் 1ஆம் தேதி 1715ஆம் ஆண்டில் திருநெல்வேலி ‘நெற்கட்டும் செவ்வல்’ பாளையத்தில் பிறந்தவர் ‘பூலித்தேவன்’.இவர் ஒரு முறை புலியுடன் போரிட்டு வென்றதால் இப்பெயர் பெற்றார்,மாதம் மும்மாரி பொழிந்து ஆறு போகம் விளைந்ததால் அந்த ஊர் ‘நெற்கட்டும் செவ்வல்’ எனப்பட்டது என்பது போன்ற சுய புராணங்களை சற்று ஒதுக்கி வைத்து விட்டு இவரிடம் இருக்கும் சில மறுக்க முடியாத நன்நெறிகளை ஆராய்ந்தால் தமிழனின் மரபு மெய்சிலிர்க்க வைக்கும்.

1)தாய்மொழித் தாகம்:

அந்நாட்களில் பெரும்பாலான செப்பேடுகளில் வடமொழி சொற்கள் இடம்பெற்று இருந்தன,ஆனால் பூலித்தேவன் காலத்து செப்பேடுகளில் தூய தமிழ் சொற்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

2)தொழில்வளம் மிக்க ஆட்சி:

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்,ஆனால் இன்று விவசாயிகளின் முதுகெலும்பை உடைக்கும் அரசாங்கம் தான் நடந்து கொண்டு இருக்கிறது.ஆனால் இதை பூலித்தேவன் அன்றே உணர்ந்திருந்தார்.உக்கிரமான போரின் போதும் அவர் விவசாயிகளை போரில் ஈடுபடுத்துவதில்லை,போரை போலவே விவாசயமும் நாட்டின் வாழ்வாதார பிரச்சனை என்று நம்பினார்.குளங்களை வெட்டுவது அதில் மீன்பிடித்தல் மூலம் வரும் வருவாயை கொண்டு மேலும் ஒரு குளம் வெட்டுவது என திட்டமிட்டு செம்மையான ஆட்சி நடத்தினார்.

3)சுய ராஜ்ஜியம் எங்கள் பிறப்புரிமை:

விடுதலைப்போரில் பாலகங்காதர திலகர் ‘சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை’ என்றார்.இதை 1700களிலே பூலித்தேவன் முழங்கினார்,வரி கட்ட மறுத்தார்.இதனால் ஆற்காடு நவாப்பின் எதிர்ப்பினை சம்பாதித்தார்.கோவம் கொண்ட ஆற்காடு நவாப் நெற்கட்டும் செவ்வலை தாக்கினார்,அதில் பூலித்தேவன் வெற்றி பெற்றார்.

4)ஒரு பொது எதிரியை வீழ்த்துவதற்கு ஒன்றுசேர வேண்டும்:

ஒரு பொது எதிரியை வீழ்த்துவதற்கு போர்க்களத்தில் ஒன்றுசேர வேண்டும் என்ற எண்ணத்தைப் இந்தியாவில் முதன் முதலாக ஏற்படுத்தியவரே பூலித்தேவன் தான்.ஆற்காடு நவாப்பின் படையில் வந்த மூன்று இஸ்லாமிய தளபதிகள் முடேமியா எனும் முகம்மது மியானச், மியானோ எனும் முகம்மது பார்க்கி, நபிகான் கட்டாக் ஆகிய மூன்று தளகர்த்தர்கள் மன்னர் பூலித்தேவர் முகத்தைக்கண்டு அவரால் கவரப்பட்டு அவரது படையில் சேர்ந்து வீரப்போர் புரிந்தார்கள். 12 மாதம் கழித்து 1756 மார்ச் 21 இல் திருநெல்வேலியில் மீண்டும் போர் நடத்தி வெள்ளையரை தோற்கடித்தார்,அவ்வாறு இணைந்த நவாப்பின் தளபதிகளுக்கு பள்ளிவாசல் கட்டித் தந்தார் என்பது அவரின் சமயப் பொறையை காட்டுகிறது.

5)எதிரியை பார்க்காமல் இலக்கை பார்த்தல்:

பின் ஆற்காடு நவாப் ஆங்கிலேயரின் துணையை நாடினார்,அடுத்து புலித் தேவருக்கு எதிராக பெரும்படையுடன் போர் புரிய வந்தவன் ‘கான்சாகிப்’ இவன் யார் எனில் ஹைதர் அலியை தோற்கடித்தவன்.பின்னாளில் ஆங்கிலேயர்கள் கான்சாகிப்பை தூக்கிலிட்டனர்,அப்போது இருமுறை தூக்கிலிட்டு சாகவில்லை,இறுதியில் மூன்றாவது முறை காலில் இரும்புக்குண்டை கட்டி தூக்கிலிட்டு கொன்றனர்.அத்தகைய கான்சாகிப்பையும் அவனது பெரும்படையையும் கண்டு அஞ்சாமல் போரிட்டு அவனை வெற்றிகண்டார்.

6)தன்னலமில்லா தலைமை:

பூலித்தேவனின் படையில் வெண்ணிகாலடி,ஒண்டிவீரன் உளவாளி ஆகியோரின் வீரத்தை நம்மால் புறக்கணித்துவிட முடியாது,பூலித்தேவனின் மனைவி மக்கள் எதிரிகளால் எரித்துக் கொல்லப்பட்டனர்,அப்பொழுதும் அவர் கலங்கவில்லை,ஆனால் எதிரிகளுடன் வீரத்துடன் போரிட்டு வீழ்ந்த தன் தளபதி ஒண்டிவீரனை மடியில் கிடத்தி கதறி அழுதார் என்று வரலாறு சொல்கிறது.அவர் சாதி சமயம் கடந்து மக்கள் மீது அன்பு கொண்டார்,அவர்களும் அவர் மீது அத்துனை அன்பாக இருந்தனர்.இந்த மாண்பு இன்று மேதகு.பிரபாகரன் வரை தொடர்கிறது

7)எதிரிகள் போற்றும் வீரம்:

இறுதியில் ஆங்கிலேயரின் பெரும்படையுடன் போர்,அது ஒரு நாட்டையே பிடிக்கும் அளவான நவீன ஆயுதங்கள் உடைய படை,பூலித் தேவர் திப்பு சுல்தான் உதவியை நாடினார் அது கிடைக்காமல் போனது,தானே மோத முடிவெடுத்தார்,அந்த போரைப்பற்றி தன் புத்தகத்தில் குறிப்பிடும் ஒரு ஆங்கிலத் தளபதி,”அந்த போரில் பூலித்தேவன் படையினர் 18 அடி வேல்கம்புகளை அசாத்தியமாக பயன்படுத்தினார்கள்,அவரது வீரர்கள் தங்கள் மார்பினை வைத்து அவர்கள் கோட்டை இடியாமல் காத்தனர்,அதில் வெற்றிபெற மிகவும் சிரமப்பட்டோம்” என்கிறார்.

இறுதியில் போரில் பூலித்தேவர் படை தோற்றபின் கடைசியாக அவரைக் கைதுசெய்து கொண்டு செல்கிறபோதுதான் சங்கரன்கோவில் ஆலயத்துக்குள் நான் வழிபட்டு வருகிறேன் என்று உள்ளே போனார்.அதற்குப்பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை. அருட்பெருஞ்சோதி மறைந்ததைப்போல சங்கரன்கோவில் கோவிலுக்குள் போனவர் திரும்பவில்லை.நேதாஜியின் மரணத்தைப்போல பூலித்தேவரின் மறைவும் இன்றுவரை மர்மமாகவே உள்ளது.

இன்று பூலித்தேவரின் பிறந்தநாள்,நாம் அவரை கொண்டாட கூட வேண்டாம்,குறைந்தபட்சம் நம் பிள்ளைகளுக்கு நமது வீர மரபுகளை சொல்லி வளர்ப்போம்,உங்கள் குழந்தைகள் 300 பருத்திவீரர்கள் படம் பார்க்கும் முன் இந்த 300 ஆண்டுகளுக்கு முந்தைய பருத்தி வீரர்களை சொல்லி கொடுங்கள்.அடுத்த தலைமுறையை சாதி சமயமற்ற வீரத்தமிழ் படையாக கட்டமைப்போம்.

தமிழ் வாழ்க…!பூலித்தேவன் புகழ் வாழ்க…!

நன்றி  

06 ஜனவரி 2015

ஸ்படிகம்.!


   ஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. மிகவும் குளிர்ச்சியான பிரதே சங்களில் வசிப்பவர்களும், குளிர்ச்சியான உடல் நிலை கொண்டவர்களும் ஸ்படிகம் அணிவதைத் தவிர்க்கவேண்டும். மற்றவர்கள் யார் வேண்டுமா னாலும் அணியலாம்.

   ஸ்படிக மாலையை ஒருவர் அணிந்த பின் மற்ற வர்கள் மாற்றி அணியும் போது தண்ணீருக்குள் குறைந்தது 3 1/2 மணி நேரமாவது ஊறவிட வேண்டும். மற்ற ரத்தின உபயோகத்திற்கும் ஸ்படிக மாலை உபயோகத்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. ஸ்படிகத்தைத் தவிர மற்ற அனைத்து ரத் தினங்களையும் இரவில் அணியலாம். ஆனால் ஸ்படிகத்தைக் கண்டிப்பாக இரவில் அணியக்கூடாது. காரணம், அது உப ரத்தின வகையைச் சார்ந்தது மட்டுமல்ல. தானாகத் தன் அதிர்வுகளை வெளியேற்றும் சக்தி ஸ்படிகத்திற்குக் கிடையாது என்பதும்தான். காலையில் இருந்து இரவு வரை ஒருவர் ஸ்படிக மாலை அணியும் போது அவரது உடற்சூட்டை இந்த ஸ்படிகம் தன்வசம் இழுத்துக் கொள்ளும். காலையில் ஒருவர் ஸ்படிகத்தை அணியும் முன் அது குளிர்ச்சியாகவும் இரவில் அதை கழட்டும்போது உஷ்ணமாக இருப்பதைக் கொண்டு இதை நீங்கள் உணரலாம்.

    இந்த ஸ்படிக மாலையை இரவில் கழற்றித் தரையில் வைக்க வேண்டும். அப்போது பூமியின் ஈர்ப்பு சக்தியினால் மறுபடியும் ஈர்ப்புப் பெறும். தினமும் இதைச் செய்ய வேண்டும். அந்த தரு ணத்தில் உங்கள் மன, உடல் அழுத்தம் குறை வதை நீங்கள் உணரலாம். எத்தனை நாட்க ளுக்கு அணிந்தாலும் அதன் சக்தி குறையவே குறையாது.

    ஸ்படிகத்தை நேரடியாகவோ, வெள்ளி அல்லது தங்கத்துடன் இணைத்தோ அணியலாம். வீட்டிற்கு ஒரு ஸ்படிகமாலை இருந்தாலே போதும். அதிக உஷ்ணம் உள்ள குழந்தைகள் ஸ்படிகத்தை அரைஞாணில் அணியலாம். இவ்வளவு அற்புத மான ஸ்படிகத்தை மற்றவர்களுக்குப் பரிசாகவும் கொடுக்கலாம். ஸ்படிக விநாயகர், சிவலிங்கம் போன்றவற்றை நமது பூஜை அறையில் வைத்து பூஜிக்கும் போது ஈர்ப்பு சக்தி நன்றாக இருக்கும். வாரம் இருமுறையாவது அபிஷேகம் செய்யும் போது அதன் சக்தி அப்படியே இருக்கும்.

    ஸ்படிகத்தில் மிகச் சக்தி வாய்ந்தது, மகா மெகரு. இந்த மெகரு ஸ்படிகத்தை வாங்கும்போது வெடிப்பு, உடைப்பு இல்லாமல் உள்ளதா என்று சுத்தமாகப் பார்த்த பின் வாங்க வேண்டும். மகா மெகருவை வெள்ளி அல்லது தாமிரத் தட்டிலோ வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். அதற்கும் அபிஷேகம் மிகவும் முக்கியம். ஸ்படிகத்தை யானை வடிவில் வைக்கும்போது லஷ்மி கடாட்சம் வரும். இவ்வளவு அற்புதங்கள் அடங்கிய ஸ்படிகத்தை அனைவரும் உபயோகித்துப் பயன் அடைவீர்களாக.

வீரபத்திரர்!!!

வீரபத்திரர்!!!

சிவபெருமானின் மூர்த்தங்களில், அகந்தையை அழித்து நீதியை நிலைநாட்டிட, ஈசுவரனின் அம்சமாகத் தோற்றுவிக்கப்பட்டவரே வீரபத்திரர். தவறு செய்தவனுக்குத் தண்டனை தந்து நீதியைக் காக்கும் நீதி தேவனாக அவதரித்தவரே வீரபத்திரர். அளவற்ற ஆற்றல்கள் பெற்றிருந்தாலும் அகந்தை கொள்ளலாகாது. ஆணவமே மனிதனை அழிக்கும். வேறு ஒரு பகையும் வேண்டாம். இறைவனின் அருளைப் பெற விழைய வேண்டுமே அல்லாது, அவனையே எதிர்த்து அழிந்திடலாகாது என்ற அரிய தத்துவத்தை உலகோர்க்குப் புகட்டிட எழுந்த கோலமே வீரபத்திரர் வடிவம். அட்ட வீரட்டம் என்று அழைக்கப்படும் எட்டுத் தலங்களுள், ஆறு தலங்களில் ஈசனே நேராகச் சென்று அசுரர்களை அழித்தார். இரண்டில் மட்டும் தான் நேராகச் செய்யாமல், தனது அருட்பார்வையில் உண்டான வீரபத்திரர், பைரவர் ஆகியோரை அனுப்பி, தட்சன், பிரம்மன் ஆகியோரைத் தண்டித்துப் பின்னர் அருள் புரிந்தார். அதில், வீரபத்திரரை அனுப்பிப் பெற்ற வெற்றி தனி வீர வரலாறாகவும் உன்னதமான வெற்றியாகவும் கருதப்படுகிறது. ஏழு வீரட்டங்களில், தேவர்களுக்கு உதவிடவே எம்பெருமான் போர் புரிந்துள்ள நிலையில், தட்ச சங்காரத்தில் மட்டும் தேவர்களையே எதிர்த்துப் போரிட்டு அவர்களை நிலைகுலையச் செய்து, கடுமையாகத் தண்டித்தான். தேவர்கள் ஒவ்வொருவரும் வீரபத்திரரால் தண்டிக்கப்பட்ட விதம், தனித்தனி வீர பராக்கிரமமாகவும் போற்றப்படுகிறது. கந்தபுராணம், காஞ்சிப்புராணம், திருமந்திரம், திருவாசகம், திருவிசைப்பா ஆகியவற்றோடு சம்பந்தர், திருநாவுக்கரசர் தேவாரங்களிலும் வீரபத்திரரின் சாகசங்கள் போற்றிப் புகழ்ந்துரைக்கப்பட்டுள்ளன.

புராணங்களில் வீரபத்திரர்: 
 கச்சியப்ப சிவாச்சாரியாரால் எழுதப்பட்ட அரிய நூல் கந்தபுராணம் ஆகும். ஆறு காண்டங்களை உடையது. ஆறாவது காண்டமே தக்க காண்டம். இதில் வேள்விப்படலம், உமைவருபடலம், வீரபத்திரர் படலம், யாக சங்காரப் படலம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. வீரபத்திரர் படலத்தின் அறுபது பாடல்களும், யாக சங்காரப் படலத்தின் நூற்று எழுபத்தாறு பாடல்களும் வீரபத்திரர் புகழ்பாடும் செய்திகளைக் கொண்டவை ஆகும்.

உலகம் உய்வதற்காக, உமையம்மை திருக்கயிலையிலிருந்து காஞ்சிக்கு வந்து 64 அறங்களை வளர்த்து, கம்பா நதிக்கரையில் மணலால் சிவலிங்கத் திருமேனியை அமைத்து, பூசனை செய்த வண்ணம், தவமிருந்த பெருமை காஞ்சித் தலத்திற்கே உரியதாகும். அதன் காரணமாகவே, தேவருலகம் முழுவதுமே திரண்டெழுந்து, ஏகம்பரை வழிபாட்டுப் பெரும்பேறு பெற்றனர். சிவஞான முனிவரால் இயற்றப்பெற்ற காஞ்சிப்புராணம், இலக்கிய நயம் மிகுந்து விளங்குவதாகும். தல புராணங்களில் தலையாய நூல் ஆகும். 68 படலங்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் தக்கேசப் படலம் எழுபத்தேழு பாடல்களைக் கொண்டதாகும். அதனுடன் முப்பத்தொன்று பாடல்களைக் கொண்ட விடுவச் சேனப்படலமும், வீரபத்திரரைப் பற்றிக் கூறுபவை ஆகும். வேதங்களில் கூறப்பட்டுள்ள வேள்விகளில் சிறந்ததை, சிவபெருமானையே தலைவராகக் கொண்டு செய்யவேண்டும். பிறரைக் கொண்டு செய்வோர் அழிவார்கள். சிவபரம்பொருளை இகழ்வோரும், அதற்கு உடன்பட்டோரும் வருந்தவேண்டிவரும். சிவ அபராதம் எனும் குற்றம், சிவ பூஜையால் மட்டுமே நீங்கும். வேள்விச் சாலையில் தேவர்களோடு நிகழ்ந்த போரில், திருமாலும் கருடாரூடராக வீரபத்திரரை எதிர்த்த நிலையில், திருமால் ஏவிய சக்கரத்தை வீரபத்திரர் மார்பில் அணிந்திருந்த கபாலம் ஒன்று கவ்விக்கொண்டதும், விசுவச்சேனப் படலத்தில், அதனைத் திருமால் மீண்டும் பெற்றார் என்பதும் விளக்கப்படுகிறது.

சேக்கிழார், தனது பெரிய புராணத்தில் வீரபத்திரரை வீரன், வில்லி, செஞ்சடையான், பத்திரனார் என்று பல பெயர்களால் குறிப்பிடுகிறார். மணிவாசகரின் திருவாசகத்தில் திருஉந்தியார் பகுதி, வீரபத்திரரின் சாகசங்களை, மகளிர் உந்திக் குதித்து விளையாடும்போது பாடும் 20 பாடல்களாகத் தொகுத்துள்ளார்.

சாடிய வேள்வி சரிந்திடத்
தேவர்கள் ஓடியவா பாடி - உந்தீ பற!


என்று தக்கனின் யாகசாலையே சரிந்ததாக, தேவர்கள் ஓடி ஒளிந்ததைக் கூறுகிறார். இந்திரன் குயிலாக மாறி ஓடி ஒளிந்தான். அக்னி தேவனோ கரங்களை இழந்து கிளியாக மாறி மறைந்தான். அவிர்ப்பாகம் உண்ணத் துடித்த பகன் கண்களை இழந்தான். பகலவனின் பற்கள் நெறித்ததும், குதித்துக் குதித்து மகளிர் பாடும் எக்காளப் பாடல்களாக அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கவை ஆகும்.

தட்சனை வதம் செய்த வீரபத்திரர்: 
பிரம்மதேவனின் புதல்வனான தட்சன், தன் மகளான தாட்சாயனியை எப்பெருமானுக்கே தாரைவார்த்துத் தந்தபோதிலும், தனது அகந்தையால் சிவபெருமானைப் பகைத்துக் கொண்டான். நித்தமும் சிவ நிந்தனையையே சிந்தையில் கொண்டான். சிவபெருமானை அவமதிப்பதற்காகவே, முப்பதினாயிரம் மகரிஷிகளைக் கொண்டு பெரியதொரு வேள்வியைத் துவக்கினான். தன் மகளை மணந்த மகேசுவரனுக்கு மட்டும் அழைப்பினை அனுப்பாமல், பிரம்மா, விஷ்ணு, அஷ்டவசுக்கள், நட்சத்திர தேவதைகள் முப்பத்து முக்கோடி தேவர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பி மகேசனை அவமானப்படுத்திட எண்ணினான். பதியின் சொல்லை மீறி, தந்தை தட்சன் நடத்தும் வேள்விக்கு வந்த தாட்சாயனி, தட்சனின் கொடுஞ்சொற்களால் மகேசனுக்கு இழைக்கப்படும் அவமானத்தைத் தாங்காமல், அந்த வேள்விக் குண்டத்திலேயே பாய்ந்து மறைந்தாள். தேவியின் மறைவு கேட்டுச் சினங்கொண்ட முக்கண்ணனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவரே வீரபத்திரர்.

சிவபெருமானின் அம்சமாகவே, அக்னிச்சடையுடனும், மூன்று கண்களுடனும், எட்டுக் கரங்களிலும் கட்கம், கேடயம், வில், அம்பு, மணி, கபாலம், திரிசூலம் ஆகியவற்றைத் தாங்கியபடி, தேள்களினாலான மாலையணிந்து, நாகத்தை உபவீதமாகக் கொண்டு, கால்களில் பாதுகையணிந்தபடி, கண்களில் வீசும் பொறி வெங்கனலாகக் கிளம்பியபடி தோன்றினார் வீரபத்திரர். சிவபெருமானை மதிக்காமல், சிவநிந்தனையையே குறிக்கோளாக அந்த யாகத்திற்கு வந்தோர் அனைவருமே தண்டிக்கப்பட்டனர். தட்சன் தலையை முதலில் வீரபத்திரர் வெட்டி வீழ்த்தினார். மான் வடிவம் கொண்டு ஓடிய யாகபுருஷனை வதம் செய்தார். சூரியனின் கண்களைப் பிடுங்கி, பற்களை உதிர்த்தார். அக்னிதேவனின் கரம் கெடுத்தார். சரஸ்வதியின் மூக்கை அறுத்தார். இந்திரனின் தோள் நெரித்தார். பிரம்மதேவன் தலை இழந்தான். வேள்விச்சாலை முழுவதும் அழிந்திட, தேவர்கள் திசையெட்டிலும் ஓடிட, திருமால் வீரபத்திரரை எதிர்த்தார்.

திருமாலின் சக்கரத்தை, வீரபத்திரர் அணிந்திருந்த கபால மாலையில் ஒரு முகம் கவ்விக்கொண்டது. தீயோன் தக்கனோடு இணைந்தோர் அத்தனை பேருமே வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டனர். எல்லோரும் ஈசனுக்கு அடிபணிந்து பிழைபொறுக்குமாறு வேண்டிட, இடபாரூடராய் பெருமான் காட்சியளித்தார். வேள்விக் களத்தில் இறந்த அனைவருமே உயிர்பெற்றனர். தட்சனுக்கு ஆட்டுத்தலையே பொருத்தப்பட்டது. ஈசனின் பாதம் பணிந்து மன்னித்தருளக் கோரினான் தட்சன். தான் செய்த பிழை பொறுத்து, அவிர்ப்பாகத்தை ஏற்பதோடு வேள்விச்சாலை அமைந்த இடத்திலேயே எழுந்தருளி, பூவுலகோர்க்கு அருள்புரிய வேண்டுமென மண்டியிட்டான் தட்சன். அந்தத் தலம்தான் பாரிஜாத வனமாகவிருந்த பறியலூர். இன்று திருப்பரசலூர் என்று அழைக்கப்படுகிறது.

வீரபத்திரர் திருமேனி: 
வீரபத்திரர் திருமேனி எவ்வாறு அமையவேண்டும் என்று ஆகமங்கள், தத்துவநிதி ஆகியவை தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளன. எட்டுக் கரங்கள் முதல் முப்பத்திரண்டு கரங்கள் கொண்டவராகவும் வீரபத்திரர் திருமேனியை அமைக்கலாம் என்று உத்தர காரணாகமம் கூறுகிறது. தீச்சுவாலையை மகுடமாகக் கொண்டு, முக்கண்ணனாக, பயம் தரும் கபாலமாலையும் ஒலியெழுப்பும் மணிமாலையும் அணிந்தவர். இறுக்கிய கஞ்சுகம் அணிந்தவர். வாள், கேடயம், வில், அம்பு, மணி, கபாலம், பிண்டிபாலம் ஆகியவற்றை ஏந்தியவர். நாகத்தை யக்ஞோபவீதமாக (பூணூலாக) கொண்டு, கேள்களினால் ஆன மாலையை அணிபவராகவும், பாதுகைகளை அணிந்தவராகவும் வீரபத்திரர் சித்திரிக்கப்படுகிறார். ஆட்டுத்தலையுடன் இரு கரங்கூப்பிய நிலையில், தட்சன் வலதுபுறம் நிற்க, வீரபத்திரரோடு துணையாக வந்த பத்ரகாளியும் இடதுபுறம் நிற்கும் வண்ணம், திருமேனி அமைக்கப்பட வேண்டும்.

வெற்றி தரும் வீரபத்திரர்: 
தத்தம் செயல்களில் வெற்றிபெற வேண்டுவோர், வீரபத்திரரை வழிபடல் வேண்டும். கர்நாடக மாநிலத்து லிங்காயத் இனத்தவர், வீரசைவர்கள் எனப்படுவர். வீரபத்திரருக்குத் தனிக்கோயில் அமைத்துச் சிறப்பாக வழிபடுகிறார்கள். தும்பைப்பூ மாலை வீரபத்திரருக்கு மிகவும் பிரியமானதாகும். எவரையும் அஞ்சாது, அதிரடிப்போர் புரிவதன் அடையாளம் அது. கரை இல்லாத வெள்ளை ஆடையே வீரபத்திரருக்கு அணிவிக்க வேண்டும். ஐப்பசி மாதம் வளர்பிறை அஷ்டமி நாள், மகா அஷ்டமி எனப்படுகிறது. தட்சனின் யாகத்தை அழித்த வீரபத்திரரைக் குறித்து நோற்கப்படும் விரதம் அது. புண்ணிய நதிகளின் காவலராக வீரபத்திரர் உள்ளார். கும்பகோணம் மகாமகக் குளத்தருகே அவரது சன்னதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமர்ந்த கோலத்தில், யோக நிஷ்டையில், சப்தமாதர்கள் திருமேனிகளுக்கு அருகில், வீரபத்திரரை தரிசிக்கலாம். வீரபத்திரருக்குரிய அலங்காரங்களில் வெற்றிலை மாலை அணிவிப்பது குறிப்பிடத்தக்கது. பல்லாயிரக்கணக்கில் வெற்றிலையை அடுக்கடுக்காகத் தைத்து, மாலையாக அணிவிப்பது, ஆடிப்பூர நாட்களில் நடைபெறும். அனுமந்தபுரந்தில் அப்படி அணிவிப்பது 12,800 வெற்றிலைகள் கொண்ட மாலை ஆகும்.

அகோர வீரபத்திரரும் அக்னி வீரபத்திரரும்: 
கர்நாடகத்தை விஜயநகரப் பேரரசர்கள் ஆண்டபோது, அவர்களது ஆட்சிக்குட்பட்டிருந்த தமிழகத்தின் பல பகுதிகளில் நாயக்கர் ஆட்சி மேலோங்கியது. அந்தக் காலத்தில் உருவான பல திருக்கோயில்களின் மண்டபங்களில், பெரிய சிற்பங்களாகவும் தூண்களில் புடைப்புச் சிற்பமாகவும் வீரபத்திரர் திருவுருவங்களைக் காணலாம். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில், கம்பத்தடி மண்டபத்தினருகில், மேற்கு நோக்கியபடி உள்ள அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர் சிலை வடிவங்கள், வீரபத்திரர் சிலைகளிலே மிகப் பெரியவை ஆகும். எட்டு, பத்துக் கரங்களுடன், கனல் கக்கும் கண்களுடன் அக்னி சுவாலையாக சுட்டெரிக்கும் ஆக்ரோஷத்துடன் காட்சி தரும் வீரபத்திரர் திருமேனிகள், காண்போரை மெய்சிலிர்க்க வைப்பதாகும். இவைபோன்ற சிற்பங்கள் பேரூர், தாடிக்கொம்பு, ஆவுடையார்கோயில், ஸ்ரீவில்லிப்புத்தூர், ஸ்ரீவைகுண்டம், தென்காசி, தாரமங்கலம், அவிநாசி போன்ற தலங்களிலும் இடம் பெற்றுள்ளன. பேரூரிலுள்ள அக்னி வீரபத்திரர் ஜடாமகுடத்தில் தேள் உருவம் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

நடன வீரபத்திரர்: 
தட்சனின் யாகத்தைத் துவம்சம் செய்து தேவர்களையெல்லம் புறமுதுகிட்டு ஓடச் செய்த மகிழ்ச்சியில், ஆனந்த நடனமிடும் கோலத்திலும் வீரபத்திரரை நாம் பல ஆலயங்களில் காணலாம். கிருஷ்ணாபுரம், மதுரை ஆயிரங்கால் மண்டபம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய இடங்களில் நடன வீரபத்திரர் சிலை கலை நயம் மிக்கதாகக் காணப்படுகின்றன. இடது கரத்தில் வீரபத்திரரின் உருவம் பதித்த கேடயத்துடன், வலது காலைத் தூக்கி உயர்த்திய கோலத்தில் நடன வீரபத்திரரைக் காணலாம். காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோயில் போன்ற பல ஆலயங்களின் மண்டபத்தூண்களில் புடைப்புச் சிற்பமாகவும், நான்கு கரங்கள் கொண்ட வீரபத்திரரைக் காணமுடிகிறது. மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலின் தெற்கு ராஜகோபுரத்தின் முதல் நிலையையொட்டி 18 கரங்களைக் கொண்ட வீரபத்திர சுதைச் சிற்பங்கள், வண்ணப்பூச்சுடன் கம்பீரமாகத் திகழ்கின்றன.

பிரளயகால வீரபத்திரர்: 
தட்சனின் யாகத்தை அழித்துத் துவம்சம் செய்ய 32 கரங்களுடன் வெகுண்டெழுந்த பிரளய கால ருத்திரரின் அற்புதத் திருமேனி ஒன்று, பெங்களூருக்கு அருகில் குட்டஹள்ளி என்ற சிற்றூரில் காணலாம். தை மாதம் ரதசப்தமி நாளன்று, அக்னி குண்டம் வளர்த்து, பக்தர்கள் பூக்குழி இறங்குதல் தனிச்சிறப்பு ஆகும்.

திருப்பறியலூர்: 
தட்சனின் யாகத்திற்கு வந்தவர் அனைவரின் தீமைகளையும் பறித்துக்கொண்டதால் பறியலூர் என்றழைக்கப்படலாயிற்று. மாமனின் தலையைப் பறித்ததாய் மாமன் பறியல் என்றும், தட்சன் வேள்வி செய்த தலமாதலால் தட்சபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. அட்டவீரட்டத் தலங்களில், எம்பெருமான், தானே வராமல், தனது சடையிலிருந்து தோன்றிய வீரபத்திரரை அனுப்பி, தட்சனுக்குப் பாடம் புகட்டிய தலம் இது. மயிலாடுதுறை - பொறையார் சாலையில் செம்பொனார்கோவில் என்ற திருத்தலத்திற்குத் தெற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது. காவிரி தென்கரையில் உள்ள திருத்தலம். தீமைகளை அகற்றும் பரிகாரத்தலம் ஆனதால், மேற்குத் திசை நோக்கியபடி வீரட்டேசுவரர் திருக்கோயில் இங்கு அமைந்துள்ளது. உத்தரவேதி தீர்த்தம், தேவதீர்த்தம், திக்பாலகர் தீர்த்தம், கமல தீர்த்தம் என நான்கு புண்ணிய தீர்த்தங்கள் இங்கே உள்ளன.

அவற்றுள் உத்தரவேதி தீர்த்தம் மிக உத்தமமானது. ஆயுள் நீடித்து, பிணிகள் பறந்திட, நிலைத்த முக்தியை அருளும் தீர்த்தம் இது. இரண்டு பிராகாரங்களைக் கொண்ட சிறிய கோயில். கருவறையில், சுயம்புலிங்கத் திருமேனியாக வீரட்டேசுவரர் எழுந்தருளியுள்ளார். தட்சன் வேள்வியைச் சாடியதால் தட்சபுரீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். தெற்கு நோக்கிய சன்னதியில் நான்கு கரங்களோடு இளங் கொம்பனையாள் என்ற திருநாமத்துடன் அன்னை எழுந்தருளியுள்ளாள். அம்மன் சன்னதியையடுத்து தனிச் சன்னதியாக அமைந்தது வீரபத்திர சன்னதி.

எட்டுக் கரங்களோடு, மழு, சூலம், கதை, கத்தி, கேடயம், கபாலம், மணி ஆகியவற்றைத் தாங்கியபடி, அக்னிசுவாலைகள் கிரீடமாக அழகுசெய்ய அகோர வீரபத்திரர், கனிந்த அருட்பார்வையோடு காட்சி தருகிறார். காலடியில் தட்சன் வீழ்ந்து கிடக்கிறான். பீடத்தின் முகப்புத் தகட்டில், பிரம்மா ஆசாரியனாக அமர்ந்து வேள்வி செய்யும் கோலத்தையும் தட்சனையும் காணலாம். ஆண்டுக்கு ஆறு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. ஆலயத்திற்குத் தெற்கே உள்ள உத்தரவேதி தீர்த்தமே, தட்சன் செய்த வேள்விக் குண்டம் என்றும் கூறுவர்.

பெரும்பேர் கண்டிகை: 
சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூருக்குத் தெற்கே 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் இது. ஊருக்குள்ளே மையமாக, கிழக்கு நோக்கி அமைந்துள்ளது வீரபத்திரர் திருக்கோயில். வடமேற்கு முனையில் பத்திரகாளி சன்னதியும் உள்ளது.

திருமயிலை: 
சென்னை மாநகரில் அநேக இடங்களில் வீரபத்திரருக்கெனத் தனி ஆலயங்கள் அமைந்துள்ளன. திருமயிலை மாதவப்பெருமாள் கோயில் அருகிலும், வில்லிவாக்கம், வேளச்சேரி ஆகிய இடங்களிலும் உள்ள ஆலயங்கள் குறிப்பிடத்தக்கவை. ராயபுரம் அங்காளம்மன் திருக்கோயிலில் எட்டுக் கரங்களும் கொண்ட ஆறடி உயர வீரபத்திரர் சிலை உள்ளது. வெண்ணெய்க் காப்பும் வெற்றிலைப் படலும், இங்கே சிறப்பு வழிபாடுகள் ஆகும்.

சு. ஆடுதுறை: 
பெரம்பலூர் மாவட்டம், திட்டக்குடியையொட்டி, வெள்ளாற்றின் தென்கரையில் உள்ள தலம். இங்குள்ள குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயிலில், சுதை வடிவிலான, 18 கரங்கள் கொண்ட அழகிய வீரபத்திரர் திருமேனி உள்ளது.

வீரபத்திரர் ஆலயங்கள்: 
வீரபத்திரருக்கு, வடக்குத் திசை நோக்கியபடி தனிக்கோயில் அமைவதோடு, சிவாலயங்களில் உள்சுற்றில் தென்திசையில், சப்தமாதர்களுக்கு அருகில் வீரபத்திரரைக் காணலாம். அதுதவிர தென்தமிழ்நாட்டில் திருக்கோயில்களில் எழுப்பப்பட்டுள்ள மகா மண்டபங்களில் அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர் மற்றும் நாட்டியமாடும் நிலையில் வீரபத்திரர் சிலைகளைக் காணலாம். வீரபத்திரரை மூலவராகக் கொண்ட தனி ஆலயங்கள் பல தமிழ்நாட்டில் உள்ளன.
அனுமந்தபுரம்:
அரன்மைந்தன்புரம் என்ற அழகுப் பெயரை, தற்போது அனுமந்தபுரம் என்று ஆக்கிய தலம், சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில், சிங்கப்பெருமாள்கோவிலுக்குச் தென்கிழக்கே 7கி.மீ. தொலைவில் உள்ளது. எட்டடி உயரம் கொண்ட கம்பீரமான திருவுருவமாக வீரபத்திரர் விளங்குகிறார். தலைமுடியில் சிவலிங்கம் உள்ளது. வலது கால் அருகே ஆட்டுத் தலையுடன் தட்சன் கரங் கூப்பியபடி நிற்பதைக் காணலாம். மேற்கரங்களில் வில்லும் அம்பும் ஏந்தியபடி, கீழ்க்கரங்களில் கத்தியும் கேடயமும் தாங்கிய கோலம். வெண்ணெய் சாற்றுவதும், வீரபத்திரருக்கு வெற்றிலைப் படல் அமைத்து வெற்றிலை மாலை அணிவிப்பதும் தனிச்சிறப்பாகும்.

வீராவாடி - 
திருவாரூருக்கு வடக்கே மயிலாடுதுறை செல்லும் சாலையில், 20 கி.மீ. தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்னும் ஊருக்குக் கிழக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது. (கூத்தனூர் சரஸ்வதி கோயில், அம்பர் மாகாளம் ஆகிய தலங்கள் அருகில் உள்ளன) 3 நிலை ராஜகோபுரத்துடன் கூடிய சிறிய கோயில். அம்பன், அம்பாசுரனைக் கொன்ற காளிக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துவிட, அதனை விரட்டிடவே சிவபெருமான் வீரபத்திரரை அனுப்பியதாகத் தல வரலாறு கூறுகிறது. மூலவராக நான்கு கரங்களோடு நின்ற கோலத்தில் வீரபத்திரர் காட்சி தருகிறார். வீரபத்திரர் அடிபதித்த தலம் என்பதால் வீராவடி என்று அழைக்கப்படுகிறது.

சப்தமாதர் அருகில் வீரபத்திரர்: 
இவை தவிர, கோவையையடுத்த பேரூர், நாகப்பட்டினம், சேலம், வில்லிவாக்கம், வேளச்சேரி, திருவானைக்கா, தாராசுரம், சுவாமிமலை, பவானிசாகர் ஆகிய ஊர்களிலும் வீரபத்திரருக்குத் தனி ஆலயங்கள் உள்ளன. சாமுண்டி, பிராமி, மாகேசுவரி, வைஷ்ணவி, கவுமாரி, இந்திராணி மற்றும் வாராகி ஆகிய சப்தமாதர் திருமேனிகள், திருக்கோயில்களின் தெற்கு உள்சுற்றில் இடம் பெறுபவை ஆகும். இப்படி அமைந்த கோயில்கள், பெரும்பாலும் பல்லவர் காலத்தவை ஆகும். அந்த ஏழு மாதர்களுக்கு அருகில் அவர்களின் காவலராக, அமர்ந்த கோலத்தில் வீரபத்திரரைக் காணலாம்.

தக்கயாகப் பரணி: 
ஒட்டக்கூத்தர், சோழப் பேரரசின் ஒளிமயமான ஆட்சிக் காலத்தில் மூன்று பேரரசர்களுக்கு ஆசானாகவும் அரசவைக் கவிஞனாகவும் திகழ்ந்தவர். ஒரு சமயம், தாராசுரம் வீதிகளில் கூத்தர் நடந்து சென்றுகொண்டிருந்தார். எதிரே, குடந்தை மடத்தின் பெரிய துறவியொருவர் தேவாரத்தைப் பாடிக்கொண்டு வருவதைக் கண்டார். அவரைப் பார்த்து கூத்தர், அடிகளே, இந்த தேவாரத்திற்கு உமக்குப் பொருள் தெரியுமா? என்று கேட்டார். கூத்தரின் கேள்வியில் எழுந்த தோரணை துறவியை சினமடையச் செய்தது. எரிச்சல் கொண்ட துறவி, கூத்தரே, இதன் பொருளை, உம்மால் ஆயிரம் வார்த்தைகளாலும் வர்ணிக்க முடியாது என்று பதிலளித்தார். கோபம் கொண்டார் கூத்தபிரான். தனது சவுக்கால் பலமாக துறவியை அடிக்க, அடி தாங்காது துறவி மரணமுற்றார். மடத்துத் துறவிகள் பொங்கியெழுந்து, அரசரிடம் முறையிட்டனர். கொலைக்குரிய குற்றம் செய்துள்ள அரசவைப் புலவரை எம்மிடம் ஒப்படைப்பீர் என்று வேண்டினார்.

நகரெங்கும் ஒட்டக்கூத்தரைத் தேடிப் புறப்பட்டனர். ஆனால் கூத்தரோ தாராசுரம் வீரபத்திரர் கோயிலினுள்ளே சென்று ஒளிந்துகொண்டார். ஆலயத்திலிருந்து காளி சன்னதி முன்னே உருகித் துகித்து, தன்னை இக்கட்டிலிருந்து காத்திடக் கோரி அழுதார். துறவிகளோ ஆலயத்தைச் சூழ்ந்து நின்றவண்ணம் இருந்தனர். காளிதேவி ஒட்டக்கூத்தரிடம், வீரசைவர்களின் வழிபாட்டு தெய்வமான வீரபத்திரர் மீது பரணி பாடுவாயாக. அதுவே உன்னை விடுவிக்கும்! என்று திருவாய் மலர்ந்தருளினாள். அது மட்டுமல்ல, எழுத்தாணியும் ஏடும் தந்ததோடு அவர் பாடலை எழுதுவதற்கு உதவிட , கைவிளக்கையும் ஏந்தி நின்றாள். ஒரு நிலையில் விளக்கில் எண்ணெய் குறைந்தபோது, அதற்கு எண்ணெய் விட காளிதேவி குனிந்தாள். அப்போது அவளது கரத்திலிருந்து விளக்கு சற்று அசைந்ததாம். முனைப்புடன் நூலை எழுதும்போது இடர் உண்டானதால், யார் விளக்கை ஏந்தி நிற்கிறார்கள் என்பதை அறிந்திராத கூத்தர், காளியின் கன்னத்திலேயே அறைந்தாராம்.

ஆனால் காளியோ புலவரின் அச்செயலையும் பூசையாக ஏற்றுக்கொண்டாள். நூலை எழுதி முடித்த கூத்தர் இருகரங் கூப்பி காளியைத் தொழுதபோது, அன்னையின் கன்னத்தில் தனது கை பதிந்திருக்கக்கண்டு வருந்தித் தன்னை மன்னித்தருளும்படி கோரினார். காளிதேவி மகிழ்வுற்று, உனது நூலை வாசலில் நிற்கும் துறவிகளிடம் கொடு! என்று ஆணையிட்டாள். துறவிகளும் அவரது நூலைப் படித்து, வீரபத்திரரின் சாகசங்கள் பற்றி அரிய நூலை எழுதிய கூத்தரை மன்னித்ததோடு, பல்வேறு சிறப்புகளையும் செய்தனர். தக்கயாகப் பரணியை ஒட்டக்கூத்தர் இயற்றிய இடம் தாராசுரம், ஐராவதேசுவரர் ஆலயத்தின் வடமேற்கு மூலையில் உள்ளது என்பர். அதனை அரங்கேற்றிய இடம், கும்பகோணம் மகாமகக் குளத்தருகில் உள்ள பெரிய மடத்தின் முன்னே உள்ள திடல் ஆகும். இங்கு அமைந்துள்ள வீரபத்திரர் ஆலயத்தில் ஒட்டக்கூத்தரின் சிலையும் அமைந்துள்ளது. ஆணவம் அழிந்து ஞானம் பிறந்த கதையே வீரபத்திரரின் அருட்கோலம். திக்கெட்டும் வெற்றிகள் குவித்திட வீரபத்திரரைப் பணிவோம்.

விரதம் இருப்பது எப்படி ?

   ஆன்மீகம் என்றும் உள்ளும் புறமும் தூய்மைப்படுத்தும் கருவியாகவே இருக்கிறது. நாம் பயன்படுத்தும் சம்பிரதாயங்கள் சடங்குகளுக்கு பின்புலத்தில் இருக்கும் காரணம் தெரியாமல் பயன்படுத்துவதால் நாளடைவில் அதன் மேல் ஒரு சலிப்பு ஏற்படுகிறது. பக்தியுடனோ அல்லது ஈடுபாட்டுடனோ செய்யாத ஆன்மீக காரியங்கள் பலன்கொடுக்காது. ஒருவர் தான் செய்யும் ஆன்மீக காரியங்களின் தாத்பரியம் தெரிந்தால் தான் அதில் முழுமனதுடன் செய்யமுடியும். மேலும் அடுத்த சந்ததியினருக்கு எடுத்துசொல்ல முடியும். நமது கலாச்சாரத்தில் சைவம், வைணவம் மற்றும் சாக்தம் என ஏனைய சித்தாத்தங்கள் இருந்தாலும், அனைத்து முறையிலும் சில சம்பிரதாயங்கள் ஒன்றாவே  இருக்கிறது. அத்தகைய சம்பிரதாயங்களில் முக்கியமானது விரதம் இருத்தல் என்பதாகும். விரதம் இருப்பது என்றவுடன் உண்ணாமல் இருப்பது என்று மட்டுமே நினைத்துவிடுகிறோம். ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் தனது அவயங்களை செயல்படாமல் வைப்பது விரதம் இருத்தல் என விளக்கலாம். பஞ்சபூதங்களின் வடிவமான நமது ஐந்துவிதமான உணர்வு உறுப்புக்களை செயல்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் அபரீதமான சக்தி நமக்குள் சுரக்கும். ப்ராணா என அழைக்கப்படும் இந்த சக்தியை கொண்டு நமது ஆன்மீக வாழ்க்கையில் எளிதில் மேம்படலாம். உணர்வு உறுப்புக்கள்  ஒவ்வொன்றும் பஞ்சபூதத்தின் அடிப்படையாக இருப்பதாக  விளக்கினேன் அல்லவா? பஞ்சபூதம் குறிக்கும் உறுப்புகள் என்ன என காண்போம்.
 
கண் - நெருப்பு
வாய் - நீர்
காது - ஆகாயம்
மூக்கு - மண்
தொடு உணர்வு - காற்று


   நமது உணர்வு உறுப்புக்களின் செயலை ஒரு நோக்கத்துடன் தற்காலிகமாக நிறுத்தும் பொழுது அது விரதம் என கூறலாம். நம் உடல் சக்தி அதிகமாக உணர்வு உறுப்புக்கள் மூலம் வீணக்கப்படுகிறது. நாம் அந்த உணர்வு உறுப்புக்களை செயல்பட்டாமல் இருக்கச் செய்தால் அதில் வீணாகும் சக்தி நம்முள்ளே சேமிக்கப்பட்டு ஆன்மீக ஆற்றலா மாற்றம் அடையும். காது மற்றும் மூக்கு பகுதிகளின் செயல்பாட்டில் ஆகாயமும்  மண்ணும் இருக்கிறது. ஆகாயம் மற்றும் மண்ணின் தொடர்பில்லாமல் நம்மால் ஒரு கணமும் வாழமுடியாது. அதை போலவே இந்த இரு அவயங்களின் செயல்களை நாம்மால்  செயற்கையாக நிறுத்த முடியாது. உறுப்புக்களின் செயலை  தற்காலிகமாக நிறுத்தினால் நமக்கு சக்தி கிடைக்குமா எப்படி? என பலர் நினைக்கிறார்கள். மஹாபாரதத்தில் கெளரவர்களின் தாய் காந்தாரி. திருத்ராஷ்டிரனை திருமணம் செய்தபின் தன் கணவன் காணாத இவ்வுலகை நானும் காணமாட்டேன் என தனது கண்களை கட்டிக்கொண்ட பதிவிரதை. அவள் எடுத்த வைராகியமான முடிவு அவளின் சக்தியை நாளாக நாளாக கூட்டி அவளுக்குள் மாபெரும் சக்தியாக அமைந்துவிட்டது. பாரத போர் சமயத்தில் தனது கண்கள் மூலம் சேமித்த ஆற்றல் அனைத்தும் தனது மகனுக்கு வழங்கி  அவனை மாபெரும் சக்தி உள்ளவனாக மாற்ற எண்ணுகிறாள் துரியோதனனின் அன்புத்தாய் காந்தாரி. துரியோதனனை  குளித்துவிட்டு நிர்வாணமாக தன்முன் வர சொல்லுகிறார். துரியோதனன் குளிக்க செல்லுகையில் ஸ்ரீ கிருஷ்ணர் எதிர்ப்பட்டு, ”என்னப்பா இந்த சமயத்தில் குளிக்கபோகிறாயா?” என கேட்கிறார். தனது தாயின் நோக்கத்தை கூறுகிறான் துரியோதனன். ஸ்ரீ  ருஷ்ணர் புன்னகைத்துவிட்டு நீ வளர்ந்த மனிதன் தாயின் முன் நிர்வாணமாக நிற்கலாமா என கேட்கிறார். குளித்தபின் வாழை இலையை இடுப்பில் தொடை வரை அணிந்து காந்தாரியின் முன் செல்லுகிறான் துரியோதனன். கண்களை திறந்து தனது சக்தியை வழங்கிய காந்தரிக்கு தன்மகன் இடுப்பு பகுதியில் ஆடையுடன் இருப்பதை கண்டு கலங்கினாள். ஸ்ரீ கிருஷ்ணரின் மாய விளையாட்டை புரிந்துகொண்டாள். பாரத போரின் இறுதியில் பீமனுக்கும், துரியோதனனுக்கும் கடும் மோதல் ஏற்படும் பொழுது எந்த உறுப்பில் தாக்கினாலும் இறக்காமல் இருந்த துரியோதனன் கடைசியில் தொடைப்பகுதியில் தாக்கியதும் இறந்தான். காரணம் காந்தாரி வழங்கிய சக்தி தொடை பகுதியில் இல்லை. பீமன் உடல் வலிமையில் சிறந்தவன் அவனால் காந்தாரியின் கண் மூலம் பெற்ற ஆற்றலை ஒன்றும் செய்ய முடிய வில்லை என்பதே விரத பலனை நமக்கு உணர்த்தும். விரதம் இருக்கும் பொழுது மட்டுமே நம் உடலில் இருக்கும் சக்தியையும் நாம் தினமும் வீணாக்கும்  சக்தியின் அளவையும் புரிந்துகொள்ள முடியும். விரதம் இருத்தலில் உணர்வு உறுப்புக்களில் முக்கியத்துவம் பெருவது வாய் எனும் உறுப்பு. பிற உணர்வு உறுப்புக்கள் ஒரு செயலை மட்டுமே செய்யும். ஆனால் வாய் மட்டும் இரு செயலை செய்யும். சுவைத்தல் மட்டும் பேசுதல் என இரு செயல்களை தவிர்ப்பதை அனேக விரதங்களின் அடிப்படையாக இருக்கிறது. சதுர்த்தி, சஷ்டி, ஏகாதசி, பிரதோஷம் ஆகிய திதிகளும், திங்கள்  (சோமவாரம்), வியாழன் (குருவாரம்)கிழமைகளில் விரதமும் நமக்கு நன்மையை ஏற்படுத்தும்.அன்றைய கோள்களின் நிலை நமது உடலின்  சக்தியை மேலும் வலுசேர்க்கும். சாப்பிடாமல் விரதம்  இருக்கும் முறையை உண்ணாவிரதம் என்றழைத்தோம், தற்சமயம் உண்ணாவிரதம் இருத்தல் என்பது ஏதோ அரசியல் செயலாக மாறிவிட்டது. ஒரு குறிப்பிட்ட நோகத்திற்காக வைராக்கியத்துடன் உணவு சாப்பிடாமல் இருக்கும் தன்மையை இவ்விரதம் சுட்டிகாட்டுகிறது. மஹாத்மா காந்தி வெள்ளையருக்கு எதிர்ப்பு காட்ட நமது சம்பிரதாயத்தை ஒரு ஆயுதமாக்பயன்படுத்தினார்.  தற்சமயம் அது அரசியலாகிவிட்டது. நாமும் ஒரு வாழ்க்கையில் மேன்மை அடைய ஒரு லட்சியம் மற்றும் வைராக்கியத்துடன்  மாதம் இரு நாளிலோ அல்லது வாரம் ஒரு நாளோ விரதம் இருப்போம் ஆனால் அவை கைகூடும் என்பது சான்றோர்களின் வாழ்க்கை மூலம் அறியலாம். நமது உடலின் சக்தியை அதிகமாக செலவிடும் உணர்வு உறுப்பு கண். கண்களை காட்டிலும் அதிகமாக சக்தியை செலவு செய்யும் உறுப்பு ஜீரண உறுப்புகள். உண்ணாமல் இருந்தால் மயங்கி விழுந்துவிடுவோம் என்ற தவறான எண்ணம் பலருக்கு உண்டு. உண்மையின் சராசரி மனிதன் உண்ணாமல்  குறைந்தபட்சம் அறுபது முதல் தொன்னூறு நாள் வாழமுடியும். உங்கள் உடல்வாகுக்கு ஏற்ப மருத்துவரை கலந்துகொண்டு உண்ணாநோன்பு இருங்கள். உலக மதங்கள் எத்தனையோ  இருந்தாலும் அதில் ஓர் அடிப்படை ஒற்றுமை உண்டு. அதற்கு சிறந்த உதாரணம் விரதம் எனும் தன்மை. உலகின் அனேக மதங்களில் விரதம் ஒரு புனித சடங்காக கொண்டாடப்படுகிறது. விரதம் இருக்கும் பொழுது  ஏற்படும் முக்கியமான பயன் மனது தனது செயலை மிகவும் குறைவாக செய்து தன்னில் அடங்கிவிடும். மனமற்ற தூய நிலையில் ஆன்மீக  முன்னேற்றம் விரைவாக நடக்கும். பால், பழங்களை உண்டு விரதம் இருத்தல் ஒரு வகை. நீர் கூட குடிக்காமல் விரதம் இருப்பது மற்றொரு வகை. நமது உடலின் தன்மை வாழ்க்கை சூழல் பொருத்து விரதம் இருக்க வேண்டும். சந்திராம்ச விரதம் என ஒரு வகை விரதம் உண்டு. சந்திரனின்  பிறைக்கு ஏற்க சாப்பிடும் விரதம் சந்திராம்சவிரதம். பெளர்ணமி அன்று முழுமைகாக சாப்பிட ஆரம்பித்து படிப்படியாக குறைப்பார்கள். அமாவாசை அன்று ஒன்றும் சாப்பிடாமல் இருப்பார்கள். அமாவாசைக்கு அடுத்தநாள் ஒரு கவளம் என படிப்படியாக உணவை கூட்டுவார்கள். சந்திராம்சவிரதத்தை பொருத்தவாரை மாதம் முழுவதும் விரத தினங்கள்தான். 

யார் எல்லாம் உண்ணா விரதம் இருக்க கூடாது? 

• சஷ்டியப்த பூர்த்தி முடித்த முதியவர்கள்
• வியாதியினால் மருந்து உண்பவர்கள்
• கர்ப்பிணிகள்
• பிரம்மச்சாரிகள்
• சன்யாசிகள்

   இவர்களை தவிர பிறர் உண்ணா நோன்பு இருக்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம். மேலும் சன்யாசிகளுக்கு என்று தனி விரதங்களும் பிரம்மச்சாரிகளுக்கு தனி விரதமும் சாஸ்திரத்தில் உண்டு. மெளனவிரதம் இருப்பது வாய் எனும் உறுப்பின் மற்றொரு விரதமாகும்.மெளவிரதத்தால் நமது உடல் மற்றும் மனது தூய்மை ஆகிறது. மெளனவிரதம் அனைவரும் இருக்க தகுந்த ஒரு விரதம். இதில் யாருக்கும் தடையில்லை. உலகின் சிறந்த மொழி மெளனம். தக்ஷ்ணாமூர்த்தி உலகுக்கு அளித்த வேதம். மெளனமாக இருப்பதால் நம்மில் இருக்கும் சக்தியை மிகவும் துல்லியமாக அறியலாம். மெளனவிரதம் இருந்துவந்தால் உங்கள் உள்ளுணர்வு மிகவும் கூர்மையானதாக மாறி உங்களை விழிப்புணர்வாளர்களாக மாற்றும். மெளனவிரதம் இருக்கும் பொழுது சிலர் காகிதத்தில் எழுதி காட்டுவார்கள். மனதை ஒருநிலைப்படுத்தும் நோக்கில் இருக்கும் விரதத்திற்கு இது  எதிரான செயல். மெளனவிரதம் இருக்கும் காலத்தில் உங்களை ஒரு ஜடப்பொருளாக பாவித்துக்கொள்ளுங்கள். உங்கள் உடல் செயல்படலாம் ஆனால் சைகை மூலமோ, எழுத்து மூலமோ பேசாதீர்கள். அப்பொழுது தான் மெளனவிரதத்தின் பயனை முழுமையாக உணரமுடியும். விரதங்களில் வாய்மூலம் அனுஷ்டிக்கும் விரதத்தை பற்றி பார்த்தோம். ப்ராணாயமத்தில் கும்பகம் எனும் செயல் தற்காலிகமான சுவாச விரதம் எனலாம். மேலும் பிரம்மச்சரிய விரதம் தொடு உணர்வுக்கு விரதமாகும். ஒரு ஆன்மீகவாதிக்கு வைராக்கியம், அப்யாசம், பக்தி ஆகியவை மிகவும் முக்கியம். தனது  எடுத்துக்கொண்ட செயலை எப்பாடுபட்டாவது முடிக்கும் செயல் வைராக்கியம். தனது ஆன்மீக செயல்களை தடையில்லாமல் தினமும் எந்த காரணம் கொண்டும் விடாமல் செய்வது அப்யாசம். ஈஸ்வரனிடத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் இருப்பது பக்தி. ஆன்மீகவாதியின் லட்சணங்களான இவை விரதம் இருக்கும் பொழுது நம்மில் செயல்படத்தொடங்கும். இறைவனை நினைத்து உண்ணாமல் இருக்கும் பொழுது நம்மில் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுவதன் காரணமும் இதுதான். நமது சாஸ்திரம் பஞ்ச அவயங்களுக்கும்தனித்தனியே விரதங்களை வழங்கி உள்ளது. நமது உணர்வு உறுப்புக்களை சரியான முறையில் பயன்படுத்தினால் அதன் சக்தியையும் படைப்பாற்றலையும் மேம்படுத்தமுடியும். இரைச்சலான ஒரு சந்தையில் ஒருவரை அழைத்தால் அவருக்கு நாம் அழைப்பது கேட்காது, அதே நேரம் அமைதியான ஒரு தோட்டத்தில் இருக்கும் ஒருவரை அழைத்தால் அவருக்கு நமது அழைப்புரியும். அது போல உங்கள் உணர்வு உறுப்புக்கள் சந்தைக்கடை போல பல செயல்களில் ஈடுபடும் பொழுது பரமாத்மாவை  அழைத்தால் அவரிடம் நீங்கள் நெருங்க முடியாது. விரதம் மூலம் உங்கள் உடலை மேன்மையாக்குங்கள். உங்கள் உடல் எனும் நந்தவனத்தில் பரமாத்மா நிரந்தரமாக வசம் செய்வார்.

131 சித்தர்கள் போற்றித் தொகுப்பு


 ஞானியர்களின் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மிகம் என்று உலகறியச் செய்யும் வள்ளல், பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் தொகுத்து வழங்கிய சித்தர்கள் போற்றித்தொகுப்பு

அகத்தியர் துணை
ஓம் சுப்ரமணியர் திருவடிகள் போற்றி
ஓம் சுப்ரமணியர் திருவடிகள் போற்றி
ஓம் சுப்ரமணியர் திருவடிகள் போற்றி

துவக்கப்பாடல்
திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே
திருமந்திரம் - 1598.

ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
ஓம் அகப்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் அசுவினித்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் அத்திரிமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் அநுமான் திருவடிகள் போற்றி
ஓம் அம்பிகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் அருள்நந்தி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் அல்லமாபிரபு திருவடிகள் போற்றி
ஓம் அழுகண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி 10

ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி
ஓம் இராமலிங்க சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி
ஓம் இராமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் உமாபதி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் ஒளவையார் திருவடிகள் போற்றி
ஓம் கஞ்சமலைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடைப்பிள்ளைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடுவெளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கண்ணானந்தர் திருவடிகள் போற்றி 20

ஓம் கண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கனநாதர் திருவடிகள் போற்றி
ஓம் கணபதிதாசர் திருவடிகள் போற்றி
ஓம் கதம்பமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் கபிலர் திருவடிகள் போற்றி
ஓம் கமலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கருவூர்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் கல்லுளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கலைக்கோட்டு முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கவுபாலச்சித்தர் திருவடிகள் போற்றி 30

ஓம் கனராமர் திருவடிகள் போற்றி
ஓம் காகபுஜண்டர் திருவடிகள் போற்றி
ஓம் காசிபர் திருவடிகள் போற்றி
ஓம் காலாங்கிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் குகை நமச்சிவாயர் திருவடிகள் போற்றி
ஓம் குதம்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் குமரகுருபரர் திருவடிகள் போற்றி
ஓம் குருதட்சணாமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி
ஓம் குறும்பைச்சித்தர் திருவடிகள் போற்றி 40

ஓம் கூர்மானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் கொங்கணேஸ்வரர் திருவடிகள் போற்றி
ஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி
ஓம் கௌசிகர் திருவடிகள் போற்றி
ஓம் கௌதமர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கமுனிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கர மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் சங்கிலிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சச்சிதானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சட்டநாதர் திருவடிகள் போற்றி 50

ஓம் சண்டிகேசர் திருவடிகள் போற்றி
ஓம் சத்யானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சிவயோகமாமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சிவவாக்கியர் திருவடிகள் போற்றி
ஓம் சிவானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுகபிரம்மர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் சூதமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சூரியானந்தர் திருவடிகள் போற்றி 60

ஓம் சூலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சேதுமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சொரூபானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ஜம்புமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் ஜமதக்னி திருவடிகள் போற்றி
ஓம் ஜனகர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனந்தனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனாதனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனக்குமாரர் திருவடிகள் போற்றி
ஓம் ஜெகநாதர் திருவடிகள் போற்றி 70

ஓம் ஜெயமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் ஞானச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் டமாரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி
ஓம் தாயுமான சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருகோணச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி
ஓம் திருமாளிகைதேவர் திருவடிகள் போற்றி 80

ஓம் திருமூலதேவர் திருவடிகள் போற்றி
ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி
ஓம் தூர்வாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் தேரையர் திருவடிகள் போற்றி
ஓம் நந்தனார் திருவடிகள் போற்றி
ஓம் நந்தீஸ்வரர் திருவடிகள் போற்றி
ஓம் நாதாந்தசித்தர் திருவடிகள் போற்றி
ஓம் நாரதர் திருவடிகள் போற்றி
ஓம் நொண்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி 90

ஓம் பத்ரகிரியார் திருவடிகள் போற்றி
ஓம் பதஞ்சலியார் திருவடிகள் போற்றி
ஓம் பரத்துவாசர் திருவடிகள் போற்றி
ஓம் பரமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் பராசரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பாம்பாட்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பிங்களமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் பிடிநாகீசர் திருவடிகள் போற்றி
ஓம் பிருகுமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பிரும்மமுனிவர் திருவடிகள் போற்றி 100

ஓம் பீர்முகமது திருவடிகள் போற்றி
ஓம் புண்ணாக்கீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலத்தீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலிப்பாணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பூனைக்கண்ணார் திருவடிகள் போற்றி
ஓம் போகமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் மச்சமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் மஸ்தான் திருவடிகள் போற்றி
ஓம் மயூரேசர் திருவடிகள் போற்றி
ஓம் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி 110

ஓம் மார்க்கண்டேயர் திருவடிகள் போற்றி
ஓம் மாலாங்கன் திருவடிகள் போற்றி
ஓம் மிருகண்டரிஷி திருவடிகள் போற்றி
ஓம் முத்தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் மெய்கண்டதேவர் திருவடிகள் போற்றி
ஓம் மௌனசித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யாகோபு திருவடிகள் போற்றி
ஓம் யூகிமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் யோகச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யோகானந்தர் திருவடிகள் போற்றி 120

ஓம் ரோமரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வசிஷ்டமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரதரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வராகிமிகி திருவடிகள் போற்றி
ஓம் வால்மீகி திருவடிகள் போற்றி
ஓம் விசுவாமித்திரர் திருவடிகள் போற்றி
ஓம் வியாக்ரமர் திருவடிகள் போற்றி
ஓம் வியாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் விளையாட்டுச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் வேதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி 131

ஓம் எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள் திருவடிகள் போற்றிபோற்றி

நிறைவுப்பாடல்
வாழ்கவே வாழ்கஎன்நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே

22 ஜூலை 2014

தாலி – ஒன்பது இழைத் தத்துவம்...




“தாலி மகிமை”
இந்துக்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான நிறம் என்பதால் அந்தத் திருமணப்
ரிசும் மஞ்சள் நிறத்தில் தரப்பட்டது என்று விளக்குகிறார் பாலகிருஷ்ணசாஸ்திரிகள்.
தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில் தாலி இருந்ததாக, இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை. சங்க காலத்தின்போது நடந்த திருமணங்களில் புதுமணல் பரப்பி, விளக்கு ஏற்றி, வயதில் மூத்த பெண்கள், மணப்பெண்ணை நீராட்டி வாழ்த்தி அவள் விரும்பியவனுடன் அவளை ஒப்படைத்தனர். நாளடைவில் “”தாலம்” என்ற பெயர்தான் தாலியாக மாறியிருக்கிறது.  பதினோராம் நூற்றாண்டில்தான் திருமணச் சின்னம்என்ற ரீதியில் தாலி என்ற  பெயர் உபயோகப்படுத்தப்பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்வெளியிட்டிருக்கும் “”தமிழர் திருமணம்” என்கிற  புத்தகம்.மாங்கல்யச் சரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது. ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது.

தெய்வீகக் குணம், 
தூய்மைக் குணம், 
மேன்மை, 
தொண்டு, 
தன்னடக்கம், 
ஆற்றல், 
விவேகம், 
உண்மை, 
உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல். 
இத்தனைக் குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு அணியப்படுகிறது....

தாலி கட்டுவது ஏன்...?

 



தமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு உதாரணமாக அம்மி மித்திப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும் அருந்ததி பார்ப்பது பகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும்

ிருமண சடங்கில் அக்னி வளர்ப்பது திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம் உன்னை அறியாமல் நானும் என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால் இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும் என்பதாகும்

அதே போன்ற அர்த்தம் தான் கல்யாண வீட்டில் வாழை மரம் கட்டுவதில் இருக்கிறது வாழை மரம் வளர்ந்து குலைதள்ளி தனது ஆயுளை முடித்து கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக பலன் தருவதற்கு தனது வாரிசை விட்டு செல்லுமே அல்லாது தன்னோடு பலனை முடித்து கொள்ளாது எனவே திருமண தம்பதியரான நீங்கள் இருவரும் இந்த சமூதாயம் வளர வாழையடி வாழையாக வாரிசுகளை தந்து உதவ வேண்டும் என்பதே வாழைமரம் கட்டுவதின் ரகசியமாகும்.

உலக முழுவதும் உள்ள திருமண சடங்கு முறையில் திருமணம் ஆனதற்கான அடையாள சின்னங்களை அணிந்து கொள்வது முறையாகவே இருந்து வருகிறது அதாவது மனித திருமணங்கள் அனைத்துமே எதோ ஒருவகையில் நான் குடும்பஸ்தன் என்பதை காட்ட தனிமுத்திரை இடப்படுவதாகவே இருக்கிறது. அப்படி உலகம் தழுவிய வழக்கங்களில் ஒன்று தான் தாலிகட்டும் பழக்கமாகும் சங்ககாலத்தில் தாலி என்ற வார்த்தை இலக்கியங்களில் அதிகமாக பயன்பாட்டில் இல்லை என்பதற்காக பழங்கால தமிழன் தாலி கட்டாமல் வாழ்ந்தான் என்று சொல்வதற்கு இல்லை

தாலி என்ற வார்த்தை தான் இல்லையே தவிர இதே பொருளை கொண்ட மங்கலநாண் என்ற வார்த்தை இலக்கியங்கள் பலவற்றில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் அரசியல் கூட்டங்களில் சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமண சடங்கில் இளங்கோவடிகள் தாலிகட்டுவதை பற்றி பேசவே இல்லை அதனால் தமிழர் திருமணங்களில் தாலியே இல்லை என்று முழங்கி கொண்டு அலைந்தனர். ஆனால் அவர்களே மங்கள் வாழ்த்து படலத்தில் மங்கல அணி என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்றே அறியாமல் போய்விட்டனர்

“முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை
அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது”'''

என்று இளங்கோ அடிகள் மிக அழகாக சொல்கிறார். அதாவது திருமண நேரத்தில் முரசுகள் ஒலிக்கின்றன வெண்குடை உயர்கிறது வாழ்த்துக்கள் முழங்குகின்றன மங்கல அணி எழுத்து போல் பதிகிறது என்பது இதன் பொருளாகும்

ஆண் பெண்ணை அடிமையாக்குவதோ பெண் ஆணை அடிமையாக்குவதோ சமூதாய பிரச்சனையே தவிர அது சடங்கு பிரச்சனை அல்ல தமிழர் சடங்கில் எந்த இடத்திலாவது நீ தாலி அணிந்திருக்கிறாய் அதனால் எனக்கு நீ அடிமை என்ற வாசகம் கிடையவே கிடையாது.

உணமையாக தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன் இந்த மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சி நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதை காட்டட்டும் இரண்டாவது முடிச்சி குலபெருமையை நீ பாதுகாப்பாய் என்பதை காட்டட்டும் மூன்றாவது முடிச்சி குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.

தமிழர்களின் திருமண சடங்குகள் அனைத்துமே ஆணையும் பெண்ணையும் சமமாக பாவித்தே இருக்கிறதே தவிர ஏற்ற தாழ்வு கற்பிக்கும் படி எதுவும் கிடையாது . உண்மைகளை கண்டறிய வேண்டியது தான் உயர்ந்த மனிதர்களின் உன்னத நோக்கமாகும்.

நீங்கள் எப்போதும் உயர்ந்ததையே பாருங்கள் உயர்ந்ததாக சிந்தியுங்கள் உங்கள் வாழ்வும் உயர்ந்ததாக இருக்கும் அதை விட்டு விட்டு ஆகயாத்தில் பறக்கின்ற கழுகு தான் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அதை மறந்து கீழே பூமியில் கிடக்கும் அழுகிய மாமிசத்தை பார்ப்பது போல் தாழ்மையான கருத்துக்களை பார்க்காதீர்கள் தாழ்வான சிந்தனைகளை காது கொடுத்து கேட்காதிர்கள் உயர்ந்தவர்கள் எப்போதும் உயர்ந்ததையே காண்பார்கள்
— 


சிவலிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சியில் கிடைத்த முடிவு.....

 


{ஒரு ரெண்டு நிமிஷம் நேரத்தை ஒதுக்கி ரஷ்ய விஞ்ஞானி சொல்வதை படித்து பாருங்கள். ஒவ்வொரு இந்துவும் படித்து பகிர வேண்டிய அறிய விசயம்....!!!!!!!} சிவலிங்கங்களைப் பற்றிய டாக்டர் “விளாதி மீரின்” என்பவரின் ஆராய்ச்சி மிக வித்தியாசமானது. அது இந்த பூமியில் மொத்தம் எத்தனை லிங்கங்கள் உள்ளன என்று எண்ணிப் பார்க்கவோ, இல்லை அவற்றின் பூர்வ புராணக் கதைகளை அறியவோ முயலவில்லை. இவற்றுக்கப்பால் சிவலிங்கங்கள் பற்றி நாம் யோசிக்கவும் அதை நாம் நேசிக்கவும் நிறைய அடிப்படைகள் இருப்பதாக டாக்டர் விளாதிமீர் கருதினார்.அதில் முதலாவது, ஸ்தூல வடிவங்களில் இறை உருவங்களை உருவாக்கி வழிபாடு செய்யும் இந்து மதத்தில் ஒரு குழவிக் கல்லைப் போன்ற,
லிங்கம் என்னும் உருவமற்ற ஒரு உருவம் எப்படி உட்புகுந்தது என்பதுதான். உண்மையில் லிங்க சொரூபமானது மூன்று மதத்திற்கும், புத்த ஜைனர்களுக்கும் கூட பொதுவானது என்பதையும் அவர் கண்டுபிடித்தார்....
ஒரு மலை உச்சி! அதில் பௌர்ணமி இரவில் கரிய நிழல் உருவாய் கண்ணுக்குத் தெரிந்த லிங்க உருவத்தை ஒரு கிருத்தவன் சிலுவைச் சின்னமாகப் பார்த்தான். ஒரு இஸ்லாமியன் தங்களின் மசூதிக் கூரை தெரிவதாக கருதினார். புத்த ஜைன சன்யாசிகள் தங்கள் குருமகாங்கள் அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதாகக் கருதினார்கள். ஒரு இந்துவோ அது சிவலிங்கம் என்று திடமாக கருதி இருந்த இடத்தில் இருந்த வில்வ இலைகளை வாரி வாரி அர்ச்சித்தான். 
உருவம் ஒன்று. ஆனால் அனைத்து மார்க்க தரிசிகளையும் அது திருப்திப்படுத்தியது என்றால் சிவம்தான் முதலும் முடிவுமான அனைவருக்கும் பொதுவான இறை ஸ்வரூபமா? டாக்டர் விளாதிமீர் இப்படிதான் கேட்கிறார்.
மேலும் அவர் புராணங்களிலும், இதிகாசங்களிலும் சிவம் பற்றி சொன்னதை
அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.  லிங்க உருவம் பற்றி யாரும் சரியாக உணரவில்லை என்பதுதான் அவரது கருத்து. ஒரு ரஷ்ய நாட்டுப் பிரஜையாக இருந்தாலும் சிவலிங்க சொரூபம் அவருக்குள் ஆழமான பாதிப்புகளை உருவாக்கியதாக அவர் கூறுகிறார். லிங்கம், சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று கணித வடிவங்கள் அவ்வளவையும் தனக்குள் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும்போதும் ஒருள் பொருள் தருவதாகவும் இருக்கிறது என்பது அவர் கருத்து. குறிப்பாக அணு தத்துவம் சிவலிங்க சொரூபத்துக்குள் விலாவரியாக இருக்கிறது. லிங்கத்தைப் பயன்படுத்தத் தெரிந்தால், அது மழை தரும், நெருப்புத் தரும், காற்று தரும் கேட்ட எல்லாம் தரும், என்றும் நம்புகிறார். அப்படி என்றால் சிவமாகிய லிங்க ஸ்வரூபம் என்பது மானுடர்கள் பயன்படுத்தத் தெரியாமல் வைத்திருக்கும் மகத்தான ஒரு எந்திரமா? டாக்டர் விளாதிமீரின் சிவஸ்வரூப ஆராய்ச்சியில் ஒரு ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றும் அவருக்குக் கிட்டியதாம்.
இந்த மண்ணில் பூமிக்கு மேலாக கண்ணுக்குத் தெரியும் விதத்தில் உள்ள லிங்க ஸ்வரூபங்கள் இல்லாமல் பூமிக்குள் புதைந்து கிடக்கும் ஸ்வரூபங்களும் ஏராளமாம்! அதுவே அவ்வப்போது ஸ்வயம்பு மூர்த்தியாய் வெளிப்படுகிறதாம்.ஸ்வயம்பு மூர்த்தங்களின் பின்புலத்தில் பஞ்சபூத சக்திகளின் இயக்கம் ஒரு சீராகவும், ஆச்சரியம் ஊட்டும் விதத்தில் ஒன்றோடொன்று பின்னிப்பினைந்த கூட்டுறவோடும் செயல்படுகிறதாம். சுருக்கமாகச் சொன்னால், அந்த மூர்த்தங்களைப் பஞ்ச பூதங்கள் ஆராதிக்கின்றன என்பதே உண்மை என்கிறார். இப்படிப்பட்ட ஆராதனைக்குறிய இடங்களில் கூர்ந்து கவனித்தபோது பஞ்ச பூதங்களும் சம அளவிலும் அத்துடன் சீரான இயக்கத்துடனும் அவை இருக்கின்றன. மனித சரீரத்திலும் பஞ்ச பூதங்கள் உள்ளன. இவை சுயம்புலிங்க ஸ்தலங்களில் இயற்கையோடு கூடிச் செயல்படுகின்றன என்கிறார். 
அதாவது சுயம்பு மூர்த்தி உள்ள ஸ்தலங்களில் வாழும் மனிதர்களே அந்த மண்ணுக்கான மழை. காற்று, அக்கினி மண்வளம் ஆகியவைகளைத் தீர்மானிக்கிறார்கள் என்று கூறும் விளாதிமீர், மதுரை போன்ற சுயம்புலிங்க ஸ்தலங்களில் கூடுதலான மழை அல்லது குறைவான மழைக்கு அங்கு வாழும் மக்களின் மனநிலையே காரணமாகிறது என்கிறார். சுயம்பு லிங்கங்கள் உள்ள மண்ணில் வாழும் மக்கள் மனது வைத்தால் அங்கே எதை வேண்டுமானாலும் உருவாக்கிட இயலும் என்றும் கூறுகிறார்!. இந்த பூமியானது சூரியன் உதிர்ந்த ஒரு சிறிய அக்னித் துளி என்கிறது விஞ்ஞானம். மெல்லக் குளிர்ந்த இதில் அடுக்கடுக்காய் உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன. அந்த உயிரினங்கள் உயிர் வாழத் தேவையான அனைத்தும் கூட அப்போது தோன்றின. இதுதான் பல கோடி ஆண்டுகளைக் கண்டு விட்ட இந்த பூமியின் சுருக்கமான வரலாறு. மாற்றம் என்பதே இந்தப் பூமியில் மாறாத ஒன்றாக என்றும் இருப்பது. அந்த மாற்றங்களால் வந்ததே இந்த மனித சமூகம். இதன் நடுவே மிக மாறுபட்ட கருத்துகளுடன், நமக்கிருக்கும் அறிவாற்றலால் நம்பமுடியவில்லை என்று ஒரு வார்த்தையில் கூறும் விதமாய் இருப்பதே மதப் புராணங்கள். இதில் புராணவழி அறியப்பட்ட சிவமானது தனித்து நிற்கிறது. “புராணம், விஞ்ஞானம் இரண்டையும் கடந்து மூன்றாவதாய் ஒன்றும் உள்ளது.
அதுதான் நான்! மானுடமே முடிந்தால் என்னைப் புரிந்துகொள் என்பதுபோல் இருக்கிறது அது” என்கிறார் டாக்டர் விளாதிமீர்! இ ந்த பூவுலகில் சிவம் தொடர்பான அடையாளக் குறியீடுகள் பாரத மண்ணில் மட்டுமன்றி  ஆப்பிரிக்கா, ஐரோப்பா முதலிய கண்டங்களில் கூட இருக்கிறது என்பது  டாக்டர் விளாதிமீரின் கருத்து. அமெரிக்காவில் “ கிராண்ட் கன்யான் “ என்னும்  வித்தியாசமான மலைப் பகுதியில் பராசக்தியின் அம்சங்கள் என்று வர்ணிக்கப்படும் “ சிவம், விஷ்ணு, பிரம்மன் “ மூன்றின் அடையாள உருவங்கள் காணப்படுகின்றனவாம். ஆயினும் இந்திய மண்ணில் மட்டும் சிவம் தொடர்பான சிந்தனைகளும் சைவம் என்கிற ஒரு பிரிவும் உருவாக ஆழமான ஒரு காரணம் இருப்பதாக விளாதிமீர் கருதுகிறார். உலகின் உயர்ந்த சிகரமான இமயம் பூகோள ரீதியில் பூமியின் மையத்தில் {கிட்டதட்ட} காணப்படுகிறது. அதன்படி பார்த்தால் இந்த உலகே கூட சிவலிங்க சொரூபம் எனலாம். ஒரு வட்டத்தில் இருந்து கூம்பு முளைத்தது போல் உலகமே ஆவுடையராகத் திகழ இமயம் சிவஸ்தம்பமாக எழும்பி நிற்கிறது. அங்கே பஞ்ச பூத ஆராதனையாக குளிர்ந்த காற்றும் உறைந்த பனியே நீராகவும், அதன் முற்றிய குணமே நெருப்பாகவும் இருக்கிறது.
ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட வெளி வேறு எங்கும் காணப்படாத விதத்தில் தூயதாக எல்லாவித கதிர் வீச்சுக்களையும் காணப்படாததாகக் திகழ்கிறது. இங்கே உயிராகிய ஜீவன் மிகச் சுலபமாக சிவத்தை அடைந்து விட {அ} உணர்ந்து விட ஏதுவாகிறது. அதனாலேயே இங்கே ஞானியர் கூட்டம் அதிகம் இருக்கிறது என்பதும் அவரது கருத்து! இந்த ரஷ்ய விஞ்ஞானி சொன்ன விஷயங்கள் எதுவும் எந்த விஞ்ஞானியும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

நன்றி ..இந்து மத வரலாறு ..