Powered By Blogger

21 ஜனவரி 2015

‘300’ (ஆண்டுகளுக்கு முந்தைய) பருத்தி வீரர்கள்:



உங்களில் பெரும்பாலனவர்கள் ‘300 பருத்தி வீரர்கள்’ என்ற ஆங்கில படத்தை பார்த்திருப்பீர்கள்,அதில் வெறும் 300 வீரர்கள் கொண்ட ‘ஸ்பார்ட்டா’ நாட்டின் வீரர்கள் பலலட்சம் வீரர்களை கொண்ட பாரசீக படைகளை தலை தாழாமல் எதிர்த்து வீரத்துடன் போரிட்டு வீழ்வார்கள்.அந்த படத்தை,அவர்களின் வீரத்தை சிலாகித்து விசிலடித்து பார்த்த நமக்கு உண்மையில் நாம் யார் என்பது தெரியாது.

நம் வரலாறு,1805யில் தூக்கிலிடப்பட்ட ‘பழஸிராஜா’ முதல் விடுதலை போராட்ட வீரர் என்கிறது,1857-யில் நடந்த ‘சிப்பாய்க் கலகம்’ இந்தியாவின் முதல் விடுதலைப்போர் என்று வர்ணிக்கிறது.1840களில் போராடிய ஜான்சிராணியை முதல் விடுதலைப்போராளி என்கிறது.அவர்களின் வீரம் மறுப்பதற்கு இல்லை,ஆனால் வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு மாபெரும் சுத்த தமிழ் வீரனை இந்நாளில் நினைவு கூறாவிட்டால் மிச்சம் வாழும் மத்த தமிழர்களும் மொத்தமாய் அழிந்து போவோம்.

செப்டம்பர் 1ஆம் தேதி 1715ஆம் ஆண்டில் திருநெல்வேலி ‘நெற்கட்டும் செவ்வல்’ பாளையத்தில் பிறந்தவர் ‘பூலித்தேவன்’.இவர் ஒரு முறை புலியுடன் போரிட்டு வென்றதால் இப்பெயர் பெற்றார்,மாதம் மும்மாரி பொழிந்து ஆறு போகம் விளைந்ததால் அந்த ஊர் ‘நெற்கட்டும் செவ்வல்’ எனப்பட்டது என்பது போன்ற சுய புராணங்களை சற்று ஒதுக்கி வைத்து விட்டு இவரிடம் இருக்கும் சில மறுக்க முடியாத நன்நெறிகளை ஆராய்ந்தால் தமிழனின் மரபு மெய்சிலிர்க்க வைக்கும்.

1)தாய்மொழித் தாகம்:

அந்நாட்களில் பெரும்பாலான செப்பேடுகளில் வடமொழி சொற்கள் இடம்பெற்று இருந்தன,ஆனால் பூலித்தேவன் காலத்து செப்பேடுகளில் தூய தமிழ் சொற்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

2)தொழில்வளம் மிக்க ஆட்சி:

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்,ஆனால் இன்று விவசாயிகளின் முதுகெலும்பை உடைக்கும் அரசாங்கம் தான் நடந்து கொண்டு இருக்கிறது.ஆனால் இதை பூலித்தேவன் அன்றே உணர்ந்திருந்தார்.உக்கிரமான போரின் போதும் அவர் விவசாயிகளை போரில் ஈடுபடுத்துவதில்லை,போரை போலவே விவாசயமும் நாட்டின் வாழ்வாதார பிரச்சனை என்று நம்பினார்.குளங்களை வெட்டுவது அதில் மீன்பிடித்தல் மூலம் வரும் வருவாயை கொண்டு மேலும் ஒரு குளம் வெட்டுவது என திட்டமிட்டு செம்மையான ஆட்சி நடத்தினார்.

3)சுய ராஜ்ஜியம் எங்கள் பிறப்புரிமை:

விடுதலைப்போரில் பாலகங்காதர திலகர் ‘சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை’ என்றார்.இதை 1700களிலே பூலித்தேவன் முழங்கினார்,வரி கட்ட மறுத்தார்.இதனால் ஆற்காடு நவாப்பின் எதிர்ப்பினை சம்பாதித்தார்.கோவம் கொண்ட ஆற்காடு நவாப் நெற்கட்டும் செவ்வலை தாக்கினார்,அதில் பூலித்தேவன் வெற்றி பெற்றார்.

4)ஒரு பொது எதிரியை வீழ்த்துவதற்கு ஒன்றுசேர வேண்டும்:

ஒரு பொது எதிரியை வீழ்த்துவதற்கு போர்க்களத்தில் ஒன்றுசேர வேண்டும் என்ற எண்ணத்தைப் இந்தியாவில் முதன் முதலாக ஏற்படுத்தியவரே பூலித்தேவன் தான்.ஆற்காடு நவாப்பின் படையில் வந்த மூன்று இஸ்லாமிய தளபதிகள் முடேமியா எனும் முகம்மது மியானச், மியானோ எனும் முகம்மது பார்க்கி, நபிகான் கட்டாக் ஆகிய மூன்று தளகர்த்தர்கள் மன்னர் பூலித்தேவர் முகத்தைக்கண்டு அவரால் கவரப்பட்டு அவரது படையில் சேர்ந்து வீரப்போர் புரிந்தார்கள். 12 மாதம் கழித்து 1756 மார்ச் 21 இல் திருநெல்வேலியில் மீண்டும் போர் நடத்தி வெள்ளையரை தோற்கடித்தார்,அவ்வாறு இணைந்த நவாப்பின் தளபதிகளுக்கு பள்ளிவாசல் கட்டித் தந்தார் என்பது அவரின் சமயப் பொறையை காட்டுகிறது.

5)எதிரியை பார்க்காமல் இலக்கை பார்த்தல்:

பின் ஆற்காடு நவாப் ஆங்கிலேயரின் துணையை நாடினார்,அடுத்து புலித் தேவருக்கு எதிராக பெரும்படையுடன் போர் புரிய வந்தவன் ‘கான்சாகிப்’ இவன் யார் எனில் ஹைதர் அலியை தோற்கடித்தவன்.பின்னாளில் ஆங்கிலேயர்கள் கான்சாகிப்பை தூக்கிலிட்டனர்,அப்போது இருமுறை தூக்கிலிட்டு சாகவில்லை,இறுதியில் மூன்றாவது முறை காலில் இரும்புக்குண்டை கட்டி தூக்கிலிட்டு கொன்றனர்.அத்தகைய கான்சாகிப்பையும் அவனது பெரும்படையையும் கண்டு அஞ்சாமல் போரிட்டு அவனை வெற்றிகண்டார்.

6)தன்னலமில்லா தலைமை:

பூலித்தேவனின் படையில் வெண்ணிகாலடி,ஒண்டிவீரன் உளவாளி ஆகியோரின் வீரத்தை நம்மால் புறக்கணித்துவிட முடியாது,பூலித்தேவனின் மனைவி மக்கள் எதிரிகளால் எரித்துக் கொல்லப்பட்டனர்,அப்பொழுதும் அவர் கலங்கவில்லை,ஆனால் எதிரிகளுடன் வீரத்துடன் போரிட்டு வீழ்ந்த தன் தளபதி ஒண்டிவீரனை மடியில் கிடத்தி கதறி அழுதார் என்று வரலாறு சொல்கிறது.அவர் சாதி சமயம் கடந்து மக்கள் மீது அன்பு கொண்டார்,அவர்களும் அவர் மீது அத்துனை அன்பாக இருந்தனர்.இந்த மாண்பு இன்று மேதகு.பிரபாகரன் வரை தொடர்கிறது

7)எதிரிகள் போற்றும் வீரம்:

இறுதியில் ஆங்கிலேயரின் பெரும்படையுடன் போர்,அது ஒரு நாட்டையே பிடிக்கும் அளவான நவீன ஆயுதங்கள் உடைய படை,பூலித் தேவர் திப்பு சுல்தான் உதவியை நாடினார் அது கிடைக்காமல் போனது,தானே மோத முடிவெடுத்தார்,அந்த போரைப்பற்றி தன் புத்தகத்தில் குறிப்பிடும் ஒரு ஆங்கிலத் தளபதி,”அந்த போரில் பூலித்தேவன் படையினர் 18 அடி வேல்கம்புகளை அசாத்தியமாக பயன்படுத்தினார்கள்,அவரது வீரர்கள் தங்கள் மார்பினை வைத்து அவர்கள் கோட்டை இடியாமல் காத்தனர்,அதில் வெற்றிபெற மிகவும் சிரமப்பட்டோம்” என்கிறார்.

இறுதியில் போரில் பூலித்தேவர் படை தோற்றபின் கடைசியாக அவரைக் கைதுசெய்து கொண்டு செல்கிறபோதுதான் சங்கரன்கோவில் ஆலயத்துக்குள் நான் வழிபட்டு வருகிறேன் என்று உள்ளே போனார்.அதற்குப்பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை. அருட்பெருஞ்சோதி மறைந்ததைப்போல சங்கரன்கோவில் கோவிலுக்குள் போனவர் திரும்பவில்லை.நேதாஜியின் மரணத்தைப்போல பூலித்தேவரின் மறைவும் இன்றுவரை மர்மமாகவே உள்ளது.

இன்று பூலித்தேவரின் பிறந்தநாள்,நாம் அவரை கொண்டாட கூட வேண்டாம்,குறைந்தபட்சம் நம் பிள்ளைகளுக்கு நமது வீர மரபுகளை சொல்லி வளர்ப்போம்,உங்கள் குழந்தைகள் 300 பருத்திவீரர்கள் படம் பார்க்கும் முன் இந்த 300 ஆண்டுகளுக்கு முந்தைய பருத்தி வீரர்களை சொல்லி கொடுங்கள்.அடுத்த தலைமுறையை சாதி சமயமற்ற வீரத்தமிழ் படையாக கட்டமைப்போம்.

தமிழ் வாழ்க…!பூலித்தேவன் புகழ் வாழ்க…!

நன்றி  

06 ஜனவரி 2015

ஸ்படிகம்.!


   ஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. மிகவும் குளிர்ச்சியான பிரதே சங்களில் வசிப்பவர்களும், குளிர்ச்சியான உடல் நிலை கொண்டவர்களும் ஸ்படிகம் அணிவதைத் தவிர்க்கவேண்டும். மற்றவர்கள் யார் வேண்டுமா னாலும் அணியலாம்.

   ஸ்படிக மாலையை ஒருவர் அணிந்த பின் மற்ற வர்கள் மாற்றி அணியும் போது தண்ணீருக்குள் குறைந்தது 3 1/2 மணி நேரமாவது ஊறவிட வேண்டும். மற்ற ரத்தின உபயோகத்திற்கும் ஸ்படிக மாலை உபயோகத்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. ஸ்படிகத்தைத் தவிர மற்ற அனைத்து ரத் தினங்களையும் இரவில் அணியலாம். ஆனால் ஸ்படிகத்தைக் கண்டிப்பாக இரவில் அணியக்கூடாது. காரணம், அது உப ரத்தின வகையைச் சார்ந்தது மட்டுமல்ல. தானாகத் தன் அதிர்வுகளை வெளியேற்றும் சக்தி ஸ்படிகத்திற்குக் கிடையாது என்பதும்தான். காலையில் இருந்து இரவு வரை ஒருவர் ஸ்படிக மாலை அணியும் போது அவரது உடற்சூட்டை இந்த ஸ்படிகம் தன்வசம் இழுத்துக் கொள்ளும். காலையில் ஒருவர் ஸ்படிகத்தை அணியும் முன் அது குளிர்ச்சியாகவும் இரவில் அதை கழட்டும்போது உஷ்ணமாக இருப்பதைக் கொண்டு இதை நீங்கள் உணரலாம்.

    இந்த ஸ்படிக மாலையை இரவில் கழற்றித் தரையில் வைக்க வேண்டும். அப்போது பூமியின் ஈர்ப்பு சக்தியினால் மறுபடியும் ஈர்ப்புப் பெறும். தினமும் இதைச் செய்ய வேண்டும். அந்த தரு ணத்தில் உங்கள் மன, உடல் அழுத்தம் குறை வதை நீங்கள் உணரலாம். எத்தனை நாட்க ளுக்கு அணிந்தாலும் அதன் சக்தி குறையவே குறையாது.

    ஸ்படிகத்தை நேரடியாகவோ, வெள்ளி அல்லது தங்கத்துடன் இணைத்தோ அணியலாம். வீட்டிற்கு ஒரு ஸ்படிகமாலை இருந்தாலே போதும். அதிக உஷ்ணம் உள்ள குழந்தைகள் ஸ்படிகத்தை அரைஞாணில் அணியலாம். இவ்வளவு அற்புத மான ஸ்படிகத்தை மற்றவர்களுக்குப் பரிசாகவும் கொடுக்கலாம். ஸ்படிக விநாயகர், சிவலிங்கம் போன்றவற்றை நமது பூஜை அறையில் வைத்து பூஜிக்கும் போது ஈர்ப்பு சக்தி நன்றாக இருக்கும். வாரம் இருமுறையாவது அபிஷேகம் செய்யும் போது அதன் சக்தி அப்படியே இருக்கும்.

    ஸ்படிகத்தில் மிகச் சக்தி வாய்ந்தது, மகா மெகரு. இந்த மெகரு ஸ்படிகத்தை வாங்கும்போது வெடிப்பு, உடைப்பு இல்லாமல் உள்ளதா என்று சுத்தமாகப் பார்த்த பின் வாங்க வேண்டும். மகா மெகருவை வெள்ளி அல்லது தாமிரத் தட்டிலோ வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். அதற்கும் அபிஷேகம் மிகவும் முக்கியம். ஸ்படிகத்தை யானை வடிவில் வைக்கும்போது லஷ்மி கடாட்சம் வரும். இவ்வளவு அற்புதங்கள் அடங்கிய ஸ்படிகத்தை அனைவரும் உபயோகித்துப் பயன் அடைவீர்களாக.

வீரபத்திரர்!!!

வீரபத்திரர்!!!

சிவபெருமானின் மூர்த்தங்களில், அகந்தையை அழித்து நீதியை நிலைநாட்டிட, ஈசுவரனின் அம்சமாகத் தோற்றுவிக்கப்பட்டவரே வீரபத்திரர். தவறு செய்தவனுக்குத் தண்டனை தந்து நீதியைக் காக்கும் நீதி தேவனாக அவதரித்தவரே வீரபத்திரர். அளவற்ற ஆற்றல்கள் பெற்றிருந்தாலும் அகந்தை கொள்ளலாகாது. ஆணவமே மனிதனை அழிக்கும். வேறு ஒரு பகையும் வேண்டாம். இறைவனின் அருளைப் பெற விழைய வேண்டுமே அல்லாது, அவனையே எதிர்த்து அழிந்திடலாகாது என்ற அரிய தத்துவத்தை உலகோர்க்குப் புகட்டிட எழுந்த கோலமே வீரபத்திரர் வடிவம். அட்ட வீரட்டம் என்று அழைக்கப்படும் எட்டுத் தலங்களுள், ஆறு தலங்களில் ஈசனே நேராகச் சென்று அசுரர்களை அழித்தார். இரண்டில் மட்டும் தான் நேராகச் செய்யாமல், தனது அருட்பார்வையில் உண்டான வீரபத்திரர், பைரவர் ஆகியோரை அனுப்பி, தட்சன், பிரம்மன் ஆகியோரைத் தண்டித்துப் பின்னர் அருள் புரிந்தார். அதில், வீரபத்திரரை அனுப்பிப் பெற்ற வெற்றி தனி வீர வரலாறாகவும் உன்னதமான வெற்றியாகவும் கருதப்படுகிறது. ஏழு வீரட்டங்களில், தேவர்களுக்கு உதவிடவே எம்பெருமான் போர் புரிந்துள்ள நிலையில், தட்ச சங்காரத்தில் மட்டும் தேவர்களையே எதிர்த்துப் போரிட்டு அவர்களை நிலைகுலையச் செய்து, கடுமையாகத் தண்டித்தான். தேவர்கள் ஒவ்வொருவரும் வீரபத்திரரால் தண்டிக்கப்பட்ட விதம், தனித்தனி வீர பராக்கிரமமாகவும் போற்றப்படுகிறது. கந்தபுராணம், காஞ்சிப்புராணம், திருமந்திரம், திருவாசகம், திருவிசைப்பா ஆகியவற்றோடு சம்பந்தர், திருநாவுக்கரசர் தேவாரங்களிலும் வீரபத்திரரின் சாகசங்கள் போற்றிப் புகழ்ந்துரைக்கப்பட்டுள்ளன.

புராணங்களில் வீரபத்திரர்: 
 கச்சியப்ப சிவாச்சாரியாரால் எழுதப்பட்ட அரிய நூல் கந்தபுராணம் ஆகும். ஆறு காண்டங்களை உடையது. ஆறாவது காண்டமே தக்க காண்டம். இதில் வேள்விப்படலம், உமைவருபடலம், வீரபத்திரர் படலம், யாக சங்காரப் படலம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. வீரபத்திரர் படலத்தின் அறுபது பாடல்களும், யாக சங்காரப் படலத்தின் நூற்று எழுபத்தாறு பாடல்களும் வீரபத்திரர் புகழ்பாடும் செய்திகளைக் கொண்டவை ஆகும்.

உலகம் உய்வதற்காக, உமையம்மை திருக்கயிலையிலிருந்து காஞ்சிக்கு வந்து 64 அறங்களை வளர்த்து, கம்பா நதிக்கரையில் மணலால் சிவலிங்கத் திருமேனியை அமைத்து, பூசனை செய்த வண்ணம், தவமிருந்த பெருமை காஞ்சித் தலத்திற்கே உரியதாகும். அதன் காரணமாகவே, தேவருலகம் முழுவதுமே திரண்டெழுந்து, ஏகம்பரை வழிபாட்டுப் பெரும்பேறு பெற்றனர். சிவஞான முனிவரால் இயற்றப்பெற்ற காஞ்சிப்புராணம், இலக்கிய நயம் மிகுந்து விளங்குவதாகும். தல புராணங்களில் தலையாய நூல் ஆகும். 68 படலங்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் தக்கேசப் படலம் எழுபத்தேழு பாடல்களைக் கொண்டதாகும். அதனுடன் முப்பத்தொன்று பாடல்களைக் கொண்ட விடுவச் சேனப்படலமும், வீரபத்திரரைப் பற்றிக் கூறுபவை ஆகும். வேதங்களில் கூறப்பட்டுள்ள வேள்விகளில் சிறந்ததை, சிவபெருமானையே தலைவராகக் கொண்டு செய்யவேண்டும். பிறரைக் கொண்டு செய்வோர் அழிவார்கள். சிவபரம்பொருளை இகழ்வோரும், அதற்கு உடன்பட்டோரும் வருந்தவேண்டிவரும். சிவ அபராதம் எனும் குற்றம், சிவ பூஜையால் மட்டுமே நீங்கும். வேள்விச் சாலையில் தேவர்களோடு நிகழ்ந்த போரில், திருமாலும் கருடாரூடராக வீரபத்திரரை எதிர்த்த நிலையில், திருமால் ஏவிய சக்கரத்தை வீரபத்திரர் மார்பில் அணிந்திருந்த கபாலம் ஒன்று கவ்விக்கொண்டதும், விசுவச்சேனப் படலத்தில், அதனைத் திருமால் மீண்டும் பெற்றார் என்பதும் விளக்கப்படுகிறது.

சேக்கிழார், தனது பெரிய புராணத்தில் வீரபத்திரரை வீரன், வில்லி, செஞ்சடையான், பத்திரனார் என்று பல பெயர்களால் குறிப்பிடுகிறார். மணிவாசகரின் திருவாசகத்தில் திருஉந்தியார் பகுதி, வீரபத்திரரின் சாகசங்களை, மகளிர் உந்திக் குதித்து விளையாடும்போது பாடும் 20 பாடல்களாகத் தொகுத்துள்ளார்.

சாடிய வேள்வி சரிந்திடத்
தேவர்கள் ஓடியவா பாடி - உந்தீ பற!


என்று தக்கனின் யாகசாலையே சரிந்ததாக, தேவர்கள் ஓடி ஒளிந்ததைக் கூறுகிறார். இந்திரன் குயிலாக மாறி ஓடி ஒளிந்தான். அக்னி தேவனோ கரங்களை இழந்து கிளியாக மாறி மறைந்தான். அவிர்ப்பாகம் உண்ணத் துடித்த பகன் கண்களை இழந்தான். பகலவனின் பற்கள் நெறித்ததும், குதித்துக் குதித்து மகளிர் பாடும் எக்காளப் பாடல்களாக அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கவை ஆகும்.

தட்சனை வதம் செய்த வீரபத்திரர்: 
பிரம்மதேவனின் புதல்வனான தட்சன், தன் மகளான தாட்சாயனியை எப்பெருமானுக்கே தாரைவார்த்துத் தந்தபோதிலும், தனது அகந்தையால் சிவபெருமானைப் பகைத்துக் கொண்டான். நித்தமும் சிவ நிந்தனையையே சிந்தையில் கொண்டான். சிவபெருமானை அவமதிப்பதற்காகவே, முப்பதினாயிரம் மகரிஷிகளைக் கொண்டு பெரியதொரு வேள்வியைத் துவக்கினான். தன் மகளை மணந்த மகேசுவரனுக்கு மட்டும் அழைப்பினை அனுப்பாமல், பிரம்மா, விஷ்ணு, அஷ்டவசுக்கள், நட்சத்திர தேவதைகள் முப்பத்து முக்கோடி தேவர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பி மகேசனை அவமானப்படுத்திட எண்ணினான். பதியின் சொல்லை மீறி, தந்தை தட்சன் நடத்தும் வேள்விக்கு வந்த தாட்சாயனி, தட்சனின் கொடுஞ்சொற்களால் மகேசனுக்கு இழைக்கப்படும் அவமானத்தைத் தாங்காமல், அந்த வேள்விக் குண்டத்திலேயே பாய்ந்து மறைந்தாள். தேவியின் மறைவு கேட்டுச் சினங்கொண்ட முக்கண்ணனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவரே வீரபத்திரர்.

சிவபெருமானின் அம்சமாகவே, அக்னிச்சடையுடனும், மூன்று கண்களுடனும், எட்டுக் கரங்களிலும் கட்கம், கேடயம், வில், அம்பு, மணி, கபாலம், திரிசூலம் ஆகியவற்றைத் தாங்கியபடி, தேள்களினாலான மாலையணிந்து, நாகத்தை உபவீதமாகக் கொண்டு, கால்களில் பாதுகையணிந்தபடி, கண்களில் வீசும் பொறி வெங்கனலாகக் கிளம்பியபடி தோன்றினார் வீரபத்திரர். சிவபெருமானை மதிக்காமல், சிவநிந்தனையையே குறிக்கோளாக அந்த யாகத்திற்கு வந்தோர் அனைவருமே தண்டிக்கப்பட்டனர். தட்சன் தலையை முதலில் வீரபத்திரர் வெட்டி வீழ்த்தினார். மான் வடிவம் கொண்டு ஓடிய யாகபுருஷனை வதம் செய்தார். சூரியனின் கண்களைப் பிடுங்கி, பற்களை உதிர்த்தார். அக்னிதேவனின் கரம் கெடுத்தார். சரஸ்வதியின் மூக்கை அறுத்தார். இந்திரனின் தோள் நெரித்தார். பிரம்மதேவன் தலை இழந்தான். வேள்விச்சாலை முழுவதும் அழிந்திட, தேவர்கள் திசையெட்டிலும் ஓடிட, திருமால் வீரபத்திரரை எதிர்த்தார்.

திருமாலின் சக்கரத்தை, வீரபத்திரர் அணிந்திருந்த கபால மாலையில் ஒரு முகம் கவ்விக்கொண்டது. தீயோன் தக்கனோடு இணைந்தோர் அத்தனை பேருமே வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டனர். எல்லோரும் ஈசனுக்கு அடிபணிந்து பிழைபொறுக்குமாறு வேண்டிட, இடபாரூடராய் பெருமான் காட்சியளித்தார். வேள்விக் களத்தில் இறந்த அனைவருமே உயிர்பெற்றனர். தட்சனுக்கு ஆட்டுத்தலையே பொருத்தப்பட்டது. ஈசனின் பாதம் பணிந்து மன்னித்தருளக் கோரினான் தட்சன். தான் செய்த பிழை பொறுத்து, அவிர்ப்பாகத்தை ஏற்பதோடு வேள்விச்சாலை அமைந்த இடத்திலேயே எழுந்தருளி, பூவுலகோர்க்கு அருள்புரிய வேண்டுமென மண்டியிட்டான் தட்சன். அந்தத் தலம்தான் பாரிஜாத வனமாகவிருந்த பறியலூர். இன்று திருப்பரசலூர் என்று அழைக்கப்படுகிறது.

வீரபத்திரர் திருமேனி: 
வீரபத்திரர் திருமேனி எவ்வாறு அமையவேண்டும் என்று ஆகமங்கள், தத்துவநிதி ஆகியவை தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளன. எட்டுக் கரங்கள் முதல் முப்பத்திரண்டு கரங்கள் கொண்டவராகவும் வீரபத்திரர் திருமேனியை அமைக்கலாம் என்று உத்தர காரணாகமம் கூறுகிறது. தீச்சுவாலையை மகுடமாகக் கொண்டு, முக்கண்ணனாக, பயம் தரும் கபாலமாலையும் ஒலியெழுப்பும் மணிமாலையும் அணிந்தவர். இறுக்கிய கஞ்சுகம் அணிந்தவர். வாள், கேடயம், வில், அம்பு, மணி, கபாலம், பிண்டிபாலம் ஆகியவற்றை ஏந்தியவர். நாகத்தை யக்ஞோபவீதமாக (பூணூலாக) கொண்டு, கேள்களினால் ஆன மாலையை அணிபவராகவும், பாதுகைகளை அணிந்தவராகவும் வீரபத்திரர் சித்திரிக்கப்படுகிறார். ஆட்டுத்தலையுடன் இரு கரங்கூப்பிய நிலையில், தட்சன் வலதுபுறம் நிற்க, வீரபத்திரரோடு துணையாக வந்த பத்ரகாளியும் இடதுபுறம் நிற்கும் வண்ணம், திருமேனி அமைக்கப்பட வேண்டும்.

வெற்றி தரும் வீரபத்திரர்: 
தத்தம் செயல்களில் வெற்றிபெற வேண்டுவோர், வீரபத்திரரை வழிபடல் வேண்டும். கர்நாடக மாநிலத்து லிங்காயத் இனத்தவர், வீரசைவர்கள் எனப்படுவர். வீரபத்திரருக்குத் தனிக்கோயில் அமைத்துச் சிறப்பாக வழிபடுகிறார்கள். தும்பைப்பூ மாலை வீரபத்திரருக்கு மிகவும் பிரியமானதாகும். எவரையும் அஞ்சாது, அதிரடிப்போர் புரிவதன் அடையாளம் அது. கரை இல்லாத வெள்ளை ஆடையே வீரபத்திரருக்கு அணிவிக்க வேண்டும். ஐப்பசி மாதம் வளர்பிறை அஷ்டமி நாள், மகா அஷ்டமி எனப்படுகிறது. தட்சனின் யாகத்தை அழித்த வீரபத்திரரைக் குறித்து நோற்கப்படும் விரதம் அது. புண்ணிய நதிகளின் காவலராக வீரபத்திரர் உள்ளார். கும்பகோணம் மகாமகக் குளத்தருகே அவரது சன்னதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமர்ந்த கோலத்தில், யோக நிஷ்டையில், சப்தமாதர்கள் திருமேனிகளுக்கு அருகில், வீரபத்திரரை தரிசிக்கலாம். வீரபத்திரருக்குரிய அலங்காரங்களில் வெற்றிலை மாலை அணிவிப்பது குறிப்பிடத்தக்கது. பல்லாயிரக்கணக்கில் வெற்றிலையை அடுக்கடுக்காகத் தைத்து, மாலையாக அணிவிப்பது, ஆடிப்பூர நாட்களில் நடைபெறும். அனுமந்தபுரந்தில் அப்படி அணிவிப்பது 12,800 வெற்றிலைகள் கொண்ட மாலை ஆகும்.

அகோர வீரபத்திரரும் அக்னி வீரபத்திரரும்: 
கர்நாடகத்தை விஜயநகரப் பேரரசர்கள் ஆண்டபோது, அவர்களது ஆட்சிக்குட்பட்டிருந்த தமிழகத்தின் பல பகுதிகளில் நாயக்கர் ஆட்சி மேலோங்கியது. அந்தக் காலத்தில் உருவான பல திருக்கோயில்களின் மண்டபங்களில், பெரிய சிற்பங்களாகவும் தூண்களில் புடைப்புச் சிற்பமாகவும் வீரபத்திரர் திருவுருவங்களைக் காணலாம். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில், கம்பத்தடி மண்டபத்தினருகில், மேற்கு நோக்கியபடி உள்ள அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர் சிலை வடிவங்கள், வீரபத்திரர் சிலைகளிலே மிகப் பெரியவை ஆகும். எட்டு, பத்துக் கரங்களுடன், கனல் கக்கும் கண்களுடன் அக்னி சுவாலையாக சுட்டெரிக்கும் ஆக்ரோஷத்துடன் காட்சி தரும் வீரபத்திரர் திருமேனிகள், காண்போரை மெய்சிலிர்க்க வைப்பதாகும். இவைபோன்ற சிற்பங்கள் பேரூர், தாடிக்கொம்பு, ஆவுடையார்கோயில், ஸ்ரீவில்லிப்புத்தூர், ஸ்ரீவைகுண்டம், தென்காசி, தாரமங்கலம், அவிநாசி போன்ற தலங்களிலும் இடம் பெற்றுள்ளன. பேரூரிலுள்ள அக்னி வீரபத்திரர் ஜடாமகுடத்தில் தேள் உருவம் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

நடன வீரபத்திரர்: 
தட்சனின் யாகத்தைத் துவம்சம் செய்து தேவர்களையெல்லம் புறமுதுகிட்டு ஓடச் செய்த மகிழ்ச்சியில், ஆனந்த நடனமிடும் கோலத்திலும் வீரபத்திரரை நாம் பல ஆலயங்களில் காணலாம். கிருஷ்ணாபுரம், மதுரை ஆயிரங்கால் மண்டபம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய இடங்களில் நடன வீரபத்திரர் சிலை கலை நயம் மிக்கதாகக் காணப்படுகின்றன. இடது கரத்தில் வீரபத்திரரின் உருவம் பதித்த கேடயத்துடன், வலது காலைத் தூக்கி உயர்த்திய கோலத்தில் நடன வீரபத்திரரைக் காணலாம். காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோயில் போன்ற பல ஆலயங்களின் மண்டபத்தூண்களில் புடைப்புச் சிற்பமாகவும், நான்கு கரங்கள் கொண்ட வீரபத்திரரைக் காணமுடிகிறது. மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலின் தெற்கு ராஜகோபுரத்தின் முதல் நிலையையொட்டி 18 கரங்களைக் கொண்ட வீரபத்திர சுதைச் சிற்பங்கள், வண்ணப்பூச்சுடன் கம்பீரமாகத் திகழ்கின்றன.

பிரளயகால வீரபத்திரர்: 
தட்சனின் யாகத்தை அழித்துத் துவம்சம் செய்ய 32 கரங்களுடன் வெகுண்டெழுந்த பிரளய கால ருத்திரரின் அற்புதத் திருமேனி ஒன்று, பெங்களூருக்கு அருகில் குட்டஹள்ளி என்ற சிற்றூரில் காணலாம். தை மாதம் ரதசப்தமி நாளன்று, அக்னி குண்டம் வளர்த்து, பக்தர்கள் பூக்குழி இறங்குதல் தனிச்சிறப்பு ஆகும்.

திருப்பறியலூர்: 
தட்சனின் யாகத்திற்கு வந்தவர் அனைவரின் தீமைகளையும் பறித்துக்கொண்டதால் பறியலூர் என்றழைக்கப்படலாயிற்று. மாமனின் தலையைப் பறித்ததாய் மாமன் பறியல் என்றும், தட்சன் வேள்வி செய்த தலமாதலால் தட்சபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. அட்டவீரட்டத் தலங்களில், எம்பெருமான், தானே வராமல், தனது சடையிலிருந்து தோன்றிய வீரபத்திரரை அனுப்பி, தட்சனுக்குப் பாடம் புகட்டிய தலம் இது. மயிலாடுதுறை - பொறையார் சாலையில் செம்பொனார்கோவில் என்ற திருத்தலத்திற்குத் தெற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது. காவிரி தென்கரையில் உள்ள திருத்தலம். தீமைகளை அகற்றும் பரிகாரத்தலம் ஆனதால், மேற்குத் திசை நோக்கியபடி வீரட்டேசுவரர் திருக்கோயில் இங்கு அமைந்துள்ளது. உத்தரவேதி தீர்த்தம், தேவதீர்த்தம், திக்பாலகர் தீர்த்தம், கமல தீர்த்தம் என நான்கு புண்ணிய தீர்த்தங்கள் இங்கே உள்ளன.

அவற்றுள் உத்தரவேதி தீர்த்தம் மிக உத்தமமானது. ஆயுள் நீடித்து, பிணிகள் பறந்திட, நிலைத்த முக்தியை அருளும் தீர்த்தம் இது. இரண்டு பிராகாரங்களைக் கொண்ட சிறிய கோயில். கருவறையில், சுயம்புலிங்கத் திருமேனியாக வீரட்டேசுவரர் எழுந்தருளியுள்ளார். தட்சன் வேள்வியைச் சாடியதால் தட்சபுரீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். தெற்கு நோக்கிய சன்னதியில் நான்கு கரங்களோடு இளங் கொம்பனையாள் என்ற திருநாமத்துடன் அன்னை எழுந்தருளியுள்ளாள். அம்மன் சன்னதியையடுத்து தனிச் சன்னதியாக அமைந்தது வீரபத்திர சன்னதி.

எட்டுக் கரங்களோடு, மழு, சூலம், கதை, கத்தி, கேடயம், கபாலம், மணி ஆகியவற்றைத் தாங்கியபடி, அக்னிசுவாலைகள் கிரீடமாக அழகுசெய்ய அகோர வீரபத்திரர், கனிந்த அருட்பார்வையோடு காட்சி தருகிறார். காலடியில் தட்சன் வீழ்ந்து கிடக்கிறான். பீடத்தின் முகப்புத் தகட்டில், பிரம்மா ஆசாரியனாக அமர்ந்து வேள்வி செய்யும் கோலத்தையும் தட்சனையும் காணலாம். ஆண்டுக்கு ஆறு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. ஆலயத்திற்குத் தெற்கே உள்ள உத்தரவேதி தீர்த்தமே, தட்சன் செய்த வேள்விக் குண்டம் என்றும் கூறுவர்.

பெரும்பேர் கண்டிகை: 
சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூருக்குத் தெற்கே 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் இது. ஊருக்குள்ளே மையமாக, கிழக்கு நோக்கி அமைந்துள்ளது வீரபத்திரர் திருக்கோயில். வடமேற்கு முனையில் பத்திரகாளி சன்னதியும் உள்ளது.

திருமயிலை: 
சென்னை மாநகரில் அநேக இடங்களில் வீரபத்திரருக்கெனத் தனி ஆலயங்கள் அமைந்துள்ளன. திருமயிலை மாதவப்பெருமாள் கோயில் அருகிலும், வில்லிவாக்கம், வேளச்சேரி ஆகிய இடங்களிலும் உள்ள ஆலயங்கள் குறிப்பிடத்தக்கவை. ராயபுரம் அங்காளம்மன் திருக்கோயிலில் எட்டுக் கரங்களும் கொண்ட ஆறடி உயர வீரபத்திரர் சிலை உள்ளது. வெண்ணெய்க் காப்பும் வெற்றிலைப் படலும், இங்கே சிறப்பு வழிபாடுகள் ஆகும்.

சு. ஆடுதுறை: 
பெரம்பலூர் மாவட்டம், திட்டக்குடியையொட்டி, வெள்ளாற்றின் தென்கரையில் உள்ள தலம். இங்குள்ள குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயிலில், சுதை வடிவிலான, 18 கரங்கள் கொண்ட அழகிய வீரபத்திரர் திருமேனி உள்ளது.

வீரபத்திரர் ஆலயங்கள்: 
வீரபத்திரருக்கு, வடக்குத் திசை நோக்கியபடி தனிக்கோயில் அமைவதோடு, சிவாலயங்களில் உள்சுற்றில் தென்திசையில், சப்தமாதர்களுக்கு அருகில் வீரபத்திரரைக் காணலாம். அதுதவிர தென்தமிழ்நாட்டில் திருக்கோயில்களில் எழுப்பப்பட்டுள்ள மகா மண்டபங்களில் அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர் மற்றும் நாட்டியமாடும் நிலையில் வீரபத்திரர் சிலைகளைக் காணலாம். வீரபத்திரரை மூலவராகக் கொண்ட தனி ஆலயங்கள் பல தமிழ்நாட்டில் உள்ளன.
அனுமந்தபுரம்:
அரன்மைந்தன்புரம் என்ற அழகுப் பெயரை, தற்போது அனுமந்தபுரம் என்று ஆக்கிய தலம், சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில், சிங்கப்பெருமாள்கோவிலுக்குச் தென்கிழக்கே 7கி.மீ. தொலைவில் உள்ளது. எட்டடி உயரம் கொண்ட கம்பீரமான திருவுருவமாக வீரபத்திரர் விளங்குகிறார். தலைமுடியில் சிவலிங்கம் உள்ளது. வலது கால் அருகே ஆட்டுத் தலையுடன் தட்சன் கரங் கூப்பியபடி நிற்பதைக் காணலாம். மேற்கரங்களில் வில்லும் அம்பும் ஏந்தியபடி, கீழ்க்கரங்களில் கத்தியும் கேடயமும் தாங்கிய கோலம். வெண்ணெய் சாற்றுவதும், வீரபத்திரருக்கு வெற்றிலைப் படல் அமைத்து வெற்றிலை மாலை அணிவிப்பதும் தனிச்சிறப்பாகும்.

வீராவாடி - 
திருவாரூருக்கு வடக்கே மயிலாடுதுறை செல்லும் சாலையில், 20 கி.மீ. தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்னும் ஊருக்குக் கிழக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது. (கூத்தனூர் சரஸ்வதி கோயில், அம்பர் மாகாளம் ஆகிய தலங்கள் அருகில் உள்ளன) 3 நிலை ராஜகோபுரத்துடன் கூடிய சிறிய கோயில். அம்பன், அம்பாசுரனைக் கொன்ற காளிக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துவிட, அதனை விரட்டிடவே சிவபெருமான் வீரபத்திரரை அனுப்பியதாகத் தல வரலாறு கூறுகிறது. மூலவராக நான்கு கரங்களோடு நின்ற கோலத்தில் வீரபத்திரர் காட்சி தருகிறார். வீரபத்திரர் அடிபதித்த தலம் என்பதால் வீராவடி என்று அழைக்கப்படுகிறது.

சப்தமாதர் அருகில் வீரபத்திரர்: 
இவை தவிர, கோவையையடுத்த பேரூர், நாகப்பட்டினம், சேலம், வில்லிவாக்கம், வேளச்சேரி, திருவானைக்கா, தாராசுரம், சுவாமிமலை, பவானிசாகர் ஆகிய ஊர்களிலும் வீரபத்திரருக்குத் தனி ஆலயங்கள் உள்ளன. சாமுண்டி, பிராமி, மாகேசுவரி, வைஷ்ணவி, கவுமாரி, இந்திராணி மற்றும் வாராகி ஆகிய சப்தமாதர் திருமேனிகள், திருக்கோயில்களின் தெற்கு உள்சுற்றில் இடம் பெறுபவை ஆகும். இப்படி அமைந்த கோயில்கள், பெரும்பாலும் பல்லவர் காலத்தவை ஆகும். அந்த ஏழு மாதர்களுக்கு அருகில் அவர்களின் காவலராக, அமர்ந்த கோலத்தில் வீரபத்திரரைக் காணலாம்.

தக்கயாகப் பரணி: 
ஒட்டக்கூத்தர், சோழப் பேரரசின் ஒளிமயமான ஆட்சிக் காலத்தில் மூன்று பேரரசர்களுக்கு ஆசானாகவும் அரசவைக் கவிஞனாகவும் திகழ்ந்தவர். ஒரு சமயம், தாராசுரம் வீதிகளில் கூத்தர் நடந்து சென்றுகொண்டிருந்தார். எதிரே, குடந்தை மடத்தின் பெரிய துறவியொருவர் தேவாரத்தைப் பாடிக்கொண்டு வருவதைக் கண்டார். அவரைப் பார்த்து கூத்தர், அடிகளே, இந்த தேவாரத்திற்கு உமக்குப் பொருள் தெரியுமா? என்று கேட்டார். கூத்தரின் கேள்வியில் எழுந்த தோரணை துறவியை சினமடையச் செய்தது. எரிச்சல் கொண்ட துறவி, கூத்தரே, இதன் பொருளை, உம்மால் ஆயிரம் வார்த்தைகளாலும் வர்ணிக்க முடியாது என்று பதிலளித்தார். கோபம் கொண்டார் கூத்தபிரான். தனது சவுக்கால் பலமாக துறவியை அடிக்க, அடி தாங்காது துறவி மரணமுற்றார். மடத்துத் துறவிகள் பொங்கியெழுந்து, அரசரிடம் முறையிட்டனர். கொலைக்குரிய குற்றம் செய்துள்ள அரசவைப் புலவரை எம்மிடம் ஒப்படைப்பீர் என்று வேண்டினார்.

நகரெங்கும் ஒட்டக்கூத்தரைத் தேடிப் புறப்பட்டனர். ஆனால் கூத்தரோ தாராசுரம் வீரபத்திரர் கோயிலினுள்ளே சென்று ஒளிந்துகொண்டார். ஆலயத்திலிருந்து காளி சன்னதி முன்னே உருகித் துகித்து, தன்னை இக்கட்டிலிருந்து காத்திடக் கோரி அழுதார். துறவிகளோ ஆலயத்தைச் சூழ்ந்து நின்றவண்ணம் இருந்தனர். காளிதேவி ஒட்டக்கூத்தரிடம், வீரசைவர்களின் வழிபாட்டு தெய்வமான வீரபத்திரர் மீது பரணி பாடுவாயாக. அதுவே உன்னை விடுவிக்கும்! என்று திருவாய் மலர்ந்தருளினாள். அது மட்டுமல்ல, எழுத்தாணியும் ஏடும் தந்ததோடு அவர் பாடலை எழுதுவதற்கு உதவிட , கைவிளக்கையும் ஏந்தி நின்றாள். ஒரு நிலையில் விளக்கில் எண்ணெய் குறைந்தபோது, அதற்கு எண்ணெய் விட காளிதேவி குனிந்தாள். அப்போது அவளது கரத்திலிருந்து விளக்கு சற்று அசைந்ததாம். முனைப்புடன் நூலை எழுதும்போது இடர் உண்டானதால், யார் விளக்கை ஏந்தி நிற்கிறார்கள் என்பதை அறிந்திராத கூத்தர், காளியின் கன்னத்திலேயே அறைந்தாராம்.

ஆனால் காளியோ புலவரின் அச்செயலையும் பூசையாக ஏற்றுக்கொண்டாள். நூலை எழுதி முடித்த கூத்தர் இருகரங் கூப்பி காளியைத் தொழுதபோது, அன்னையின் கன்னத்தில் தனது கை பதிந்திருக்கக்கண்டு வருந்தித் தன்னை மன்னித்தருளும்படி கோரினார். காளிதேவி மகிழ்வுற்று, உனது நூலை வாசலில் நிற்கும் துறவிகளிடம் கொடு! என்று ஆணையிட்டாள். துறவிகளும் அவரது நூலைப் படித்து, வீரபத்திரரின் சாகசங்கள் பற்றி அரிய நூலை எழுதிய கூத்தரை மன்னித்ததோடு, பல்வேறு சிறப்புகளையும் செய்தனர். தக்கயாகப் பரணியை ஒட்டக்கூத்தர் இயற்றிய இடம் தாராசுரம், ஐராவதேசுவரர் ஆலயத்தின் வடமேற்கு மூலையில் உள்ளது என்பர். அதனை அரங்கேற்றிய இடம், கும்பகோணம் மகாமகக் குளத்தருகில் உள்ள பெரிய மடத்தின் முன்னே உள்ள திடல் ஆகும். இங்கு அமைந்துள்ள வீரபத்திரர் ஆலயத்தில் ஒட்டக்கூத்தரின் சிலையும் அமைந்துள்ளது. ஆணவம் அழிந்து ஞானம் பிறந்த கதையே வீரபத்திரரின் அருட்கோலம். திக்கெட்டும் வெற்றிகள் குவித்திட வீரபத்திரரைப் பணிவோம்.

விரதம் இருப்பது எப்படி ?

   ஆன்மீகம் என்றும் உள்ளும் புறமும் தூய்மைப்படுத்தும் கருவியாகவே இருக்கிறது. நாம் பயன்படுத்தும் சம்பிரதாயங்கள் சடங்குகளுக்கு பின்புலத்தில் இருக்கும் காரணம் தெரியாமல் பயன்படுத்துவதால் நாளடைவில் அதன் மேல் ஒரு சலிப்பு ஏற்படுகிறது. பக்தியுடனோ அல்லது ஈடுபாட்டுடனோ செய்யாத ஆன்மீக காரியங்கள் பலன்கொடுக்காது. ஒருவர் தான் செய்யும் ஆன்மீக காரியங்களின் தாத்பரியம் தெரிந்தால் தான் அதில் முழுமனதுடன் செய்யமுடியும். மேலும் அடுத்த சந்ததியினருக்கு எடுத்துசொல்ல முடியும். நமது கலாச்சாரத்தில் சைவம், வைணவம் மற்றும் சாக்தம் என ஏனைய சித்தாத்தங்கள் இருந்தாலும், அனைத்து முறையிலும் சில சம்பிரதாயங்கள் ஒன்றாவே  இருக்கிறது. அத்தகைய சம்பிரதாயங்களில் முக்கியமானது விரதம் இருத்தல் என்பதாகும். விரதம் இருப்பது என்றவுடன் உண்ணாமல் இருப்பது என்று மட்டுமே நினைத்துவிடுகிறோம். ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் தனது அவயங்களை செயல்படாமல் வைப்பது விரதம் இருத்தல் என விளக்கலாம். பஞ்சபூதங்களின் வடிவமான நமது ஐந்துவிதமான உணர்வு உறுப்புக்களை செயல்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் அபரீதமான சக்தி நமக்குள் சுரக்கும். ப்ராணா என அழைக்கப்படும் இந்த சக்தியை கொண்டு நமது ஆன்மீக வாழ்க்கையில் எளிதில் மேம்படலாம். உணர்வு உறுப்புக்கள்  ஒவ்வொன்றும் பஞ்சபூதத்தின் அடிப்படையாக இருப்பதாக  விளக்கினேன் அல்லவா? பஞ்சபூதம் குறிக்கும் உறுப்புகள் என்ன என காண்போம்.
 
கண் - நெருப்பு
வாய் - நீர்
காது - ஆகாயம்
மூக்கு - மண்
தொடு உணர்வு - காற்று


   நமது உணர்வு உறுப்புக்களின் செயலை ஒரு நோக்கத்துடன் தற்காலிகமாக நிறுத்தும் பொழுது அது விரதம் என கூறலாம். நம் உடல் சக்தி அதிகமாக உணர்வு உறுப்புக்கள் மூலம் வீணக்கப்படுகிறது. நாம் அந்த உணர்வு உறுப்புக்களை செயல்பட்டாமல் இருக்கச் செய்தால் அதில் வீணாகும் சக்தி நம்முள்ளே சேமிக்கப்பட்டு ஆன்மீக ஆற்றலா மாற்றம் அடையும். காது மற்றும் மூக்கு பகுதிகளின் செயல்பாட்டில் ஆகாயமும்  மண்ணும் இருக்கிறது. ஆகாயம் மற்றும் மண்ணின் தொடர்பில்லாமல் நம்மால் ஒரு கணமும் வாழமுடியாது. அதை போலவே இந்த இரு அவயங்களின் செயல்களை நாம்மால்  செயற்கையாக நிறுத்த முடியாது. உறுப்புக்களின் செயலை  தற்காலிகமாக நிறுத்தினால் நமக்கு சக்தி கிடைக்குமா எப்படி? என பலர் நினைக்கிறார்கள். மஹாபாரதத்தில் கெளரவர்களின் தாய் காந்தாரி. திருத்ராஷ்டிரனை திருமணம் செய்தபின் தன் கணவன் காணாத இவ்வுலகை நானும் காணமாட்டேன் என தனது கண்களை கட்டிக்கொண்ட பதிவிரதை. அவள் எடுத்த வைராகியமான முடிவு அவளின் சக்தியை நாளாக நாளாக கூட்டி அவளுக்குள் மாபெரும் சக்தியாக அமைந்துவிட்டது. பாரத போர் சமயத்தில் தனது கண்கள் மூலம் சேமித்த ஆற்றல் அனைத்தும் தனது மகனுக்கு வழங்கி  அவனை மாபெரும் சக்தி உள்ளவனாக மாற்ற எண்ணுகிறாள் துரியோதனனின் அன்புத்தாய் காந்தாரி. துரியோதனனை  குளித்துவிட்டு நிர்வாணமாக தன்முன் வர சொல்லுகிறார். துரியோதனன் குளிக்க செல்லுகையில் ஸ்ரீ கிருஷ்ணர் எதிர்ப்பட்டு, ”என்னப்பா இந்த சமயத்தில் குளிக்கபோகிறாயா?” என கேட்கிறார். தனது தாயின் நோக்கத்தை கூறுகிறான் துரியோதனன். ஸ்ரீ  ருஷ்ணர் புன்னகைத்துவிட்டு நீ வளர்ந்த மனிதன் தாயின் முன் நிர்வாணமாக நிற்கலாமா என கேட்கிறார். குளித்தபின் வாழை இலையை இடுப்பில் தொடை வரை அணிந்து காந்தாரியின் முன் செல்லுகிறான் துரியோதனன். கண்களை திறந்து தனது சக்தியை வழங்கிய காந்தரிக்கு தன்மகன் இடுப்பு பகுதியில் ஆடையுடன் இருப்பதை கண்டு கலங்கினாள். ஸ்ரீ கிருஷ்ணரின் மாய விளையாட்டை புரிந்துகொண்டாள். பாரத போரின் இறுதியில் பீமனுக்கும், துரியோதனனுக்கும் கடும் மோதல் ஏற்படும் பொழுது எந்த உறுப்பில் தாக்கினாலும் இறக்காமல் இருந்த துரியோதனன் கடைசியில் தொடைப்பகுதியில் தாக்கியதும் இறந்தான். காரணம் காந்தாரி வழங்கிய சக்தி தொடை பகுதியில் இல்லை. பீமன் உடல் வலிமையில் சிறந்தவன் அவனால் காந்தாரியின் கண் மூலம் பெற்ற ஆற்றலை ஒன்றும் செய்ய முடிய வில்லை என்பதே விரத பலனை நமக்கு உணர்த்தும். விரதம் இருக்கும் பொழுது மட்டுமே நம் உடலில் இருக்கும் சக்தியையும் நாம் தினமும் வீணாக்கும்  சக்தியின் அளவையும் புரிந்துகொள்ள முடியும். விரதம் இருத்தலில் உணர்வு உறுப்புக்களில் முக்கியத்துவம் பெருவது வாய் எனும் உறுப்பு. பிற உணர்வு உறுப்புக்கள் ஒரு செயலை மட்டுமே செய்யும். ஆனால் வாய் மட்டும் இரு செயலை செய்யும். சுவைத்தல் மட்டும் பேசுதல் என இரு செயல்களை தவிர்ப்பதை அனேக விரதங்களின் அடிப்படையாக இருக்கிறது. சதுர்த்தி, சஷ்டி, ஏகாதசி, பிரதோஷம் ஆகிய திதிகளும், திங்கள்  (சோமவாரம்), வியாழன் (குருவாரம்)கிழமைகளில் விரதமும் நமக்கு நன்மையை ஏற்படுத்தும்.அன்றைய கோள்களின் நிலை நமது உடலின்  சக்தியை மேலும் வலுசேர்க்கும். சாப்பிடாமல் விரதம்  இருக்கும் முறையை உண்ணாவிரதம் என்றழைத்தோம், தற்சமயம் உண்ணாவிரதம் இருத்தல் என்பது ஏதோ அரசியல் செயலாக மாறிவிட்டது. ஒரு குறிப்பிட்ட நோகத்திற்காக வைராக்கியத்துடன் உணவு சாப்பிடாமல் இருக்கும் தன்மையை இவ்விரதம் சுட்டிகாட்டுகிறது. மஹாத்மா காந்தி வெள்ளையருக்கு எதிர்ப்பு காட்ட நமது சம்பிரதாயத்தை ஒரு ஆயுதமாக்பயன்படுத்தினார்.  தற்சமயம் அது அரசியலாகிவிட்டது. நாமும் ஒரு வாழ்க்கையில் மேன்மை அடைய ஒரு லட்சியம் மற்றும் வைராக்கியத்துடன்  மாதம் இரு நாளிலோ அல்லது வாரம் ஒரு நாளோ விரதம் இருப்போம் ஆனால் அவை கைகூடும் என்பது சான்றோர்களின் வாழ்க்கை மூலம் அறியலாம். நமது உடலின் சக்தியை அதிகமாக செலவிடும் உணர்வு உறுப்பு கண். கண்களை காட்டிலும் அதிகமாக சக்தியை செலவு செய்யும் உறுப்பு ஜீரண உறுப்புகள். உண்ணாமல் இருந்தால் மயங்கி விழுந்துவிடுவோம் என்ற தவறான எண்ணம் பலருக்கு உண்டு. உண்மையின் சராசரி மனிதன் உண்ணாமல்  குறைந்தபட்சம் அறுபது முதல் தொன்னூறு நாள் வாழமுடியும். உங்கள் உடல்வாகுக்கு ஏற்ப மருத்துவரை கலந்துகொண்டு உண்ணாநோன்பு இருங்கள். உலக மதங்கள் எத்தனையோ  இருந்தாலும் அதில் ஓர் அடிப்படை ஒற்றுமை உண்டு. அதற்கு சிறந்த உதாரணம் விரதம் எனும் தன்மை. உலகின் அனேக மதங்களில் விரதம் ஒரு புனித சடங்காக கொண்டாடப்படுகிறது. விரதம் இருக்கும் பொழுது  ஏற்படும் முக்கியமான பயன் மனது தனது செயலை மிகவும் குறைவாக செய்து தன்னில் அடங்கிவிடும். மனமற்ற தூய நிலையில் ஆன்மீக  முன்னேற்றம் விரைவாக நடக்கும். பால், பழங்களை உண்டு விரதம் இருத்தல் ஒரு வகை. நீர் கூட குடிக்காமல் விரதம் இருப்பது மற்றொரு வகை. நமது உடலின் தன்மை வாழ்க்கை சூழல் பொருத்து விரதம் இருக்க வேண்டும். சந்திராம்ச விரதம் என ஒரு வகை விரதம் உண்டு. சந்திரனின்  பிறைக்கு ஏற்க சாப்பிடும் விரதம் சந்திராம்சவிரதம். பெளர்ணமி அன்று முழுமைகாக சாப்பிட ஆரம்பித்து படிப்படியாக குறைப்பார்கள். அமாவாசை அன்று ஒன்றும் சாப்பிடாமல் இருப்பார்கள். அமாவாசைக்கு அடுத்தநாள் ஒரு கவளம் என படிப்படியாக உணவை கூட்டுவார்கள். சந்திராம்சவிரதத்தை பொருத்தவாரை மாதம் முழுவதும் விரத தினங்கள்தான். 

யார் எல்லாம் உண்ணா விரதம் இருக்க கூடாது? 

• சஷ்டியப்த பூர்த்தி முடித்த முதியவர்கள்
• வியாதியினால் மருந்து உண்பவர்கள்
• கர்ப்பிணிகள்
• பிரம்மச்சாரிகள்
• சன்யாசிகள்

   இவர்களை தவிர பிறர் உண்ணா நோன்பு இருக்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம். மேலும் சன்யாசிகளுக்கு என்று தனி விரதங்களும் பிரம்மச்சாரிகளுக்கு தனி விரதமும் சாஸ்திரத்தில் உண்டு. மெளனவிரதம் இருப்பது வாய் எனும் உறுப்பின் மற்றொரு விரதமாகும்.மெளவிரதத்தால் நமது உடல் மற்றும் மனது தூய்மை ஆகிறது. மெளனவிரதம் அனைவரும் இருக்க தகுந்த ஒரு விரதம். இதில் யாருக்கும் தடையில்லை. உலகின் சிறந்த மொழி மெளனம். தக்ஷ்ணாமூர்த்தி உலகுக்கு அளித்த வேதம். மெளனமாக இருப்பதால் நம்மில் இருக்கும் சக்தியை மிகவும் துல்லியமாக அறியலாம். மெளனவிரதம் இருந்துவந்தால் உங்கள் உள்ளுணர்வு மிகவும் கூர்மையானதாக மாறி உங்களை விழிப்புணர்வாளர்களாக மாற்றும். மெளனவிரதம் இருக்கும் பொழுது சிலர் காகிதத்தில் எழுதி காட்டுவார்கள். மனதை ஒருநிலைப்படுத்தும் நோக்கில் இருக்கும் விரதத்திற்கு இது  எதிரான செயல். மெளனவிரதம் இருக்கும் காலத்தில் உங்களை ஒரு ஜடப்பொருளாக பாவித்துக்கொள்ளுங்கள். உங்கள் உடல் செயல்படலாம் ஆனால் சைகை மூலமோ, எழுத்து மூலமோ பேசாதீர்கள். அப்பொழுது தான் மெளனவிரதத்தின் பயனை முழுமையாக உணரமுடியும். விரதங்களில் வாய்மூலம் அனுஷ்டிக்கும் விரதத்தை பற்றி பார்த்தோம். ப்ராணாயமத்தில் கும்பகம் எனும் செயல் தற்காலிகமான சுவாச விரதம் எனலாம். மேலும் பிரம்மச்சரிய விரதம் தொடு உணர்வுக்கு விரதமாகும். ஒரு ஆன்மீகவாதிக்கு வைராக்கியம், அப்யாசம், பக்தி ஆகியவை மிகவும் முக்கியம். தனது  எடுத்துக்கொண்ட செயலை எப்பாடுபட்டாவது முடிக்கும் செயல் வைராக்கியம். தனது ஆன்மீக செயல்களை தடையில்லாமல் தினமும் எந்த காரணம் கொண்டும் விடாமல் செய்வது அப்யாசம். ஈஸ்வரனிடத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் இருப்பது பக்தி. ஆன்மீகவாதியின் லட்சணங்களான இவை விரதம் இருக்கும் பொழுது நம்மில் செயல்படத்தொடங்கும். இறைவனை நினைத்து உண்ணாமல் இருக்கும் பொழுது நம்மில் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுவதன் காரணமும் இதுதான். நமது சாஸ்திரம் பஞ்ச அவயங்களுக்கும்தனித்தனியே விரதங்களை வழங்கி உள்ளது. நமது உணர்வு உறுப்புக்களை சரியான முறையில் பயன்படுத்தினால் அதன் சக்தியையும் படைப்பாற்றலையும் மேம்படுத்தமுடியும். இரைச்சலான ஒரு சந்தையில் ஒருவரை அழைத்தால் அவருக்கு நாம் அழைப்பது கேட்காது, அதே நேரம் அமைதியான ஒரு தோட்டத்தில் இருக்கும் ஒருவரை அழைத்தால் அவருக்கு நமது அழைப்புரியும். அது போல உங்கள் உணர்வு உறுப்புக்கள் சந்தைக்கடை போல பல செயல்களில் ஈடுபடும் பொழுது பரமாத்மாவை  அழைத்தால் அவரிடம் நீங்கள் நெருங்க முடியாது. விரதம் மூலம் உங்கள் உடலை மேன்மையாக்குங்கள். உங்கள் உடல் எனும் நந்தவனத்தில் பரமாத்மா நிரந்தரமாக வசம் செய்வார்.

131 சித்தர்கள் போற்றித் தொகுப்பு


 ஞானியர்களின் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மிகம் என்று உலகறியச் செய்யும் வள்ளல், பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் தொகுத்து வழங்கிய சித்தர்கள் போற்றித்தொகுப்பு

அகத்தியர் துணை
ஓம் சுப்ரமணியர் திருவடிகள் போற்றி
ஓம் சுப்ரமணியர் திருவடிகள் போற்றி
ஓம் சுப்ரமணியர் திருவடிகள் போற்றி

துவக்கப்பாடல்
திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே
திருமந்திரம் - 1598.

ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
ஓம் அகப்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் அசுவினித்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் அத்திரிமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் அநுமான் திருவடிகள் போற்றி
ஓம் அம்பிகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் அருள்நந்தி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் அல்லமாபிரபு திருவடிகள் போற்றி
ஓம் அழுகண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி 10

ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி
ஓம் இராமலிங்க சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி
ஓம் இராமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் உமாபதி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் ஒளவையார் திருவடிகள் போற்றி
ஓம் கஞ்சமலைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடைப்பிள்ளைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடுவெளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கண்ணானந்தர் திருவடிகள் போற்றி 20

ஓம் கண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கனநாதர் திருவடிகள் போற்றி
ஓம் கணபதிதாசர் திருவடிகள் போற்றி
ஓம் கதம்பமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் கபிலர் திருவடிகள் போற்றி
ஓம் கமலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கருவூர்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் கல்லுளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கலைக்கோட்டு முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கவுபாலச்சித்தர் திருவடிகள் போற்றி 30

ஓம் கனராமர் திருவடிகள் போற்றி
ஓம் காகபுஜண்டர் திருவடிகள் போற்றி
ஓம் காசிபர் திருவடிகள் போற்றி
ஓம் காலாங்கிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் குகை நமச்சிவாயர் திருவடிகள் போற்றி
ஓம் குதம்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் குமரகுருபரர் திருவடிகள் போற்றி
ஓம் குருதட்சணாமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி
ஓம் குறும்பைச்சித்தர் திருவடிகள் போற்றி 40

ஓம் கூர்மானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் கொங்கணேஸ்வரர் திருவடிகள் போற்றி
ஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி
ஓம் கௌசிகர் திருவடிகள் போற்றி
ஓம் கௌதமர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கமுனிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கர மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் சங்கிலிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சச்சிதானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சட்டநாதர் திருவடிகள் போற்றி 50

ஓம் சண்டிகேசர் திருவடிகள் போற்றி
ஓம் சத்யானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சிவயோகமாமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சிவவாக்கியர் திருவடிகள் போற்றி
ஓம் சிவானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுகபிரம்மர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் சூதமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சூரியானந்தர் திருவடிகள் போற்றி 60

ஓம் சூலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சேதுமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சொரூபானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ஜம்புமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் ஜமதக்னி திருவடிகள் போற்றி
ஓம் ஜனகர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனந்தனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனாதனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனக்குமாரர் திருவடிகள் போற்றி
ஓம் ஜெகநாதர் திருவடிகள் போற்றி 70

ஓம் ஜெயமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் ஞானச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் டமாரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி
ஓம் தாயுமான சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருகோணச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி
ஓம் திருமாளிகைதேவர் திருவடிகள் போற்றி 80

ஓம் திருமூலதேவர் திருவடிகள் போற்றி
ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி
ஓம் தூர்வாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் தேரையர் திருவடிகள் போற்றி
ஓம் நந்தனார் திருவடிகள் போற்றி
ஓம் நந்தீஸ்வரர் திருவடிகள் போற்றி
ஓம் நாதாந்தசித்தர் திருவடிகள் போற்றி
ஓம் நாரதர் திருவடிகள் போற்றி
ஓம் நொண்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி 90

ஓம் பத்ரகிரியார் திருவடிகள் போற்றி
ஓம் பதஞ்சலியார் திருவடிகள் போற்றி
ஓம் பரத்துவாசர் திருவடிகள் போற்றி
ஓம் பரமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் பராசரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பாம்பாட்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பிங்களமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் பிடிநாகீசர் திருவடிகள் போற்றி
ஓம் பிருகுமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பிரும்மமுனிவர் திருவடிகள் போற்றி 100

ஓம் பீர்முகமது திருவடிகள் போற்றி
ஓம் புண்ணாக்கீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலத்தீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலிப்பாணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பூனைக்கண்ணார் திருவடிகள் போற்றி
ஓம் போகமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் மச்சமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் மஸ்தான் திருவடிகள் போற்றி
ஓம் மயூரேசர் திருவடிகள் போற்றி
ஓம் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி 110

ஓம் மார்க்கண்டேயர் திருவடிகள் போற்றி
ஓம் மாலாங்கன் திருவடிகள் போற்றி
ஓம் மிருகண்டரிஷி திருவடிகள் போற்றி
ஓம் முத்தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் மெய்கண்டதேவர் திருவடிகள் போற்றி
ஓம் மௌனசித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யாகோபு திருவடிகள் போற்றி
ஓம் யூகிமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் யோகச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யோகானந்தர் திருவடிகள் போற்றி 120

ஓம் ரோமரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வசிஷ்டமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரதரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வராகிமிகி திருவடிகள் போற்றி
ஓம் வால்மீகி திருவடிகள் போற்றி
ஓம் விசுவாமித்திரர் திருவடிகள் போற்றி
ஓம் வியாக்ரமர் திருவடிகள் போற்றி
ஓம் வியாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் விளையாட்டுச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் வேதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி 131

ஓம் எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள் திருவடிகள் போற்றிபோற்றி

நிறைவுப்பாடல்
வாழ்கவே வாழ்கஎன்நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே

22 ஜூலை 2014

தாலி – ஒன்பது இழைத் தத்துவம்...




“தாலி மகிமை”
இந்துக்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான நிறம் என்பதால் அந்தத் திருமணப்
ரிசும் மஞ்சள் நிறத்தில் தரப்பட்டது என்று விளக்குகிறார் பாலகிருஷ்ணசாஸ்திரிகள்.
தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில் தாலி இருந்ததாக, இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை. சங்க காலத்தின்போது நடந்த திருமணங்களில் புதுமணல் பரப்பி, விளக்கு ஏற்றி, வயதில் மூத்த பெண்கள், மணப்பெண்ணை நீராட்டி வாழ்த்தி அவள் விரும்பியவனுடன் அவளை ஒப்படைத்தனர். நாளடைவில் “”தாலம்” என்ற பெயர்தான் தாலியாக மாறியிருக்கிறது.  பதினோராம் நூற்றாண்டில்தான் திருமணச் சின்னம்என்ற ரீதியில் தாலி என்ற  பெயர் உபயோகப்படுத்தப்பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்வெளியிட்டிருக்கும் “”தமிழர் திருமணம்” என்கிற  புத்தகம்.மாங்கல்யச் சரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது. ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது.

தெய்வீகக் குணம், 
தூய்மைக் குணம், 
மேன்மை, 
தொண்டு, 
தன்னடக்கம், 
ஆற்றல், 
விவேகம், 
உண்மை, 
உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல். 
இத்தனைக் குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு அணியப்படுகிறது....

தாலி கட்டுவது ஏன்...?

 



தமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு உதாரணமாக அம்மி மித்திப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும் அருந்ததி பார்ப்பது பகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும்

ிருமண சடங்கில் அக்னி வளர்ப்பது திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம் உன்னை அறியாமல் நானும் என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால் இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும் என்பதாகும்

அதே போன்ற அர்த்தம் தான் கல்யாண வீட்டில் வாழை மரம் கட்டுவதில் இருக்கிறது வாழை மரம் வளர்ந்து குலைதள்ளி தனது ஆயுளை முடித்து கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக பலன் தருவதற்கு தனது வாரிசை விட்டு செல்லுமே அல்லாது தன்னோடு பலனை முடித்து கொள்ளாது எனவே திருமண தம்பதியரான நீங்கள் இருவரும் இந்த சமூதாயம் வளர வாழையடி வாழையாக வாரிசுகளை தந்து உதவ வேண்டும் என்பதே வாழைமரம் கட்டுவதின் ரகசியமாகும்.

உலக முழுவதும் உள்ள திருமண சடங்கு முறையில் திருமணம் ஆனதற்கான அடையாள சின்னங்களை அணிந்து கொள்வது முறையாகவே இருந்து வருகிறது அதாவது மனித திருமணங்கள் அனைத்துமே எதோ ஒருவகையில் நான் குடும்பஸ்தன் என்பதை காட்ட தனிமுத்திரை இடப்படுவதாகவே இருக்கிறது. அப்படி உலகம் தழுவிய வழக்கங்களில் ஒன்று தான் தாலிகட்டும் பழக்கமாகும் சங்ககாலத்தில் தாலி என்ற வார்த்தை இலக்கியங்களில் அதிகமாக பயன்பாட்டில் இல்லை என்பதற்காக பழங்கால தமிழன் தாலி கட்டாமல் வாழ்ந்தான் என்று சொல்வதற்கு இல்லை

தாலி என்ற வார்த்தை தான் இல்லையே தவிர இதே பொருளை கொண்ட மங்கலநாண் என்ற வார்த்தை இலக்கியங்கள் பலவற்றில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் அரசியல் கூட்டங்களில் சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமண சடங்கில் இளங்கோவடிகள் தாலிகட்டுவதை பற்றி பேசவே இல்லை அதனால் தமிழர் திருமணங்களில் தாலியே இல்லை என்று முழங்கி கொண்டு அலைந்தனர். ஆனால் அவர்களே மங்கள் வாழ்த்து படலத்தில் மங்கல அணி என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்றே அறியாமல் போய்விட்டனர்

“முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை
அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது”'''

என்று இளங்கோ அடிகள் மிக அழகாக சொல்கிறார். அதாவது திருமண நேரத்தில் முரசுகள் ஒலிக்கின்றன வெண்குடை உயர்கிறது வாழ்த்துக்கள் முழங்குகின்றன மங்கல அணி எழுத்து போல் பதிகிறது என்பது இதன் பொருளாகும்

ஆண் பெண்ணை அடிமையாக்குவதோ பெண் ஆணை அடிமையாக்குவதோ சமூதாய பிரச்சனையே தவிர அது சடங்கு பிரச்சனை அல்ல தமிழர் சடங்கில் எந்த இடத்திலாவது நீ தாலி அணிந்திருக்கிறாய் அதனால் எனக்கு நீ அடிமை என்ற வாசகம் கிடையவே கிடையாது.

உணமையாக தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன் இந்த மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சி நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதை காட்டட்டும் இரண்டாவது முடிச்சி குலபெருமையை நீ பாதுகாப்பாய் என்பதை காட்டட்டும் மூன்றாவது முடிச்சி குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.

தமிழர்களின் திருமண சடங்குகள் அனைத்துமே ஆணையும் பெண்ணையும் சமமாக பாவித்தே இருக்கிறதே தவிர ஏற்ற தாழ்வு கற்பிக்கும் படி எதுவும் கிடையாது . உண்மைகளை கண்டறிய வேண்டியது தான் உயர்ந்த மனிதர்களின் உன்னத நோக்கமாகும்.

நீங்கள் எப்போதும் உயர்ந்ததையே பாருங்கள் உயர்ந்ததாக சிந்தியுங்கள் உங்கள் வாழ்வும் உயர்ந்ததாக இருக்கும் அதை விட்டு விட்டு ஆகயாத்தில் பறக்கின்ற கழுகு தான் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அதை மறந்து கீழே பூமியில் கிடக்கும் அழுகிய மாமிசத்தை பார்ப்பது போல் தாழ்மையான கருத்துக்களை பார்க்காதீர்கள் தாழ்வான சிந்தனைகளை காது கொடுத்து கேட்காதிர்கள் உயர்ந்தவர்கள் எப்போதும் உயர்ந்ததையே காண்பார்கள்
— 


சிவலிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சியில் கிடைத்த முடிவு.....

 


{ஒரு ரெண்டு நிமிஷம் நேரத்தை ஒதுக்கி ரஷ்ய விஞ்ஞானி சொல்வதை படித்து பாருங்கள். ஒவ்வொரு இந்துவும் படித்து பகிர வேண்டிய அறிய விசயம்....!!!!!!!} சிவலிங்கங்களைப் பற்றிய டாக்டர் “விளாதி மீரின்” என்பவரின் ஆராய்ச்சி மிக வித்தியாசமானது. அது இந்த பூமியில் மொத்தம் எத்தனை லிங்கங்கள் உள்ளன என்று எண்ணிப் பார்க்கவோ, இல்லை அவற்றின் பூர்வ புராணக் கதைகளை அறியவோ முயலவில்லை. இவற்றுக்கப்பால் சிவலிங்கங்கள் பற்றி நாம் யோசிக்கவும் அதை நாம் நேசிக்கவும் நிறைய அடிப்படைகள் இருப்பதாக டாக்டர் விளாதிமீர் கருதினார்.அதில் முதலாவது, ஸ்தூல வடிவங்களில் இறை உருவங்களை உருவாக்கி வழிபாடு செய்யும் இந்து மதத்தில் ஒரு குழவிக் கல்லைப் போன்ற,
லிங்கம் என்னும் உருவமற்ற ஒரு உருவம் எப்படி உட்புகுந்தது என்பதுதான். உண்மையில் லிங்க சொரூபமானது மூன்று மதத்திற்கும், புத்த ஜைனர்களுக்கும் கூட பொதுவானது என்பதையும் அவர் கண்டுபிடித்தார்....
ஒரு மலை உச்சி! அதில் பௌர்ணமி இரவில் கரிய நிழல் உருவாய் கண்ணுக்குத் தெரிந்த லிங்க உருவத்தை ஒரு கிருத்தவன் சிலுவைச் சின்னமாகப் பார்த்தான். ஒரு இஸ்லாமியன் தங்களின் மசூதிக் கூரை தெரிவதாக கருதினார். புத்த ஜைன சன்யாசிகள் தங்கள் குருமகாங்கள் அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதாகக் கருதினார்கள். ஒரு இந்துவோ அது சிவலிங்கம் என்று திடமாக கருதி இருந்த இடத்தில் இருந்த வில்வ இலைகளை வாரி வாரி அர்ச்சித்தான். 
உருவம் ஒன்று. ஆனால் அனைத்து மார்க்க தரிசிகளையும் அது திருப்திப்படுத்தியது என்றால் சிவம்தான் முதலும் முடிவுமான அனைவருக்கும் பொதுவான இறை ஸ்வரூபமா? டாக்டர் விளாதிமீர் இப்படிதான் கேட்கிறார்.
மேலும் அவர் புராணங்களிலும், இதிகாசங்களிலும் சிவம் பற்றி சொன்னதை
அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.  லிங்க உருவம் பற்றி யாரும் சரியாக உணரவில்லை என்பதுதான் அவரது கருத்து. ஒரு ரஷ்ய நாட்டுப் பிரஜையாக இருந்தாலும் சிவலிங்க சொரூபம் அவருக்குள் ஆழமான பாதிப்புகளை உருவாக்கியதாக அவர் கூறுகிறார். லிங்கம், சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று கணித வடிவங்கள் அவ்வளவையும் தனக்குள் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும்போதும் ஒருள் பொருள் தருவதாகவும் இருக்கிறது என்பது அவர் கருத்து. குறிப்பாக அணு தத்துவம் சிவலிங்க சொரூபத்துக்குள் விலாவரியாக இருக்கிறது. லிங்கத்தைப் பயன்படுத்தத் தெரிந்தால், அது மழை தரும், நெருப்புத் தரும், காற்று தரும் கேட்ட எல்லாம் தரும், என்றும் நம்புகிறார். அப்படி என்றால் சிவமாகிய லிங்க ஸ்வரூபம் என்பது மானுடர்கள் பயன்படுத்தத் தெரியாமல் வைத்திருக்கும் மகத்தான ஒரு எந்திரமா? டாக்டர் விளாதிமீரின் சிவஸ்வரூப ஆராய்ச்சியில் ஒரு ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றும் அவருக்குக் கிட்டியதாம்.
இந்த மண்ணில் பூமிக்கு மேலாக கண்ணுக்குத் தெரியும் விதத்தில் உள்ள லிங்க ஸ்வரூபங்கள் இல்லாமல் பூமிக்குள் புதைந்து கிடக்கும் ஸ்வரூபங்களும் ஏராளமாம்! அதுவே அவ்வப்போது ஸ்வயம்பு மூர்த்தியாய் வெளிப்படுகிறதாம்.ஸ்வயம்பு மூர்த்தங்களின் பின்புலத்தில் பஞ்சபூத சக்திகளின் இயக்கம் ஒரு சீராகவும், ஆச்சரியம் ஊட்டும் விதத்தில் ஒன்றோடொன்று பின்னிப்பினைந்த கூட்டுறவோடும் செயல்படுகிறதாம். சுருக்கமாகச் சொன்னால், அந்த மூர்த்தங்களைப் பஞ்ச பூதங்கள் ஆராதிக்கின்றன என்பதே உண்மை என்கிறார். இப்படிப்பட்ட ஆராதனைக்குறிய இடங்களில் கூர்ந்து கவனித்தபோது பஞ்ச பூதங்களும் சம அளவிலும் அத்துடன் சீரான இயக்கத்துடனும் அவை இருக்கின்றன. மனித சரீரத்திலும் பஞ்ச பூதங்கள் உள்ளன. இவை சுயம்புலிங்க ஸ்தலங்களில் இயற்கையோடு கூடிச் செயல்படுகின்றன என்கிறார். 
அதாவது சுயம்பு மூர்த்தி உள்ள ஸ்தலங்களில் வாழும் மனிதர்களே அந்த மண்ணுக்கான மழை. காற்று, அக்கினி மண்வளம் ஆகியவைகளைத் தீர்மானிக்கிறார்கள் என்று கூறும் விளாதிமீர், மதுரை போன்ற சுயம்புலிங்க ஸ்தலங்களில் கூடுதலான மழை அல்லது குறைவான மழைக்கு அங்கு வாழும் மக்களின் மனநிலையே காரணமாகிறது என்கிறார். சுயம்பு லிங்கங்கள் உள்ள மண்ணில் வாழும் மக்கள் மனது வைத்தால் அங்கே எதை வேண்டுமானாலும் உருவாக்கிட இயலும் என்றும் கூறுகிறார்!. இந்த பூமியானது சூரியன் உதிர்ந்த ஒரு சிறிய அக்னித் துளி என்கிறது விஞ்ஞானம். மெல்லக் குளிர்ந்த இதில் அடுக்கடுக்காய் உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன. அந்த உயிரினங்கள் உயிர் வாழத் தேவையான அனைத்தும் கூட அப்போது தோன்றின. இதுதான் பல கோடி ஆண்டுகளைக் கண்டு விட்ட இந்த பூமியின் சுருக்கமான வரலாறு. மாற்றம் என்பதே இந்தப் பூமியில் மாறாத ஒன்றாக என்றும் இருப்பது. அந்த மாற்றங்களால் வந்ததே இந்த மனித சமூகம். இதன் நடுவே மிக மாறுபட்ட கருத்துகளுடன், நமக்கிருக்கும் அறிவாற்றலால் நம்பமுடியவில்லை என்று ஒரு வார்த்தையில் கூறும் விதமாய் இருப்பதே மதப் புராணங்கள். இதில் புராணவழி அறியப்பட்ட சிவமானது தனித்து நிற்கிறது. “புராணம், விஞ்ஞானம் இரண்டையும் கடந்து மூன்றாவதாய் ஒன்றும் உள்ளது.
அதுதான் நான்! மானுடமே முடிந்தால் என்னைப் புரிந்துகொள் என்பதுபோல் இருக்கிறது அது” என்கிறார் டாக்டர் விளாதிமீர்! இ ந்த பூவுலகில் சிவம் தொடர்பான அடையாளக் குறியீடுகள் பாரத மண்ணில் மட்டுமன்றி  ஆப்பிரிக்கா, ஐரோப்பா முதலிய கண்டங்களில் கூட இருக்கிறது என்பது  டாக்டர் விளாதிமீரின் கருத்து. அமெரிக்காவில் “ கிராண்ட் கன்யான் “ என்னும்  வித்தியாசமான மலைப் பகுதியில் பராசக்தியின் அம்சங்கள் என்று வர்ணிக்கப்படும் “ சிவம், விஷ்ணு, பிரம்மன் “ மூன்றின் அடையாள உருவங்கள் காணப்படுகின்றனவாம். ஆயினும் இந்திய மண்ணில் மட்டும் சிவம் தொடர்பான சிந்தனைகளும் சைவம் என்கிற ஒரு பிரிவும் உருவாக ஆழமான ஒரு காரணம் இருப்பதாக விளாதிமீர் கருதுகிறார். உலகின் உயர்ந்த சிகரமான இமயம் பூகோள ரீதியில் பூமியின் மையத்தில் {கிட்டதட்ட} காணப்படுகிறது. அதன்படி பார்த்தால் இந்த உலகே கூட சிவலிங்க சொரூபம் எனலாம். ஒரு வட்டத்தில் இருந்து கூம்பு முளைத்தது போல் உலகமே ஆவுடையராகத் திகழ இமயம் சிவஸ்தம்பமாக எழும்பி நிற்கிறது. அங்கே பஞ்ச பூத ஆராதனையாக குளிர்ந்த காற்றும் உறைந்த பனியே நீராகவும், அதன் முற்றிய குணமே நெருப்பாகவும் இருக்கிறது.
ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட வெளி வேறு எங்கும் காணப்படாத விதத்தில் தூயதாக எல்லாவித கதிர் வீச்சுக்களையும் காணப்படாததாகக் திகழ்கிறது. இங்கே உயிராகிய ஜீவன் மிகச் சுலபமாக சிவத்தை அடைந்து விட {அ} உணர்ந்து விட ஏதுவாகிறது. அதனாலேயே இங்கே ஞானியர் கூட்டம் அதிகம் இருக்கிறது என்பதும் அவரது கருத்து! இந்த ரஷ்ய விஞ்ஞானி சொன்ன விஷயங்கள் எதுவும் எந்த விஞ்ஞானியும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

நன்றி ..இந்து மத வரலாறு ..

18 ஜூன் 2014

திருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - III

வெண்டளை - தனத்தனத்தத் (சந்தம்)

என்று தொழுவேன்? எளியேன்; அளிமுரலும் கொன்றைஅணி தென்கடவூர்க் கோமானஏ! - துன்றும் கனற்பொறிக்கட் பகட்டில்உற்றுக் கறுத்ததெற்குத் திசைக்குள்உக்ரத் தனைச்சினத்திட்(டு) உதைத்தபத்மத் தாள். 1

வெண்டளை - தனத்தனத்தம் (சந்தம்)

தொண்டருடன் கூடித் துதித்(து)இரண்டு கண்ஆரக் கண்டுதொழு வேனோ? கடவூரா! - பண்(டு)ஓர் அமு(து)இருக்கும் சிறுகடத்(து)அன்(ற்) அவதரித்(து) அன்பரைமருட்டும் சமனைஏற்றும் பரிபுரச்செந் தாள். 2

வெண்டளை - தந்ததத்தம் (சந்தம்)

பற்றி பணிந்து பரவ வரம்தருவாய்! கற்றை சடையாய்! கடவூரா! - வெற்றிநெடும் கொண்டல்ஒக்கும் கண்டசத்தம் கொண்(டு)எதிர்த்(து)அங் கண்கறுக்கும் சண்டனைக்கண்(டு) அன்(று)உதைக்கும் தாள். 3

வெண்டளை - தான தானா (சந்தம்)

மேகம் எழுந்ததுபோல் மேல்எழுந்த காலனைக்கண்(டு) ஆகம் தளர்த்துநெஞ்சம் அஞ்சாமுள் - மாகடவூர்ப் பூத நாதா! வேத கீதா! பூவி தாதா தேடு பாதா! மாது பாகா! கால காலா வா! 4

வெண்டளை - தானன தானா (சந்தம்)

அன்(று)அயன்மால் காணா அடிமுடியைக் காண்பதற்குத் தெந்திசைக்கோன் என்னதவம் செய்தானோ? - வென்றிதிகழ் ஆடர வாளா! நீ(று)அணி தோளா! ஆதிரை நாளா! மாதும ணாளா! தோடணி காதா! மாகடவூரா! சொல்! 5

வெண்டளை - த்ந்ததனத் (சந்தம்)

ஆற்றுமோ? நெஞ்சத்(து) அடங்குமோ? கொண்டமையல் கூற்(று)உதைத்த தென்கடவூர்க் கோமானே! - மாற்(று) உயர்பொற் கும்பமுலைத் திங்கள்நுதற் கொந்(து)அளகப் பெண்கொடி மெய்க்(கு) அம்புதொடுத்(து) அங்கஜன்விட் டால். 6

வெண்டளை - தந்தன தந்தம் (சந்தம்)

தென்றல் உலவும் திருக்கடவூர் எம்பெருமான் மன்றல் செறிந்தே மதுஊ(று)உன் - கொன்றைக்க் பொன்பர வும்திண் கொங்கைஇ ரண்டும் புண்பட உந்(து) இன்(பு) அன்புதி ரண்டும் தும்ப(ம்)மி குந்(து)என் பெண்கொடி நெஞ்(சு)அஞ் சும். 7

வெண்டளை - தான தந்தா (சந்தம்)

சுடுமோ? இளம்தென்றல்; தோகையின்மேல் அம்பு படுமோ? மெய் வாதைப் படுமோ? - கடவூரா! நீர்அ ணங்கார் வேணி நம்பா! நீல கண்டா! மேனி யின்பால் ஆர்அ ணங்கார் கால சங்கா ரா! 8 *இப்பதிகத்தில் 3, 6, 8 ஆகிய எண்கள் உள்ள பாக்கள் வெண்டளை பிறழாத பின்முடுகு வெண்பாக்காளாகவே உள்ளன.

வெண்டளை - தனந்த தந்தம் (சந்தம்)

பாலனுக்கா அன்று பக(டு)ஏறி வந்(து)எதிர்த்த காலனுக்குக் காலா! கடவூரா! - மேலோர் கரும்பு கொண்(டு)அங்(கு) எதிர்ந்து நின்(று)அங் கஜன் பொரும்செஞ் சரங்கள் கண்(டு)உண் மருண்டு நெஞ்சம் கலங்கும் என்றன் மான். 9

வெண்டளை - தனன தந்தம் (சந்தம்)

நீதிநெறி வேதியர்கள் நீங்கா மறைபயிலும் ஆதிகட வூரில்உறை அம்மானைப் - பாதம் பரவி அங்கம் புளகுகொண்(டு)எண் படவணங்கும் பொழுது நெஞ்சம் கரவு துஞ்சும் சமனும் அஞ்சும் காண்! 10

திருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - II

சிவன் அடியர் துர்க்குணம் பெறார்

அந்த ரத்(து)அமரர் மந்த ரத்தைஒலி அலைக டற்றலைநி றுத்திநின்(று) அழலு றக்கடைய அமுத(ம்) முற்றடைய அதன்இ டத்துவிடம் உண்ணல்ஆர் கந்த ரத்திடைக றுப்பி னார்கவுரி கண்க ளித்திடும்உ றுப்பினார் கால காலகட வூரர் கோலம்அது கண்டு தண்டன்இட வல்லபேர் பந்தம்ஆசைஅவ மாண(ம்) நிந்தனை பழிப்(பு)அ சத்திய(ம்)ம னப்பயம் படிறு வஞ்சனைஅ னர்த்த(ம்) மால்கொடுமை பாப(ம்) மீறுகொலை சஞ்சலம் தொந்த(ம்) மோகம்அவி வேகம் மாசுசதி துயர(ம்) மூட(ம்)முழு வயிரம்நீள் தோத கம்*குடிலம் அவகு ணம்தவறு சோக மும்தவிரு வார்களே. 1 *குடிலம் = வஞ்சகம்

சிவன் அடியர் சர்வ போகமும் பெறுவர்

வெங்க யத்(து)உரியர் பங்க யர்க்(கு)அரியர் வேத வாம்பரியர் தீதிலர் *வீதர் +வெம்சுகர்வி நோதர் #கஞ்சுகியர் வெற்றி மால்மகிழும் xஅத்தனார் கங்க ணத்தர்சிவ வெங்க ணத்தவர் **களத்தி சைந்தபெரு நிர்த்தநர் கால காலகட வூரர் கோலம்அது கண்டு தண்டன்இட வல்லபேர் திங்கள் வெண்குடைக விப்ப மும்முரசு சென்று சென்(று)எதிர்ஒ லிப்பஎண் திசைபு ரக்கு(ம்)ம(ன்)னர் கர(ம்)மு கிழ்ப்பைகல் தெவ்வ ரும்திறைஅ ளப்பமேல் மங்கை மார்கவரி கால்அ சைப்பநெடு மகர தோரணவ ளப்பமாய் மத்த யானைமிசை வெற்றி யாளர்என வைய கம்தனில்இ ருப்பரே. 2 *வீதர் = சாந்தர் (வீதர் = சாந்தம்). +வெம் = விரும்பத் தக்க. சுகர் = இன்ப மயமானவர். #கஞ்சுகியர் = பாம்பு அணிந்தவர். xஅத்தன் = அர்த்தன்; பாதியன். **களம் = சபை.

அடியார்கள் ருத்ர சாரூபம் பெறுவார்கள்

திருகு வெள்எயிறு வரிநெ டுங்கயிறு செய்ய குஞ்சியொடு நஞ்(சு)எனச் சீறு கோபமுடன் ஏறு தீபவிழி தெறும்இ டிக்குரல்மு ழக்கியே கரு(ம்)ம லைக்குநிகர் எருமை யிற்பெரிய கால்ம லைக்குவடு போல்வரும் கால காலகட வூரர் கோலம்அது கண்டு தண்டன்இட வல்லபேர் பொரு(ம்)ம ழுப்படைஇ லங்கு செஞ்சடை பொருந்து வெள்விடைதி ருந்துவெண் பூதி ஆகம்ஒரு தோகை பாகம்அழல் பொங்கு நாகமணி கங்கணம் பெருகு கங்கைநதி முடிவி ளங்கிவதி பிஞ்சு மாமதிகொ ழுந்தழல் பெய்த பெற்றிபெறும் ஒற்ற நெற்றிவிழி பெற்(று)இ ருப்பர்அடை யாளமே. 3

அடியார்கள் பெறும் மேலான பதவிகள்

*பெண்இ டும்(பு)அரிபு ரத்தி னார்ஒலி பிறந்தி டும்பரிபு ரத்தினார் பிறைமு டிக்குள்அணி கங்கை யார்மறைசொல் பிரமன் ஒற்றஅணி oகங்கையார் கண்இ சைந்த(து)ஒரு மூன்றி னார்உரிய கயிலை தாழxநக மூன்றினார் கால காலகட வூரர் கோலம்அது கண்டு தண்டன்இட வல்லபேர் மண்அ ளந்தசர ணர்க்கு(ம்) மென்முளரி மாலை ஆபரண ருக்கும்ஓர் வச்சி ரத்(து)இறைவ ருக்கும் எண்திகிரி ++மாதி ரத்துறைவ ருக்கு(ம்)மேல் விண்ண வர்க்கு(ம்)மிகு பண்ண வர்க்கும்உயர் வித்த கர்க்கு(ம்)மதி ஒத்துவாழ் மெய்த்த வத்துநிலை பெற்ற வர்க்கும்அவர் மேல்இ ருப்பர்அடை யாளமே. 4 *பெண் = பார்வதியின். இடும்ப்பு அரி = துன்பம் துடைத்த. புரத்தினார் = (இடப்பாக) சரீரம் உடையவர். oகம் = தலை; கபாலம். கையார் = கரத்தினார். xநகம் ஊன்றினார் எனப் பிரிக்க. ++மாதிரம் = திசை.

அடியவர்கள் மிக நல்லவர்கள்

உரக குண்டலர்நெ ருங்கி விண்(டு)அலர் உறைந்த வண்டுமுரல் கொங்கையார் உத்த ரீகமலர் ஒப்(பு)இ லாதxசிலை ஒத்த நெற்றிமலை மங்கயார் கரக பாலர்திரி சூலர் நீலமணி கண்டர் +புண்டரிக ஆடையார் கால காலகட வூரர் கோலம்அது கண்டு தண்டன்இட வல்லபேர் விரகம் ஆனதில்உ ணங்கி டார்;உலகை வேண்டி ஈனரைவ ணங்கிடார்; வெகுளி ஆனதுசெ றிந்தி டார்; உடலம் வேத நைப்படஅ றிந்திடார்; நரகம் எனப்(து)இனி எய்தி டார்;கருமம் நல்ல(து) அல்ல(து)அவர் செய்திடார்; நமன்இ ருந்ததிசை கண்டி டார்;இறுதி நாளு மே*பருதி ஆவரே. 5 xசிலை = மலை; வில். (இடை நிலைத் தீவகம்). +புண்டரிக ஆடை = புலித்தோல் உடை. *பருதி = ஒளி.

திருக்கடவூர் ஸ்தல புராணம்

துலைநி றுக்கும்ஒரு 1வணிக நுக்கு(ம்)2மது சூத நுக்கு(ம்)மநு நீத்சேர் தொல்பு விக்3கரச நுக்கு(ம்) மிக்கதமிழ் சொல்லு(ம்) ஓர்4புலவ நுக்கு(ம்)மெய்க் 5கலைய நுக்கு(ம்)6மதி 7நடுவ நுக்கு(ம்)8முநி காத லற்கும்இனி(து) அருள்செயும் கால காலகடவூர் மேவிவளர் கயிலை போலவரு(ம்) மயில்அனார் முலைஅ ரும்பிவரு 9வனஜ மேஇனிய மொழியும் இன்பமுறு 10பனசமே முத்தை ஒத்தமணி 11மூர லேஅணிகள் மொய்த்த தோள்கள்இள 12வேரலே சிலைஇ ரண்(டு)அனைய புருவ மேஇரதி தேவி ஒத்த(து)அவர் உருவமே திருமி டற்றழகு சங்க மேஅமுது சிந்து(ம்) 13மானடொபு ஜங்கமே. 6 1. வணிகன் - ரத்நாகரன்; இவன் விசாலாந்த்ரம் என்னும் நகரத்து வைச்யன். விரக்தனாய்த் தல யாத்திரை செய்து வருகையில் திருக்கடவூரைத் தரிசித்து, மூன்று நாட்கள் தங்கிப், பின் நான்காம் நாள் இறந்த போது, தேவ விமானத்தில் ஏறித் துறக்கம் புகுந்தவன்; இது திருக்கடவூர் (வடமொழி)த் தல புராண வரலாறு. மேலும், புறாவின் எடைக்கு சமமாகத் தன் உடலின் தசையை எடுத்துத் தராசில் நிறுத்துப் பருந்துக்குக் கொடுத்த சிபிச் சக்கரவர்த்தியையும் "துலை.... வணிகன்" என்னும் தொடர் குறிக்கலாம்; அம்ருத லிங்கத்தைச் சிபிச் சக்கரவர்த்தி வழிபட்டதாகத் தல புராணம் கூறுகிறது; தவிரக் குங்கிலியக் கலயரிடத்தில் தாலியைப் பெற்று அதன் விலைக்கு உரிய குங்கிலியத்தை விற்ற வியாபாரியையும், சிவனடியார் தந்த கோவணத்தின் எடைக்குத் தன் உடைமைகளை எல்லாம் கொடுத்தும் போதாத நிலையில் தானும் மனைவி, மைந்தனுடன் தராசுத் தட்டில் ஏறித், தன்னையும் தந்த வணிகரான அமர்நீதி நாயனாரையும் பொதுவாகக் குறிக்கலாம். 2. மதுசூதன் - திருமால். 3. அரசன் - தல புராணத்தில் குறிக்கப் பெற்றுள்ள ஹேம கிரீடன், ரத்ன கைடன், பிரமதி ராஜன், சந்த்ர பூஷணன், சிபி என்னும் மன்னர்களுள் எவரேனும் ஒருவரைக் குறிக்கலாம். 4. புலவன் - காரிக் கோவை பாடிய காரி நாயனார்; திருக்கடவூர் உய்ய வந்த தேவ நாயனார் எனினுமாம். 5. கலையன் - குங்கிலியக் கலயர். 6. மதி - சந்திரன். 7. நடுவன் - யமன். 8. முனி காதலன் - ம்ருகண்டு முனிவரின் மகனாம் மார்க்கண்டேயன். 9. வனஜம் - தாமரை. 10. பனசம் - பலாப் பழம். 11. மூரல் - புன்சிரிப்பு. 12. வேரல் - மூங்கில். 13. மான் அடி - மான் குளப்படி; புஜங்கம் - பாம்பு(ப்படம்); இவை இரண்டும் அல்குலுக்கு உவமை.

சிவனுக்கும் பெண்டிர்க்கும் சிலேஷை

விதிசி ரத்தைஅரி பழியர் அஞ்சுகணை வேள்உ ரத்தைஎரி விழியர்மா மேரு விற்கையினர் நேர்க டுக்கையினர் வேள்வி யிற்பணியும் வள்ளலார் கதிர வன்தனது தந்தம் அம்புவியில் உதிர வன்பொடுபு டைத்திடும் கால காலட வூரர் மேவிவளர் கயிலை போலவரு(ம்) மயில்அனார் மதியில் நஞ்சமும்இ ருக்கு மோ?கரிய மஞ்சு மாலிகைக றுக்குமே? வாள்அ ராஅமுதம் ஊறு மோ?கனக வரையி லேபுளக(ம்) மீறுமோ? *விதிர்க லன்பதி ருத்து மோ?இடையில் விலகு(ம்) மேகலைபொ ருத்துமோ? விளங்கு தோட்+கழையி யக்கு மோ?இனிமை விண்ட சொற்++கழைவி ளக்குமே. 7 *விதிர் - சிதறிய. +கழை - மூங்கில். ++கழை - கரும்பு.

கயிலையும் பெண்டிரும்

இகல்அ றிந்துவரு பகையி நார்புரம் எரித்தி டும்கொடிய நகையினார் எரிம ழுப்படைவ லத்தி நார்முடியில் ஏறு(ம்) மீறியஜ லத்தினார் ககன மண்டலமும் உருவி நின்றுவிதி காணொ ணாதஒரு தாணுவார் கால காலகட வூரர் மேவிவளர் கயிலை போலவரு(ம்) மயில்அனார் முகம திக்(கு)உவமை புகலு வார்அளிகள் மொய்கு ழற்(கு)உவமை நுவலுவார் முலையி னுக்(கு)உவமை பகரு வார்இனிய மொழியி னுக்(கு)உவமை மொழிகுவார் நகையி னுக்(கு)உவமை கூறு வார்சரண நடையி னுக்(கு)உவமை பேசுவார் நயம்அ றிந்(து)இளமை சொல்லு வார்எவரும் xநடு(வு)அ றிந்தவர்கள் இல்லையே. 8 xநடு(வு) - இடை; நியாயம்.

முகில் விடு தூது

சிறைஅ(ன்)னத்தரெழு நறைவ நத்த்டர்இவர் தின(ம்)ம நத்திடைதி யானமே செய்து தங்கள்வரம் எய்து தற்(கு)உரிய தேவ தேவர்பரி பூரணர் கறைமி டற்(று)அரையர் அறைக டற்கரையர் கதித ரும்குரவர் வெருவிலார் கால காலகட வூரர் கோலம்அது கண்டு கைதொழுது கொண்டல்காள்! எறிதி ரைப்பறைமு ழக்கி அம்கைதனில் இக்கு வார்சிலைவ ணக்கிநீள் இருத லைக்கும்அளி நாண்இ றுக்கிமுன் எழுந்து மீசையை முறுக்கிவேள் வெறிம லர்க்கணைஎ டுத்த தும்கொடிய வேக மாய்அதுதொ டுத்ததும் மெய்யி னிற்படவி டுத்த தும்செவியில் விண்டு விண்டுசொல வேணுமே. 9

வணு விடு தூது

குயில்மொ ழிப்புணர்மு லைக்க ரும்கண்ஒரு கோதை பாதிஉறை ஜோதியார் கொக்க ரித்துவரு தக்க னாருயிர் குறைத்(து)எ ழுந்திடு(ம்)ம றத்தினார் கயிலை நாதர்கண நாதர் பூதிஅணி காய நாயகமும் ஆயினார் கால காலகட வூரர் கோலம்அது கண்டு கைதொழுது வண்டுகொள்! அயிலி னும்கொடிய அம்பி னால் மதுர ஆர வாரம்இசை வேயினால் அந்த ரம்தனில்அ சைந்து நின்(று)அடரும் அம்பு லிக்கொடிய தீயினால் துயில்து றந்துமெய்ம றந்து வாடிமிகு சோக மோகம்பி றந்துளம் தோத கப்படவும் நான்அ கப்படுதல் சொல்லு வீர்!மதனை வெல்லவே. 10

திருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I

சிவபிரான் உருவ வர்ணனை

சுடர்மணிக் குழையும் மலர்க்கரத்(து) உழையும் தும்பிகள் இடைஇடை நுழையும் தும்பைமா லிகையும் வம்புவார் சடையும் துண்டவெண் பிறையு(ம்)முந் நூலும் நடநபங் கயமும் கிரணகங் கணமும் நங்கைபங்(கு) அமர்ந்தசுந் தரமும் நயன(ம்)மூன்(று) உடைய கோலமும் கண்டோர் நமனையும் காணவல் லவரோ? கொடிபல தொடுத்த நெடியமா மணிப்பொற் கோபுரம் *பாரிடம் தொடுத்துக் கொழுந்துவிட்(டு) எழுந்து வான்நில(வு) எறிப்பக் கொண்டல்வந்(து) உலவியே நிலவும் கடிமலர்த் தடமும் சுருதிஓ திடமும் கன்னிமா மாடமும் சூழ்ந்து கநவளம் சிறந்த ++கடவைஅம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 1 *பாரிடம் = பூதகணம். ++கடவை = திருக்கடவூர்.

யம பயம் அற

தண்டமும் கயிறும் சூலமும் புகைந்த தழல்உமிழ் கண்களும் வளைந்த தந்தமும் சிவந்த குஞ்சியும் கரிய சயிலமே அனையமே நியுமாய் அண்டிய சமனைக் கண்டுள(ம்) மயங்கி அறி(வு)அழிந்(து) இருவிழி களும்பஞ்(சு) அடைந்துவாய் புலர்ந்து மெய்மந்து திடும்போ(து) அம்பிகை தன்னுடன் வருவாய்! வண்டுகள் முரன்று முகைகுறுக்(கு) உடைந்து மதுமழை பொழிந்துதா(து) அளைந்து மடல்விரிந்(து) அலர்ந்து பொன்நிறம் பொதிந்த மன்றல்அம் கொன்றைவார் சடையாய்! கண்டவர் உளமும் கண்ணுமே கவரும் கநதந வநிதையர் நெருங்கும் கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 2

சிவன் அருள் மகிமை

தநபதி நிகராய்ச் செல்வமே பெறினும் சதமகன் போகமே பெறினும் தாரணி சுமக்கும் சேடனே நிகராய்த் தக்கதோர் அறி(வு)எலாம் பெறினும் அநங்கனை நிகராய் அழகுதான் பெறினும் அருமறைக் கிழவன்நேர் உறினும் ஐய!நின் கடைக்கண் அருள்தவ றியபேர் அம்கைஓ(டு) ஏந்திநின்(று) உழல்வார்; பநககங் கணத்தாய்! அளப்பரும் குணத்தாய்! பார்வதி வாமபா கத்தாய்! பவளநல் நிறத்தாய்! தவளதூ ளிதத்தாய்! பரிபுரம் அலம்புபொற் பதத்தாய்! கநகமும் துகிரும் தரளமும் வயிரக் கலன்களும் நிலம்தொறு(ம்) மிடைந்த கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 3

சம்சார துக்கம் அற

தந்தையை மனையை ஒக்கலைத் துணையைத் தாயைமென் குதலைவாய்ச் சேயைத் தனத்தையௌ வநத்தை இன்பமோ கனத்தைத் தையல்நல் லார்பெருந் தனத்தை அந்தியும் பகலும் விரும்பிமெய் சோம்பி ஆழ்கடற் படுதுரும்(பு) ஆகி அலக்கழிந் தேனைப் புலப்படத் திருத்தி ஆட்கொள நினைத்திலாய்! அன்றோ? சிந்தைநைந் துருக இன்னிசை படித்துச் சிலம்(பு)ஒலி ஆரவே நடித்துச் செழும்புனல் சடைமேல் கரந்தையை முடித்துத் திருவெணீ(று) உடல்எலாம் வடித்துக் கந்தைக்கோ வணம்தோல் பொக்கணம் தாங்கிக் கபாலம்ஒன்(று) ஏந்திநின் றவனே! கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 4

தன் சிறுமை கூறல்

வஞ்சகக் கிணறாய்த் துன்பவா ரிதியாய் வறுமைஎன் பதற்(கு)இருப் பிடமாய் மறம்பொதி குடிலாய் அசத்திய விதையாய் மயல்விளை கழனியாய்ப் பாவ சஞ்சித வடிவாய்ச் *சருச்சரைப் புரமாய் சங்கட நோய்க்களஞ் சியமாய்த் தலதடு மாறித் திரியும்என் தனக்(கு)உன் தண்அளி கிடைக்குமோ? அறியேன்; நஞ்சம்உண் பகுவாய்ச் சுடிகைமுள் எயிற்று நகைமணிப் பாந்தள்+அம் சூழ்ந்த நளிர்இளம் பிறையும் மிளிர்செழுஞ் சடையாய்! நங்கையர் முழுமதி முகத்தைக் கஞ்சமென் மலர்கள் கண்டுவாய் ஒடுங்கும் கந்தம்உந் தியதடம் சூழும் கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 5 *சருச்சரை = ஒப்புரவு இன்மை. +அம் = நீர்; கங்கை.

பிறவி வேண்டாம்

பிரமனும் சலிக்கத் தாயர்சஞ் சலிக்கப் பேதையர் கண்(டு)அசங் கதிக்கப் பிணிகளும் பகைக்க மூப்புவந்(து) அலைக்கப் பிந்தொடர்ந்(து) ஆசைசென்(று) இழுக்கத் தருமனும் வெறுக்க நரகமும் ஒறுக்கத் தாரணி சுமந்துநொந்(து) இளைக்கச் சக(டு)எனச் சுழலும் கறங்(கு)எனக் கொடிய சடலமே எடுக்கநான் இலக்கோ? +குருமணி இமைக்கும் புதுமலர்த் தடத்தில் கோட்டிள(ம்) ++மோட்டுமோ மேதிக் குலங்கள்போய்ப் படிந்து நலம்கிளர் செழும்தேன் குவளைமென்(று) உழக்கிய தோற்றம் கரியமா கடலில் புகுந்துநீர் அருந்தும் காளமே கங்களோ எனலாய்க் கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 6 *குறு = நிறம். மணி = முத்து. இமைக்கும் = ஒளிவிடும். ++மோடு = வயிறு.

லோபியைப் புகழாதே!

மறுகுவெம் சினத்தர் *தெறும்அவ குணத்தர் வஞ்சகம் பொதிந்தநெஞ் சகத்தர் வழக்கம்ஒன்(று) இல்லாப் பழக்கரும் மூடர் மதிஇலாப் பதிதர்பால் அணுகிப் பொறுமையில் தருமன் நெறியினில் சேடன் புலமையில் குறியமா முனிவன் புரந்தரன் எனவும் நிரந்தரம் புகழ்ந்து பொழு(து)அவம் போக்கினன்; அந்தோ! வெறிமலர்ப் புரசம் சொரிந்துவண்(டு) இனங்கள் மிடைந்துமா முகிலினைக் கிழித்து மேல்இடத்(து) இரவிப் பசும்புர விகளாய் விளங்கியே விண்தல முகட்டைக் கறுவிநின்(று) ஓங்கிச் செறியும்ஐந் தருவுள் கற்பகத் தருவினை ஒப்பாய்! கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 7 *தெறும் = தண்டம் செய்யும்; கொல்லும்.

பக்தி பூஜை

நெஞ்சகம் குழைந்து பணிவிடைக்(கு) இசைந்து நீறொடு கண்டிகை புனைந்து நிலவுபொற் கோயில் அதைவலம் புரிந்து நெகிழு(ம்)முன் நாள்மலய் எடுத்து வஞ்சமா மயக்கில் மயங்கும்ஐம் புலனாம் மாற்றலர் வலிமையைக் கவர்ந்(து)உன் மலர்ப்பதத்(து) இருத்தி அலக்கணைத் துரத்தி மதிமிகு வாழ்வளித் திடும்"ஓம் ஜும் ஸ:"* எனும்நல் தூயமூன்(று) எழுத்தை சுகிதமாய்க் கொண்(டு)அருச் சனைசெய் தொண்டர்கள் உறவைக் கொண்டுனைப் பணியச் +சுணக்கனாம் எனக்(கு)அருள் புரிவாய்! கஞ்ஜமென் மலய்மீ(து) அஞ்ஜ(ம்)மெய் பசக்கக் கார்மயில் ++ஒகரமாய் நடிக்கும் கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 8 *'ஓம் ஜும் ஸ:' = இது, 'ம்ருத்யுஞ்ஜய' மந்திரம். +சுணக்கன் = நாய் போல் திரிகின்றவன்; நீசன். ++'ஓ' கரம் ஆய் = 'ஓ' என்னும் எழுத்துப் போல் (தோகை விரித்து)

பரத்தையர் பாசம் அற

மைக்கயல் விழியால் மயக்கிஉள் உருக்கி மஞ்சளால் முகத்தினை மினுக்கி மணிநகை பெருக்கி ஆசைஉண் டாக்கி வளர்இள முலைத்துகில் இறுக்கிப் பக்கல்வந்(து) அமர்ந்து மென்மொழி பகர்ந்து பரவசம் போலமேல் வுழுந்து படி(று)உளம் உணர்ந்தே அசத்தியம் உரைத்துப் பறித்திடக் குறித்தபா வையர்க்காய்த் துக்கசா கரத்தில் அழுந்திநாள் தோறும் தோதகப் பட்டபா தகனைத் துய்யசெங் கமலச் செய்யதாள் இணைக்கே தொண்டுகொண் டால்குறை உறுமோ? கைக்கழங் காடும் திறத்தினை நிகராய்க் கமலமென் மலர்மிசை அறுகாற் களிபாளி சுழலும் கடவைஅம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 9

சிவ மானச பூஜை

செயல்பணி விடையாய்ச் செப்பல்ஐந் தெழுத்தாய்த் திரிதலே வலம்புரி தலுமாய்ச் சிந்தையின் நினைவே தியானமாய், உண்டு தெவிட்டல்நி வேதனச் சிறப்பாய்த் துயிறல்வந் தனையாய்த் திருவுளத்(து) உவந்து துள்ளுவெள் விடையின்மேல் ஏறித் தொண்டரும் விசும்பில் அண்டரும் காணத் தோகையோ(டு) எனக்குவந்(து) அருள்வாய்! வயல்வரம்(பு) உறைந்த கடைசியர் முகத்தை மதியம்என்(று) அதிசய(ம்) மிகுந்து வரும்பகல் இடத்தும் இரவினும் குவளை வாய்ஒடுங் காமலே விளங்கும் கயல்நெடுந் தடமும் கமுகமும் கமுகைக் காட்டிய கன்னலும் பொதிந்த கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 10

சித்தர் பாடல்கள் 10 கொங்கணச் சித்தர்

    கொங்கணச் சித்தர் பாடல்கள்


    இவருக்கு கொங்கணர், கொங்கணச் சித்தர், கொங்கண நாயனார், கொங்கணத்தேவர், கொங்கண நாதர் எனப் பல பெயர்களும் உண்டு. இவர்கள் வெவ்வேறானவர்கள்
    என்பாருமுண்டு.

    கொங்கணர் திருவள்ளுவரின் சீடர் என்றும் போகரின் சீடர் என்றும் கூறுகின்றனர். இவர்பெயரால் வைத்திய, இரசவாத, யோக நூல்களும் பாடல்களும் இருக்கின்றன.

    இவர் கி.பி 7ஆம் நூற்றாண்டில் இருந்தவர். கொங்கு நாட்டைச் சேர்ந்தவர். ஆதலின் இப்பெயர் பெற்றார் என்பர்.

    இவர் பெயரில் வழங்கப்படும் பாடல்களில் "வாலைக் கும்மி" என்பது ஒன்று. வாலை என்பது சக்தியின் பெயர். கன்னி என்றும் பொருள். கன்னிப் பெண்ணை முன்நிறுத்தி கும்மி பாடியுள்ளதால் வாலைக்கும்மி என வழங்குகிறது.

    இது இவர் பெயரால் வழங்கினாலும் இவரால் பாடப்பட்டது அன்று. இவர் கருத்துக்களை அமைத்து ஆசிரியர் வீரப் பெருமாளின் மாணாக்கர் ஒருவர் பாடியதாகவும், அவர் வலவேந்திரன் துரைவள்ளல் என்ற சிற்றரசன் காலத்தவர் என்றும் அவன் அஞ்செழுத்துணர்ந்த சைவன் என்றும் வாலைக்கும்மி பாடல் கூறுகின்றது.

    கொங்கணர் பற்றிய கதை ஒன்று உண்டு. கொங்கணர் ஒரு மரத்தின் கீழ் யோகம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது மரத்தின் மேல் இருந்த கொக்கு அவர்மீது எச்சம் இட்டது. உடனே
    கொங்கணர் கண்ணை விழித்து அக்கொக்கை பார்த்தார். அது எரிந்து சாம்பலாயிற்று. அதன் பிறகு அவர் ஊருக்குள் வந்து திருவள்ளுவர் மனைவாயிலில் நின்று பிச்சை கேட்டார். வள்ளுவர் மனைவி வாசுகியார் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த நேரம். ஆதலால் அவர் பிச்சை கொண்டுவர சிறிது நேரமாயிற்று. நேரங்கடந்து பிச்சை கொண்டுவந்த வாசுகியாரைக் கொங்கணர் சினத்துடன் விழித்து பார்த்தார். உடனை, வாசுகியார் "கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?" என்று கேட்டார். அஞ்சிய கொங்கணர் வாசுகியைப் பணிந்தார். பின்னர் திருவள்ளுவர் சீடரானார்.

    கொங்கணச் சித்தர் வாலைக் கும்மி

    காப்பு

    விநாயகர் துதி

    பின் முடுகு வெண்பா
    கல்விநிறை வாலைப்பெண் காதலியென் றோதுகின்ற
    செல்வியின்மேற் கும்மிதனைக் செப்புதற்கே - நல்விசய
    நாதனின்சொல் வேதனஞ்சு போதன்மிஞ்சி மானகஞ்ச
    பாதம்வஞ்ச நெஞ்சினில்வைப் போம்.
    1
    கும்மி

    சத்தி சடாதரி வாலைப்பெண் ணாமந்த

    உத்தமிமேற் கும்மிப் பாட்டுரைக்க
    வித்தைக் குதவிய வொற்றைக்கொம் பாம்வாலை
    சித்தி விநாயகன் காப்பாமே.
    2
    சரசுவதி துதி

    சித்தர்கள் போற்றிய வாலைப்பெண் ணாமந்த

    சக்தியின் மேற்கும்மிப் பாட்டுரைக்கத்
    தத்தமித் தோமென ஆடும் சரசுவதி
    பத்தினி பொற்பதங் காப்பாமே.
    3
    சிவபெருமான் துதி

    எங்கும் நிறைந்தவள் வாலைப்பெண் ணாம்மாலின்

    தங்கையின் மேற்கும்மி பாடுதற்குக்
    கங்கை யணிசிவ சம்புவாம் சற்குரு
    பங்கயப் பொற்பாதம் காப்பாமே.
    4
    சுப்பிரமணியர் துதி

    ஞானப்பெண் ணாமருள் சோதிப்பெண் ணாமாதி

    வாலைப்பெண் மேற்கும்மி பாடுதற்கு
    மானைப் பெண்ணாக்கிய வள்ளிக் கிசைந்திடும்
    மால்முரு கேசனும் காப்பாமே.
    5
    விஷ்ணு துதி

    ஆண்டிப்பெண் ணாம்ராச பாண்டிப்பெண் ணாம்வாலை

    அம்பிகை மேற்கும்மி பாடுதற்குக்
    காண்டீபனாம் பணி பூண்டவன் வைகுந்தம்
    ஆண்டவன் பொற்பதங் காப்பாமே.
    6
    நந்தீசர் துதி

    அந்தரி சுந்தரி வாலைப்பெண் ணாமந்த

    அம்பிகை மேற்கும்மி பாடுதற்குச்
    சிந்தையில் முந்திநல் விந்தையாய் வந்திடும்
    நந்தீசர் பொற்பதங் காப்பாமே.
    7

    நூல்

    கும்மி


    தில்லையில் முல்லையி லெல்லையுளாடிய

    வல்லவள் வாலைப்பெண் மீதினிலே
    சல்லாபக் கும்மித் தமிழ்பா டவரும்
    தொல்லைவினை போக்கும் வாலைப்பெண்ணே!
    8
    மாதா பிதாகூட இல்லாம லேவெளி

    மண்ணும் விண்ணுமுண்டு பண்ணவென்று
    பேதை பெண் ணாமுதல் வாலைப்பெண் ணாளென்று
    புகுந்தா ளிந்தப் புவியடக்கம்.
    9
    வேதமும் பூதமுண் டானது வும்வெளி

    விஞ்ஞான சாத்திர மானதுவும்
    நாதமுங் கீதமுண் டானதுவும் வழி
    நான்சொல்லக் கேளடி வாலைப்பெண்ணே.
    10
    மூந்தச் செகங்களுண் டானது வும்முதல்

    தெய்வமுந் தேவருண் டானதுவும்
    விந்தையாய் வாலையுண் டானதுவும் ஞான
    விளக்கம் பாரடி வாலைப்பெண்ணே.
    11
    அரிக்கு முந்தின தவ்வெழுத்தாம் பின்னும்

    அரிக்குள் நின்றதும் அஞ்செழுத்தாம்
    தரிக்கும் முந்தின தஞ்செழுத்தாம் வாசி
    பரிக்குள் நின்றது மஞ்செழுத்தாம்.
    12
    ஆதியி லைந்தெழுத் தாயினாள் வாலைபெண்

    ஐந்தெழுத் துமென்று பேரானாள்;
    நாதியி னூமை யெழுத்தியவள் தானல்ல
    ஞான வகையிவள் தானானாள்.
    13
    ஊமை யெழுத்தே யுடலாச்சு மற்றும்

    ஓமென் றெழுத்தே யுயிராச்சு
    ஆமிந் தெழுத்தை யறிந்துகொண்டு விளை
    யாடிக் கும்மி யடியுங்கடி.
    14
    செகம் படைத்ததும் அஞ்செழுத்தாம் பின்னும்

    சீவன் படைத்ததும் அஞ்செழுத்தாம்
    உகமு டிந்தது மஞ்செழுத்தாம் பின்னும்
    உற்பன மானது மஞ்செழுத்தாம்.
    15
    சாத்திரம் பார்த்த்தாலுந் தானுமென்ன? வேதம்

    தானுமே பார்த்திருந் தாலுமென்ன?
    சூத்திரம் பார்த்தல்லோ ஆளவேணு மஞ்சு
    சொல்லை யறிந்தல்லோ காணவேணும்?
    16
    காணாது கிட்டாதே எட்டாதே அஞ்சில்

    காரிய மில்லையென் றேநினைத்தால்
    காணாதுங் காணலா மஞ்செழுத் தாலதில்
    காரிய முண்டுதியானஞ் செய்தால்.
    17
    ஆயனு மைந்தா மெழுத்துக்குள் ளேயறி

    வாயனு மைந்தா மெழுத்துக்குள்ளே
    வாயனு மைந்தாம் எழுத்துக்குள் ளேயிந்த
    வாலையு மைந்தாம் எழுத்துக்குள்ளே.
    18
    அஞ்செழுத் தானதும் எட்டெழுத்தாம் பின்னும்

    ஐம்பத்தோர் அட்சரந் தானாச்சு
    நெஞ்செழுத் தாலே நிலையா மலந்த
    நிசந்தெ ரியுமோ வாலைப்பெண்ணே!
    19
    ஏய்க்கு தேய்க்கு ஐந்செழுத் துவதை

    எட்டிப் பிடித்துக்கொளிரண் டெழுத்தை
    நோக்கிக்கொள் வாசியை மேலாக வாசி
    நிலையைப் பாரடி வாலைப்பெண்ணே?
    20
    சிதம்பர சக்கரந் தானறிவா ரிந்தச்

    சீமையி லுள்ள பெரியோர்கள்
    சிதம்பர சக்கர மென்றால் அதற்குள்ளே
    தெய்வத்தை யல்லோ அறியவேணும்!
    21
    மனமு மதியு மில்லாவிடில் வழி

    மாறுதல் சொல்லியேயென்ன செய்வாள் ?
    மனமு றுதியும் வைக்கவேணும் பின்னும்
    வாலைக் கிருபையுண் டாகவேணும்.
    22
    இனிவெ ளியினிற் சொல்லா தேயெழில்

    தீமட்டு திந்தவரி விழிக்கே
    கனிமொ ழிச்சியீர் வாருங்கடி கொஞ்சங்
    கருவைச் சொல்லுவேன் கேளுங்கடி.
    23
    ஊத்தைச் சடலமென் றெண்ணாதே இதை

    உப்பிட்ட பாண்டமென் றெண்ணாதே
    பார்த்த பேருக்கே ஊத்தையில் லையிதைப்
    பார்த்துக்கொள் உன்ற னுடலுக்குள்ளே.
    24
    உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம்

    வைத்த விளக்கும் எரியுதடி
    அச்சுள்ள விளக்கு வாலையடி அவி
    யாம லெரியுது வாலைப்பெண்ணே!
    25
    எரியு தேஅறு வீட்டினி லேயதில்

    எண்ணெயில் லையமிழ் தண்ணீரில்லை
    தெரியுது போக வழியுமில்லை பாதை
    சிக்குது சிக்குது வாலைப்பெண்ணே.
    26
    சிலம்பொலி யென்னக் கேட்குமடி மெத்த

    சிக்குள்ள பாதை துடுக்கமடி
    வலம்புரி யச்சங்கமூது மடி மேலே
    வாசியைப் பாரடி வாலைப்பெண்ணே!
    27
    வாசிப் பழக்க மறியவே ணும்மற்றும்

    மண்டல வீடுகள் கட்டவேணும்
    நாசி வழிக்கொண்டு யோகமும் வாசியும்
    நாட்டத்தைப் பாரடி வாலைப்பெண்ணே!
    28
    முச்சுடரான விளக்கி னுள்ளே மூல

    மண்டல வாசி வழக்கத்திலே
    எச்சுடராகி அந்தச் சுடர் வாலை
    இவள்விட வேறில்லை வாலைப்பெண்ணே!
    29
    சூடாமல் வாலை இருக்கிறதும் பரி

    சித்த சிவனுக்குள் ளானதனால்
    வீடாமல் வாசி பழக்கத்தை பாருநாம்
    மேல்வீடு காணலாம் வாலைப்பெண்ணே!
    30
    மேல்வீடு கண்டவன் பாணியடி விண்ணில்

    விளக்கில் நின்றவன் வாணியடி
    தாய்வீடு கண்டவன் ஞானியடி பரி
    தாண்டிக் கொண்டான்பட் டாணியடி.
    31
    அத்தியி லேகரம் பத்தியி லேமனம்

    புத்தியி லேநடு மத்தியிலே
    நெற்றி சதாசிவ மென்றுசொன் னேனுன்றன்
    நிலைமையைப் பாரடி வாலைப்பெண்ணே!
    32
    அழுத்தி லேசொல்லஞ் செழுத்தி லேநானும்

    வழுத்தி னேன்ஞானப் பழத்திலே
    கழுத்தி லேமயேச் வரனு முண்டுகண்
    கண்டு பாரடி வாலைப்பெண்ணே!
    33
    அஞ்சிலே பிஞ்சிலே வஞ்சியரே நிதம்

    கொஞ்சி விளையாடும் வஞ்சியரே
    நெஞ்சிலே ருத்திரன் சூழிருப்பா னவன்
    நேருட னாமடி வாலைப்பெண்ணே!
    34
    தொந்தியி லேநடு பந்தியிலே திடச்

    சிந்தையி லேமுந்தி உன்றனுடன்
    உந்தியில் விட்ணுவுந் தாமிருப் பாரிதை
    உண்மையாய்ப் பாரடி வாலைப்பெண்ணே!
    35
    ஆலத்திலே இந்த ஞாலத்திலே வருங்

    காலத்தி லேயனு கூலத்திலே
    முலத்திலே பிரமன் தானிருந் துவாசி
    முடிக்கிறான் பிண்டம் பிடிக்கிறானே.
    36
    தேருமுண் டைஞ்சூறாம் ஆணியுண்டே அதில்

    தேவரு முண்டுசங் கீதமுண்டே
    ஆருண்டு பாரடி வாலைத்தெய் வம்மதிலே
    அடக்கந் தானடி வாலைப்பெண்ணே!
    37
    ஒன்பது வாயில்கொள் கோட்டையுண் டேஅதில்

    உள்ளே நிலைக்கார ரஞ்சுபேராம்
    அன்புடனே பரிகாரர்கள் ஆறு பேர்
    அடக்கந் தானடி வாலைப்பெண்ணே!
    38
    இந்த விதத்திலே தேகத்திலே தெய்வம்

    இருக்கையில் புத்திக் கறிக்கையினால்
    சந்தோட வாலையைப் பாராமல் மனிதர்
    சாகிற தேதடி வாலைப்பெண்ணே!
    39
    நகார திட்டிப்பே ஆனதனால் வீடு

    வான வகார நயமாச்சு!
    உகார முச்சி சிரசாச்சே இதை
    உற்றுப் பாரடி வாலைப்பெண்ணே!
    40
    வகார மானதே ஓசையாச்சே அந்த

    மகார மானது மாய்கையாச்சே
    சிகார மானது மாய்கையாச்சே இதைத்
    தெளிந்து பாரடி வாலைப்பெண்ணே!
    41
    ஓமென்ற அட்சரந் தானுமுண்டு அதற்குள்

    ஊமை யெழுத்து மிருக்குதடி;
    நாமிந்தெ ழுத்தை யறிந்துகொண் டோ ம்வினை
    நாடிப் பாரடி வாலைப்பெண்ணே!
    42
    கட்டாத காளையைக் கட்டவே ணுமாசை

    வெட்டவே ணும்வாசி யொட்டவேணும்
    எட்டாத கொம்பை வளைக்கவே ணுங்காயம்
    என்றைக் கிருக்குமோ வாலைப்பெண்ணே!
    43
    இருந்த மார்க்க்கமாய்த் தானிருந்து வாசி

    ஏற்காம லேதான டக்கவேணும்
    திரிந்தே ஓடிய லைந்துவெந்து தேகம்
    இறந்து போச்சுதே வாலைப்பெண்ணே!
    44
    பூத்த மலராலே பிஞ்சுமுண்டே அதில்

    பூவில்லா பிஞ்சும் அநேகமுண்டு
    மூத்த மகனாலே வாழ்வுண்டு மற்ற
    மூன்று பேராலே அழிவுமுண்டு!
    45
    கற்புள்ள மாதர் குலம்வாழ்க நின்ற

    கற்பை யளித்தவரே வாழ்க!
    சிற்பர னைப் போற்றி கும்மியடி
    தற்பரனைப் போற்றி கும்மியடி.
    46
    அஞ்சி னிலேரெண் டழிந்ததில் லையஞ்

    சாறிலேயும் நாலொழிந்த தில்லை
    பிஞ்சிலே பூவிலே துஞ்சுவ தாம்அது
    பேணிப் போடலாம் வாலைப்பெண்ணே!
    47
    கையில்லாக் குட்டையன் கட்டிக்கிட்டா னிரு

    காலில்லா நெட்டையன் முட்டிக்கிட்டான்
    ஈயில்லாத் தேனெனத் துண்டுவிட் டானது
    இனிக்கு தில்லையே வாலைப்பெண்ணே!
    48
    மேலூரு கோட்டைக்கே ஆதரவாய் நன்றாய்

    விளக்கு கன்னனூர்ப் பாதையிலே
    காலூரு வம்பலம் விட்டத னாலது
    கடுநடை யடி வாலைப்பெண்ணே!
    49
    தொண்டையுள் முக்கோணக் கோட்டையிலே இதில்

    தொத்திக் கொடிமரம் நாட்டையிலே
    சண்டை செய்துவந்தே ஓடிப்போனாள் கோட்டை
    வெந்து தணலாச்சு வாலைப்பெண்ணே!
    50
    ஆசை வலைக்குள் அகப்பட்டதும் வீடு

    அப்போதே வெந்தே அழிந்திட்டதும்
    பாச வலைவந்து மூடியதும் ஈசன்
    பாதத்தை போற்றடி வாலைப்பெண்ணே!
    51
    அன்ன மிருக்குது மண்டபத்தில் விளை

    யாடித் திரிந்தே ஆண்புலியும் அங்கே
    இன்ன மிருக்குமே யஞ்சு கிளியவை
    எட்டிப் பிடிக்குமே மூன்று கிளியடி வாலைப்பெண்ணே.
    52
    தோப்பிலே மாங்குயில் கூப்பிடு தேபுது

    மாப்பிள்ளை தான்வந்து சாப்பிடவும்
    ஏய்க்கு மிப்படி யஞ்சா றாந்தைஇருந்து
    விழிப்பது பாருங்கடி வாலைப்பெண்ணே.
    53
    மீனு மிருக்குது தூரணி யிலிதை

    மேய்ந்து திரியுங் கலசாவல்
    தேனு மிருக்குது போரையிலே யுண்ணத்
    தெவிட்டு தில்லையே வாலைப்பெண்ணே!
    54
    காக்கை யிருக்குது கொம்பிலே தான்கத

    சாவி லிருக்குது தெம்பிலேதான்
    பார்க்க வெகுதூர மில்லை யிதுஞானம்
    பார்த்தால் தெரியுமே வாலைப்பெண்ணே!
    55
    கும்பி குளத்திலே யம்பல மாமந்தக்

    குளக்க ருவூரில் சேறுமெத்த
    தெம்பிலிடைக் காட்டுப் பாதைக ளாய்வந்து
    சேர்ந்து ஆராய்ந்துபார் வாலைப்பெண்ணே!
    56
    பண்டுமே ஆழக் கிணற்றுக்குள் ளேரெண்டு

    கெண்டை யிருந்து பகட்டுதடி
    கண்டிருந்து மந்தக் காக்கையுமே அஞ்சி
    கழுகு கொன்றது பாருங்கடி!
    57
    ஆற்றிலே அஞ்சு முதலைய டியரும்

    புற்றிலே ரண்டு கரடியடி
    கூற்றுனு மூன்று குருடன டிபாசங்
    கொண்டு பிடிக்கிறான் வாலைப்பெண்ணே!
    58
    முட்டை யிடுகு தொருபற வைமுட்டை

    மோசம் பண்ணு தொருபறவை
    வட்டமிட் டாரூர் கண்ணியி லிரண்டு
    மானுந் தவிக்குது வாலைப்பெண்ணே!
    59
    அட்டமா விண்வட்டப் பொட்டலி லேரண்டு

    அம்புலி நிற்குது தேர் மேலே
    திட்டமாய் வந்து அடிக்குதில் லைதேகம்
    செந்தண லானதே வாலைப்பெண்ணே!
    60
    முக்கோண வட்டக் கிணற்றுக்குள்ளே மூல

    மண்டல வாசிப் பழக்கத்திலே
    அக்கோண வட்டச் சக்கரத்தில் வாலை
    அமர்ந்தி ருக்கிறாள் வாலைப்பெண்ணே!
    61
    இரண்டு காலாலொரு கோபுரமாம் நெடு

    நாளா யிருந்தேஅமிழ்ந்து போகும்
    கண்டபோ துகோபு ரமிருக்கும் வாலை
    காணவு மொட்டாள் நிலைக்கவொட்டாள்.
    62
    அஞ்சு பூதத்தை யுண்டுபண்ணிக் கூட்டி

    ஆரா தாரத்தை யுண்டுபண்ணிக்
    கொஞ்சு பொண்ணாசை யுண்டுபண்ணி வாலை
    கூட்டுகிறாள் காலனை மாட்டுகிறாள்.
    63
    காலனைக் காலால் உதைத்தவளாம் வாலை

    ஆலகா லவிட முண்டவளாம்
    மாளாச் செகத்தைப் படைத்த வளாமிந்த
    மானுடன் கோட்டை இடித்தவளாம்.
    64
    மாதாவாய் வந்தே அமுதந்தந்தாள் மனை

    யாட்டியாய் வந்து சுகங்கொடுத்தாள்
    ஆதரவாகிய தங்கையானாள் நமக்
    காசைக் கொழுந்தியு மாமியானாள்.
    65
    சிரித்து மெல்லப் புரமெரித் தாள்வாலை

    செங்காட்டுச் செட்டியைத் தானுதைத்தாள்
    ஒருத்தி யாகவே சூரர்தமை வென்றாள்
    ஒற்றையாய்க் கஞ்சனைக் கொன்று விட்டாள்.
    66
    இப்படி யல்லொ இவள்தொழி லாமிந்த

    ஈனா மலடி கொடுஞ்சூலி
    மைப்படுங் கண்ணியர் கேளுங்கடி அந்த
    வயசு வாலை திரிசூலி.
    67
    கத்தி பெரிதோ உறைபெரிதோ விவள்

    கண்ணு பெரிதோ முகம் பெரிதோ
    சத்தி பெரிதோ சிவன் பெரிதோ நீதான்
    சற்றே சொல்லடி வாலைப்பெண்ணே!
    68
    அன்னம் பெரிதல்லால் தண்ணீர் பெரிதல்ல

    அப்படி வாலை பெரிதானால்
    பொன்னு பெரிதல்லால் வெள்ளி பெரிதல்ல
    பொய்யாது சொல்கிறேன் கேளுங்கடி.
    69
    மாமிச மானால் எலும்புண்டு சதை

    வாங்கிஓடு கழன்று விடும்
    ஆமிச மிப்படிச் சத்தியென்றே விளை
    யாடிக் கும்மி அடியுங்கடி.
    70
    பண்டு முளைப்ப தரிசியே யானாலும்

    விண்டுமி போனால் விளையாதென்று
    கண்டுகொண்டு முன்னே அவ்வை சொன்னாளது
    உண்டோ இல்லையோ வாலைப்பெண்ணே!
    71
    மண்ணு மில்லாமலே விண்ணுமில்லை கொஞ்சம்

    வாசமில் லாமலே பூவுமில்லை
    பெண்ணு மில்லாமலே ஆணுமில் லையிது
    பேணிப் பாரடி வாலைப்பெண்ணே!
    72
    நந்த வனத்திலே சோதியுண்டு நிலம்

    நத்திய பேருக்கு நெல்லுமுண்டு
    விந்தையாய் வாலையைப் பூசிக்க முன்னாளில்
    விட்ட குறைவேணும் வாலைப்பெண்ணே!
    73
    வாலையைப் பூசிக்கச் சித்தரானார் வாலைக்

    கொத்தாசை யாய்ச்சிவ கர்த்தரானார்
    வேலையைப் பார்த்தல்லோ கூலிவைத்தா ரிந்த
    விதந்தெ ரியுமோ வாலைப்பெண்ணே!
    74
    வாலைக்கு மேலான தெய்வமில்லை மானங்

    காப்பது சேலைக்கு மேலுமில்லை
    பாலுக்கு மேலான பாக்கியமில்லை வாலைக்
    கும்மிக் மேலான பாடலில்லை.
    75
    நாட்டத்தைக் கண்டா லறியலாகு மந்த

    நாலாறு வாசல் கடக்கலாகும்
    பூட்டைக் கதவைத் திறக்கலா கும்மிது
    பொய்யல்ல மெய்யடி வாலைப்பெண்ணே!
    76
    ஆணும் பெண்ணும்கூடி யானதால் பிள்ளை

    ஆச்சுதென் றேநீரும் பேசுகின்றீர்
    ஆணும் பெண்ணுங்கூடி யானதல்லோ பேதம்
    அற்றொரு வித்தாச்சு வாலைப்பெண்ணே!
    77
    இன்றைக் கிருப்பதும் பொய்யல்ல வேவீடே

    என்வாழ்க்கை யென்பதும் பொய்யல்லவே
    அன்றைக் கெழுத்தின் படிமுடியும் வாலை
    ஆத்தாளைப் போற்றடி வாலைப்பெண்ணே!
    78
    வீணாசை கொண்டு திரியாதே இது

    மெய்யல்ல பொய்வாழ்வு பொய்க்கூடு
    காணாத வாலையைக் கண்டுகொண்டால் காட்சி
    காணலாம் ஆகாயம் ஆளலாமே.
    79
    பெண்டாட்டி யாவதும் பொய்யல்லவோ பெற்ற

    பிள்ளைக ளாவதும் பொய்யல்லவோ?
    கொண்டாட்ட மானதகப்பன் பொய்யே முலை
    கொடுத்த தாயும் நிசமாமோ?
    80
    தாயும் பெண்டாட்டியும் தான்சரி யேதன்யம்

    தாமே இருவருந் தாங்கொடுத்தார்
    காயும் பழமுஞ் சரியாமோ உன்றன்
    கருத்தைப் பார்த்துக்கொள் வாலைப்பெண்ணே!
    81
    பெண்டாட்டி மந்தைமட்டும் வருவாள் பெற்ற

    பிள்ளை மசானக் கரையின் மட்டும்
    தொண்டாட்டுத் தர்மம் நடுவினிலே வந்து
    சேர்ந்து பரகதி தான்கொடுக்கும்.
    82
    பாக்கியமும் மகள் போக்கியமும் ராச

    போக்கியமும் வந்த தானாக்கால்
    சீக்கிரந் தருமஞ் செய்யவேண்டும் கொஞ்சந்
    திருப்ப ணிகள்மு டிக்கவேண்டும்.
    83
    திருப்பணி களைமுடித் தோரும் செத்துஞ்

    சாகாத பேரி லொருவரென்றும்
    அருட் பொலிந்திடும் வேதத்தி லேயவை
    அறிந்து சொன்னாளே வாலைப்பெண்ணே!
    84
    மெத்தை தனிலே படுத்திருந் துநாமும்

    மெல்லிய ரோடு சிரிக்கும்போது
    யுத்தகாலன் வந்துதான் பிடித்தால் நாமும்
    செத்த சவமடி வாலைப்பெண்ணே!
    85
    ஏழை பனாதிக னில்லையென்றால் அவர்க்கு

    இருத்தால் அன்னங் கொடுக்க வேண்டும்
    நாளையென்று சொல்ல லாகாதே என்று
    நான்மறை வேத முழங்குதடி.
    86
    பஞ்சை பனாதி யடியாதே அந்தப்

    பாவந் தொலைய முடியாதே
    தஞ்சமென்றோரைக் கெடுக்காதே யார்க்கும்
    வஞ்சனை செய்ய நினையாதே.
    87
    கண்டதுங் கேட்டதுஞ் சொல்லாதே கண்ணில்

    காணாத வுத்தரம் விள்ளாதே
    பெண்டாட்டிக் குற்றது சொல்லாதே பெற்ற
    பிள்ளைக் கிளப்பங் கொடுக்காதே.
    88
    சிவன்ற னடியாரை வேதியரை சில

    சீர்புல ஞானப் பெரியோரை
    மவுன மாகவும் வையாதே அவர்
    மனத்தை நோகவும் செய்யாதே.
    89
    வழக்க ழிவுகள் சொல்லாதே கற்பு

    மங்கையர் மேல்மனம் வையாதே
    பழக்க வாசியைப் பார்த்துக்கொண் டுவாலை
    பாதத்தைப் போற்றடி வாலைப்பெண்ணே!
    90
    கூடிய பொய்களைச் சொல்லாதே பொல்லாக்

    கொளைக ளவுகள் செய்யாதே
    ஆடிய பாம்பை யடியா தேயிது
    அறிவு தானடி வாலைப்பெண்ணே!
    91
    காரிய னாகினும் வீரியம் பேசவும்

    காணா தென்றவ்வை சொன்னாளே
    பாரினில் வம்புகள் செய்யாதே புளிப்
    பழம்போ லுதிர்த்து விழுந்தானே.
    92
    காசார் கள்பகை செய்யா தேநடுக்

    காட்டுப் புலிமுன்னே நில்லாதே
    தேசாந்தி ரங்களுஞ் செல்லா தேமாய்கைத்
    தேவடி யாள்தனம் பண்ணாதே!
    93
    தன்வீடி ருக்க அசல்வீடு போகாதே

    தாயார் தகப்பனை வையாதே
    உன்வீட்டுக் குள்ளேயே யூக மிருக்கையில்
    ஓடித் திரிகிறாய் வாலைப்பெண்ணே!
    94
    சாதி பேதங்கள் சொல்லுகிறீர் தெய்வம்

    தானென் றொருவுடல் பேதமுண்டோ ?
    ஓதிய பாலதி லொன்றாகி யதிலே
    உற்பத்தி நெய்தயிர் மோராச்சு.
    95
    பாலோடு முண்டிடு பூனையு முண்டது

    மேலாக காணவுங் காண்பதில்லை
    மேலந்த ஆசையைத் தள்ளிவிட் டுள்ளத்தில்
    வேண்டிப் பூசையைச் செய்திடுங்கள்.
    96
    கோழிக் காறுகாலுண் டென்றுசொன்னேன் கிழக்

    கூனிக் மூன்றுகா லென்றுசொன் னேன்
    கூனிக்கிரண் டெழுத்தென்று சொன்னேன் முழுப்
    பானைக்கு வாயில்லை யென்றுசொன்னேன்.
    97
    ஆட்டுக் கிரண்டுகா லென்றுசொன் னேன்நம்

    பானைக்குப் பானைக்குநிற்கு மேல்சூல்
    மாட்டுக்கு காலில்லை யென்றுசொன்னேன் கதை
    வகையைச் சொல்லடி வாலைப்பெண்ணே!
    98
    கோயிலு மாடும் பறித்தவ னுங்களறிக்

    கூற்று மேகற் றிருந்தவனும்
    வாயில்லாக் குதிரை கண்டவனும் மாட்டு
    வகை தெரியுமோ வாலைப்பெண்ணே!
    99
    இத்தனை சாத்திரஞ் தாம்படித்தோர் செத்தார்

    என்றா லுலகத்தோர் தாம்சிரிப்பார்
    செத்துப் போய்கூட கலக்கவேண்டும் அவன்
    தேவர்க ளுடனே சேரவேண்டும்.
    100
    உற்றது சொன்னாக்கா லற்றது பொருந்தும்

    உண்டோ உலகத்தில் அவ்வைசொன்னாள்
    அற்றது பொருந்து முற்றது சொன்னவன்
    அவனே குருவடி வாலைப்பெண்ணே!
    101
    பூரணம் நிற்கும் நிலையறியான் வெகு

    பொய்சொல்வான் கோடி மந்திரஞ்சொல்வான்
    காரணகுரு அவனு மல்ல இவன்
    காரியகுரு பொருள் பறிப்பான்.
    102
    எல்லா மறிந்தவ ரென்றுசொல்லி இந்தப்

    பூமியி லேமுழு ஞானியென்றே
    உல்லாச மாக வயிறு பிழைக்கவே
    ஓடித் திரிகிறார் வாலைப்பெண்ணே!
    103
    ஆதிவா லைபெரி தானா லும்மவள்

    அக்காள் பெரிதோ? சிவன் பெரிதோ
    நாதிவா லைபெரி தானாலும் அவள்
    நாயக னல்ல சிவம்பெரிது.
    104
    ஆயுசு கொடுப்பாள் நீரிழி வுமுதல்

    அண்டாது மற்ற வியாதியெல்லாம்
    பேயும் பறந்திடும் பில்லிவி னாடியில்
    பத்தினி வாலைப்பெண் பேரைச்சொன்னால்.
    105
    நித்திரை தன்னிலும் வீற்றிருப்பா ளெந்த

    நேரத்தி லும்வாலை முன்னிருப்பாள்
    சத்துரு வந்தாலும் தள்ளிவைப்பாள் வாலை
    உற்றகா லனையும் தானுதைப்பாள்.
    106
    பல்லாயி ரங்கோடி யண்டமுதல் பதி

    னாங்கு புவனமும் மூர்த்திமுதல்
    எல்லாந் தானாய்ப் படைத்தவளாம் வாலை
    எள்ளுக்கு ளெண்ணைய்போல நின்றவளாம்.
    107
    தேசம் புகழ்ந்திடும் வாலைக்கும்மித் தமிழ்

    செய்ய எனக்குப தேசஞ்செய்தாள்
    நேசவான் வீரப் பெருமாள் குருசாமி
    நீள்பதம் போற்றிக்கொண் டாடுங்கடி.
    108
    ஆறு படைப்புகள் வீடுகடை சூத்ர

    அஞ்செழுத் துக்கும் வகையறிந்து
    கூறுமுயர் வல வேந்திரன் துரைவள்ளல்
    கொற்றவன் வாழக்கொண் டாடுங்கடி.
    109
    ஆடுங்கள் பெண்டுகள் எல்லோரு மந்த

    அன்பான கொங்கணர் சொன்னதமிழ்
    பாடுங்கள் சித்தர்கள் எல்லோரும் வாலை
    பாதத்தைப் போற்றிக் கொண்டாடுங்கடி.
    110
    சித்தர்கள் வாழி சிவன்வா ழிமுனி

    தேவர்கள் வாழி, ரிஷிவாழி,
    பத்தர்கள் வாழி, பதம்வா ழிகுரு
    பாரதி வாலைப்பெண் வாழியவே!