21 ஜனவரி 2009
நாட்டுப்புற பாடல்கள் (பெண்ணுக்கு அறிவுரை) - 6
அறிவிருந்தால் போதுமடி -சுண்டெலிப்பெண்ணே 1
காத்திருந்தவன் பொண்டாட்டியைச் –சுண்டெலிப்பெண்ணே
நேத்துவந்தவன் கொண்டுபோனான் -சுண்டெலிப்பெண்ணே 2
அதனாலேதான் பயமாஇருக்கு –சுண்டெலிப்பெண்ணே
அக்கம்பக்கம் போகாதேடி ©சுண்டெலிப்பெண்ணே 3
கண்ணடிக்கிற பயலைக்கண்டால் –சுண்டெலிப்பெண்ணே
கண்ணெடுத்துப் பார்க்கேதேடி ©சுண்டெலிப்பெண்ணே 4
கடைக்குப்போற பயலைக்கண்டால் –சுண்டெலிப்பெண்ணே
கையலைப் பழைக்காதடி -சுண்டெலிப்பெண்ணே 5
காவாலிப் பயலைக்கண்டால் –சுண்டெலிப்பெண்ணே
காலாட்டிக்கிட்டு நிற்காதடி -சுண்டெலிப்பெண்ணே 6
நெற்றியிலே பொட்டுவைச்சு –சுண்டெலிப்பெண்ணே
நெருங்கிநிண்ணு பேசாதேடி ©சுண்டெலிப்பெண்ணே 7
புருவத்திலே மையைவச்சு –சுண்டெலிப்பெண்ணே
பொய்ஒண்ணுமே சொல்லாதேடி -சுண்டெலிப்பெண்ணே 8
ஜோட்டிலே மாட்டல்வச்சு –சுண்டெலிப்பெண்ணே
ஜோக்குநடை நடக்காதேடி -சுண்டெலிப்பெண்ணே 9
வெற்றிலைபாக்குப் போட்டுகிட்டுச்-சுண்டெலிப்பெண்ணே
வெறும்பயலைப் பார்க்கேதேடி -சுண்டெலிப்பெண்ணே 10
புகையிலையைப் போட்டுக்கிட்டுச் -சுண்டெலிப்பெண்ணே
பொடிப்பயலைப் பார்க்கதடி சுண்டெலிப்பெண்ணே 11
வாறவனையும் போறவனையும் –சுண்டெலிப்பெண்ணே
வழிமறிச்சுப் பேசாதேடி -சுண்டெலிப்பெண்ணே 12
சந்தைக்குப்போற சனங்களைநீ –சுண்டெலிப்பெண்ணே
ஜாடைப் பேச்சுப் பேசாதேடி -சுண்டெலிப்பெண்ணே 13
சலுக்காரு ரோட்டிலேநீ –சுண்டெலிப்பெண்ணே
சண்டைகிண்டை போடாதேடி -சுண்டெலிப்பெண்ணே 14
பக்கத்துவீட்டுப் பெண்களைச் –சுண்டெலிப்பெண்ணே
பரிகாசம்நீ பண்ணாதேடி -சுண்டெலிப்பெண்ணே 15
இடுப்புச் சிறுத்தவளே -சுண்டெலிப்பெண்ணே
இறுமாப்புநீ பேசாதேடி -சுண்டெலிப்பெண்ணே 16
மண்டை பெருத்தவளே –சுண்டெலிப்பெண்ணே
தண்டுமுண்டு பேசாதேடி -சுண்டெலிப்பெண்ணே 17
விரிச்சநெற்றிக் காரியே –சுண்டெலிப்பெண்ணே
வீறாப்புநீ பேசாதேடி -சுண்டெலிப்பெண்ணே 18
இரும்புநெஞ்சு படைத்த –சுண்டெலிப்பெண்ணே
குறும்புபொண்ணும்நீ செய்யாதேடி -சுண்டெலிப்பெண்ணே 19
மயிர்சுருண்டு நீண்டுவளர்ந்த -சுண்டெலிப்பெண்ணே
மரியாதைகெட்டுத் திரியாதேடி -சுண்டெலிப்பெண்ணே 20
உருட்டிஉருட்டி முழிக்கும் -சுண்டெலிப்பெண்ணே
திருட்டுத்தனம் பண்ணாதேடி -சுண்டெலிப்பெண்ணே 21
உதட்டழக் காரியேடி –சுண்டெலிப்பெண்ணே
ஒருத்தரையும் வையாதேடி -சுண்டெலிப்பெண்ணே 22
கிளiமூக்குக் காரியேடி -சுண்டெலிப்பெண்ணே
கிரித்துவரும் பண்ணாதேடி -சுண்டெலிப்பெண்ணே 23
பல்வரிசைக் காரியேடி -சுண்டெலிப்பெண்ணே
பழிஇழுத்துப் போடாதேடி -சுண்டெலிப்பெண்ணே 24
குறுங்கழுத்துக் காரியேடி -சுண்டெலிப்பெண்ணே
கோள்குண்டுணி சொல்லாதேடி -சுண்டெலிப்பெண்ணே 25
நாட்டுப்புற பாடல்கள் (குடும்பப் பாட்டுகள்) - 5
மண்ணை நம்பி ஏலேலோ மரம்இருக்க ஐலசா
மரத்தை நம்பி ஏலேலோ கிளைஇருக்க ஐலசா
கிளையை நம்பி ஏலேலோ இலைஇருக்க ஐலசா
இலையைநம்பி ஏலேலோ பூவிருக்க ஐலசா
பூவைநம்பி ஏலேலோ பிஞ்சிருக்க ஐலசா
பிஞ்சைநம்பி ஏலேலோ காயிருக்க ஐலசா
காயைநம்பி ஏலேலோ பழம்இருக்க ஐலசா
பழத்தைநம்பி ஏலேலோ மகன்இருக்க ஐலசா
மகனை நம்பி ஏலேலோ நீஇருக்க ஐலசா
உன்னைநம்பி ஏலேலோ நான்இருக்க ஐலசா
என்னைநம்பி ஏலேலோ எமன்இருக்க ஐலசா
எமனைநம்பி ஏலேலோ காடிருக்க ஐலசா
காட்டைநம்பி ஏலேலோ புல்லிருக்க ஐலசா.
நாட்டுப்புற பாடல்கள் (விறகொடிக்கும் பெண்) - 4
விறகொடிக்கப் போறபெண்ணே -ஏதில்லலோ லேலோ 1
காலுனக்குப் பொசுக்கலையோ -ஏதில்லலோ லேலோ
கற்றாழைமுள்ளுக் குத்தலையோ -ஏதில்லலோ லேலோ 2
காலுப் பொசுக்கினாலும் -ஏதில்லலோ லேலோ
கற்றாழைமுள்ளுக் குத்தினாலும் -ஏதில்லலோ லேலோ 3
காலாக் கொடுமையாலே -ஏதில்லலோ லேலோ
கஷ்டப் படக் காலமாச்சு -ஏதில்லலோ லேலோ 4
கஞ்சிக் கலயங்கொண்டு -ஏதில்லலோ லேலோ
காட்டுவழி போறபொண்ணே -ஏதில்லலோ லேலோ 5
கல்உனக்குக் குத்தலையோ -ஏதில்லலோ லேலோ
கல்லளுத்தி வந்திடாதோ -ஏதில்லலோ லேலோ 6
கல்எனக்குக் குத்திட்டாலும் -ஏதில்லலோ லேலோ
கல்லளுத்தி வந்திட்டாலும் -ஏதில்லலோ லேலோ 7
விதிவசம்போ லாகணுமே -ஏதில்லலோ லேலோ
வெயிலிலேயும் நடக்கணுமே -ஏதில்லலோ லேலோ 8
மத்தியான வேளையிலே -ஏதில்லலோ லேலோ
வளைகுலுங்கப் போறபொண்ணே -ஏதில்லலோ லேலோ 9
கஞ்சி குடிக்கையிலே -ஏதில்லலோ லேலோ
கடித்துக்கொள்ள என்னசெய்வாய் -ஏதில்லலோ லேலோ 10
கஞ்சிகண்டு குடிக்கிறதே -ஏதில்லலோ லேலோ
கடவுள்செய்த புண்ணியமே -ஏதில்லலோ சாமி 11
கம்பஞ்கஞ்சிக் கேற்றாப்போல -ஏதில்லலோ லேலோ
காணத்துவையல் அரைச்சிருக்கேன் -ஏதில்லலோ சாமி 12
கஷ்டப்பட்டு பட்டுப்பட்டு -ஏதில்லலோ லேலோ
கழுத்தொடியச் சுமக்கும்பொண்ணே -ஏதில்லலோ லேலோ 13
எங்கேபோய் விறகொடித்து -ஏதில்லலோ லேலோ
என்னசெய்யப் போறாய்பெண்ணே -ஏதில்லலோ லேலோ 14
காட்டுக்குள்ளே விறகொடித்து –ஏதில்லலோ
சாமி வீட்டுக்கதைச் சுமந்துவந்து -ஏதில்லலோ சாமி 15
கால்ரூபாய்க்கு விறகுவிற்று -ஏதில்லலோ லேலோ
கஞ்சிகண்டு குடிக்கணுமே -ஏதில்லலோ சாமி 16
நாட்டுப்புற பாடல்கள் (ஆள் தேடுதல்) - 3
தெருத்தெருவாய் தேடி வாறான் - ஏலங்கிடி லேலோ
திண்ணை திண்ணையாத் தாண்டிவாரான் -ஏலங்கிடி லேலோ 1
சந்திலே பொந்திலே சாஞ்சுபார்த்து - ஏலங்கிடி லேலோ
சயிக்கினையும் செஞ்சுவாறான் -ஏலங்கிடி லேலோ 2
முன்னுக்கும் பின்னுக்கும் பார்த்துப் பார்த்து -ஏலங்கிடி லேலோ
முணுமுணுன்னு பேசிவாறான் -ஏலங்கிடி லேலோ 3
ஆளுப் பிடிக்க ஏழுமணிக்கு -ஏலங்கிடி லேலோ
ஆலாப் பறந்து வாறான் -ஏலங்கிடி லேலோ 4
அறுப்பறுக்க ஆளுக்கெல்லாம் -ஏலங்கிடி லேலோ
அட்டுவான்சும் கொடுத்துவாறான் -ஏலங்கிடி லேலோ 5
ஆளுக்கொரு அரிவாள்தானும் -ஏலங்கிடி லேலோ
ஆறுமுகக் கயிறுரெண்டும் -ஏலங்கிடி லேலோ 6
சும்மாடும் சேர்த்தெடுத்து -ஏலங்கிடி லேலோ
சுறுசுறுப்பாய்ப் போறாங்களாம் -ஏலங்கிடி லேலோ 7
நாட்டுப்புற(கிராமிய) பாடல்கள் (சந்தனத் தேவன் பெருமை) - 2
ஏழைக்கேற்ற கரட்டுக்காடு- ஏலங்கிடி லேலோ 1
சந்தனம் காடுதானும்-ஏலங்கிடி லேலோ
சரியான பருத்திக்காடு - ஏலங்கிடி லேலோ 2
எல்லாரு வீடுதானும்-ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற குச்சுவீடு - ஏலங்கிடி லேலோ 3
சந்தனம் வீடுதானும் - ஏலங்கிடி லேலோ
சரியான மச்சுவீடு - ஏலங்கிடி லேலோ 4
எல்லாரும் கட்டும்வேட்டி-ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற மல்லுவேட்டி - ஏலங்கிடி லேலோ 5
சந்தனம் கட்டும்வேட்டி - ஏலங்கிடி லேலோ
சரியான சரிகைவேட்டி- ஏலங்கிடி லேலோ 6
எல்லாரும் போடும்சட்டை-ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற நாட்டுச்சட்டை - ஏலங்கிடி லேலோ 7
சந்தனம் போடும்சட்டை -ஏலங்கிடி லேலோ
சரியான பட்டுச்சட்டை - ஏலங்கிடி லேலோ 8
எல்லாரு திருட்டுத்தானும் -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற ராத்திருட்டு -ஏலங்கிடி லேலோ 9
சந்தனம் திருட்டுத்தானும் -ஏலங்கிடி லேலோ
சரியான மாயத்திருட்டு -ஏலங்கிடி லேலோ 10
எல்லாரும் தின்னும்சோறு - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற பெருநெல்சோறு -ஏலங்கிடி லேலோ 11
சந்தனம் தின்னும்சோறு -ஏலங்கிடி லேலோ
சரியான சம்பாச்சோறு -ஏலங்கிடி லேலோ 12
எல்லாரும்ஏறும் வண்டி -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கட்டைவண்டி- ஏலங்கிடி லேலோ 13
சந்தனம் ஏறும் வண்டி-ஏலங்கிடி லேலோ
சரியான ஜட்காவண்டி -ஏலங்கிடி லேலோ 14
எல்லாரும் வெட்டும்கத்தி- ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற மொட்டைக்கத்தி - ஏலங்கிடி லேலோ 15
சந்தனம் வெட்டும் கத்தி - ஏலங்கிடி லேலோ
சரியான பட்டாக்கத்தி- ஏலங்கிடி லேலோ 16
எல்லாருங் கட்டும்பொண்ணு-ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கறுத்தபொண்ணு - ஏலங்கிடி லேலோ 17
சந்தனம் கட்டும்பொண்ணு -ஏலங்கிடி லேலோ
சரியான சிவத்தபொண்ணு-ஏலங்கிடி லேலோ 18
எல்லாரும் போடும்மிஞ்சி -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கல்வெள்ளiமிஞ்சி -ஏலங்கிடி லேலோ 19
சந்தனம் போடும்மிஞ்சி- ஏலங்கிடி லேலோ
சரியான வெள்ளiமிஞ்சி-ஏலங்கிடி லேலோ 20
எல்லாரும் போடும் வெற்றிலை - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற முரட்டுவெற்ற’iலை -ஏலங்கிடி லேலோ 21
சந்தனம் போடும் வெற்றிலை -ஏலங்கிடி லேலோ
சரியான கொழுந்துவெற்றிலை -ஏலங்கிடி லேலோ 22
எல்லாரு துணிப்பெட்டியும் -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கூடைப்பெட்டியாம்-ஏலங்கிடி லேலோ 23
சந்தனம் துணிப்பெட்டிதான் -ஏலங்கிடி லேலோ
சரியான தேக்குப்பெட்டியாம் -ஏலங்கிடி லேலோ 24
எல்லாரும் படுக்குங்கட்டில்- ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கயிற்றுக்கட்டில-ஏலங்கி லேலோ 25
சந்தனம் படுக்குங்கட்டில-ஏலங்கிடி லேலோ
சரியான சந்தனக்கட்டில- ஏலங்கிடி லேலோ 26
எல்லாரு கழுத்திலேதான்-ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற செவந்திப்பூவாம் - ஏலங்கிடி லேலோ 27
சந்தனம் கழுத்திலேதான் -ஏலங்கிடி லேலோ
சரியான செம்பகப்பூவாம் - ஏலங்கிடி லேலோ 28
எல்லாரும் குடிக்கிறது -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கள்ளுத்தண்ணீர் -ஏலங்கிடி லேலோ 29
சந்தனம் குடிக்கிறது -ஏலங்கிடி லேலோ
சரியான சாப்புத்தண்ணீர் -ஏலங்கிடி லேலோ 30
எல்லாரும் சாப்பிடும் இலை -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற ஆலம்இலை -ஏலங்கிடி லேலோ 31
சந்தனம் சாப்பிடும் இலை -ஏலங்கிடி லேலோ
சரியான வாழைஇலை -ஏலங்கிடி லேலோ 32
எல்லாரும் படுக்கும் பாயி -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கோரைப்பாயி -ஏலங்கிடி லேலோ 33
தனம் படுக்கும்பாயி -ஏலங்கிடி லேலோ
சரியான ஜப்பான் பாயி -ஏலங்கிடி லேலோ 34
எல்லாரும் போடும்மோதிரம் -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற ஈயமோதிரம் -ஏலங்கிடி லேலோ 35
சந்தனம் போடும் மோதிரம் -ஏலங்கிடி லேலோ
சரியான வைரமோதிரம் -ஏலங்கிடி லேலோ 36
எல்லாரும் பண்ணும்சவரம் -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற முகச்சவரம் - ஏலங்கிடி லேலோ 37
சந்தனம் பண்ணுஞ்சவரம் - ஏலங்கிடி லேலோ
சரியான தலைச்சவரம் - ஏலங்கிடி லேலோ 38
எல்லாரும் குளiக்கிறது - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற ஆற்றுத்தண்ணீர் - ஏலங்கிடி லேலோ 39
சந்தனம் குளiக்கிறது - ஏலங்கிடி லேலோ
சரியான ஊற்றுத்தண்ணீர் - ஏலங்கிடி லேலோ 40
நாட்டுப்புற பாடல்கள் (எங்கும் நெல்) - 1
களத்துக்குள்ளே காலைவைத்து -ஏலங்கிடி லேலோ
கிழட்டுமாடும் மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 1
கிழக்கத்திமா டெல்லாங்குடி- ஏலங்கிடி லேலோ
கீழேபார்த்து மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 2
மேற்கத்திமா டெல்லாங்குடி- ஏலங்கிடி லேலோ
மேலேபார்த்து மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 3
வடக்கத்திமா டெல்லாங்குடி-ஏலங்கிடி லேலோ
வாரிவாரி மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 4
தெற்கத்திமா டெல்லாங்குடி- ஏலங்கிடி லேலோ
திரட்டித் திரட்டி மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 5
நாட்டியக் குதிரைபோல - ஏலங்கிடி லேலோ
நாலுகாதில் ம’த’க்குதையா - ஏலங்கிடி லேலோ 6
குள்ளiமாடும் புள்ளiமாடும் - ஏலங்கிடி லேலோ
குதிச்சுக்குதிச்சு மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 7
பால்கொடுக்கிற பசுவுங்கூட - ஏலங்க’டி லேலோ
பையப்பைய மித’iக்குதையா - ஏலங்கிடி லேலோ 8
பல்லுப்போடாத காளைக்கன்றும் - ஏலங்கிடி லேலோ
பால் மறந்த கிடாக்கன்றும் -ஏலங்கிடி லேலோ 9
பரந்துபரந்து மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ
பரந்துபரந்து மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 10
எல்லாமாடும் சேர்ந்துதானும்- ஏலங்கிடி லேலோ
ஏகமாத்தான் மிதிக்குதையா -ஏலங்கிடி லேலோ 11
கால்படவும் கதிருபூரா - ஏலங்கிடி லேலோ
கழலுதையா மணிமணியா - ஏலங்கிடி லேலோ 12
நெல்லுவேறே வைக்கோல் வேறே- ஏலங்கிடி லேலோ
நல்லாஇருக்கு பார்க்கப்பார்க்க - ஏலங்கிடி லேலோ 13
வயிற்றுப்பசி மாட்டுக்கெல்லாம் - ஏலங்கிடி லேலோ
வைக்கோலோடே போகுதையா - ஏலங்கிடி லேலோ 14
ஆண்பிள்ளைக்கும் பெண்பிள்ளைக்கும்- ஏலங்கிடி லேலோ
ஆளுக்கொரு மரக்கால் நெல்லு - ஏலங்கிடி லேலோ 15
அலங்கன் அலங்கிரெண்டுபேருக்கும் - ஏலங்கிடி லேலோ
ஆறுமரக்கால் நெல்லுக் கூலி -ஏலங்கிடி லேலோ 16
வண்டிவண்டியா நெல்லுத்தானும் -ஏலங்கிடி லேலோ
வருகுதையா அரண்மனைக்கு- ஏலங்கிடி லேலோ 17
அரண்மனைக் களஞ்சியம்பார்க்க- ஏலங்க’டி லேலோ
ஆயிரங்கண் வேணுமையா- ஏலங்க’டி லேலோ 18
புழுங்கல்நெல்லுக் குத்தித்தானும் - ஏலங்கிடி லேலோ
புள்ளைகளுக்கு வேகுதையா -ஏலங்கிடி லேலோ 19
வெள்ளiசெவ்வா வேளையிலே -ஏலங்கிடி லேலோ
வேகுதையா காய்கறியும்-ஏலங்கிடி லேலோ 20
கும்பல்கும்பலா நெல்லுத்தானும் - ஏலங்கிடி லேலோ
குலுமையெல்லாம் நிறைக்குதையா - ஏலங்கிடி லேலோ 21
தப்புநெல்லும் தவறுநெல்லும- ஏலங்கிடி லேலோ
தாராளமாக் கெடக்குதையா - ஏலங்கிடி லேலோ 22
கூனற்கிழவி கூடைமுறத்தை -ஏலங்கிடி லேலோ
கூனிக்கூனிக் கொண்டு போறாள் -ஏலங்கிடி லேலோ 23
கூட்டிப் பொறுக்கிக் கூடையை ரொப்பி- ஏலங்கிடி லேலோ
வீட்டுக்குப் போறா வேடிக்கையாதான் - ஏலங்கிடி லேலோ 24
சந்துபொந்தெல்லாம் நெல்லுக்கிடக்கு - ஏலங்கிடி லேலோ
சாக்கடையெல்லாம் நெல்லுக்கிடக்கு- ஏலங்கி’டி லேலோ 25
வயலெல்லாம் நெல்லுக்கிடக்கு - ஏலங்கிடி லேலோ
வழியெல்லாம் நெல்லுக்கிடக்கு - ஏலங்கிடி லேலோ 26
03 ஜனவரி 2009
செளந்தர்யலஹரி
செளந்தர்யலஹரி ஸ்ரீ ஆதிசங்கரர் அவர்கள் அருளியது. இவை அம்பாள் ஸ்லோகங்கள்.
இந்த ஸ்லோகங்களை சொல்லி வந்தால் உங்கள்வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் வேண்டுதலுக்காக ஒவ்வொரு ஸ்லோகத்திலும் தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான ஸ்லோகங்களை கூறி வேண்டியதை பெறலாம். எல்லா ஸ்லோகங்களையும் சொல்வது சாலச் சிறந்தது.
சொளந்தர்லஹரி அழகு வெள்ளம் எனற் பெயரில் கிருபானந்தவாரியார் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.
ஆதிசங்கரர் சமஸ்கிருதத்தில் அருளியதும், அதன் தமிழாக்கமும் இங்கு அளிக்கப்படுகிறது. இந்த ஸ்லோகங்களை கூறி அம்மன் அருள் பெறுங்கள்.
*சுபம், திருவும் சித்தி பெற*
சமஸ்கிருதம்
சிவ: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திது -மபிந
அதஸ் -த்வா - மாராத்யாம் ஹரி - ஹர -விரிஞ்சாதிபி - ரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதம்க்ருத - புண்ய: ப்ரபவவதி// (1)
*தமிழாக்கம்:*
திங்களைச் சடையில் தரித்திடும் சிவன்பால்
தேவிநீ அன்புடன் ஒன்றித்
தங்கிடி லன்றி இயங்கிடும் திறமும்
இறைவனே இழந்திடும் என்னில்
கங்கைவார் சடையன் அயன்திரு மாலூம்
கைதொழுதேந்தியே போற்றும்
பங்கயச் செல்வி, புண்ணிய மிலார் நின்
பாதமே தொழுவதும் எளிதோ
*உலகம் உன்வசம்*
சமஸ்கிருதம்
த தீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண- பங்கேருஹ - பவம்
விரிஞ்சி: ஸஞ்சிவன் விரசயதி லோகா -நவிகலம்ந
வஹத்யேனம் செளரி: கதமபி ஸஹஸ்ரேண - சிரஸாம்
ஹர: ஸம்ஷுத்யைநம் பஜதி பஸிதோ தூலந -விதிம் (2)
*தமிழாக்கம்:*
தாயுன்றன் பாதத் துகளினைக் கொண்டு
சதுர்முகன் உலகினைப் படைக்க
தூயதோர் ஆதி சேடன துருவில்
சுடர்முடி ஆயிரம் கொண்ட
மாயவன் உன்றன் மலரடித் துகளாம்
மாபெரு முலகுகள் சுமக்க
நாயகன் சிவனும் மேனியி லதனை
நலமுறப் பூசியே மகிழ்வான்.
*சகல கலையும் அமையும்*
சமஸ்கிருதம்
அவித்யானா - மந்தஸ்திமிர- மிஹிர - த்வீப - நகரீ
ஜடானாம் சைதன்ய -ஸ்தபக - மகரந்த -ஸ்ருதிஜரீ
தரித்ராணாம் - சிந்தாமணி -குண நிகா ஜன்மஜலதெள
நிமக்னானாம் தம்ஷ்ட்ரா முரரிபு - வராஹஸ்ய பவதி (3)
*தமிழாக்கம்:*
அறிவிலார் உளத்தே அகத்திருள் மடிய
அருணநல் உதயமாய்த் தோன்றும்
செறிந்திடு கற்பக மலர் மகரந்தம்
தேர்ந்த நல் ஞானமாய் இலகும்
வறியவர் துயர் துடைத்திடும் சிந்தா
மணியென விளங்கிடும், ஆழி
பிறவினின் றெடுக்க முராரியின் வராகப்
பிறையெயி றாகுமத் துகளே!
*பயநிவர்த்தி ரோக நிவர்த்தி*
சமஸ்கிருதம்
த்வதன்ய: பாணிப்யா - மபயவரதோ தைவதகண:
த்வமேகா நைவாசி ப்ரகடித - வராாபீத்யபிநயா
பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்சாஸமதிகம்
சரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபுணெள (4)
*தமிழாக்கம்:*
விஞ்சையே புரியும் திருவடியுடையாய்
வேறுள தெய்வங்கள் எல்லாம்
அஞ்சுவோர் தமக்கு அஸ்தமே காட்டி
அபயமே தருவதற் கழைக்கும்
மஞ்சுபா ஷிணியே நீயெதும் காட்டி
மனிதரை அழைத்திலை எனினும்
தஞ்சமென் றுந்தன் தாளினை அடைந்தார்
சகலமும் பெற்றுவாழ்ந் திடுவார்.
*குடும்ப ஒற்றுமை நிலவும்*
சமஸ்கிருதம்
ஹரிஸ்-த்வா-மராத். ப்ரணத -ஜன செளபாக்ய - ஜனனீம்
புரா நரீ பூத்வா புரரிபுமபி ஷோப -மன்யத்
ஸ்மரோஸ்பி த்வாம் நத்வா ரதி -நயன- லேஹ்யன வபுஷா
முனீனா -மப்- யந்த- ப்ரவதி ஹி மோஹாய மஹேதாம் (5)
*தமிழாக்கம்:*
மாந்தருக்கே செளபாக்கிய மருள்வோய்
மாலுனைப் பூசனை புரிந்து
போந்துதன் எழிலார் மோகினி வடிவா
புராரியும் மயங்கிடப் புரிந்தாள்
ஏந்திநின் பாதம் போற்றிய காமன்
இரதியும் மயங்கெழில் வெய்தி
சாந்தமார் முனிவர் தம்மையும் மயக்கும்
சதுரனாய் ஆயின னன்றே.
நன்றி...........
காயத்ரீ மந்திரம்
காயத்ரீ தேவி மந்திரம்.
ஓம் பூர்: புவ: ஸூவ: தத்ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந ப்ரயோதயாத்.
ஸ்ரீ கணபதி காயத்ரீ:
ஓம் தற்புருஷாய வித்மஹே: வக்ர துண்டாய
தீமஹி
தந்நோ தந்தி: ப்ரயோதயாத்.
ஸ்ரீ விஷ்ணு காயத்ரீ:
ஓம் நாராயணாய வித்மஹே: வாசுதேவாய
தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரயோதயாத்.
ஸ்ரீ சிவ காயத்ரீ:
ஓம் பஞ்ச்வக்த்ராய வித்மஹே: மஹாதேவாய
தீமஹி
தந்நோ ருத்ர ப்ரயோதயாத்.
ஸ்ரீ பிரம்மா காயத்ரீ:
ஓம் வேதாத்மனாய வித்மஹே: ஹிரண்ய கர்ப்பாய
தீமஹி
தந்நோ பிரம்ம: ப்ரயோதயாத்.
ஸ்ரீ ராம காயத்ரீ:
ஓம் தஸ்ரதாய வித்மஹே: சீதா பல்லபயே
தீமஹி
தந்நோ ராம: ப்ரயோதயாத்.
ஸ்ரீ கிருஷ்ண காயத்ரீ:
ஓம் தெவ்கிநந்தனயே வித்மஹே: வசுதேவயே
தீமஹி
தந்நோ கிருஷ்ண: ப்ரயோதயாத்.
ஸ்ரீ லட்சுமி காயத்ரீ:
ஓம் மஹாலட்சுமியை ச வித்மஹே: விஷ்ணு பத்ன்யை
தீமஹி
தந்நோ லட்சுமி: ப்ரயோதயாத்
ஸ்ரீ சரஸ்வதி காயத்ரீ:
ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே: ப்ரம்ம பத்ன்யை
தீமஹி
தந்நோ வாணி ப்ரயோதயாத்.

