Powered By Blogger

15 ஏப்ரல் 2013

விளக்கேற்றும் பலன்கள்

காலை 6 மணி முதல் 7 மணி வரை வீட்டில் தீபம் ஏற்றுவது சர்வ மங்கள யோகம் தரும்.

பௌர்ணமியன்று விளக்கேற்றும் பலன்கள்
------------------------------------------------------------------------------------------
ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமியன்று திருவிளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்கள் ஏற்படும் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் .ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு பலன்
நடைபெறும்.

சித்திரை மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் தான்யம் பெருமளவில் கிடைக்கும்.

வைகாசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் விவாக பேச்சுக்கள் முடிவாகி மனநிம்மதியைக் கொடுக்கும்.

ஆனி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் புத்திர பாக்கியம் ஏற்படும்.

புரட்டாசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் பசுக்கள் விருத்தியாகும் .

ஐப்பசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் பசிப்பினிகள் நம்மை விட்டு அகலும் .

கார்த்திகை மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் ஐஸ்வரியம் பெருகும், நிலைத்த புகழ் ஏற்படும் .

மார்கழி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் துன்பம் அகலும் .இன்பங்கள் வந்து சேரும் .

பங்குனி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் தர்ம புண்ணிய சிந்தனைகள் அதிகரிக்கும்.

ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்
இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால் - நற்பலன்கள் உண்டாகும்

யாருக்கு என்ன எண்ணெய் 
------------------------------------------
(விளக்கேற்றுவதில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு எண்ணெய் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.)
-----------------------------------------------------------------------------------------------------------
கணபதி - தேங்காய் எண்ணெய்
நாராயணன், சர்வதேவதைகள் - நல்லெண்ணெய்
மகாலட்சுமி - பசுநெய்
குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
ருத்திரர் - இலுப்பெண்ணெய்
பராசக்தி - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த எண்ணெய்

எண்ணையும் அதன் பயன்களும்
-------------------------------------------------------------------
விளக்கு எண்ணெய் - துன்பங்கள் விலகும்
பசுநெய் - சகல செல்வமும் பெருகும்.
நல்லெண்ணெய் - பீடை விலகும். எம பயம் அணுகாது
ஆமணக்கு எண்ணெய் - தாம்பத்யம் சிறக்கும்.
இலுப்பை எண்ணெய் - பூஜிப்பவருகும், பூஜிகப்படும் இடத்துக்கும் விருத்தி உண்டு
கடலை எண்ணெய் மட்டும் பயன்படுத்தவே கூடாது

தீபம் ஏற்றும் திசைகள்
----------------------------------------------
கிழக்கு நோக்கி தீபமேற்ற - துன்பங்கள் நீங்கி பீடை விலகும்
மேற்கு நோக்கி தீபமேற்ற - கடன் தொல்லை அகலும், கிரக தோஷம் கழியும்
தெற்கு நோக்கி தீபமேற்ற - பாவம், அபசகுனம், எமனுக்குப் பிரீதி.
வடக்கு நோக்கி தீபமேற்ற - திருமணத்தட ை, சுபகாரியத் தடை, வேலை வாய்ப்புத் தடை நீங்கி செல்வம் பெருகும். சர்வ மங்களம் உண்டாகும்.

விளக்கு துலக்க வேண்டிய நாட்கள் அதன் பயன்கள்
-----------------------------------------------------------------------------------------------------------
ஞாயிறு - கண் சம்பந்தமான நோய் தீரும்
திங்கள் - அலை பாயும் மனம் அடங்கி அமைதியுறும ்
வியாழன் - குரு பார்க்கக் கோடி நன்மை உண்டாகும். மனக்கவலை தீரும்
சனி - வாகன விபத்துகள் ஏற்படாமல் நம்மைக் காக்கும்

குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் துலக்குவது மிகவும் நல்லது. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் துலக்குவதை விட இந்நாட்கள் அதிக பலன்களை தரக்கூடியவை. இதற்கு ஒரு காரணமும் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி குடியிருக்கிறாள். எனவே செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பதால் அந்நாட்களில் கழுவக்கூடாது

திரிகளும், பயன்களும்
-----------------------------------------------
குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் எண்ணெயை பொறுத்து பலன்கள் வேறுபடுவதைப் போல, திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.
* பருத்தி பஞ்சினால் ஏற்றப்படும் திரியால் குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும்.
* வாழைத் தண்டின் நாரில் செய்த திரியால் முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும்.
* தாமரைத்தண்டு நூலால் செய்யப்பட்ட திரியால் முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும்.
* வெள்ளை எருக்கம்பட்டை மூலம் செய்யப்படும் திரியால் செல்வம் பெருகும்.
* புதிய மஞ்சள் துணியால் செய்யப்பட்ட திரியால் அம்பாளின் அருளால் நோய்கள் குணமாகும்.
* சிவப்பு வண்ண துணியால் திரிக்கப்பட்ட திரி குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்.
* வெள்ளை துணி திரியால் அனைத்து நற்பலன்களும் கிடைக்கும். இந்த துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது.

வளம் பெருக்கும் அகல்:
-------------------------------------------------
கார்த்திகை மதம் பௌர்ணமி அன்று வானில் முழு நிலவு பிரகாசிக்கும் நேரத்தில் வீட்டு முற்றங்களில் தீபம் ஏற்றிவைத்தால் அந்த இல்லத்தில் ஐஸ்வரியம் பெருகும் என்பார்கள்.
இந்தநாளின் மற்ற விளக்குகளை விட அகல் விளக்கு ஏற்றுவதே உத்தமமானது என்கிறது ஆன்மீகம். அகல் என்பதற்கு விரிவடைதல் என்ற அர்த்தமும் உண்டு. வாழ்க்கை அனைத்து வசதிகளுடன் விரிவடைந்து வளம் பெருக வேண்டும் என்பதற்காகவே இந்த வழிபாடு

தருப்பைப்புல்


தருப்பைப்புல் புண்ணியபூமி தவிர வேறு எங்கும் முளைக்காது. இதற்கு அக்னிகற்பம் என்பது பெயர். இப்புல்லில் கரமும் புளிப்பு இருப்பதால் செம்பு ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலால் தெய்கிறார்கள் அவை பல நாள் ஒலிஉடனும் ஆற்றல் குறையாமல் இருக்கும். இந்த புல் தண்ணீர் இல்லாவிட்டால் வாடாது. நீருக்குள் பலநாட்கள் இருந்தாலும் அழுகாது. 'அம்ருத வீரியம்' என்பது இதன் பெயர். சூரிய கிரகணம் ஏற்படும் போது இதன் வீரியம் அதிகரிக்கும். தோற்று நோய்கள் இதன் காற்றுபடும் இடங்களில் இருக்காது

இந்து மற்றும் புத்த சமயத்தில் தருப்பை பண்பாட்டு முதன்மைத்துவம் வாய்ந்த ஒரு புனிதத் தாவரமாகும். இது புத்தர் ஞான ஒளி பெறுவதற்காகத் தியானம் செய்வதற்கான ஒரு ஆசனமாகப் பயன்பட்டு வந்தது. ரிக் வேதத்தில்(Rig Veda) மதச் சடங்குகள் செய்யப்பயன்படும் ஒரு புனிதத் தாவரமாகத் தருப்பைக் குறிப்பிடப்படுகிறது. மேலும் இது துறவிகள், மத போதகர்கள் மற்றும் இறைவனுக்கான ஆசனமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பகவத் கீதையில் தியானம் செய்வதற்குச் சிறந்த ஆசனமாகக் கிருட்டிணனால் தருப்பையாசனம் பரிந்துரைக்கப்படுகிறது.

மதச் சடங்குகளில் தருப்பை......
----------------------------------------------
நற்காரியங்களோ அல்லது மற்ற காரியங்களோ செய்யும்போது தருப்பை அணிவது இந்துமதத்தின் ஒரு மரபாகப் பின்பற்றப்படுகிறது. தருப்பையை வலதுகை மோதிர விரலில் அணிவர் இதற்காக தருப்பையில் மோதிரம் போன்ற வளையம் செய்யப்பட்டிருக்கும். தருப்பையின் நுனிப்பகுதிதான் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. தருப்பை மேலும் பல கதிர்வீச்சுகளை அடக்கிவிடும் என்றும் நம்பப்படுகிறது. அதனால்தான் சில வேத மந்திரங்களை உச்சரிக்கும்போது தருப்பை அணிவது கட்டாயமாகக் கருதப்படுகிறது.

ஒரு புல்லைக் கொண்டு செய்யும் பவித்திரம் எனப்படும் தருப்பை இறப்பு சம்பந்தப்பட்ட சடங்குகளிலும், இரண்டு புற்களைக் கொண்டு செய்யப்படும் தருப்பை தினசரி நடைமுறைகளுக்கும், மூன்று புற்கள் கொண்டு செய்யப்படும் தருப்பை அமாவாசை அன்று செய்யப்படும் நீத்தார் சடங்கு போன்றவற்றிலும், நான்கு புற்களினால் செய்யப்பட்ட தருப்பை கோயில் நடைமுறைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றது. தருப்பைப்புல்லைப் பொதுவாக பவுர்ணமிக்கு அடுத்த நாள் (பிரதமை)யன்று சேகரிக்கப்பர். அப்பொழுது மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன.

மருத்துவம்
----------------
நாட்டுப்புற மருத்துவத்தில் தருப்பையானது வயிற்றுக்கடுப்பு மற்றும் பெரும்போக்கு எனப்படும் மாதவிடாய் மிகைப்பு, மற்றும் டையூரிடிக் எனப் பல்வேறுநோய்களின் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வகைகள்

தருப்பையில் ஏழுவகை உண்டு.அவை,
குசை
காசம்
தூர்வை
விரிகி
மஞ்சம்புல்
விசுவாமித்திரம்
யவை
என்பன. மேலும் நுனிப்பகுதி பருத்துக் காணப்படின் அது பெண்தருப்பை எனவும், அடிப்பகுதி பருத்திருப்பின் அது அலி தர்ப்பை எனவும், அடிமுதல் நுனி வரை ஒரே சமமாக இருப்பது ஆண் தருப்பை எனவும் வழங்கப்படுகிறது.

பஞ்சகவ்யம்

பாலில் எடுக்கப்படுகின்ற தயிர் முதலிய ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவையுடையன. குணமுடையன இவற்றின் கலவை சிறந்த சத்துணவு . கோசலமும்(கோமியம்) , கோமலமும்(பசுஞ்சாணம்) மருத்துவக் குணமுடையன.

பஞ்சகவ்யம் - பஞ்ச என்றால் ஐந்து மற்றும் கவ்யம் என்றால் பசுவிடமிருந்து என பொருள்படும். பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்கள் - 1)சாணம் 2) கோமியம் 3) பால் 4) நெய் 5) தயிர்
இவை ஐந்தையும் சரியான விதத்தில் கலந்து தயாரிக்கப்படுவதே பஞ்சகவ்யம். இது இந்து சமய இறை வழிபாட்டின்போது முக்கியபூசை பொருளாகவும், ஆயுர் வேத வைத்தியம், வேளாண்மை பயிர் பாதுகாப்பிலும் பயன்படுகிறது. பயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறையைப் பயிற்றுவிப்பதும், விற்பனை செய்வதும் மெல்ல மெல்ல புகழடைந்து வருகிறது.

பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம் செய்கின்ற போது கிடைக்கின்ற பயன்கள் வருமாறு.

பசும்பால் :ஆரோக்கியம் ,ஆயுள் விருத்தி
பசுந்தயிர்:பாரம்பரிய விருத்தி
பசும்நெய்:மோட்சம்
கோசலம் :தீட்டு நீக்கம்
கோமலம்:கிருமி ஒழிப்பு

பொதுவாக பாவங்கள் குறைய புண்ணியங்கள் நிறையும்.கருவறைகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகள் எப்போதும் குளிர்ச்சியில் இருக்கின்றன .பெரும்பாலான கருவறைகளில் சூரிய ஒழி புகுந்து படிவதில்லை எனவே மிக குளிர்ச்சி,மிக்க இருட்டின் காரணமாககருவறைகள் , சிலைகள், இடுக்குகள்,பிளவுகள் முதலான இடங்களில் கிருமிகளும் , பாசிகளும், பூச்சிகளும் வளர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் ,அவற்றை அறவே அழிக்கின்ற ஆற்றல் பஞ்சகவ்யத்திற்கு அதிகமாக உண்டு.

புனிதம் என்ற ஒரே காரணத்திற்காகப் பஞ்சகவ்யம் ஒரு சிறந்த அபிஷேக பொருளாக மதிக்கபடுகிறது.

பல திறம்பட அருமையான பொருள்களால் சிலைகளுக்கு அபிஷேகம் செய்த பிறகு அந்த சிலைகளின் இயற்கையான நுண்ணிய ஆற்றல் சற்று கூடுதலாகின்றது என்பது அறிவியல் அடிப்படையில் நிருபிக்கப்பட்டுள்ளது.

பஞ்சகவ்யதால் அபிஷேகம் செய்த பிறகு அச்சிலைகளின் அற்புத அதிசய தெய்வீக ஆற்றல்
அதிகமாகின்றது என்பதும் உண்மையாகும் .

பஞ்சகவ்வியப் பெருமை :

பசுவும்.பசு தரும் பஞ்சகவ்வியமும் தெய்வத் தன்மை கொண்டவை, என்றென்றும் புனிதமானவை. ஆகவே இந்து சமயத்தில் இவை முக்கியமான நிலைத்த இடத்தை பெற்று விளங்குகின்றன.

பஞ்சகவ்வியம் இந்துக்களின் பல்வேறு சடங்குகள், பூஜைகளில் இதற்கெனத் தனி இடம் உண்டு. இந்த பஞ்ச கவ்வியத்தில் பல்வேறு தேவர்கள் வாசம் செய்கின்றனர். பசுவின் பால்,தயிர், நெய். கோமயம், சாணம் னும் இவ்வைந்தும் சேர்ந்ததே பஞ்ச கவ்வியம் எனப்படும்
இது இயற்கை வேளாண்மையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிலஊட்டப் பொருள்(உரம்) ஆகும்.

அபிஷேகத்திற்கான பஞ்ச கவ்வியம் செய்ய சில அளவு வரைமுறைகள் உள்ளன.

பசும்பால் :1 அளவு
பசுந்தயிர் :2 அளவு
பசும்நெய் :3 அளவு
கோசலம் :1 அளவு
கோமயம் : 1 அளவு
தர்ப்பை கலந்த நீர் 3 அளவு

பசும் பால் தான் ஏற்றது.எருமைப்பால் முதலியவற்றை பயன்படுத்தக்கூடாது .
பசுக்களில் பல்வேறு நிறங்களைக் கொண்ட பசுக்கள் உள்ளன .பசுக்களின் நிறத்திற்கும் அவை தரும் பாலின் தன்மைக்கும் இடையில் தொடர்வு உண்டு.
பொன்னிறப் பசுவிடமிருந்து பாலும்
நீலநிறப் பசுவிடமிருந்து தயிரும்,
கருநிறப் பசுவிடமிறந்து நெயும் ,
செந்நிற பசுவிடமிருந்து கோசலமும்,
தனித்தனியே எடுத்து பஞ்சக்கவியம் தயாரிக்க வேண்டும். சிவனுக்குரிய அபிஷேகப் பொருட்கலில் பஞ்ச கவ்வியமே சிறந்தது .

இவ்வாறு சிறந்த பஞ்சகவ்வியத்தை தமிழில் "ஆனைந்த "என்பர் .

பசும் பாலில் சந்திரனும் ,
பசுவின் தயிரில் வாயு பகவானும்,
கோமயத்தில் வருண பகவானும்,
பசும் சாணத்தில் அக்னிதேவனும் ,
நெய்யில் சூரிய பகவானும் வாசம் செய்கின்றனர் .


வேளாண்மையில் பயன்பாடு
1. பஞ்சகவ்யத்தை பயன்படுத்தி விதைநேர்த்தி செய்வதால் விதையின் முளைப்புத் திறன் மற்றும் வீரியத்தன்மை மேம்படுகிறது.
2. பஞ்சகவ்யம் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயிர் திரவமாகவும்
பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பாற்றலை அளிக்கும் காரணியாகவும் விளங்குகிறது.
தயாரிப்பு முறை
தேவையான பொருட்கள்
1. பசுஞ்சாணம்-5 கிலோ,
2. பசுவின் கோமியம்-3 லிட்டர்,
3. பசும்பால்-2 லிட்டர்,
4. பசு தயிர்-2 லிட்டர்,
5. பசு நெய்-1 லிட்டர்,
6. கரும்புச்சாறு-1 லிட்டர்,
7. தென்னை இளநீர்-1 லிட்டர்,
8. வாழைப்பழம்-1 கிலோ.
பசுஞ்சாணம் 5 கிலோவுடன் பசுமாட்டு நெய் 1லிட்டர் கலந்து பிசைந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் 3 நாட்கள் வைத்து தினமும் ஒரு முறை பிசைந்துவிட வேண்டும்.
• 4வது நாள் மற்ற பொருட்களுடன் இவைகளை ஒரு வாயகன்ற மண்பானை அல்லது சிமென்ட் தொட்டி அல்லது பிளாஸ்டிக் தொட்டியில் இட்டு கையால் நன்கு கரைத்து கம்பிவலையால் மூடி நிழலில் வைக்க வேண்டும்.
• ஒரு நாளைக்கு 2 முறை வீதம் காலையிலும் மாலையிலும் 20 நிமிடங்கள் நன்றாக கலக்கிவிட வேண்டும். இது பிராண வாயுவை பயன்படுத்தி வாழும் நுண்ணுயிர்களின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இந்த முறையில் 15 நாட்களில் பஞ்சகவ்யம் தயாராகிவிடும்.

ஹோரைகள் தரும் பலன்கள்


---------------------------
சூரிய ஹோரை:
**************
செய்யக்கூடியவை:
--------------------------
இந்த ஹோரையில் நாம் அரசு தொடர்பான அதிகாரிகளை சந்திக்கலாம். வழக்கு சம்பந்தமாக பேசலாம் .
தகப்பனாரின் உதவியை பெற அவரை நாடலாம்
உயில்,சாசனங்களில் கையெழுத்திடலாம்.
பத்திரங்கள் பார்க்கலாம்
சிவ தரிசனம் செய்யலாம் .
ஹோரைகள் தரும் பலன்கள்

செய்யகூடாதவை :
---------------------------
சொந்த வீட்டிலோ,வாடகை வீட்டிலோ பால் காய்ச்சகூடாது புது வீட்டில் குடி ஏறக்கூடாது
ஒப்பந்தகளில் கைஎழுத்திட கூடாது

சந்திர ஹோரை
**************
செய்யக்கூடியவை :
---------------------------
புது வியாபாரம் தொடங்கலாம் . குறிப்பாக தண்ணீர் , பால்,அழுகும் பொருட்கள் வியாபாரம் விருத்தியாகும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம் . வங்கியில் கணக்கு தொடங்கலாம். பெண் பார்க்கும் நிகழ்சிகளை ஏற்பாடு செய்யலாம்.அம்மன் சனிதனதிர்க்கு சென்று வழிபடலாம்.கண் சமந்தமாக மருத்துவரை சந்திக்கலாம்.கண் அறுவை சிகிச்சை நல்லபடியாக நடக்க அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யலாம்.தாயாரின் உதவியை பெற அவரை நாடலாம்

செய்ய கூடாதவை:
--------------------------
தேய் பிறையில் சந்திர ஹோரையை தவிர்க்க வேண்டும். சொத்து சமந்தமாக பேசகூடாது.

செவ்வாய் ஹோரை
******************
செய்யக்கூடியவை :
-----------------------------
சொத்துகள் வாங்குவது விற்பது பற்றி பேசலாம். வீடு தோட்டம் நிலத்தை போய்ப்பார்க்கலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம்.சகோதரர்கள், பங்களிகளின் பிரச்சனைகளைப் பேசலாம், ரத்த தானம் செய்யலாம் . சகோதர உதவிகளை நாடலாம். முருகன் தலங்களுக்கு செல்லலாம் . கடனை அடைக்கலாம் .

செய்ய கூடாதவை:
--------------------------
கடன் வசூல் செய்ய போகக்கூடாது.
குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் கூடாது. பெண் பார்க்கும் வைபவங்களை தவிர்க்கவேண்டும் .

புதன் ஹோரை
*************
செய்யக்கூடியவை :
கல்வி சமந்தமாக எல்லா விஷயங்களயும் செய்யலாம்.
ஜாதகம் பார்க்கலாம்.கணக்கு வழக்குகள் பார்க்கலாம்.
வங்கியில் புது கணக்கு தொடங்கலாம்.
மாமன் வகை உறவுகளின் உதவியை நாடலாம்.வக்கீல்களை பார்க்கலாம் .
கம்ப்யூட்டர் வாங்கலாம். கம்ப்யூட்டர் பயிற்சியில் சேரலாம்.நல்ல விஷயங்களுக்கு தூது போகலாம்.
பெருமாள் தலங்களுக்கு சென்று வணங்கலாம்.

செய்ய கூடாதவை:
--------------------------
பெண்பார்க்கும் சம்பவம் கூடாது.
வீடு,நிலம்பற்றி பேச கூடாது.
சொத்துகளை பார்வையிடக்கூடாது.

குரு ஹோரை
*************
செய்யக்கூடியவை :
---------------------------
சகல சுப காரியங்களுக்கும் ஏற்ற ஹோரை.
பொன் நகைகள் வாங்கலாம்.
புது மணப் பெண்ணிற்கு மாங்கல்யம் வாங்கலாம் .
வங்கியில் பிக்சட் டெபொசிட் செய்யலாம்.
குழந்தைகளை பள்ளியில் சேர்க்கலாம்.
முருகன் தெட்சிணா மூர்த்தி ஆகியோரை வணங்கலாம். பெண்கள் கணவரிடம் விரும்பியதை கேட்கலாம்.
கொடுக்கல் வாங்கல் வைத்து கொள்ளலாம்.
யாகங்கள் ஹோமங்கள் செய்வதற்க்கான பொருட்களை வாங்கலாம்.

செய்ய கூடாதவை:
---------------------------
முதல் முதலில் சந்திக்கும் ஒருவருக்கு விருந்து வைக்க கூடாது.
புது மன தம்பதிகளுக்கு விருந்து,உபசாரம் செய்யகூடாது.


சுக்கிர ஹோரை
**************
செய்யக்கூடியவை :
---------------------------
பெண் பார்க்கும் சம்பர்தாயத்திற்குமிக சிறப்பான ஹோரையாகும். காதலை வெளிபடுத்தலாம். வெள்ளி பொருட்கள் வைர ஆபரணங்கள் வாங்கலாம்.விருந்து வைக்கலாம் வாகனம் ஏறலாம். வண்டி வாங்க பணம் கட்டலாம்.சொத்து விஷயங்களை பேசலாம்.கணவன் மனைவிஇடையே ஒருவருக்கொருவர் விஷயங்களை பகிர்ந்து பேசலாம்.பெண்களின் உதவியை நாடலாம்.பிரிந்த தம்பதியர்கள் ஒன்று சேரலாம்.அம்பாள் ஆண்டாள் தளங்களுக்கு சென்று வழிபடலாம்.

செய்ய கூடாதவை:
---------------------------
நகை இரவல் கொடுக்க கூடாது . குடும்ப பிரச்சனைகளை பேசக் கூடாது.துக்கம் விசாரிக்ககூடாது.


சனி ஹோரை
************
செய்யக்கூடியவை :
--------------------------
சொத்து சமந்தமாக பேசலாம்.இரும்பு சாமான்கள்,பீரோ,வண்டி, ஆகியவை வாங்கலாம்.மரக்கன்றுகள் நடலாம்.நவகிரக பரிகார பூஜைகள் செய்யலாம்.வாங்கிய கடனை அடைக்கலாம்.
செய்யக்கூடியவை :பிரசித்தி பெற்ற தலங்களுக்கு செல்லலாம்.

செய்ய கூடாதவை:
---------------------------
நோய்க்கு முதன் முதலாக மருந்து சாப்பிடகூடாது.மருத்துவரை சந்திக்க கூடாது. பிரயாணம் செல்ல கூடாது. வெளியூர் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்ய கூடாது.
முதல் முதலாக பிறந்த குழந்தையை
போய்ப்பார்க்க கூடாது .
துக்கம் விசாரிக்க கூடாது.


தவிர்க்க வேண்டிய நேரங்களை தவிர்ப்பதுடன் நல்ல ஹோரையில் நல்ல காரியங்களை செய்வதால்அவை நிலைத்து, நீடித்து நின்று பலன் தரும் ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் ஜாதகத்தில் தசா புத்தி சரியில்ல விட்டாலும் அவை நல்ல விதமாக கூடி வரும்.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்



மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

தஞ்சாவூர் பெரிய கோவிலில் வியக்கத்தக்க உண்மைகள்


டிஸ்கவரி சானலில் , கோவில் எப்படி அந்த காலத்தில் கட்டி இருந்து இருப்பார்கள் என்று டாக்குமெண்டரி அடிக்கடி காட்டுகின்றனர். அதைப் பார்த்த பிறகுதான், நமக்கும் பல கேள்விகள் எழுகின்றன எப்படிய்யா, அவ்வளவு பெரிய கல்லை , தூக்கி மேல வைச்சாங்க..? எங்கே கிடைச்சு இருக்கும், எப்படி அங்கே இருந்து தூக்கி வந்து இருப்பாங்க..? அதோட எடை இவ்வளவுன்னு எப்படி கண்டுபிடிக்கிறாங்க? அதுக்கு என்ன வழி ? எதற்கு வேலை மெனக்கெட்டு இப்படி செய்யனும்? இவ்ளோ பெரிய விஷயம் பண்ணனும்னா, அப்போ உள்ள இருக்கிற கர்ப்பகிரகம் எவ்வளவு சக்தி வாய்ந்த கதிர்களையும் ஈர்க்க கூடியதா இருக்கணுமே! முகத்தில் அறையும் பிரமாண்டத்தையும் தாண்டி, காலம் காலமாக அருள் பாலித்து வரும் அந்த இறைவனின் மகத்துவம் எப்பேர்ப்பட்டது என்பதையும் மனப்பூர்வமாக உணர முடிகிறது.

பதினெண் சித்தர்களில் ஒருவரான கருவூர் சித்தர் - ராஜ ராஜ சோழனின் காலத்தில் , அரசருக்கு பலவிதங்களில் இந்த ஆலயம் அமைக்கும்போது வழி காட்டி இருந்து இருக்கிறார். சிவலிங்கம் மட்டும் 25 ,000 கிலோ எடையுள்ளது என்கிறார்கள்..... இப்போது புரிகிறதா? இது மனிதமுயற்சியையும் தாண்டி, தன் செல்லப் பிள்ளைகளான சித்தர்களையும் உடன் வைத்துக்கொண்டு - அருண்மொழி என்னும் கருவியின் மூலம் , சிவம் தன் சித்து விளையாட்டை நிகழ்த்தி இருப்பதை!

அருண்மொழித் தேவருக்கு, சிவம் எப்பேர்பட்ட பேறை அளித்து இருக்கிறது தெரியுமா? அவர் மூலமாக , சிவம் தான் உறைய , தனக்குத் தானே எழுப்பிக்கொண்ட மாபெரும் அதிசயம் தான் , இந்த ஆலயம்.
மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களைப் பாருங்கள்...
 
புராதனக் கல்வெட்டு சாசனங்களையும் ஆயிரம் ஆண்டுகள் சரித்திரத்தையும் பற்பல தெய்வீக ரகசியங்களையும் உள்ளடக்கியது, தஞ்சை பெருவுடையார் கோயில். சுந்தர சோழர் வம்சத்தில் வந்த சக்ரவர்த்தி ராஜராஜ சோழனால் கோயில் எழுப்பப்பட்ட வரலாறு, நாடிச் சுவடியில் விளக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.

சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் காவிரியின் கரையில் கம்பீரமான 216 அடி விமான உயரமும், அதன் உச்சியில் தங்க முலாம் பூசப்பட்ட 80 டன் எடையுள்ள கலசத்தையும் பொருத்தி 9 அடி உயரமும், 23.5 அடி சுற்றளவும், 25 டன் எடையும் கொண்ட ஒரே கல்லால் ஆன பெருவுடையார் லிங்கத்தையும் தனது குருவான ‘ஹரதத்தர்’ ஆலோசனை பேரில் உருவாக்கினார் ராஜராஜ சோழன். நந்தி தேவனார் 80 டன் எடை கொண்ட ஒரே கல்லால் செதுக்கப்பட்டு உயிர் ஊட்ட பெற்றவர். கோயிலுக்கு வாஸ்து சாந்தி செய்த பின்னரே நந்தி தேவரை நிறுவினார், சோமன் வர்மா என்ற தலைமை சிற்பி. 12 அடி உயரமும் 19.5 அடி நீளமும் கொண்டவர் நந்தி. ஆதலால், வாஸ்து புருஷன் தன் அருளாசியை பக்தர்களுக்கு எப்பொழுதும் வழங்கிக் கொண்டிருக்கிறார்.

சொந்தவீடு, கடை, நிலம் போன்ற அசையாசொத்துகளை வாங்க எண்ணுபவரும், வாங்கியசொத்துகள் விருத்தி ஆகவும் அமாவாசைதிதியில் உச்சி வேளையில் நந்தியின்வால்புறத்தில் நின்று நந்தி சகஸ்ரநாமம்சொல்ல சித்திக்கும் என்கிறார்அகஸ்தியர்.

பெருவுடையார், பஞ்ச பூதங்களின் அம்சம். இவரை தொழுவது பஞ்ச பூத லிங்கங்களை தொழுவதற்கு சமம். சரும நோயினால் அவஸ்தைப்பட்ட சோழ மன்னர், நோயின் கொடுமை தீர ஆலய யாத்திரையை மேற்கொண்டார். அருணகிரிநாதருக்கு வந்த நோய்க்குச் சமமான நோயால் பீடிக்கப்பட்ட சோழன், தனது ஆட்சிக்கு உட்பட்ட இலங்கை என இந்நாளில் அழைக்கப்படும் தலை மன்னார் காடு உறை ஈசனைத் தொழச் சென்றார்.

அப்போது மன்னரின் குலகுருவும் உடன் இருக்க, கருவறையின் உள்ளிருந்து அசரீரி ஒலித்தது: ‘‘ராஜராஜனே, எமக்கொரு கோ இல் சமை.” இம்மொழி கேட்ட மன்னர் தன் நாடு மீண்டு மனைவி லோகமாதேவியோடு திருவாரூர் தியாகராசரைத் தொழுது நாடி கேட்டனர். அப்பொழுது அகஸ்திய மகரிஷியே வானில் தோன்றி ஆசி கூற, ஓலைச்சுவடி படிக்கப்பட்டது.

அதில் தஞ்சை, உறையூர், காஞ்சி என்ற மூன்று தலைநகர்களில் தஞ்சையில் காவிரிக்கரையில் கோயில் கட்டவும், இதற்கான கற்கள் திருச்சி மலைப் பகுதியிலிருந்து எடுக்கவும் ஆணை வந்தது. சிவனே நாடி படித்ததாக கூறுகிறார், சிவ வாக்கியர். நர்மதை தீரத்திலிருந்து மூலவருக்கு கற்களை கொணர்ந்து, அதில் ஒளி பொருந்தியதும், நீரோட்டம் நிறைந்ததுமான ஒரு லிங்க ஸ்வரூப கல்லை ப்ரஹந் நாயகி என்ற சோழரின் குலதெய்வம் காட்டி மறைந்தது. இந்தக் கல், லிங்க வடிவில் தானே பெரு வளர்ச்சி அடைந்ததால் இந்த லிங்க மூர்த்திக்கு ‘பெருவுடையார்’ என்ற பெயர் வழங்கி வருகிறது.

கோபுரத்தின் ஒரு பகுதியில் ஆங்கிலேயரின் உருவம் காணலாம். இது பின்னர் இந்திய நாட்டை ஆங்கிலேயர் ஆள்வர் என்பதன் குறிப்பாகும். மேலும் பற்பல ரகசிய கல்வெட்டுக்கள் தேசத்தை ஆள்பவரின் பெயரையும் காட்டுகின்றன. ராஜராஜ சோழ மன்னரின் படமும், அவரது குரு ஹரி தத்தர் ஓவியமும் உள்ளது உள்ளபடியே வரையப்பட்டுள்ளன. நாடிச் சுவடிகளை படித்த முனிவர், ராஜராஜனின் நோய் நீங்கும், வம்சம் தழைக்கும் என்றெல்லாம் கூறி வந்தவர், காலத்தால் கோயில் சிதிலம் அடையாது இருக்க, ‘‘திருத்ர ப்ரஹந்மாதா தக்ஷிண மேரு” என்ற யாகத்தை செய்யச் சொன்னார்.

இந்த யாகம் 288 நாட்கள் நடைபெற்றது. சுமார் ஆறு மண்டல காலம். கோவிலை கைப்பற்றும் எண்ணத்தில் - மாற்று அரசர்கள், அமைச்சர்கள், அரசு பிரதானிகர்கள் யாரும், ஆலயத்துள் எவ்வகையில் நுழைந்தாலும் அவர்கள் சிம்மாசனத்தை இழப்பர்; குலம் நசியும் என்று நந்தி மண்டபத்திலிருந்து அசரீரி ஒலித்தது. இதனாலேயே, பிரகதீஸ்வரன் சந்நதியுடைய தஞ்சை பெருங்கோயிலுக்கு அரசரோ, அவர் குடும்பத்தவரோ நுழைவது தீமை பயக்கும் என்கிறது, நாடி. இதனாலேயே மாலிக்காபூர், ஔரங்கசீப் போன்றவர்களிடமிருந்து இந்தக் கோயில் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்றும் சொல்லலாம்.
 
இங்கே, அஷ்டதிக் பாலகர்கள் அமர்ந்து வழிபாடு செய்கின்றனர். ஆறு அடி உயரம் கொண்ட இந்திரன், வருணன், அக்னி, ஈசானன், வாயு, நிருதி, யமன், குபேரன் போன்ற விக்ரகங்களைக் காணலாம். இவை ஜீவன் உடையவை. கொடிய நோய்கள், குறிப்பாக முற்பிறவியில் செய்த பாவத்தின் பலனாக தோன்றும் கர்ம வினை நோய்களான புற்று, குஷ்டம், மலட்டுத்தன்மை போன்றவை 48 தேய்பிறை பிரதோஷ தரிசனத்தால் நீங்கும் என்கிறது நாடி.

வேலையின்மை, தரித்திரம், பொருள் விரயம், மனக்குழப்பம், கொடிய சேதம், விபத்து, விபத்துக்களால் மரணம், பொருட்சேதம் போன்றவற்றிற்கும் வளர்பிறை பிரதோஷ பூஜையை 49 முறை மேற்கொண்டால், கண்டிப்பாக விமோசனம் உண்டு. நாடியும் இதைத்தான் சொல்கிறது:

‘‘பேரிடர் நீங்குமே பிணி யாதாயினுஞ் சாம்பலாகுமே.
மறை போற்றும் தேவரிட்ட சாபமாயினும் விமோசனம் காணும்.
விவாகமும் விமரிசையாய் நடந்தேறுமே: புவியுறை,
சம்பத்தெல்லாம் சித்தம்போல் சித்திக்குமே
பூதலத்தே நின்ற சிவனம்பலமெலாம்
ஏகித் தொழுத பேறு பெறுவீரே ப்ருஹந்நாயகி யுறை
தக்ஷிணமேரு தன்னை கை தொழுதக் கால்
சிவனே தரிசனம் தருவான் பொய்யல்ல.
தப்பாது மண்டலச் சதுர்த்தசி முன் தொழுபவர்க் கே.’’

பிரதோஷம் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.

நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறி,நம் சந்ததி முழுக்க சிவன் அருள் கிடைக்க - பிரதோஷ நேர வழிபாடு , நமக்கு கிடைத்து இருக்கும் பொக்கிஷம் என்பதை சித்தர்கள் உணர்த்தி உள்ளனர்.

நடந்தவை எல்லாம், கதை, திரைக்கதை, வசனம் எழுதப்பட்ட ராஜ ராஜ சோழன் திரைப்படம் போன்று இருக்கிறது என்று சாதாரணமாக நினைத்துவிடப் போகிறீர்கள். நம் கண் முன்னே நிகழ்ந்த நிஜம் என்பதற்கு - கம்பீரமாக நிற்கும் இந்த பிரகதீஸ்வரர் சாட்சி

தமிழரின் புத்தாண்டு எது?...

தமிழரின் புத்தாண்டு எது என்ற சர்ச்சை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. பன்னெடுங்காலமாக தமிழர், சித்திரை முதல் நாளையே புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் நாட்டில், கடந்த தி.மு.க அரசினால் தை முதனாளே வருடப்பிறப்பு என அறிவிக்கப்பட்டபோதும், தற்போதைய அ.தி.மு.க அரசால், சித்திரையே புத்தாண்டு என மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் தமிழக அரசின் உபயத்தில், மலேசியாவில் நெடுநாளாக தையே புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வருவதாகவும் புலம்பெயர் தமிழர் வாழும் பல நாடுகளிலும், தைப்பொங்கலன்றே புத்தாண்டு கொண்டாடப்பட்டு விட்டதாகவும் அறியமுடிகிறது.

இதற்கு, நாம் முதலில் தைப்புத்தாண்டின் பின்னணியை ஆராய்வது தகும்.

சித்திரைக்கு ஆரியப்புத்தாண்டு என்று பெயர்சூட்டி, தை மாதத்தில் ஆரம்பிக்கும் திருவள்ளுவர் ஆண்டை, தமிழர் புத்தாண்டு என அறிமுகம் செய்தது 1971ல் ஆட்சியிலிருந்த தி.மு.க அரசு. (கிறிஸ்து ஆண்டு + 31 = திருவள்ளுவராண்டு)
இம்மாற்றத்துக்கான காரணங்களாக அவ்வரசு கூறிய காரணங்கள் என்னென்னெ; அவையெல்லாம் சரிதானா?? ஆராய்வோம்:

1.1921இல், சென்னை பச்சையப்பா கல்லூரியில், மறைமலையடிகள் தலைமையில், 500இற்கும் மேற்பட்ட அறிஞர்கள் கூடி எடுத்த முடிவு தான் தைப்புத்தாண்டு!

இது, அப்பட்டமான பொய்யென்று சொல்கிறது, 15.05.1955இல் தமிழ் மறைக்கழகத்தால் வெளியிடப்பட்ட, “திருவள்ளுவர் திருநாள் மலர்” எனும் வெளியீடு.
திருவள்ளுவரின் காலம் கிறிஸ்து காலம் + 31 என மறைமலையடிகள் கணித்தது உண்மைதான். எனினும் தைப்புத்தாண்டு பற்றியோ, திருவள்ளுவர் தினம் தை 1 என்றோ அவர் என்றுமே சொன்னதில்லை. வைகாசி அனுச நட்சத்திரமே திருவள்ளுவர் தினமெனக் கொண்டாடப்பட்டு வந்துள்ளதென்பதற்கு மேற்காட்டிய திருவள்ளுவர் தின மலரே ஆதாரம்!

சென்னையில் திருவள்ளுவர் திருநாள் கழகத்தால் 1935ஆம் ஆண்டு மே மாதம்; 18 மற்றும் 19-ஆம் திகதிகளில், பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப்பட்டது பற்றியும், தமிழகம் மட்டுமல்லாமல், இலங்கை, பர்மா மற்றும் பிற இந்திய மாநிலங்களிலும் வைகாசி அனுடம் (அனுசம்) திருவள்ளுவர் தினமாக 1935-இல் கொண்டாடப்பட்டதையும், எந்தெந்த அறிஞர்கள் கொண்டாடினார்கள் என்பதையும் திருவள்ளுவர் திருநாள் மலர் பக்கம் கஉஅ(128) - கங0 (130) இல் காணலாம்.

1935-இல், உலகெங்கும் திருவள்ளுவர் தினமாக வைகாசி அனுடம் கொண்டாடப்பட்டதையும், எந்தெந்த அறிஞர்கள் கொண்டாடினார்கள் என்பதையும் திருவள்ளுவர் திருநாள் மலர் பக்கம் .௧௨௮(128) – ௧௩௦ (130) இல் காணலாம். 15.5.1955-இல் தமிழ்மறைக் கழகம், தமிழினத்தை ஒன்று படுத்தும் திருநாள், திருவள்ளுவர் திருநாள். அது வைகாசி அனுடம் என்று திருவள்ளுவர் திருநாள் மலர் வெளியிட்டிருக்கிறது. இதில் ‘தை’யை வள்ளுவர் தினம் என்று சொன்ன கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்களைக் கடுமையாகக் கண்டித்துள்ளார் திரு கா.போ.ரத்னம் அவர்கள். வைகாசி அனுடம் தான் திருவள்ளுவர் தினம் என்று உறுதி செய்த தமிழ் அறிஞர் பட்டியல் இம் மலரில் வெளியிடப்பட்டுள்ளது. http://www.tamilhindu.com/2012/02/thai-tamil-year-false-history-an-update/

இங்கு 1921ஆம் ஆண்டு எங்கே வந்தது? அறிஞர்கள் எப்போது கூடினார்கள்? எப்போது முடிவெடுத்தார்கள்? ஒரு தகவலுமே இல்லையே?
அரசு சாட்டுக் கூறிய 1921இற்கும், தை புத்தாண்டாக அறிவிக்கப்பட்ட 1971இற்கும் இடையில் 50 வருட வித்தியாசம்…. மறைமலையடிகள் உட்பட அந்தக் காலத்தில் இருந்த யாருமே உயிரோடு இருக்கவில்லை என்ற தைரியத்தில், அரசு செய்த மாற்றம் தான் இது…!!!
வைகாசி அனுசத்தில் கொண்டாடப்பட்டு வந்த திருவள்ளுவர் தினம், அறிஞர்களின் கோரிக்கைக்கேற்ப, 1966-ஆம் ஆண்டு முதல், சூன் 2ஆம் திகதி, ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினமாகக் கொண்டாட விடுமுறை அளிக்கப்பட்டது. எனினும், 1970இல் ஏற்பட்ட திமு.க ஆட்சிமாற்றத்தை அடுத்து, தை முதலாந் திகதிக்கு, மாற்றப்பட்டது என்பது வரலாறு.

ஆக, திருவள்ளுவர் ஆண்டு, தைப்புத்தாண்டு எல்லாமே தமிழறிஞர்களின் முடிவன்று; தனி ஒரு மனிதரின் முடிவு என்பது இவற்றின் மூலம் தெளிவாகிறது. வீணே மறைமலையடிகளையும், தமிழறிஞர்களையும் வம்புக்கு இழுத்ததுதான் மிச்சம்!

தமிழக அரசையே உலகத்தமிழரின் தலைமை அமைப்பாகக் எண்ணிக்கொண்டிருக்கும் தமிழறிஞர் பலரும் இது யாவற்றையும் உண்மை என்று நம்பியதே இன்னும் வேதனைக்குரிய விடயம்.

2.“தைஇத் திங்கள்”, “தைஇய திங்கள்” முதலான தை மாதம் பற்றிய தகவல்கள், நற்றிணை, புறநானூறு, முதலான சங்க இலக்கியங்களில் உள்ளதால், தையே சங்ககாலத்தில் புத்தாண்டாக இருந்திருக்கிறது. எனவே, தையே புத்தாண்டு!

“தைஇத்திங்கள்”, முதலான் சங்க இலக்கியச் சொற்கள், தை புத்தாண்டு என்றா சொல்கின்றன?
நிச்சயம் இல்லை...ஏன்?

மேற்காட்டியுள்ள உதாரணங்கள் குறிப்பது தைப்புத்தாண்டை அல்ல , சங்ககாலத்தில் தைமாதத்தில் இடம்பெற்ற, “தைநீராடல்” எனும்; நீராடல் விழாவை!

தைநீராடிய தவத்தின் பயனாகச் பெண்களின் விருப்பங்கள் நிறைவேறி, செல்வ வளம் பெருகிக் குடும்ப நலன் சிறப்புறும் என்ற நம்பிக்கை காணப்பட்டதை சங்க இலக்கிய வரிகள் மூலம் அறியமுடிகிறது:

“தைஇத் திங்கள் தண்கயம் போலக்
கொளக்கொளக் குறையாக் கூழுடை வியனகர்.” -புறநானூறு. 70:6-7

“தைஇத் திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோட் குறுமகள்” - நற்றிணை 80

“நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் தண்கயம்” - ஐங்குறுநூறு 84

“வையெயிற்றவர் நாப்பண் வகையணிப் பொலிந்து நீ
தையில் நீராடிய தவந்தலைப் படுவையோ” - கலித்தொகை 59:12-13
(தண்கயம் = குளிர்ந்த நீர்நிலை)

இவ்வரிகள் எல்லாவற்றையும் கூர்ந்து அவதானியுங்கள். இவற்றில் எந்த வரியிலாவது தைநீராடலானது, சூரியவழிபாட்டுடன் தொடர்பானது, அல்லது புத்தாண்டுக்குரிய ஆரம்பம் என்பது பற்றி ஒரு சொல்லாவது காணப்படுகின்றதா?

தைநீராடல் பற்றி, பரிபாடல் மிக விரிவாகக் கூறியுள்ளது. பரிபாடல் தரும் விவரங்களைத் தொகுத்துப் பார்த்தால், இந்நோன்பு மார்கழி ஆதிரையன்று தொடங்கி 29 நாள்கள் நடைபெற்று 30ஆவது நாளில் வருகின்ற தைப்பூச நாள் நீராடலுடன் முடிவுற்றிருக்க வேண்டும் எனத் தெரியவருகிறது.

“கனைக்கும் அதிர்குரல் கார்வானம் நீங்கப்
பனிப்படு பைதல் விதலைப் பருவத்து
ஞாயிறு காயா நளிமாரிப் பின்குளத்து
மாயிருந் திங்கள் மறுநிறை ஆதிரை” -பரிபாடல் 11

காலவெள்ளத்தில் அடிபட்டு, சில பண்டிகைகள், நோன்புகள் தம் சுயத்தை இழந்து திரிபதுண்டு. தைநீராடலுக்கும் அதுதான் நிகழ்ந்தது. சங்க காலத்து (கி.மு 3 - கி.பி 3 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையே) தைநீராடல், மணிவாசகர் மற்றும் ஆண்டாள் காலத்தில் (கி.பி 4 - 8 ஆம் நூற்றாண்டுக்கு இடையில்) மார்கழி மாதத்தில் மகளிர் நீராடிக் கொண்டாடும் பாவைநோன்பாக மாறிவிட்டது.
ஆனாலும், தைப்பூசத்தில் முடிந்த தைநீராடலின் எச்சமாக, தைப்பூசம், நெடுங்காலமாக, மகளிர் கொண்டாடும் விழாவாகவே இருந்து வந்ததை,

“நெய்ப்பூசும் ஒண் புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப் பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்”

என்ற சம்பந்தர் தேவாரம் (கி.பி 7ஆம் நூற்றாண்டு) மூலம் அறியமுடியும்.
தைநீராடல் - அதுவும் பெண்கள் மட்டும் நோற்ற தைநீராடல் நோன்பு தான் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டது என்று எப்படி சொல்லமுடியும்?

3.பெண்ணுருவெடுத்த நாரதருக்கும், கண்ணனுக்கும் பிறந்த 60 குழந்தைகள் தான் பிரபவ முதலான 60 வருடங்கள் என்று “அபிதான சிந்தாமணி” எனும் நூல் சொல்கிறது. இந்த அசிங்கமான ஆரியக்கதையையும் வடமொழி வருடப் பெயர்களையும் தமிழன் பின்பற்றுவதே அசிங்கம்!

உண்மைதான், ஒரு தமிழனாக நோக்கும்போது, 60 வருடங்களுக்கும் வடமொழிப்பெயர் இருப்பதும், அதற்காக சொல்லப்படும் புராணக் கதையும் ஏற்றுக்கொள்ளமுடியாததாக இருக்கிறது - உண்மை! ஆனால், இந்தக் கதைக்காக யாரும் புத்தாண்டு கொண்டாடுவதில்லையே!

இந்த வடமொழி வருடக் கணக்கைத் தான் பலநூறு வருடங்களாக தமிழர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவின் வேறெந்த இனத்தவரிடையேயும், வேறெந்த மாநிலத்திலும் இப்பெயர் வழக்கத்திலில்லை என்பதும் தமிழர்களால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பதும் இங்கு ஊன்றி நோக்கத் தக்கது.

சரி, தமிழர் மண்ணில் இனியும் வடமொழி வேண்டாமென்றால், அவற்றைத் தமிழ்ப்படுத்திப் பயன்படுத்தலாம். (ஒரு ஒளிப்படத்தில் “விரோதி வருடம்” (2009ஃ2010) அழகுதமிழில் “தீர்பகை ஆண்டு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது; என்ன அழகான பெயர்!) இல்லாவிட்டால், அறுபது வருடக் கணக்கே வேண்டாமென்றும் விட்டு விடலாம். ஆனால் அதற்காக, காலம்காலமாக தமிழர்கள் கொண்டாடிய சித்திரைப்புத்தாண்டையே கைவிடவேண்டும் என்பது சுத்த முட்டாள்த்தனமாகத் தென்படவில்லை?

4.தமிழர் புத்தாண்டு எல்லா மதத்தவரும் கொண்டாடுவதாக இருக்கவேண்டும். சனாதன நெறியாளர்கள் மட்டும் கொண்டாடும் ஒரு பண்டிகையாக இருக்கக் கூடாது! மதம்சார்ந்த சித்திரைப்புத்தாண்டை நாங்கள் எதிர்க்கவில்லை; அதை சனாதனர்கள் கொண்டாடி விட்டுப்போகட்டும்; ஆனால், தமிழர்கள் எல்லோரும் தைப்புத்தாண்டைக் கொண்டாட வேண்டும்!

(“ஹிந்து” என்ற பதம் தற்போது பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்கு உள்ளாகி வருவதால், அதற்கு மாற்றாக “சனாதன நெறி” என்ற பதம் இக்கட்டுரை முழுவதும் எடுத்தாளப்படுகிறது.)

தமிழ்ப்புத்தாண்டு மதம் சார்ந்த புத்தாண்டா?

நிச்சயமாக இல்லை! சித்திரைப்புதுவருடம், சனாதனர்கள் (இந்துக்கள்) மட்டும் கொண்டாடும் பண்டிகை அல்லவென்பதை, இத்தகையவர்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.. தமிழ்ச் சனாதனர்களால் மட்டுமன்றி, தமிழகத்தில் சிறுபான்மையாகவுள்ள தமிழ்ப்பௌத்தர்கள், தமிழ்ச்சமணர்களாலும் இப்புதுவருடம் கொண்டாடப்படுகிறது. அவர்களும் சேர்ந்து கொண்டாடுவதால், கண்ணன் - நாரதர் கதையை பௌத்த சமணர்களும் ஏற்றுக்கொண்டதாக அர்த்தமா, என்ன?

தமிழரின் புத்தாண்டு, வேனிற்காலத்தை வரவேற்கும் விழா! அவ்வளவுதான்! இதில், கண்ணனுக்கோ நாரதருக்கோ சம்பந்தமில்லை!! தமிழ் பேசும் கிறித்தவ - முசுலீம் சகோதரர்கள் தாராளமாக சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டைக் கொண்டாடலாம்! யாரும் அதற்கு தடை சொல்லப் போவதில்லை!

தையைப் புத்தாண்டு ஆக்குவதற்காக, சித்திரைக்கு மதச்சாயம் பூசியது யாரென்று தான், உலகத்துக்கே தெரியுமே! மதம்சார்ந்த சித்திரைப்புத்தாண்டை அவர்கள் எதிர்க்கவில்லையாம் – விட்டுக்கொடுக்கிறார்களாம்...தமிழனின் பண்டிகையை தமிழனுக்கே விட்டுக்கொடுக்க இவர்கள் யார்?

ஏற்கனவே தமிழன் வெட்கமின்றி, இரண்டு புத்தாண்டுகளைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான். இந்நிலையில், மதப்புத்தாண்டு மொழிப்புத்தாண்டு என்றுவேறு பிரித்து மூன்று புத்தாண்டா?? உருப்பட்டாற் போல்தான்!

இவ்வெல்லா ஆதாரங்களையும் உற்றுநோக்கும்போது, தைப்புத்தாண்டு, தமிழறிஞரால் முடிவு செய்யப்பட்டது; சங்ககாலத்திலிருந்தே கொண்டாடப்பட்டுவந்தது போன்ற வாதங்கள் முற்றாகப் பொய்யானவை என்ற முடிவுக்கே வரமுடிகிறதல்லவா?

சரி, சித்திரை தான் தமிழர் புத்தாண்டு என்பதற்கு என்ன ஆதாரம்??

உண்மையில், தையோ சித்திரையோ, சங்ககாலத்தில் புத்தாண்டு என்று ஒரு பண்டிகை கொண்டாடப்பட்டதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை! ஆனால், சிறுபொழுது, பெரும்பொழுது எனக் காலத்தைக் கணித்த முன்னோர்கள், குறிப்பிட்ட மாதத்திலிருந்து தான், 12 மாதக் கணக்கைக் ஆரம்பித்திருப்பர் என்பதில் சந்தேகம் இல்லை! அம்மாதம் எது?

“திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக
விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்” -நெடுநல்வாடை. வரி 160 -161

இதன் பொருளை சுருக்கமாகப் பார்த்தால், “வலிமையான கொம்பை உடைய ஆடு (மேடம்) முதலான உடுத்தொகுதிகளின் ஊடாகச் சூரியன் இயங்கும் வான் மண்டலம்” என்பதாகும்.
சூரியன் மேட இராசியில் நிற்கும் மாதம் சித்திரை என்பது யாவரும் ஏற்றுக் கொண்ட ஒன்று தான்! 12 தமிழ் மாதங்களும் சௌரமானத்தில் (சூரியன் சார்ந்து) குறிப்பிடப்படும்போது, மேழம்(மேடம் - சித்திரை), விடை(இடபம் - வைகாசி), ஆடவை(மிதுனம் - ஆனி) என்று 12 தமிழ் இராசிப் பெயர்களிலேயே குறிப்பிடப்படுகின்றன.

சித்திரையே தமிழரின் முதல் மாதம் எனும் நெடுநல்வாடையின் இந்த ஆதாரத்துக்கு பதில் என்ன?? நெடுநல்வாடை பார்ப்பனரால் பாடப்பட்டது - இதுவும் ஒரு ஆரியச் சதி என்று வழக்கமான பல்லவியைப் பாடப்போகிறார்களா??

சங்ககாலத்தில், சித்திரையே முதல்மாதமாகக் கணிக்கப்பட்டது என்பதற்கு நெடுநல்வாடையின் சான்று காட்டியாயிற்று. ஆனால், தை, சித்திரை மாதங்கள் தவிர, இன்னொரு மாதமும் புத்தாண்டு விவாதத்தில் கலந்துகொள்கிறது….

அது ஆவணி!

பழந்தமிழர் ஒரு வருடத்தை ஆறு பருவங்களாகப் பிரித்து வைத்திருந்தனர். கார்காலம்(ஆவணி, புரட்டாதி), கூதிர்காலம்(ஐப்பசி,கார்த்திகை), முன்பனிக்காலம்(மார்கழி, தை), பின்பனிக்காலம்(மாசி, பங்குனி), இளவேனிற்காலம்(சித்திரை, வைகாசி), முதுவேனிற்காலம்(ஆனி, ஆடி) என்பன அவை. (அதைக் கூட தமக்கு சார்பாக, மாற்றி, தை மாதமே இளவேனிற்கால தொடக்கம் என்று கூச்சல் போடுகிறது ஒரு கூட்டம்.)

சோழப்பேரரசு காலத்தில் (கி.பி 10ஆம் 11ஆம் நூற்றாண்டுகள்) குறிப்பிட்ட காலத்துக்கு அல்லது, குறிப்பிட்ட சமூகத்தினருக்கு ஆவணியே முதல் தமிழ் மாதமாக இருந்தது என்பதற்கு இலக்கிய ஆதாரங்கள் உண்டு. சோழப்பேரரசு காலத்தில் உருவானவை எனக் கருதப்படும் நிகண்டுகளில் இதற்கான சான்றுகள் உண்டு.

“மருவும் ஆவணியே ஆதி மற்றிரண் டிரண்டு மாதம்
பருவம் மூவிரண்டும் ஆய்ந்து பார்த்திடின் வாய்த்த பேராம்” -சூடாமணி நிகண்டு,

“ஆவணி முதலா இரண்டி ரண்டாக
மேவின திங்கள் எண்ணினர் கொளலே” - திவாகர நிகண்டு

ஆனால், நீண்ட நாள் கொண்டாடப்பட்டு வந்த வழக்கத்தில் தானோ என்னவோ சித்திரைப் புத்தாண்டே நிலைத்து விட்டது… ஆவணிப் புத்தாண்டு பிரபலமடையவில்லை.

தெளிவான சான்றுகளின் அடிப்படையில் முதல் மாதம் சித்திரையா அல்லது ஆவணியா என்ற வாதம் ஏற்பட்டிருக்கவேண்டுமே தவிர இங்கு தை எங்கிருந்து வந்தது?

இன்னும் அகத்தியர் பன்னீராயிரம், இடைக்காடர் பாடல்கள் முதலான சித்தர் இலக்கியங்கள், கமலை ஞானப்பிரகாசரின் “புட்பவிதி” எனும் நூல், இன்னுஞ் சில கல்வெட்டுச் சாசனங்கள் முதலானவையெல்லாம், சித்திரையே புத்தாண்டு என்பதற்கான ஆதாரத்தை ஐயம் திரிபற சுமந்து நிற்கின்றன.

சித்திரை வருடப்பிறப்பின் புராணக் கதையும், அறுபது வடமொழிப் பெயர்களும் தானே பிரச்சனை? அவற்றைத் தூக்கியெறிந்து விட்டு திருவள்ளுவராண்டின் தொடக்கமாக சித்திரை முதல் நாளைக் கொண்டால்தானென்ன?

60 வருடங்களுக்கும் புதிய தமிழ்ப்பெயர்களை சூட்டலாம், இல்லாவிடின் அறுபது வருடக்கணக்கே வேண்டாம் எனலாம். ஆனால், இவற்றை ஆராயாமல், எந்த அடிப்படையுமே இல்லாமல் தையை மட்டும் தலையில் தூக்கி வைத்து ஆடுவது சரிதானா?

தைப்பொங்கல் தமிழர் திருநாள்; எனவே அது மட்டுமே புத்தாண்டாக இருக்கத் தகுதி படைத்தது என்றும் சிலர் சொல்கின்றனர். உண்மையில் தைப்பொங்கல், தமிழர் மட்டும் கொண்டாடும் பண்டிகையா என்ன?

தெலுங்கர், கன்னடர் - மகர் சங்கிராந்தி
குஜராத்தில் - உத்தராயண்
ஒரிசாவில் - மகர் மேளா
பஞ்சாப், சம்மு, உத்தரப்பிரதேசம் - லோக்ரி பண்டிகை
வங்காளம் - கங்கா சாகர் மேளா
என்று இந்தியாவெங்கும் கொண்டாடப்படும் பண்டிகைகள் எல்லாம் தமிழ் தைப்பொங்கலன்று அல்லது அதைத் தழுவிய நாட்களிலன்றோ (சனவரி 13 அல்லது 14 அல்லது 15) இடம்பெறுகின்றன? இப்படி எத்தனையோ இனத்தவர் சேர்ந்து கொண்டாடும் பண்டிகையைத் தானே இன்று தமிழர் திருநாள் என்கிறோம்!!

தமிழர் மட்டும் கொண்டாடும் பண்டிகை என்றால் கார்த்திகை தீபத்தை ஒருவேளை சொல்லலாம்… (வேண்டாம் வேண்டாம்..பிறகு கார்த்திகைப் புத்தாண்டு கொண்டாடவும் சிலர் ஆயத்தமாவார்கள்…..)

சனவரி மாத முதலாந் தேதி, ஆங்கிலப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இன்றும் கிறித்தவ சகோதரர்கள், சனவரி, பெப்பிரவரி, மார்ச்சு போன்ற ஆங்கில மாதப்பெயர்களுக்கு, தை, மாசி, பங்குனி என்ற தமிழ்மாதப் பெயர்களையே பயன்படுத்துகின்றனர். உண்மையில் தமிழ் மாதங்களுக்கும் ஆங்கில மாதங்களுக்குமிடையில் சுமார் 15 நாட்கள் வித்தியாசமுண்டு!
ஆங்கில மாதங்கள், தமிழ் மாதங்களாகக் காட்டப்பட்ட மாயையில் சிக்கித் தான், ஆங்கிலேயன் கொண்டாடும் சனவரி மாதத்திலேயே தன் புத்தாண்டும் கொண்டாடப்படவேண்டும் என்று விழைந்தானோ “டமிலன்”?

மாறி மாறி ஏற்படும் ஆட்சிமாற்றத்தால், தமிழக மக்கள் புத்தாண்டு விடயத்தில் குழம்புவது போல், ஈழத்தவர்கள் குழப்பமடையவில்லை என்பதில், ஒரு ஈழத்தமிழன் என்ற ரீதியில் பெருமை அடைகிறேன்

கி.பி 1624இல் திருகோணமலை திருக்கோணேச்சரப் பெருமான், சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, நகர்வலம் சென்றிருந்தபோதுதான் போர்த்துக்கேயரால் அத்தலம் இடிக்கப்பட்டது என்பது இலங்கை வரலாறு சொல்லும் உண்மை. இச்சான்று மூலம் குறைந்தபட்சம் சுமார் 400 ஆண்டுகளாகவேனும், ஈழத்தில் சித்திரைப் புத்தாண்டு வழக்கத்தில் இருந்து வருகிறது என உறுதிபடக் கூறலாம்.
அத்தகைய ஒரு பண்டிகையை ஆரியச்சாயம் பூசி ஒழிக்க எண்ணுவது, அவ்வளவு பொருத்தமானதாகத் தெரியவில்லை.

சுருக்கமாகச் சொன்னால்…

» தை புத்தாண்டு என்பதற்கு எந்த விதமான இலக்கிய சான்றுகளும் இல்லை. அவர்கள், ஆதாரத்துக்கு இழுக்கும் மறைமலையடிகளாலும் தமிழறிஞராலும் கூட, தைப்புத்தாண்டு, என்றுமே முன்மொழியப்படவில்லை.

» தையே புத்தாண்டு என்பதற்கு அவர்கள் முன்வைக்கும் “தைஇத்திங்கள்”, “தைஇய திங்கள்”, “தைநீராடல்” என்ற பதங்கள், வெறுமனே தைமாதத்தைக் குறிப்பிடுகிறதே அன்றி, தை தான் தமிழரது புத்தாண்டு என்று பூடகமாகவேனும் குறிப்பிடவில்லை.

» தை முதனாள் வருடப்பிறப்பானதில், முழுக்க முழுக்க திராவிட வெறியையும் சனாதன நெறி எதிர்ப்பையும் தான் காணமுடிகிறது. தவிர, இது உண்மையான பகுத்தறிவுடன் முடிவு செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

» சித்திரை, ஆவணி என்பன முதல்மாதங்களாகக் கருதப்பட்டன என்பதற்கு இலக்கியச் சான்றுகள் உண்டு. ஆனால், ஆவணி தவிர்க்கப்பட்டு, இலக்கியச் சான்றே இல்லாத தை, இந்தப் பந்தயத்தில் கலந்துகொண்ட மர்மம் யாருக்கும் புரியவில்லை.

ஆக, தமிழ்ப்புத்தாண்டு சித்திரையே என்பது வெள்ளிடைமலையாகிறது.
தமிழர் புத்தாண்டுக்கு தெளிவு கண்ட இவ்விடத்தில், உலகெங்கிலும் வாழ் தமிழறிஞர் பெருமக்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன்.
தமிழ்ப்புத்தாண்டு தமிழருக்குரியது. வடமொழி 60 பெயர்களையும் தமிழ்ப்படுத்தி பயன்படுத்தலாம். அல்லது, வடமொழி 60 பெயர் வழக்கைத் தவிர்த்து, திருவள்ளுவர் ஆண்டுக்கணக்கை ஏற்றுக் கொள்ளலாம் - ஆனால், அது சித்திரை 1இல் துவங்குவதாக இருக்கவேண்டும்.
(திருவள்ளுவரின் காலம் கி.மு அல்ல, கி.பி என்ற வாதம் உள்ளமையும் இங்கு நோக்கத் தக்கது.)

இவற்றில் எதை ஏற்றுக் கொள்ளலாம் - எதைத் தவிர்க்கலாம் என்பதை தமிழறிஞர்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவேண்டும்.

இந்தியாவில் உள்ள சாதிகளின் பட்டியல்

ஆதிதிராவிடர் பட்டியல்

1. ஆதி ஆந்திரர்
2. ஆதி திராவிடர்
3. ஆதி கர்நாடகர்
4. அஜிலா
5. அருந்ததியர்
6. அய்யனார் (சாதி) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
7. பைரா
8. பகூடா
9. பண்டி
10. பெல்லாரா
11. பரதர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
12. சங்கிலியர், சக்கிலியன்
13. சாலாவாடி
14. சாமார், மூச்சி
15. சண்டாளா
16. செருமான்
17. தேவேந்திர குலத்தார்
18. டோம், தொம்பரா, பைதி, பானே
19. தோம்பன்
20. கொடகலி
21. கொடடா
22. கோசாங்கி
23. ஹொலையா
24. ஜக்கலி
25. ஜம்புவுலு
26. கடையன்
27. கக்காளன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
28. கல்லாடி
29. கணக்கன், பாடண்ணா (நீலகிரி மாவட்டம்)
30. கரிம்பாலன்
31. கவரா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
32. கோலியன்
33. கூசா
34. கூத்தன், கூடன்(கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
35. குடும்பன்
36. குறவன், சித்தனார்
37. மடாரி
38. மாதிகா
39. மைலா
40. மாலா
41. மன்னன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
42. மாவிலன்
43. மோகர்
44. முண்டலா
45. நலகேயா
46. நாயாதி
47. பாதண்ணன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
48. பகடை
49. பள்ளன்
50. பள்ளுவன்
51. பம்பாடா
52. பாணன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
53. பஞ்சமா
54. பன்னாடி
55. பன்னியாண்டி
56. பரையன், பறயன், சாம்பவார்
57. பரவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
58. பதியன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
59. புலையன்
60. புதிரை வண்ணான்
61. ராணேயர்
62. சாமாகாரா
63. சாம்பான்
64. சபரி
65. செம்மான்
66. தாண்டன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
67. தோட்டி
68. திருவள்ளுவர்
69. வல்லோன்
70. வள்ளுவன்
71. வண்ணான் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
72. வாத்திரியன்
73. வேலன்
74. வேடன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
75. வெட்டியான்
76. வேட்டுவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

பழங்குடியினர் பட்டியல்

1. ஆதியன்
2. ஆரநாடான்
3. எரவள்ளன்
4. இருளர்
5. காடர்
6. கம்மாரா (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
7. காணிக்கர், காணிக்காரன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
8. கணியர், காணியான், கணியன்
9. காட்டு நாயகர், காட்டு நாயகன்
10. கொக்கவேலன்
11. கொண்டகாப்புகள்
12. கொண்டாரெட்டிகள்
13. கொராகா
14. கோடா (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
15. குடியா, மேலக்குடி
16. குறிச்சன்
17. குறும்பர் (நீலகிரி மாவட்டத்தில்)
18. குறுமன்கள்
19. மகாமலசார்
20. மலை அரையன்
21. மலைப் பண்டாரம்
22. மலை வேடன்
23. மலைக்குறவன்
24. மலசார்
25. மலயாளி (தர்மபுரி, வேலூர், புதுக்கோட்டை, சேலம், கடலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில்)
26. மலயக்கண்டி
27. மன்னன் (சாதி)
28. மூடுகர், மூடுவன்
29. முதுவர், முத்துவன்
30. பள்ளோயர், பள்ளேயன்
31. பள்ளியன்
32. பள்ளியர்
33. பாணியர்
34. சோலகா
35. தோடர் (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
36. உரளி

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல்
(பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபாண்மை நலத்துறையின் அரசாணைகள் எண்:85, நாள் 29-07-2008, எண்:97, நாள் 11-09-2008 மற்றும் எண்:37, நாள்: 21-05-2009)

1. தொழுவ அல்லது துளுவவெள்ளாளர் உட்பட அகமுடையார்
2. அகரம் வெள்ளாஞ் செட்டியார்
3. ஆழ்வார், அழவர் மற்றும் அளவர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
4. சேர்வை (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் நீங்கலாக)
5. அரயர், நுலயர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
6. அர்ச்சகர வேளாளர்
7. ஆர்யவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
8. ஆயிர வைசியர்
9. படகர்
10. பில்லவா
11. பொண்டில்
12. போயர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் நீங்கலாக), பெத்தபோயர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை நீங்கலாக), ஒட்டர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் நீங்கலாக), கல் ஒட்டர்கள் (காஞ்சிபுரம், திருவள்ளூர், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாமக்கல், சேலம் மாவட்டங்கள் நீங்கலாக), நெல்லூர்பேட்டை ஒட்டர்கள் (வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் நீங்கலாக), சூரமாரி ஒட்டர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டம் நீங்கலாக)
13. சக்காலா (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக)
14. சவலக்காரர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
15. செட்டு அல்லது செட்டி (கோட்டார் செட்டி, ஏலூர் செட்டி, பாத்திரச் செட்டி, வேலூர் செட்டி, புதுக்கடை செட்டி உட்பட) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
16. சௌத்திரி
17. கல்வி நிலையங்களில் இருக்கைகள் மற்றும் அரசுப்பணிகளின் இருக்கைக்களுக்கும் இட ஒதுக்கீடு பெறும் நோக்கத்திற்காக தலைமுறையைப் பொருட்படுத்தாமல் ஆதிதிராவிடர் வகுப்பினர்களிலிலிருந்து கிறித்துவராக மாறியவர்கள்.
18. தென்னிந்திய திருச்சபை (முன்னாள் தெ.இ.கி.ஒ) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
19. தொங்க தாசரிகள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சென்னை, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்கள் நீங்கலாக)
20. தேவாங்கர், சேடர்
21. தொம்மார்கள் (புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் நீங்கலாக), தோமர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் நீங்கலாக)
22. ஏனாதி
23. எழவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
24. எழுத்தச்சர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
25. எழுவா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
26. கங்கவார்
27. கவரா, கவரை மற்றும் வடுகர் (வடுவர்) (கம்மா, காப்பு பலிஜா மற்றும் ரெட்டி இல்லாத பிற)
28. கௌண்டர்
29. கௌடா (கம்மாளர், கலாலி மற்றும் அனுப்பக் கவுண்டர்)
30. ஹெக்டே
31. இடிகா
32. இல்லத்துப்பிள்ளைமார், இள்ளுவர்(ஈழவர்), எழுவர், இல்லத்தார்
33. ஜெட்டி
34. ஜோகிகள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், மதுரை, தேனி, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் நீங்கலாக)
35. கப்போரா
36. கைக்கோளர், செங்குந்தர்
37. காலாடி (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலுர் மாவட்டங்கள் நீங்கலாக)
38. களரி குரூப், களர் பணிக்கர் உட்பட (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
39. கலிங்கி
40. கள்ளர், ஈசநாட்டுக் கள்ளர், கந்தர்வ கோட்டை கள்ளர்கள் உட்பட (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நீங்கலாக) கூத்தப்பால் கள்ளர்கள் (புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் நீங்கலாக), பிரமலைக் கள்ளர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் நீங்கலாக), பெரிய சூரியர் கள்ளர்கள் ( திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நீங்கலாக)
41. கள்ளர் குலத் தொண்டைமான்
42. கால்வேலிக் கௌண்டர்
43. கம்பர்
44. கம்மாளர் அல்லது விஸ்வகர்மா (விஸ்வகர்மாலா, தட்டார், பொற்கொல்லர், கன்னார், கருமார், கொல்லர், தச்சர், கல்தச்சர், கம்சாலா மற்றும் விஸ்வபிராமணர் உட்பட)
45. கணி, கணிசு, கனியர், பணிக்கர்
46. கனியால வேளாளர்
47. கன்னட சைனீகர், கன்னடியார் (மாநிலம் முழுவதும்) மற்றும் தசபலான்ஜிகா (கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில்)
48. கன்னடியநாயுடு
49. கற்பூர செட்டியார்
50. கரூணீகர் (சீர் கருனீகர், ஸ்ரீ கருணீகர், சரடு கரூணீகர், கைகட்டிக் கரூணீகர், மாத்து வழ கணக்கர், சோழிக் கணக்கர் மற்றும் சுண்ணாம்பு கரூணீகர்)
51. காசுக்கார செட்டியார்
52. கடேசர், பட்டம்கட்டி
53. கவுத்தியர்
54. கேரளமுதலி
55. கார்வி
56. கத்ரி
57. கொங்கு வைணவர்
58. கொங்கு வேளாளர்கள்(வெள்ளாளக் கௌண்டர், நாட்டுக் கௌண்டர், நரம்புக் கட்டிக் கௌண்டர், திருமுடி வேளாளர், தொண்டு வேளாளர், பாலக் கௌண்டர், பூசாரிக் கௌண்டர், அனுப்ப வேளாளக் கௌண்டர், குரும்பக் கௌண்டர், படைத்தலைக் கௌண்டர், செந்தலைக் கௌண்டர், பாவலன்கட்டி வெள்ளாளக் கௌண்டர், பால வெள்ளாளக் கௌண்டர், சங்கு வெள்ளாளக் கௌண்டர் மற்றும் ரத்தினகிரிக் கௌண்டர் உடபட)
59. கோப்பல வேலம்மா
60. கோட்டேயர்
61. கிருஷன்வாகா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
62. குடிகார வேளாளர்
63. குடும்பி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
64. குக வேளாளர்
65. குஞ்சிடிகர்
66. லம்பாடி
67. இலத்தீன் கத்தோலிக்கர்கள் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
68. லிங்காயத் (ஜங்கமா)
69. மராட்டிய (பிராமணரல்லாதோர்) நாம்தேவ் மராட்டியர் உட்பட
70. மலயர்
71. மாலி
72. மானியகார்
73. மறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் நீங்கலாக) கருமறவர்கள், அப்பனாடு கொண்டையம் கோட்டை மறவர் உட்பட (சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள் நீங்கலாக) மற்றும் செம்பனாடு மறவர்கள் (சிவகங்கை, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் நீங்கலாக)
74. மூன்று மண்டை எண்பத்துநாலு (84) ஊர் சோழிய வெள்ளாளர்கள்
75. மூப்பன்
76. முத்துராசா, முத்துராச்சா, முத்திரியர், முத்தரையர்
77. நாடார்,சாணார் மற்றும் கிராமணி (கிறித்துவ நாடார், கிறித்துவ சாணார் மற்றும் கிறித்துவ கிராமணி உட்பட)
78. நகரம்
79. நாயக்கர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
80. நன்குடி வேளாளர்
81. நாஞ்சில் முதலி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
82. ஓடர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
83. ஓதியா
84. ஊற்று வளநாட்டு வேளாளர்
85. ஓ.பி.எஸ்.வேளாளர்
86. உவச்சர்
87. பய்யூர் கோட்ட வேளாளர்
88. பாமுலு
89. பாணர் (இந்த இனம் ஆதிதிராவிட வகுப்பினர்களாக இருக்கும் (கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
90. பாணிசைவன் (வீரக்கொடி வெள்ளாளர் உட்பட)
91. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கதிகாரர்
92. [பன்னிரண்டாம் செட்டியார்]] அல்லது உத்தமச் செட்டியார்
93. பார்க்கவகுலம் (சுரிதிமார், நத்தமார், மலைமார், மூப்பனார், நைனார் உட்பட)
94. பெருக்கி (பெரிகே, பலிஜா உட்பட)
95. பெரும்கொள்ளர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
96. பொடிகார வேளாளர்
97. பூலுவ கவுண்டர்
98. பொராயா
99. புலவர்(கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களில்)
100. புள்ளுவர் அல்லது பூலூவர்
101. புசலா
102. ரெட்டி (கஞ்சம்)
103. சாதுச் செட்டி (தெலுங்குச் செட்டி, இருபத்து நான்கு மனைத் தெலுங்குச் செட்டி உட்பட)
104. [[சக்கரவார்] அல்லது கவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
105. சாலிவாகனா
106. சாலியர், பத்மசாலியர், பட்டு சாலியர், பட்டாரியர் மற்றும் அடவியர்
107. சவலக்காரர்
108. சேனைத்தலைவர், சேனைக்குடியர், இலை வாணியர்
109. சௌராட்டிரா (பட்டுநூல்காரர்)
110. சோழிய வெள்ளாளர் (சோழ வெள்ளாளர், வெற்றிலைக்காரர், கொடிக்கால்காரர் மற்றும் கீரைக்காரர்)
111. ஸ்ரீசயர்
112. சுந்தரம் செட்டி
113. தொகட்டா வீரசத்திரியர்
114. தொல் கொல்லர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
115. துளவ நாய்க்கர் மற்றும் வெத்தலக்கார நாய்க்கர்
116. தொரையர்
117. தோரியர்
118. உக்கிரகுல சத்திரிய நாயக்கர்
119. உப்பாரா, உப்பிலியா மற்றும் சகாரா
120. ஊராளிக் கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நீங்கலாக) மற்றும் ஒருடைய கவுண்டர் அல்லது ஊருடைய கவுண்டர் (மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் நீங்கலாக)
121. உரிக்கார நயக்கர்
122. வல்லம்பர்
123. வால்மீகி
124. வாணியர், வாணியச் செட்டியார் (கண்டல், கனிகா, தெலிகுல செக்கலார் உட்பட)
125. வேடுவர் மற்றும் வேடர் (இச்சமூகத்தினர் ஆதிதிராவிடராக இருக்கும் (கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
126. வீர சைவர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
127. [வேளர்]]
128. வெள்ளாஞ்செட்டியார்
129. வெலுதொடத்து நாயர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
130. வொக்கலிகர் (வக்கலிகர், ஒக்காலிகர், கப்பிலியர், ஒக்கலிக கௌடா, ஒக்காலியா கௌடா, ஒக்காலிய கவுடர், ஒக்காலிய கவுடா உட்பட)
131. வயநாடு செட்டி (நீலகிரி மாவட்டம்)
132. யாதவா (இடையர், வேடுக ஆயர் அல்லது வடுக இடையர் அல்லது கொல்லா மற்றும் அஸ்தந்திர கொல்லா என அழைக்கப்படுகிற தெலுங்கு மொழி பேசும் இடையர் உட்பட)
133. யவன
134. ஏருகுலா
135. மீனவர், பர்வதராஜகுலம், பட்டணவர், செம்படவர், முக்குவார் அல்லது மூகையர் மற்றும் பர்வரிலிருந்து கிறித்துவ மதத்திற்கு மதம் மாறியவர்கள் நீங்கலாக எந்த ஒரு இந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லது சீர்மரபினர்கலிலிருந்து கிறித்துவ மதத்திற்கு மதம் மாறியவர்கள்.
136. 10 வயதுக்கு முன்பு பெற்றோர்களை இழந்தவர்கள் மற்றும் ஆதரவற்றவர்கள். சட்டப்படியோ அல்லது வழக்கமாகவோ எவர் ஒருவரும் அவர்கள் மீது அக்கறை கொள்ளாதவர்கல் மற்றும் அரசால் ஏற்பளிக்கப்பட்ட பள்ளிகள் அல்லது அனாதைகள் மற்றும் ஆதரவற்றவர்கள்.


1. ஆண்டிப்பண்டாரம்
2. பெஸ்தா, சீவியர்
3. பட்ராஜீ (சத்திரிய ராஜீக்கள் நீங்கலாக)
4. போயர், ஒட்டர்
5. தாசரி
6. தொம்மரா
7. எரவள்ளர் (இவ்வினத்தவர்கள் பட்டியலில் பழங்குடியினராக உள்ள கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
8. இசை வேளாளர்
9. ஜம்புவானோடை
10. ஜங்கம்
11. ஜோகி
12. கொங்குச் செட்டியார் (கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மட்டும்)
13. கொரச்சா
14. குலாலா (குயவர், கும்பரர் உள்ளிட்ட)
15. குன்னுவர் மன்னாடி
16. குறும்பர்
17. குறு உறனி செட்டி
18. மருத்துவர், நாவிதர், மங்கலா, வேலக்கட்டலவா, வேலக்கட்டல நாயர் மற்றும் புரோனோபகாரி
19. மோண்ட் கொல்லா
20. மவுண்டாடன் செட்டி
21. மகேந்திரா, மேதரா
22. முட்டலகம்பட்டி
23. நரிக்குறவர்
24. நோக்கர்
25. வன்னிய குலச் சத்திரியர்(வன்னியர், வன்னியா, வன்னியகவுண்டர், கவுண்டர் அல்லது கண்டர், படையாட்சி, பள்ளி மற்றும் அக்னிகுல சத்திரியர் உட்பட)
26. பரவர்,பரதவர்,பரதர் (இச்சமுதாயத்தினர் பட்டியல் வகுப்பினராக உள்ள கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக, கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)
27. மீனவர் (பர்வதராஜகுலம், பட்டனவார், செம்படவர் கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)
28. முக்குவார் அல்லது முகயர் (கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)
29. புன்னன், வேட்டுவ கௌண்டர்
30. பண்ணையார் (கன்னியாகுமரி மாவட்டத்தில் கதிகாரர் நீங்கலாக)
31. . சதாத ஸ்ரீ வைஷ்ணவ (சதானி, சட்டாடி மற்றும் சட்டாட வைஷ்ணவ உட்பட)
32. சோழிய செட்டி
33. தெலுங்குப் பட்டி செட்டி
34. தொட்டிய நாயக்கர் (ராஜகம்பளம், கொல்லாவர், சில்லவர், தொக்களவார் மற்றும் தொழுவ நாயக்கர்)
35. தொண்டைமான்
36. வலையர் (செட்டிநாடு வலையர் உட்பட)
37. வண்ணார்(சலவைத் தொழிலாளர்), அகசா, மடிவளா, ஏகாலி, ராஜகுல வேலுத்தடார் மற்றும் ராஜாகா உட்பட) (இச்சமூகத்தினர் ஆதிதிராவிட வகுப்பினராக இருக்கும் கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
38. வேட்டைக்காரர்
39. வேட்டுவக் கௌண்டர்
40. யோகீஸ்வரர்

சீர்மரபினர் பட்டியல்

1. ஆத்துர் கீழ்நாடு குறவர்கள் (சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்)
2. ஆத்தூர் மேல்நாடு குறவர்கள் (சேலம், நாமக்கல் மாவட்டங்கள்)
3. அப்பநாடு கொண்டையம் கோட்டை மறவர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள்)
4. அம்பலகாரர் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
5. அம்பலக்காரர் (சூரியனூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம்)
6. போயர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள்)
7. பட்டுதுர்காஸ்
8. சி.கே.குறவர்கள் (கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள்)
9. சக்கலா (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், மதுரை, திண்டுக்கல், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்கள்)
10. சங்கயம்பாடி குறவர்கள் (வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
11. செட்டிநாடு வலையர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்கள்)
12. தொம்பர்கள்(புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்)
13. தொப்ப குறவர்கள் (சேலம், நாமக்கல் மாவட்டங்கள்)
14. தொம்மர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
15. தொங்கபோயர்
16. தொங்கஊர் கொறச்சார்கள்
17. தேவகுடி தலையாரிகள்
18. தொப்பை கொறச்சாக்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
19. தாபி குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
20. தொங்கதாசரிகள் (கரூர், பெரம்பலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
21. கொரில்லா தோட்ட போயர்
22. குடு தாசரிகள்
23. கந்தர்வ கோட்டை குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள்)
24. கந்தர்வ கோட்டை கள்ளர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
25. இஞ்சிக் குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும்புதுக்கோட்டை மாவட்டங்கள்)
26. ஜோகிகள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னை, கடலூர், விழுப்புரம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
27. ஜம்பவனோடை
28. காலடிகள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
29. கல் ஒட்டர்கள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கரூர், பெரம்பலூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
30. குறவர்கள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்கள்)
31. களிஞ்சி தாபி குறவர்கள்(தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
32. கூத்தப்பால் கள்ளர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
33. கல குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
34. கலவதிலா போயர்கள்
35. கேப்மாரிகள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்
36. மறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்)
37. மொந்த குறவர்கள்
38. மொந்த கொல்லா (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
39. முடலகம்பட்டி (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
40. நோக்கர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
41. நெல்லூர்பேட்டை ஒட்டர்கள் (வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
42. ஒட்டர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள்)
43. பெத்த போயர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
44. பொன்னை குறவர்கள் (வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள்)
45. பிரமலைக்கள்ளர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள்)
46. பெரிய சூரியூர் கள்ளர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
47. படையாட்சி (கடலூர் மாவட்டத்தில் வெள்ளையன் குப்பம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தென்னூர்)
48. புன்னன் வேட்டுவ கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
49. சேர்வை (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
50. சேலம் மேல்நாடு குறவர்கள் (மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
51. சேலம் உப்பு குறவர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
52. சர்க்கரைத்தாமடை குறவர்கள் (வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
53. சாரங்கபள்ளி குறவர்கள்
54. சூரமாரி ஒட்டர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
55. செம்பநாடு மறவர்கள் (சிவகங்கை, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள்)
56. தல்லி குறவர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
57. தெலுங்குபட்டி செட்டிகள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
58. தொட்டிய நாயக்கர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், காஞ்சீபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, கரூர், பெரம்பலூர், தூத்துக்குடி, சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள்)
59. தோகமலைக் குறவர்கள் அல்லது கேப்மாரிகள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
60. உப்பு குறவர்கள் அல்லது செட்டி பள்ளி குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், வேலுர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
61. ஊராளிக் கவுண்டர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
62. வயல்பாடு அல்லது நவல்பட்டு கொரசாக்கள்
63. வடுவார்பட்டி குறவர்கள் (மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
64. வலையர்கள் (மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்கள்)
65. வேட்டைக்காரர் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
66. வெட்டா குறவர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
67. வரகநேரி குறவர்கள் ((திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
68. வேட்டுவக் கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
இதர வகையினர்

மேற்கண்ட பட்டியலில் இல்லாத அனைத்து சாதியினரும் முற்பட்ட வகுப்பினராகவும், இதர வகையினராகவும் உள்ளனர்.

முற்பட்ட வகுப்பினர்

1985-ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இரண்டாவது கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் முற்பட்ட வகுப்பினர் என வகைப்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியல் இது. இங்கு முற்பட்ட சாதி / கிளைச் சாதிக்கு அரசு வழங்கியுள்ள குறியீட்டு எண்கள் (அடைப்புக் குறிக்குள்) வரிசைப்படுத்தப்பட்டுள்ளன