Powered By Blogger

27 நவம்பர் 2013

சிறந்த செல்வம் பெற



தநதாந்யபதிர் த்ந்யோ தநதோ தரணீதர:
த்யாநைக ப்ரகடோ த்யேய: த்யாநோ த்யாந பராயண:
இதைக் கூறினால் தன தான்யங்கள் பெருகி நன்மை உண்டாகும்.


 
சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க
 
அஷ்டஸக்தி ஸம்ருத்திஸ்ரீ ரஷ்டைஸ்வர்ய ப்ரதாயக:
அஷ்டபீடோப பீடஸ்ரீ ரஷ்டமாத்ரு ஸமாவ்ருத:
அஷ்டபைரவ ஸேவ்யாஷ்ட வஸுவந்த்யோஷ்ட மூர்த்திப்ருத்
அஷ்டசக்ர ஸபுபுரந்மூர்த்தி ரஷ்டத்ரவ்ய ஹவி: ப்ரிய:

 
செல்வம் கிடைக்க
 
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தனநாயிகாயை
ஸ்வர்ணாகர்ஷண தேவ்யாயை
சர்வ தாரித்ரிய நிவாரணாயை
ஓம் ஹ்ரீம் ஸ்வாஹா:

 
ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்
 
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்
ஞானாயை கமலதாரிண்யை
சக்தியை சிம்ஹ வாஹின்யை
பலாயை ஸ்வாஹா !
ஓம் குபேராய நமஹ
ஓம் மகாலட்சுமியை நமஹ
என தினமும் 1008 முறை அல்லது 108 முறை சொல்லி வந்தால் குபேரன் மற்றும் மகாலெட்சுமி அருளினால் மிகுந்த செல்வம் கிடைக்கும்.

 
மகா லக்ஷ்மி அஷ்டகம்
 
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்கு சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ?மி நமோஸ்துதே
நமஸ்தே கருடாரூட கோலாஸுர பயங்கரி
ஸர்வபாப ஹரே தேவி மஹாலக்ஷ?மி நமோஸ்துதே
ஸர்வஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரி
ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ?மி நமோஸ்துதே
ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதா தேவி மஹாலக்ஷ?மி நமோஸ்துதே
ஆத்யந்த் ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ?மி நமோஸ்துதே
ஸ்த்தூல ஸூக்ஷ?ம மஹாரௌத்ரே மஹாசக்தி மஹோதரே
மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ?மி நமோஸ்துதே
பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரும்ம ஸ்வரூபிணி
பரமேஸி ஜகந்மாதா மஹாலக்ஷ?மி நமோஸ்துதே
ஸ்வேதாம்பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகத் ஸ்திதே ஜகந்மாத மஹாலக்ஷ?மி நமோஸ்துதே.
மஹாலக்ஷ?ம்யஷ்டக ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமான் நர
ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா
ஏககாலே படேன் நித்யம் மஹாபாப வினாஸநம்
த்விகாலே ய: படேந்நித்தியம் தனதாந்ய ஸமந்வித:
திரிகாலம் ய: படேந்நித்யம் மஹாஸத்ரு: விநாஸனம்
மஹாலக்ஷ?மீர் பவேன் நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா

 
மஹாலட்சுமியின் அனுகிரகம் பெறவும், வேலை கிடைக்கவும்

லக்ஷ?மி ஹ்ருதயம் என்ற இதைக் குரு முகமாக உபதேசம் பெற்று அல்லது ஸ்வாமி படத்தின் அடியில் புத்தகத்தை வைத்து, பிரதி தினம் காலையில் 10 முறை; வெள்ளிக்கிழமை மாலையில் நெய்தீபம் ஏற்றி, அதில் லெட்சுமி பூஜை செய்து 108 முறை இப்படி ஜெபித்தால் செல்வம் உண்டாகும். வேலை கிடைக்கும்.
ஸ்ரீ தேவிஹி அம்ருதோத்
பூதா-கமலா-சந்த்ர சேபாநா
விஷ்ணு-பத்னீ வைஷ்ணவீச
வராரோஹீ ச ஸார்ங்கிணீ
ஹரி-ப்ரியா தேவ-தேவி
மஹாலக்ஷ?மீ ச ஸுந்தரீ

 
குபேரர் தியான ஸ்லோகம்
 
மநுஜ வாஹ்ய விமாந வரஸ்திகம்
கருடரத்ந நிபம் நிதிதாயகம்!
ஸிவஸகம் முகுடாதி விபூஷிதம்
வரகதம் தநதம் பஜ துந்திலம் !!

 
குபேர சம்பத்து உண்டாக குபேரர் மந்திரம்
 
ஓம் யக்ஷõய குபேராய வைஸ்வரவணாய
தனதான்யாதிபதயே தனதான்ய ஸம்ருத்திம்மே
தேஹி தாபய ஸ்வாஹா

குபேர காயத்ரீ
 
ஓம் யக்ஷசாய ச வித்மஹே
வைஸ்ரவ ணாய தீமஹி
தன்னோ  ஸ்ரீத  ப்ரசோதயாத்

 
ஸ்வர்ணாகர்ஷண பைரவ காயத்ரி
 
ஓம் பைரவாய வித்மஹே ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி
தன்னோ : ஸ்வர்ணா கர்ஷணபைரவ ப்ரசோதயாத்
இந்த காயத்ரியை 21 முறை சொல்லி கீழ்க்கண்ட 12 நாமாக்களைக் கூறி பைரவரை வழிபடுவர்களுக்கு பைரவர் பொற்குவியலைக் கொடுப்பார்.
ஸ்வர்ணப்ரத
ஸ்வர்ணவர்ஷீ
ஸ்வர்ணாகர்ஷண பைரவ
பக்தப்ரிய
பக்த வச்ய
பக்தாபீஷ்ட பலப்ரத
ஸித்தித
கருணாமூர்த்தி
பக்தாபீஷ்ட ப்ரபூரக
நிதிஸித்திப்ரத
ஸ்வர்ணா ஸித்தித
ரசஸித்தித

செல்வம் பெருக ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ண பைரவாய
ஹூம்பட் ஸ்வாஹா
ஓம் நமோ பகவதே சுவர்ணாகர்ஷண பைரவாய
தன தான்ய வ்ருத்தி கராய சீக்ரம் ஸ்வர்ணம்
தேஹி தேஹி வச்யம் குரு ஸ்வாஹா.

கல்வியில் மேன்மை பெற




 

 ஸ்ரஸ்வத்யா ஸ்ரிதோ கௌரீ நந்தந: ஸ்ரீநிகேதந:
குருகுப்த பதோ வாசா ஸித்தோ வாகீஸ்வரேஸ்வர:
இதைக் கூறினால் கல்வி வளரும்.


இன்பமாய் வாழ



 அநந்தாநந்த ஸுகத: ஸுமங்கள ஸுமங்கள:
இச்சாஸக்திர் ஜ்ஞாநஸக்தி க்ரியாஸக்தி நிஷேவித:
ஸுபகா ஸம்ஸ்ரிதபத: லலிதா லிதாஸ்ரய:
காமிநீ காமந: காம: மாலிநீ கேளிலாலித:
 

இதை காலையில் 10 முறை மனனம் செய்தால் துக்கம் நீங்கி சந்தோஷம் உண்டாகும்.

நாகதோஷம் நீங்கி, குழந்தைப்பேறு உண்டாக

http://barbarashdwallpapers.com//home/deb51634n10/domains/barbarashdwallpapers.com/public_html/wp-content/uploads/blogger/-SXGz7AVgZRI/TVWO4KZQ7II/AAAAAAAABRo/bGPM8381VZc/s1600/The-best-top-desktop-snake-wallpapers-hd-snakes-wallpaper-14-cobra-snake.jpg


ஸ்தம்பகாகார கும்பாக்ரோ ரந்நமௌளிர் நிரங்குஸ:
ஸர்ப்பஹார கடீஸூத்ர: ஸர்ப்ப யஜ்ஞோபவீதவாந்
ஸர்ப்பகோடீர கடக: ஸர்ப்ப க்ரைவேயகாங்கத:
ஸர்ப்ப கக்ஷதராபந்த: ஸர்ப்பராஜோத்தரீயக:
இதைக் கூறினால் குழந்தைப் பேறு உண்டாகும்.


கணபதி மந்திரம்

 

எடுத்த காரியங்கள் யாவினும் தடையின்றி வெற்றி பெற

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

ஸ்ரீவல்லப மஹா கணபதி மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வர
வரத சர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா

தன ஆகர்ஷண கணபதி மந்திரம்

ஓம் க்லாம் க்லீம் கம் கணபதயே வரவரத மம தன
தான்ய சம்ருத்திம் தேஹி தேஹி ஸ்வாஹா

வ்ராத கணபதி மந்திரம்
ஓம் நமோ வ்ராத பதயே நமோ கணபதயே நம:
ப்ரமதபதயே நமஸ்தேஸ்து லம்போதராய
ஏகதந்தாய விக்னவிநாசினே சிவ சுதாய
வரத மூர்த்தயே நமோ நம:

சக்தி விநாயக மந்திரம்
ஓம் ஹ்ரீம் க்ரீம் கணபதயே நம:

விநாயகர் காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே; வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி: ப்ரசோதயாத்

ஸ்ரீலட்சுமி கணபதி மந்திரம்
ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே
வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா

சர்வ வித்யா கணபதி மந்திரம்
தினமும் காலையில் 108 முறை சொல்ல, கல்வி அறிவு வளர்ச்சி பெறும். அறிவு விருத்தியாகும். தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும்.
ஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே
வர வரத ஐம் ப்ளூம் சர்வ வித்யாம் தேஹி ஸ்வாஹா

சகல காரிய சித்திக்கான எளிய முறை:

செய்யும் காரியங்களில் தடைகள் விலக
மஹா கணபதிர் புத்தி ப்ரிய: ஷிப்ர ப்ரஸாதத ந
ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமாபுத்ரோஸ்க நாஸந;

இதை தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்.

ஓம் நமோ நாராயணாய



சிவவாக்கியர் கூறும் மந்திரம் ஓம் நமோ நாராயணாய எனும் எட்டெழுத்து மந்திரம், மனதில் நினைத்துக் கொண்டு நூறு உருப்போட்டால் பஞ்சமாபாதகங்கள் செய்திருந்தாலும் அவை பஞ்சுபோல் மறைந்து விடும்.
அஷ்டாக்ஷரம் என்பது எட்டெழுத்தைக் குறிக்கும்.

ஓம் நமோ நாராயணாய
ஓம் என்பது ஓரெழுத்தாகவும், நம என்பது இரண்டெழுத்தாகவும், நாராயணாய என்பது ஐந்தெழுத்தாகவும் ஆக மொத்தம் எட்டெழுத்தும் சேர்ந்து நாராயண அஷ்டாக்ஷரம் எனப்படும். இதைத் தொடர்ந்து கூறிவர நிறைந்த ஆயுள் கிடைக்கும். எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். தீமைகள், துன்பங்கள் தொடராது. முக வசீகரம் கிடைக்கும். எல்லாச் செல்வங்களும் கிட்டும். காலையில் இதை கூறுபவன் இரவில் செய்த பாவத்தை நாசம் செய்கிறான். மாலையில் கூறுபவன் பகலில் செய்த பாவத்தை நாசம் செய்கிறான். உச்சிப்பொழுதில் கூறுபவன் ஐந்துவித மகா பாதகங்கள், உப பாதகங்களிலிருந்து விடுபடுகிறான். எல்லா வேதங்களையும் ஓதிய புண்ணியத்தை அடைகிறான்.

மேற்கூறிய அனைத்தும் நாராயண உபநிஷத்தில் உள்ளவை.

குலந்தரும் செல்வந்தந்திடும் அடியார்
படுதுயராயின வெல்லாம்
நிலந்தரச் செய்யும் நீள்விசும்பருளும்
அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்ற
தாயினு மாயினசெய்யும்
நலத்தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம்.


முதல் தெய்வம் விநாயகர்


 

 எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும் அது எவ்விதத் தடையும் இல்லாமல் முற்றுப்பெற விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிப்பது நமது வழக்கம்.

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
என்று பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும். இது விஷ்ணு சகஸ்ரநாமத்தில் உள்ளது.

எல்லாவிதத் தடைகளும் இடையூறுகளும் நீங்கவும், மறைந்து போகவும் வெள்ளை நிற உடையணிந்து கொண்டிருப்பவரும் நான்கு கரங்களை உடையவரும் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளும், நிலவைப் போன்ற தன்மையுடையவரும், எப்பொழுதும் ஆனந்தமயமாக அருட்காட்சியளிக்கும் விநாயகரைத் தியானிப்போம் என்பது இதன் பொருளாகும்.
காலையில் எழுந்தவுடன் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

பொருள் : யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்.

வினைகள் தீர்க்கும் விநாயகர்



விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்:
விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணியின் கனிந்து
பொருள் : கொடிய துன்பங்களை வேரறுப்பவர், பொருள் பற்றைத் தணிவிப்பவர், வானுலகிற்கும் மண்ணுலகிற்கும் தலைவர். இத்தன்மையினரான விநாயகரைப் பணிந்து வணங்கினால் நன்மை பல பெற்று வாழலாம்.