Powered By Blogger

28 ஜனவரி 2014

மீசை மற்றும் தாடியை நன்கு வளர்ப்பதற்கு....

ஆண்கள் ஃபேஷன் என்ற பெயரில் மீசை மற்றும் தாடியை ட்ரிம் செய்து கொள்வது, லேசான மீசை தெரியு மாறு வைப்பது என்று இருந்தார் கள். ஆனால் இப்போ து ஆண்கள் நன்கு அடர்ந்த மீசை மற்றம் தாடி யை வைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இருப்பினும் சில ரால் நல்ல அடர்த்தியான மீசை யை வளர்க்க முடியவில்லை. ஆண்களுக்கு அழகே மீசை தான். நிறைய பெண்களுக்கு மீசை மற்றும் தாடியை ஆண்கள் வைத்திருந்தா ல், மிகவும் பிடிக்கும். ஆனால் சிலருக்கு மீசை மற்றும் தாடியானது சரி யான வளர்ச்சி பெறாமல் இருக்கும். எனவே அத்தகைய பிரச்சனையில் இருக்கும் ஆண்க ளுக்கு, மீசை மற்றும் தாடியை நன்கு வளர்ப்ப தற்கு என்ன செய்ய வேண்டுமென்று பட்டிய லிட்டுள்ளோம். அதைப்படித்து பின்பற்றி பார்க்கலா மே!!! 

புரோட்டீன் உணவுகள் 

உடலின் ஆரோக்கியத்தைப்பொறுத்தே, மீசை மற்றும் தாடியின் வளர்ச்சி உள்ளது. எனவே உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு, போதிய ஊட்டச்சத்துள் ள உணவுகளை நன்கு சாப்பிட வேண்டும். குறிப் பாக புரோட்டீன் அதிக ம் நிறைந்திருக்கும் உணவுகளான பீன்ஸ், முட் டை, பால், மீன் போன் றவற்றை அதிகம் டயட்டில் சேர்த்தா ல், அதில் உள்ள மற்ற சத்துக்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

விளக்கெண்ணெய்

மீசை மற்றும் தாடியை நன்கு அடத்தியா க வளரச் செய்வதற்கு ஒரு சிறந்த வழி யென்றால், அது விளக்கெண்ணெயை வைத்து மசாஜ் செய்வதுதான். இதனால் அங்குள்ள இரத்த ஓட் டமானது அதிகரித்து, மயிர் கால்கள் வலு வோடு வளர்ச்சி பெறும்.

டெஸ்டோஸ்டிரோன் 

என்பது ஆண் ஹார்மோன். இவை தான் ஆண்களின் கூந்தல் வளர்ச்சியை கட்டு ப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்த ஹார் மோன் ஆண்களின் உடலில் குறை வாக இருந்தாலும், கூந்தல் வளர்ச்சியான து குறைவாக இருக்கும். எனவே டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கும் ஜிங்க் அதிகம் உள் ள உணவுகளான முட்டை, மீன், கடல் சிப்பிகள், வேர்க் கடலை, எள் போன்றவற்றை அதி கம் உட் கொள்வதன் மூலம், மீசை மற்றும் தாடி யின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

தண்ணீர்

உடலில் வறட்சி இருந்தாலோ அல்லது டாக்ஸின்கள் இருந்தாலோ, அவை கூந்த ல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை மயிர்கால்களுக்கு கிடைக் கப் பெறாமல், தடுக்கும். எனவே ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண் ணீரை குடிக்க வேண்டும்.

போதுமான தூக்கம் 

தூங்கும் போது தான் உடலில் உள்ள அனைத்து பாகங்களில் உள்ள பழு துகளும் சரியாகும். எனவே மீசை நன்கு வளர்ச்சியடைவதற்கு, நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

இயற்கை வைத்தியம்

ரோஸ்மேரி ஆயிலுடன், ஆப்பிள் சீடர் வினிகர், ஜிஜோபா ஆயில் மற்றும் கற்றாழை ஜெல் போன்றவற்றை கலந்து, தாடி மற்றும் மீசை வளரு ம் இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வந்தால், மீசை நன்கு வளரும்.
ஆண்கள் ஃபேஷன் என்ற பெயரில் மீசை மற்றும் தாடியை ட்ரிம் செய்து கொள்வது, லேசான மீசை தெரியு மாறு வைப்பது என்று இருந்தார் கள். ஆனால் இப்போ து ஆண்கள் நன்கு அடர்ந்த மீசை மற்றம் தாடி யை வைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இருப்பினும் சில ரால் நல்ல அடர்த்தியான மீசை யை வளர்க்க முடியவில்லை. ஆண்களுக்கு அழகே மீசை தான். நிறைய பெண்களுக்கு மீசை மற்றும் தாடியை ஆண்கள் வைத்திருந்தா ல், மிகவும் பிடிக்கும். ஆனால் சிலருக்கு மீசை மற்றும் தாடியானது சரி யான வளர்ச்சி பெறாமல் இருக்கும். எனவே அத்தகைய பிரச்சனையில் இருக்கும் ஆண்க ளுக்கு, மீசை மற்றும் தாடியை நன்கு வளர்ப்ப தற்கு என்ன செய்ய வேண்டுமென்று பட்டிய லிட்டுள்ளோம். அதைப்படித்து பின்பற்றி பார்க்கலா மே!!! புரோட்டீன் உணவுகள் உடலின் ஆரோக்கியத்தைப்பொறுத்தே, மீசை மற்றும் தாடியின் வளர்ச்சி உள்ளது. எனவே உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு, போதிய ஊட்டச்சத்துள் ள உணவுகளை நன்கு சாப்பிட வேண்டும். குறிப் பாக புரோட்டீன் அதிக ம் நிறைந்திருக்கும் உணவுகளான பீன்ஸ், முட் டை, பால், மீன் போன் றவற்றை அதிகம் டயட்டில் சேர்த்தா ல், அதில் உள்ள மற்ற சத்துக்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும். விளக்கெண்ணெய் மீசை மற்றும் தாடியை நன்கு அடத்தியா க வளரச் செய்வதற்கு ஒரு சிறந்த வழி யென்றால், அது விளக்கெண்ணெயை வைத்து மசாஜ் செய்வதுதான். இதனால் அங்குள்ள இரத்த ஓட் டமானது அதிகரித்து, மயிர் கால்கள் வலு வோடு வளர்ச்சி பெறும். டெஸ்டோஸ்டிரோன் என்பது ஆண் ஹார்மோன். இவை தான் ஆண்களின் கூந்தல் வளர்ச்சியை கட்டு ப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்த ஹார் மோன் ஆண்களின் உடலில் குறை வாக இருந்தாலும், கூந்தல் வளர்ச்சியான து குறைவாக இருக்கும். எனவே டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கும் ஜிங்க் அதிகம் உள் ள உணவுகளான முட்டை, மீன், கடல் சிப்பிகள், வேர்க் கடலை, எள் போன்றவற்றை அதி கம் உட் கொள்வதன் மூலம், மீசை மற்றும் தாடி யின் வளர்ச்சியை அதிகரிக்கலாம். தண்ணீர் உடலில் வறட்சி இருந்தாலோ அல்லது டாக்ஸின்கள் இருந்தாலோ, அவை கூந்த ல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை மயிர்கால்களுக்கு கிடைக் கப் பெறாமல், தடுக்கும். எனவே ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண் ணீரை குடிக்க வேண்டும். போதுமான தூக்கம் தூங்கும் போது தான் உடலில் உள்ள அனைத்து பாகங்களில் உள்ள பழு துகளும் சரியாகும். எனவே மீசை நன்கு வளர்ச்சியடைவதற்கு, நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இயற்கை வைத்தியம் ரோஸ்மேரி ஆயிலுடன், ஆப்பிள் சீடர் வினிகர், ஜிஜோபா ஆயில் மற்றும் கற்றாழை ஜெல் போன்றவற்றை கலந்து, தாடி மற்றும் மீசை வளரு ம் இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வந்தால், மீசை நன்கு வளரும்.

முடவாட்டுக்கால் என்ற காய கல்ப மூலிகை..!



இந்த முடவாட்டுக்கால் மூலிகையை குறுக்கில் கால் இஞ்சு அளவிற்கு சிறு துண்டு வெட்டி தோலை சீவி நசுக்கி சிதைத்து தக்காளி சேர்க்காமல் , மிளகு ,சீரகம் மற்றும் ஆட்டுக்கால் சூப்பிற்கு சேர்க்கும் பொருட்களை சேர்த்து சூப்பாக வைத்துக் குடிக்க முழங்கால் வலி , கீழ் முதுகு வலி, கை மூட்டு வலி,கழுத்து வலிகள் இவைகள் தீரும். தினமும் இந்த சூப்பை பருகி வர உடலில் உள்ள எல்லா தொல்லைகளும் படிப்படியாகத் தீரும்.

இது ஒரு காளான் வகையைச் சேர்ந்தது .எனவே இதற்கு இலைகள் கிடையாது . இது கொல்லி மலையிலும் , கஞ்ச மலையிலும் , சதுரகிரி மலையில் சில இடங்களிலும் கிடைக்கிறது . இதை மேற்குறிப்பிட்ட காலாங்கி நாதர் கொல்லி மலை ரகசியம் மரணம் மாற்றும் மூலிகைகள் நூலில் குறிப்பிட்ட முறையில் பூரச்செந்தூரம் செய்து 48 நாட்கள் சாப்பிட தேகம் மரணத்தால் அழியாது காயம் சித்தியாகும்.
முடவாட்டுக்கால் என்ற காய கல்ப மூலிகை..!

இந்த முடவாட்டுக்கால் மூலிகையை குறுக்கில் கால் இஞ்சு அளவிற்கு சிறு துண்டு வெட்டி தோலை சீவி நசுக்கி சிதைத்து தக்காளி சேர்க்காமல் , மிளகு ,சீரகம் மற்றும் ஆட்டுக்கால் சூப்பிற்கு சேர்க்கும் பொருட்களை சேர்த்து சூப்பாக வைத்துக் குடிக்க முழங்கால் வலி , கீழ் முதுகு வலி, கை மூட்டு வலி,கழுத்து வலிகள் இவைகள் தீரும். தினமும் இந்த சூப்பை பருகி வர உடலில் உள்ள எல்லா தொல்லைகளும் படிப்படியாகத் தீரும்.

இது ஒரு காளான் வகையைச் சேர்ந்தது .எனவே இதற்கு இலைகள் கிடையாது . இது கொல்லி மலையிலும் , கஞ்ச மலையிலும் , சதுரகிரி மலையில் சில இடங்களிலும் கிடைக்கிறது . இதை மேற்குறிப்பிட்ட காலாங்கி நாதர் கொல்லி மலை ரகசியம் மரணம் மாற்றும் மூலிகைகள் நூலில் குறிப்பிட்ட முறையில் பூரச்செந்தூரம் செய்து 48 நாட்கள் சாப்பிட தேகம் மரணத்தால் அழியாது காயம் சித்தியாகும்.
ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.'s photo.

தாய்ப்பால் சுரக்க மூலிகை சூப்..!



பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்து தான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இதனால்தான் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும்.

தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை கையாள்வதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்பால் சுரக்கும்.

மூலிகை கசாயம்:

அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும். அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.

முருங்கை கீரை:

முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.

அதே போல் ஆலம் விழுதின் துளிர், விதையை அரைத்து 5கி காலையில் மட்டும் பாலில் கொடுத்துவர தாய்பால் பெருகும். குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் வெள்ளை பூண்டு உதவுகிறது. கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது. மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும்.
தாய்ப்பால் சுரக்க மூலிகை சூப்..!

பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்து தான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இதனால்தான் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும்.

தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை கையாள்வதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்பால் சுரக்கும்.

மூலிகை கசாயம்:

அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும். அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.

முருங்கை கீரை:

முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.

அதே போல் ஆலம் விழுதின் துளிர், விதையை அரைத்து 5கி காலையில் மட்டும் பாலில் கொடுத்துவர தாய்பால் பெருகும். குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. 

உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் வெள்ளை பூண்டு உதவுகிறது. கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது. மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும்.

கற்ப மூலிகை வெற்றிலை..!



நரை, திரை, மூப்பு, சாக்காடு போன்றவற்றை நீக்கி உடலை என்றும் நோயின்றி காக்கும் தன்மை கொண்டதுதான் கற்ப மூலிகை.

கற்ப மூலிகைகளில் வெற்றிலையும் ஒன்று. வெற்றிலையை அறியாதவர் எவரும் இருக்க முடியாது. திருமணம் முதல் அனைத்து விசேஷ நிகழ்வுகளில் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது.

வெற்றிலை தொன்றுதொட்டு நாம் உபயோகித்து வரும் மருத்துவ மூலிகையாகும். நம் முன்னோர்களிடம் வெற்றிலை பயன்பாடு அதிகம் இருந்து வந்தது.

வெற்றிலையை உபயோகிக்கும் முறை:

வெற்றிலை பயன்படுத்தும்போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும்.

வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. கலோரி அளவு 44.

தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.

வெற்றிலைக்கு நாக இலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை கொண்டதால் இதனை நாக இலை என்றும் அழைக்கின்றனர்.

நுரையீரல் பலப்பட:

வெற்றிலைச்சாறு 5 மி.லி. யுடன் இஞ்சிச் சாறு 5 மி.லி. கலந்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது. இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் அருந்தி வருவது நல்லது.

வயிற்றுவலி நீங்க:

2 தேக்கரண்டி சீரகத்தை மூன்று தேக்கரண்டி வெண்ணெய் விட்டு நன்கு மைபோல் அரைத்து, 5 வெற்றிலை எடுத்து காம்பு, நுனி, நடுநரம்பு நீக்கி வெற்றிலையின் பின்புறத்தில் அந்த கலவையைத் தடவி சட்டியிலிட்டு வதக்கி பின்பு 100 மிலி நீர்விட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆறியபின்பு வடிகட்டி கசாயத்தை அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும். மாந்தம் குறையும்.

சர்க்கரையின் அளவு கட்டுப்பட:

வெற்றிலை – 4

வேப்பிலை – ஒரு கைப்பிடி

அருகம் புல் – ஒரு கைப்பிடி

சிறிது சிறிதாக நறுக்கி 500 மி.லி. தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து 150 மி.லி.யாக வற்ற வைத்து ஆறியவுடன் வடிகட்டி தினமும் மூன்று வேளை உணவுக்கு முன் 50 மி.லி. குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு சீராகும்.

விஷக்கடி குணமாக:

உடலில் உள்ள விஷத்தன்மையை மாற்ற வெற்றிலை சிறந்த மருந்தாகும். சாதாரணமான வண்டுக்கடி, பூச்சிக்கடி இருந்தால் வெற்றிலையில் நல்ல மிளகு வைத்து மென்று சாறு இறக்கினால் விஷம் எளிதில் இறங்கும்.

இருமல் குறைய:

வெற்றிலைச் சாறுடன் கோரோசனை சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் சளிக்கட்டு, இருமல், மூச்சுத் திணறல் குணமாகும்.

அஜீரணக் கோளாறு அகல:

வெற்றிலை 2 அல்லது மூன்று எடுத்து அதனுடன் 5 நல்ல மிளகு சேர்த்து நீர்விட்டு காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சிறுவர் களுக்கு உண்டாகும் செரியாமை நீங்கும். வெற்றிலை இரண்டு எடுத்து நன்றாக கழுவி அதில் சிறிது சீரகத்தையும், உப்பையும் சேர்த்து நன்கு மென்று விழுங்கி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

தோல் வியாதிக்கு:

100 மி.லி. தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு சூடாக்கி வெற்றிலை சிவந்தவுடன் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு சொறி, சிரங்கு படை இவைகளுக்கு தடவி வந்தால், எளிதில் குணமாகும்.

தலைவலி நீங்க:

வெற்றிலைக்கு மயக்கத்தைப் போக்கும் குணமுண்டு. மூன்று வெற்றிலைகளை எடுத்து அதைக் கசக்கி சாறு எடுத்து கிடைக்கும் சாறில் கொஞ்சம் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்து, நெற்றிப் பகுதியில் பற்று போட்டால் தலைவலி பறந்துபோகும்.

தீப்புண் ஆற:

தீப்புண்ணின் மீது வெற்றிலையை வைத்து கட்டலாம்.

பிற உபயோகங்கள்:

வெற்றிலையை எண்ணெயில் நனைத்து விளக்கில் வாட்டி மார்பின்மேல் ஒட்டி வைக்க இருமல், மூச்சுத் திணறல், கடினமான சுவாசம், குழந்தைகளுக்கு இருமல் நீங்கும்.வெற்றிலைச் சாறுடன் சுண்ணாம்பு கலந்து தொண்டையில் தடவினால் தொண்டைக்கட்டு நீங்கும்.
தேள் கடி விஷம் இறங்க வெற்றிலைச் சாறை அருந்தியும், கடிவாயில் தடவி வந்தால் விஷம் எளிதில் நீங்கும். இரண்டு அல்லது மூன்று வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து தினமும் அருந்தினால் நரம்புகள் பலப்படும். புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்குண்டு. வெற்றிலையை கற்ப முறைப்படி உபயோகித்து வந்தால் நல்ல ஆரோக்கியத்தைப் பெறலாம்.

இடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்



இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் இன்று ஏராளம். இளைய தலைமுறை முதல் வயதானவர்கள் வரை இன்று சந்திக்கும் ஒரு பிரச்சனை இடுப்புவலி.

இடுப்பு வலி ஏற்டுவதற்கு என்ன காரணம்?

அதிகபட்ச நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பு ஏற்படுகிறது. குறிப்பாக கணினியின் முன்பு அமர்ந்து வேலை செய்யும் இளைய தலைமுறைகள் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு, இடுப்புவயால் துடித்துப் போகின்றனர்.

காரணம் இடைவிடாமல் உட்கார்ந்து கொண்டே கணினியின் முன்பு அமர்ந்திருப்பதுதான்.

இதற்குத் தீர்வு என்ன?

அடிக்கடி அமர்ந்திருக்கும் இருக்கை விட்டு எழுந்து செல்லலாம். சரியான உயரத்தில் அமைக்கப்பட்ட மேசைகளை பயன்படுத்த வேண்டும். கணினி வைத்திருக்கும் மேசையை ஏற்றி இறக்கும் வகையில் அமைக்க வேண்டும்.

அமர்ந்திருக்கும் இருக்கை நன்கு சுழலுமாறும், மேசையின் உயரத்திற்கு தகுந்தவாறும் இருக்கையின் உயரத்தை வைக்க வேண்டும். பணி முடிந்ததும் நாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

சரியான முறையில் நாற்காலியில் உட்கார்ந்து பணியாற்ற வேண்டும்.
தொடர்ச்சியாக கணினியின் முன்பு அமர்ந்து பணியாற்றுவதால் இடுப்புப்பகுதியில் சதைகள் அழுத்தப்பட்டு, முதுகுத் தண்டின் சவ்வில் தேய்மானம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். இதனால் தாங்க முடியாத இடுப்பு வலி ஏற்படும்.

தொடர்ச்சியாக இதே நிலை நீடித்தால், இறுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். எனவே வரும் முன் காப்பதே சிறந்த வழி. மேற்கொண்ட முறைகளை நடைமுறைப்படுத்த, விரைவில் இடுப்பு வலியிலிருந்து மீள முடியும்.

இடுப்பு வலியை குணமாக்கும் கொள்ளு...

கொள்ளு பல பிரச்னைகளைத் தீர்க்கும் ஒரு இயற்கை உணவுப் பொருள். கிராமங்களில் அதிகமாக இது கிடைக்கும்.

கொள்ளு ரசம் வைத்து குடிக்க இடுப்பு வலி பறந்து போகும். உடல் பருமனாக உள்ளவர்கள் கொள்ளை வாரம் மூன்று முறை சேர்க்க உடல் தசைகள் இறுகி, ஒரு ஆரோக்கியமான உடல் வாகை பெற முடியும். உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றுகிறது.

பெண்களுக்கு இடுப்பு வலி நீங்க:

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வயிற்று வலியும் இடுப்பு வலியும் ஏற்படுவது இயற்கை. இந்த வலிகளைப் போக்க வெந்தயத்துடன் நூறு கிராம் அளவுக்கு வெந்தயத்தை நன்றாக பொடியாக்கி, அதில் இருநூறு கிராம் சர்க்கரையை கலந்து சாப்பிட வயிற்றுவலி, இடுப்பு வலி நீங்கும்.

வெள்ளைப் பூண்டுடன் கருப்பட்டியை கலந்து சாப்பிட இடுப்புவலி பெருமளவு குறைந்துவிடும்.

இளம்பெண்களுக்கு இடுப்பு வலி நீங்க:

நீங்கள் ஹைஹீல்ஸ் அணியும் பழக்கமுள்ளவர் எனில் அதன் மூலம் கூட உங்களுக்கு இடுப்பு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக உயரமுள்ள குதிகால் உடைய செருப்புகளை அணிவதை தவிர்க்க வேண்டும். ஹைஹீல்ஸ் அணிந்து நீண்ட நேரம் நடந்து செல்வதால் உடல் எடை முழுவதும் பாதத்தை நோக்கி அழுத்தப்படுவதால் முதுகு வலி, மூட்டு வலி, இடுப்பு வலி ஏற்படும்.

மிளகை பொன் வறுவலாக வறுத்து அதில் எள் எண்ணையை கலந்து சாப்பிட இடுப்பு வலி குறையும்.

தளுதாளி இலையுடன் பூண்டு, எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) சேர்த்து துவையல் செய்து சாப்பிட இடுப்பு வலி குணமாகும்.

விந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்!!!



இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்சனை இருக்கிறது. இத்தகைய பிரச்சனை வருவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சில பழக்கவழக்கங்கள் தான் காரணம். மேலும் கருவுறுதல் பிரச்சனை பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் தான் இருக்கும். எனவே இந்த மாதிரி பிரச்சனை என்றதும் பெண்கள் மட்டும் நல்ல சரியான உணவுகளை உண்டால் மட்டும் போதாது, ஆண்களும் தான் ஒரு சில உணவுகள் மற்றும் செயல்களை மேற்கொள்ள வேண்டும்.

பொதுவாக இந்த மாதிரியான பிரச்சனை வந்தால், அனைவரும் உடனே மருத்துவரிடம் சென்று அதற்கான தீர்வை சரிசெய்ய முயல்வார்கள். ஆனால் அவ்வாறு சென்று என்ன தான் சிகிச்சை மேற்கொண்டாலும், ஒரு சில உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும். ஏனெனில் உணவுகள் மூலமும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். குழந்தை பெற நினைப்பவர்கள். சிகரெட் பிடிப்பவராக இருந்தால், உடனே நிறுத்திவிட வேண்டும். ஏனெனில் அவையும் குழந்தை பிறப்பிற்கு தடையை ஏற்படுத்தும்.

இப்போது எந்த உணவுகளை ஆண்கள் சாப்பிட்டால், அவர்களது விந்தணுவின் அளவை அதிகரிக்கலாம் என்று பார்ப்போமா!!!

பூண்டு
இந்த உணவு ஆண் மற்றும் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின் பி6 இருப்பதால், இது இருபாலரும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதற்கான உணர்வை அதிகரித்து, கருவுறுதலுக்கு வழிவகுக்கும்.

மாதுளை
இந்த சுவையான சிவப்பு நிற பழத்தை சாப்பிட்டால், ஆண்களின் விந்தணு அதிகரிப்பதோடு, அதன் சக்தியும் அதிகமாக இருக்கும்.

வாழைப்பழம்
வாழைப்பழத்தில் விந்தணுவின் அளவையும், சக்தியையும் அதிகரிக்கும் வைட்டமின் பி1, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் புரோட்டீன்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, இதில் ப்ரோமெலைன் என்னும் நொதிப்பொருள் இருப்பதால், அவை உடலில் உள்ள உறவில் ஈடுபடுவதற்கான உணர்ச்சியை அதிகரிக்கும்.

பசலைக் கீரை
பசலைக் கீரையில் ஃபோலிக் ஆசிட் அதிகம் இருக்கிறது. இது விந்தணுவின் உற்பத்தியை அதிகரித்து, விந்தணுவில் உள்ள டி.என்.ஏ -வைப் பாதுகாக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த உணவில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. எனவே தான், பசலைக் கீரை ஆண்களின் ஆண்மைத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது

மிளகு
மிளகு என்றதும் நம்பமுடியாது. ஆனால் உண்மையில் மிளகு விந்தணுவை அதிகரிக்க உதவும் உணவுப் பொருட்களுள் ஒன்று. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், இவை எண்டோர்பின்கள் என்னும் ஒருவித சந்தோஷம்ன உணர்வைத் தூண்டக்கூடிய ஹார்மோன்களை விடுவிக்கும். இதனால் உடல் தளர்வடைந்துவிடும். மேலும் இதில் வைட்டமின் சி, பி, ஏ மற்றும் ஈ சத்துக்களும் உள்ளன.

தக்காளி
இது பொதுவாக சமையலில் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் ஒன்று. இந்த உணவுப் பொருளில் விந்தணுவை ஆரோக்கியமாக்கவும், அதிகரிக்க செய்யும் கரோட்டினாய்டு லைகோபைன் உள்ளது. அதிலும இதனை பருப்புகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இல்லையெனில் தினமும் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் குடிக்கலாம். இதனால் இயற்கையாகவே விந்தணுவின் அளவானது அதிகரிக்கும்.

தர்பூசணி
தர்பூசணிப் பழத்தில் லைசோபைன் மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், விந்தணு அதிகரிப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.

வைட்டமின் சி உணவுகள்
வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதாலும், ஆண்கள் தங்களது விந்தணுவின் அளவை அதிகரிக்கலாம். அதற்கு வைட்டமின் சி நிறைந்துள்ள உணவுகளான சிட்ரஸ் பழங்கள் சரியானதாக இருக்கும்.

ஆப்பிள்
பழங்களில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஆப்பிள் முதன்மையானது. அத்தகைய பழத்தை பெண்களை விட ஆண்கள் அதிகம் சாப்பிட்டால், விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். அதிலும் ஆப்பிள் சீடர் வினிகரை சாப்பிட்டால், நம்பமுடியாத அளவில் தீர்வு கிடைக்கும்.

முந்திரி
ஸ்நாக்ஸில் சிறந்த உணவுப் பொருள் ஸ்நாக்ஸ் தான். அத்தகைய நட்ஸில் முந்திரிப் பருப்பு மிகவும் சுவையுடன் இருக்கும். எனவே இதனை ஆண்கள் மற்றும் பெண்கள் அவ்வப்போது ஸ்நாக்ஸாக சாப்பிட்டால், இதில் அதிகமாக இருக்கும் ஜிங்க் சத்து, கருவுறுதல் தன்மையை அதிகரிக்கும்.

ஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க..!


இல்லற உறவில் ஈடுபாடு இருந்தும், பல ஆண்களுக்கு ஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடுகளின் காரணமாக, மனைவிக்குப் பூரண மகிழ்ச்சி தர இயலாமல் போகும். இன்னும் சிலருக்கோ, விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைபாடு, உரிய எழுச்சி ஏற்படாமல் போதல், பாலுணர்வு வேட்கைக் குறைதல் போன்ற பல சிக்கல்களும் இருக்கக்கூடும். அவர்கள் எதற்கும் அஞ்சத் தேவை இல்லை. பாலியல் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும் பல்வேறு மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன.

காரணங்கள்:
ஹார்மோன் மாறுபாடுகள், ஆண் இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் பாதிப்புகள், குரோமோசோம் மாறுபாடுகள், அம்மைக்கட்டு, காசநோய், பால்வினை நோய்கள், மனநிலை மாறுபாடுகள், புகைபிடித்தல், மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாதல், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பாதிப்புகள், கதிரியக்கத்திற்கு உட்படுதல் மற்றும் இறுக்கமான உள்ளாடை அணிதல் போன்றவை.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

நிலப்பனைக் கிழங்கைப் பொடித்து, ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து பால், சர்க்கரை கலந்து உண்டுவரலாம்.

பூனைக்காலி விதை, நெல்லிவற்றல் இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, ஒரு ஸ்பூன் எடுத்து சர்க்கரை கலந்து உண்ணலாம்.

அமுக்கரா கிழங்குப் பொடியுடன் சம அளவு கற்கண்டு சேர்த்து ஒரு ஸ்பூன் சாப்பிடலாம்.

நிலப்பூசணிக் கிழங்கின் சாறுடன் பால், சர்க்கரை சேர்த்து உண்ணலாம்.

ஓரிதழ் தாமரையை அரைத்துப் பாக்கு அளவு எடுத்துப் பாலில் கலந்து அருந்தலாம்.

தாமரைப்பூவின் மகரந்தப் பொடியுடன் சர்க்கரை, தேன் கலந்து சாப்பிடலாம்.

சம அளவு நீர்முள்ளி விதை, மாதுளம் விதையைப் பொடித்து, ஒரு ஸ்பூன் வெண்ணெயுடன் கலந்து சாப்பிடலாம்.

துவளைப்பூ, முருங்கைப்பூ இரண்டையும் கைப்பிடி எடுத்து நெய், வெங்காயம் சேர்த்து சமைத்து உண்ணலாம்.

முள்முருங்கை இலையை நெய், அரிசி மாவு சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.

வில்வப் பிசின், வாதுமைப் பிசின் சம அளவு எடுத்துப் பொடித்து அதில் கால் ஸ்பூன் எடுத்துப் பால் சேர்த்து குடிக்கலாம்.

நாவல் வேர்ப் பொடி ஒரு ஸ்பூன் எடுத்து, நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.

சேர்க்க வேண்டியவை:

முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா, முருங்கைப் பிஞ்சு, மாதுளம்பழம், மாம்பழம், பலாப் பிஞ்சு, பலாக் காய், புடலங்காய், எலுமிச்சம்பழம், பசலை, அரைக்கீரை, கொத்துமல்லிக் கீரை, கோதுமை, ஜவ்வரிசி, உளுந்து, வெந்தயம், நிலக்கடலை.

தவிர்க்க வேண்டியவை:

அதிகக் காரம், துவர்ப்பு மற்றும் கசப்புள்ள உணவுகள், சிகரெட் மற்றும் போதைப் பொருட்கள்.