Powered By Blogger

16 டிசம்பர் 2008

கபில தேவர்
இயற்றிய
இன்னா நாற்பது

முக் கட் பகவன் அடி தொழாதார்க்கு இன்னா;

பொற்பனை வெள்ளையை உள்ளாது ஒழுகு இன்னா

மறப்பு இன்னா; ஆங்கு இன்னா,

சத்தியான் தாள் தொழாதார்க்கு.

பந்தம் இல்லாத மனையின் வனப்பு இன்னா;

தந்தை இல்லாத புதல்வன் அழகு இன்னா;

அந்தணர் இல் இருந்து ஊண் இன்னா; ஆங்கு இன்னா,

மந்திரம் வாயா விடின். 1

பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா;

ஆர்த்த மனைவி அடங்காமை நற்கு இன்னா

இல் புடைவை உடை இன்னா;

ஆங்கு இன்னாகாப்பு ஆற்றா வேந்தன் உலகு. 2

கொடுங் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா;

நெடுநீர்ப் புணை இன்றி நீந்துதல் இன்னா

மொழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,

தடுமாறி வாழ்தல் உயிர்க்கு. 3

எருது இல் உழவர்க்குப் போகு ஈரம் இன்னா;

கருவிகள் மாறிப் புறங்கொடுத்தல் இன்னா;

திருவுடையாரைச் செறல் இன்னா; இன்னா,

பெரு வலியார்க்கு இன்னா செயல். 4

சிறை இல் கரும்பினைக் காத்து ஓம்பல் இன்னா;

உறை சோர் பழங் கூரை சேர்ந்து ஒழுகல் இன்னா;

முறை இன்றி ஆளும் அரசு இன்னா; இன்னா,

மறை இன்றிச் செய்யும் வினை. 5


அற மனத்தார் கூறும் கடு மொழி இன்னா;

மற மனத்தார் ஞாட்பில் மடிந்து ஒழுகல் இன்னா;

இடும்பை உடையார் கொடை இன்னா; இன்னா,

கொடும்பாடு உடையார் வாய்ச் சொல். 6

ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா;

நாற்றம் இலாத மலரின் அழகு இன்னா;

தேற்றம் இலாதான் துணிவு இன்னா; ஆங்கு இன்னா,

மாற்றம் அறியான் உரை. 7

பகல் போலும் நெஞ்சத்தார் பண்பு இன்மை இன்னா;

நகை ஆய நண்பினார் நார் இன்மை இன்னா;

இகலின் எழுந்தவர் ஓட்டு இன்னா; இன்னா,

நயம் இல் மனத்தவர் நட்பு. 8

கள் இல்லா மூதூர் களிகட்கு நற்கு இன்னா;

வள்ளல்கள் இன்மை பரிசிலர்க்கு முன் இன்னா;

வண்மை இலாளர் வனப்பு இன்னா; ஆங்கு இன்னா,

பண் இல் புரவிப் பரிப்பு. 9

பொருள் உணர்வார் இல்வழிப் பாட்டு உரைத்தல் இன்னா;

இருள் கூர் சிறு நெறி தாம் தனிப்போக்கு இன்னா;

அருள் இல்லார் தம் கண் செலவு இன்னா; இன்னா

இல்லார் வண்மை புரிவு. 10

உடம்பாடு இல்லாத மனைவி தோள் இன்னா;

இடன் இல் சிறியாரோடு யாத்த நண்பு இன்னா;

இடங்கழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,

கடன் உடையார் காணப் புகல். 11

தலை தண்டமாகச் சுரம் போதல் இன்னா

சுமந்து உண்பான் பெருமிதம் இன்னா;

புலை உள்ளி வாழ்தல் உயிர்க்கு இன்னா; இன்னா,

முலை இல்லாள் பெண்மை விழைவு. 12


மணி இலாக் குஞ்சரம் வேந்து ஊர்தல் இன்னா;

துணிவு இல்லார் சொல்லும் தறுகண்மை இன்னா;

பணியாத மன்னர் பணிவு இன்னா; இன்னா,

பிணி அன்னார் வாழும் மனை. 13

வணர் ஒலி ஐம்பாலார் வஞ்சித்தல் இன்னா;

துணர் தூங்கு மாவின் படு பழம் இன்னா

பாவை அன்னார் பிரிவு இன்னா; இன்னா,

உணர்வார் உணராக்கடை. 14

புல் ஆர் புரவி மணி இன்றி ஊர்வு இன்னா;

கல்லார் உரைக்கும் கருமப் பொருள் இன்னா

நல்ல விழைவு இன்னா; ஆங்கு இன்னா,

பல்லாருள் நாணுப் படல். 15

உண்ணாது வைக்கும் பெரும் பொருள் வைப்பு இன்னா

பகைவர் புணர்ச்சி நனி இன்னா;

கண் இல் ஒருவன் வனப்பு இன்னா; ஆங்கு இன்னா,

எண் இலான் செய்யும் கணக்கு. 16

ஆன்று அவிந்த சான்றோருள் பேதை புகல் இன்னா;

மான்று இருண்ட போழ்தின் வழங்கல் பெரிது இன்னா;

நோன்று அவிந்து வாழாதார் நோன்பு இன்னா; ஆங்கு இன்னா,

ஈன்றாளை ஓம்பா விடல். 17

உரன் உடையான் உள்ளம் மடிந்திருத்தல் இன்னா;

மறன் உடையான் ஆடையால் மார்பு ஆர்த்தல் இன்னா;

சுரம் அரிய கானம் செலவு இன்னா; இன்னா,

மன வறியாளர் தொடர்பு. 18

குலத்துப் பிறந்தவன் கல்லாமை இன்னா;

நிலத்து இட்ட நல் வித்து நாறாமை இன்னா;

நலத்தகையார் நாணாமை இன்னா; ஆங்கு இன்னா,

கலத்தல் குலம் இல் வழி. 19

மாரி நாள் கூவும் குயிலின் குரல் இன்னா;

வீரம் இலாளர் கடு மொழிக் கூற்று இன்னா;

மாரி வளம் பொய்ப்பின், ஊர்க்கு இன்னா;

ஆங்கு இன்னாமூரி எருத்தால் உழவு. 20

ஈத்த வகையால் உவவாதார்க்கு ஈப்பு இன்னா;

பாத்து உணல் இல்லாருழைச் சென்று உணல் இன்னா

இடத்துப் பிணி இன்னா; ஆங்கு இன்னா,

ஓத்து இலாப் பார்ப்பான் உரை. 21

யானைஇல் மன்னரைக் காண்டல் நனி இன்னா;

ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் முன் இன்னா;

தேன் நெய் புளிப்பின் சுவை இன்னா; ஆங்கு இன்னா,

கான் யாறு இடையிட்ட ஊர். 22

சிறை இல்லா மூதூரின் வாயில் காப்பு இன்னா;

துறை இருந்து ஆடை கழுவுதல் இன்னா;

அறை பறை அன்னார் சொல் இன்னா;

இன்னா,நிறை இலான் கொண்ட தவம். 23

விளக்கம்

முக்கண்களுடைய சிவபெருமானின் திருவடிகளை வணங்காதவர்களுக்கு துன்பமுண்டாம். அழகிய பனைக் கொடியையுடையவனாகிய பலராமனை நினையாமல் இருத்தல் துன்பமாம். திகிரிப்படையை உடையவனாகிய மாயோனை மறத்தல் துன்பமாம். அவ்வாறே சக்தியான் வேற்படையை உடையவனாகிய முருகக் கடவுளின் திருவடிகளைத் தொழாதார்க்கு துன்பம் உண்டாகும்.

சுற்றமில்லாத இல்வாழ்க்கையான் அழகு துன்பமாம்.

தந்தையில்லாத புதல்வனின் அழகு துன்பமாம். துறவோர்

வீட்டிலிருந்து உண்ணுதல் துன்பமாம். அவ்வாறே

மந்திரங்கள் பயன் தராவிட்டால் துன்பமாம்.1


பார்ப்பாருடைய வீட்டில் நாயும் கோழியும் இருத்தல் துன்பமாம்.

கட்டிய மனைவி கணவனுக்கு அடங்காமை துன்பமாம். பகுப்பு

இல்லாத புடைவையை உடுத்தல் துன்பமாம். அவ்வாறே

காப்பாற்ற அரசன் இல்லாத நாடு துன்பமாகும்.2


கொடுங்கோல் அரசனது கீழ் வாழ்தல் துன்பமாம். தெப்பம்

இல்லாமல் பெரிய ஆற்றினைக் கடந்து செல்லுதல் துன்பமாம்.

வன்சொல் கூறுவோரது தொடர்பு துன்பமாம். உயிர்கள் மனம்

தடுமாறி வாழ்தல் துன்பமாம்.3

எருது இல்லாத உழவர்க்கு அருகிய ஈரம் துன்பமாம்.

கருவிகளை இழந்து போரில் புறமுதுகிடுதல் துன்பமாம். செல்வம்

உடையவர்களிடம் கோபம் கொள்ளுதலும்,

திறனுடையவர்களுக்குத் தீங்கு செய்தலும் துன்பமாம்.4


வேலியில்லாத கரும்புப் பயிரைப் பாதுகாத்தல் துன்பமாம்.

மழைத்துளி ஒழுகுதலையுடைய பழைய கூரையையுடைய

மனையில் வாழ்தல் துன்பமாம். நீதி இல்லாமல் ஆளுகின்ற

அரசரது ஆட்சி துன்பமாகும். வெளிப்படையாகச் செய்யும் வேலை

துன்பமாகும்.5


அறத்தை விரும்பும் நெஞ்சத்தினர் கூறும் கடும் மொழியும்

துன்பமாம். வீரத்தன்மையுடையவர்கள் போரில் சோம்பலுடன்

இருத்தல் துன்பமாம். வறுமை உடையவரது கொடை தன்மை

துன்பமாகும். கொடுமையுடையாரது வாயிற் சொல்லும்

துன்பமாகும்.6


வலியில்லாதவன் கையிற்பிடித்த ஆயுதம் துன்பமாகும்.

மணமில்லாத மலரின் அழகு துன்பமாகும். தெளிவு இல்லாதவன்

செய்யும் வேலை துன்பமாகும். அவ்வாறே சொற்களின் நுட்பத்தை

அறியாதவனது சொல்லும் துன்பமாகும்.7


ஞாயிறு போலும் நெஞ்சத்தை உடையவர்கள் பண்பில்லாமல்

இருத்தல் துன்பமாகும். நகுதலையுடைய நட்பினர்

அன்பில்லாதிருத்தல் துன்பமாகும். போரிலே புறமுதுகிடுதல்

துன்பமாகும். நீதியில்லாத மனத்தினை உடையவர்களது நட்பு

துன்பமாகும்.8


கள் இல்லாத மூதூரில் கள்ளுண்டு களிப்பார்க்கு மிகவும்

துன்பமாகும். வள்ளல்கள் இல்லாதிருத்தல் இரவலர்க்கு மிகவும்

துன்பமாகும். ஈகைக் குணமில்லாதவர்களுடைய அழகு

துன்பமாகும். அவ்வாறே கலனை இல்லாத புரவி தாங்குதல்

துன்பமாகும்.9


பொருள் அறியும் அறிவுடையார் இல்லாத இடத்தில்

பாட்டுரைத்தல் துன்பமாகும். இருள் நிறைந்த சிறிய வழியில்

தனியாக போகுதல் துன்பமாகும். அருள் இல்லாதவர்களிடம்

இரப்போர் செல்லுதல் துன்பமாகும். அதுபோலப் பொருள்

இல்லாதவர்கள் ஈதலைப் புரிதல் துன்பமாகும்.10


உள்ளம் பொருந்தாத மனைவியின் தோளினைச் சேர்தல்

துன்பமாகும். விரிந்த உள்ளமில்லாத சிறுமையுடையாருடன்

நட்பு கொள்ளுதல் துன்பமாகும். மிக்க காமத்தினை உடையாரது

சேர்க்கை துன்பமாகும். கடன் கொடுத்தவரைக் காணச்

செல்லுதல் துன்பமாம்.11


தலை அறுபடும்படி காட்டினிடை செல்லுதல் துன்பமாகும்.

வலையை நம்பி வாழ்பவனின் செருக்கு துன்பமாகும். புலாலை

விரும்பி உண்ணுதல் துன்பமாகும். முலை இல்லாதவள் பெண்

தன்மையை விரும்புதல் துன்பமாகும்.12


மணியில்லாத யானையின் மீது ஏறிச் செல்லுதல் அரசனுக்குத்

துன்பமாகும். பகையை வெல்லுந் துணிவில்லாதவர்கள் கூறும்

வீர மொழிகள் துன்பமாகும். வணங்கத்தகாத அரசனை

வணங்குதல் துன்பமாகும். நோயுள்ளவர் வீட்டில் வாழ்வது

துன்பமாகும்.13


கருமையான கூந்தலையுடைய மகளிர் தம் கணவனை

வஞ்சித்தல் துன்பமாகும். கொத்தாகத் தொங்குகின்ற மாம்பழம்

கனிந்து விழுந்தால் துன்பமாம். வேற்றுமையின்றி கூடிய

பெண்ணைப் பிரிந்து செல்வது துன்பமாம். அறிந்து கொள்ளக்

கூடியவர்கள் அறியாவிட்டால் துன்பமாம்.14


புல்லை உண்கின்ற குதிரையின் மணியில்லாமல் ஏறிச்

செல்லுதல் துன்பமாம். கல்வியில்லாதவர் உரைக்கும் காரியத்தின்

பொருள் துன்பமாம். பொருள் இல்லாதவர் விரும்பும் விருப்பம்

துன்பமாம். அவ்வாறே பலர் நடுவே வெட்கப்படுதல் துன்பமாம்.15


உண்ணாது சேர்த்து வைக்கும் பெரும் பொருள் துன்பமாம். உளம்

பொருந்தாத பகைவர்களின் சேர்க்கை துன்பமாகும். கண் இல்லாத

ஒருவனின் உடல் அழகு துன்பமாகும். அவ்வாறே பயிலாதவன்

இயற்றும் கணக்கு துன்பமாம்.16


கல்வி கற்ற சான்றோர் நிறைந்த சபையில் அறிவில்லாதவன்

செல்லுதல் துன்பமாகும். மயங்கிய மாலைப் பொழுதில் வழியில்

செல்லுதல் துன்பமாகும். துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு

மனம் அடங்கி வாழாதவர்களுக்கு வாழ்க்கை துன்பமாம்.

அவ்வாறே தாயைக் காப்பாற்றாமல் வருதல் துன்பமாம்.17

நல்ல அறிவுடையவர்கள் மனம் ஒடிந்து இருத்தல் துன்பமாம்.

வீரமுள்ள ஆட்களை உடையவன் முன்பு மார்பு தட்டுதல் (வீரம்

பேசுதல்) துன்பமாம். அடர்ந்த காட்டில் செல்லுதல் துன்பமாகும்.

மன வறுமையுடையாரது சேர்க்கை துன்பமாகும்.18


நற்குடியில் பிறந்து கல்வியைப் பெறாமல் இருத்தல் துன்பமாகும்.

பூமியில் இட்ட நல்ல விதைகள் முளைக்காமை துன்பமாகும்

மகளிர் வெட்கப்படாமை துன்பமாகும். அவ்வாறே

ஒவ்வாத குலத்தில் திருமணம் செய்வது துன்பமாகும்.19


மழைக்காலத்தில் குயிலினது குரலோசை துன்பமாகும்.

அன்பில்லாதவரது கடுமொழி துன்பமாகும். மழை பெய்யவில்லை

என்றால் ஊருக்கும் துன்பம். அவ்வாறே எருமையால் உழவுத்

தொழில் செய்தால் துன்பமாகும்.20


கொடுத்த அளவினால் மகிழாதவர்களுக்குப் பொருள் கொடுத்தல்

துன்பமாம். பகுத்து உண்ணுதல் இல்லாதவனிடம் சென்று

உண்ணுதல் துன்பமாம். முதுமையுற்ற பருவத்தில்

நோய்ப்படுத்துதல் துன்பமாம். அவ்வாறே வேதத்தை ஓதுதல்

இல்லாத அந்தணனின் செயல் துன்பமாம்.21


யானைப் படையில்லாத அரசரைப் பார்த்தல் மிகவும்

துன்பமாகும். உடலைத்தின்று உடல் வளர்ப்பது மிகவும்

துன்பமாகும். தேனும் நெய்யும் புளித்துவிட்டால் துன்பமாம்.

அவ்வாறே காட்டாறுக்கு இடையில் உள்ள ஊர் மிகவும்

துன்பமாம்.22


மதில் இல்லாத ஊரைக் காப்பது துன்பமாம். குடிநீர்த் துறையில்

ஆடை கழுவுதல் துன்பம். பாறை போன்றாரது சொல் மிகவும்

துன்பமாம். ஐம்பொறிகளை அடக்கிக் கொள்ளத் தெரியாதவனது

தவம் துன்பமாகும்.23