Powered By Blogger

03 ஜனவரி 2009

செளந்தர்யலஹரி

செளந்தர்யலஹரி ஸ்ரீ ஆதிசங்கரர் அவர்கள் அருளியது. இவை அம்பாள் ஸ்லோகங்கள்.
இந்த ஸ்லோகங்களை சொல்லி வந்தால் உங்கள்வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் வேண்டுதலுக்காக ஒவ்வொரு ஸ்லோகத்திலும் தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான ஸ்லோகங்களை கூறி வேண்டியதை பெறலாம். எல்லா ஸ்லோகங்களையும் சொல்வது சாலச் சிறந்தது.
சொளந்தர்லஹரி அழகு வெள்ளம் எனற் பெயரில் கிருபானந்தவாரியார் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.

ஆதிசங்கரர் சமஸ்கிருதத்தில் அருளியதும், அதன் தமிழாக்கமும் இங்கு அளிக்கப்படுகிறது. இந்த ஸ்லோகங்களை கூறி அம்மன் அருள் பெறுங்கள்.

*சுபம், திருவும் சித்தி பெற*
சமஸ்கிருதம்
சிவ: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திது -மபிந
அதஸ் -த்வா - மாராத்யாம் ஹரி - ஹர -விரிஞ்சாதிபி - ரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதம்க்ருத - புண்ய: ப்ரபவவதி// (1)

*தமிழாக்கம்:*
திங்களைச் சடையில் தரித்திடும் சிவன்பால்
தேவிநீ அன்புடன் ஒன்றித்
தங்கிடி லன்றி இயங்கிடும் திறமும்
இறைவனே இழந்திடும் என்னில்
கங்கைவார் சடையன் அயன்திரு மாலூம்
கைதொழுதேந்தியே போற்றும்
பங்கயச் செல்வி, புண்ணிய மிலார் நின்
பாதமே தொழுவதும் எளிதோ

*உலகம் உன்வசம்*
சமஸ்கிருதம்
த தீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண- பங்கேருஹ - பவம்
விரிஞ்சி: ஸஞ்சிவன் விரசயதி லோகா -நவிகலம்ந
வஹத்யேனம் செளரி: கதமபி ஸஹஸ்ரேண - சிரஸாம்
ஹர: ஸம்ஷுத்யைநம் பஜதி பஸிதோ தூலந -விதிம் (2)
*தமிழாக்கம்:*
தாயுன்றன் பாதத் துகளினைக் கொண்டு
சதுர்முகன் உலகினைப் படைக்க
தூயதோர் ஆதி சேடன துருவில்
சுடர்முடி ஆயிரம் கொண்ட
மாயவன் உன்றன் மலரடித் துகளாம்
மாபெரு முலகுகள் சுமக்க
நாயகன் சிவனும் மேனியி லதனை
நலமுறப் பூசியே மகிழ்வான்.


*சகல கலையும் அமையும்*
சமஸ்கிருதம்
அவித்யானா - மந்தஸ்திமிர- மிஹிர - த்வீப - நகரீ
ஜடானாம் சைதன்ய -ஸ்தபக - மகரந்த -ஸ்ருதிஜரீ
தரித்ராணாம் - சிந்தாமணி -குண நிகா ஜன்மஜலதெள
நிமக்னானாம் தம்ஷ்ட்ரா முரரிபு - வராஹஸ்ய பவதி (3)
*தமிழாக்கம்:*
அறிவிலார் உளத்தே அகத்திருள் மடிய
அருணநல் உதயமாய்த் தோன்றும்
செறிந்திடு கற்பக மலர் மகரந்தம்
தேர்ந்த நல் ஞானமாய் இலகும்
வறியவர் துயர் துடைத்திடும் சிந்தா
மணியென விளங்கிடும், ஆழி
பிறவினின் றெடுக்க முராரியின் வராகப்
பிறையெயி றாகுமத் துகளே!

*பயநிவர்த்தி ரோக நிவர்த்தி*
சமஸ்கிருதம்
த்வதன்ய: பாணிப்யா - மபயவரதோ தைவதகண:
த்வமேகா நைவாசி ப்ரகடித - வராாபீத்யபிநயா
பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்சாஸமதிகம்
சரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபுணெள (4)
*தமிழாக்கம்:*
விஞ்சையே புரியும் திருவடியுடையாய்
வேறுள தெய்வங்கள் எல்லாம்
அஞ்சுவோர் தமக்கு அஸ்தமே காட்டி
அபயமே தருவதற் கழைக்கும்
மஞ்சுபா ஷிணியே நீயெதும் காட்டி
மனிதரை அழைத்திலை எனினும்
தஞ்சமென் றுந்தன் தாளினை அடைந்தார்
சகலமும் பெற்றுவாழ்ந் திடுவார்.

*குடும்ப ஒற்றுமை நிலவும்*
சமஸ்கிருதம்
ஹரிஸ்-த்வா-மராத். ப்ரணத -ஜன செளபாக்ய - ஜனனீம்
புரா நரீ பூத்வா புரரிபுமபி ஷோப -மன்யத்
ஸ்மரோஸ்பி த்வாம் நத்வா ரதி -நயன- லேஹ்யன வபுஷா
முனீனா -மப்- யந்த- ப்ரவதி ஹி மோஹாய மஹேதாம் (5)
*தமிழாக்கம்:*
மாந்தருக்கே செளபாக்கிய மருள்வோய்
மாலுனைப் பூசனை புரிந்து
போந்துதன் எழிலார் மோகினி வடிவா
புராரியும் மயங்கிடப் புரிந்தாள்
ஏந்திநின் பாதம் போற்றிய காமன்
இரதியும் மயங்கெழில் வெய்தி
சாந்தமார் முனிவர் தம்மையும் மயக்கும்
சதுரனாய் ஆயின னன்றே.

நன்றி...........