skip to main |
skip to sidebar
ராமேஸ்வரம் கோயிலில் தீர்த்தமாடுவதின் பலன்....
பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம்
கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும்.
இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலனும் தரப்பட்டுள்ளது. தீர்த்தமும் பலனும்: 1.மகாலட்சுமி தீர்த்தம்: (செல்வவளம்)
2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக
இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மாவின் பத்தினி) 3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை (இவளும் பிரம்மாவின் பத்தினி) 4. சரஸ்வதி தீர்த்தம்: (கல்வி அபிவிருத்தி) 5. சங்கு தீர்த்தம்: (வாழ்க்கை வசதி அதிகரிப்பு) 6. சக்கர தீர்த்தம்: (மனஉறுதி பெறுதல்) 7. சேது மாதவ தீர்த்தம்: (தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்). 8. நள தீர்த்தம், 9. நீல தீர்த்தம், 10.கவய தீர்த்தம், 11.கவாட்ச தீர்த்தம், 12. கந்தமாதன தீர்த்தம்: (எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்). 13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்,(பாவங்கள் விலகுதல்) 14. கங்கா தீர்த்தம், 15. யமுனை தீர்த்தம், 16. கயா தீர்த்தம், 17: சர்வ தீர்த்தம்: (எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்) 18. சிவ தீர்த்தம்: (சகல பீடைகளும் ஒழிதல்) 19. சத்யாமிர்த தீர்த்தம்: (ஆயுள் விருத்தி) 20. சந்திர தீர்த்தம்: (கலையார்வம் பெருகுதல்) 21. சூரிய தீர்த்தம்: (முதன்மை ஸ்தானம் அடைதல்) 22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை)