Powered By Blogger

24 மே 2013

சக்தி ரசமணி செய்முறை எப்படி??


அபூர்வ சக்தி ரசமணி செய்முறை எப்படி?? 
Photo: அபூர்வ சக்தி ரசமணி செய்முறை எப்படி?? ( பாகம் 01 )

சிவன் சொத்து குலநாசம் என்பார்கள். அதாவது சிவன் சொத்தினை அபகரித்து அனுபவிப்பவர்களது குலம் நாசமாகும் என்பது இதன் பொருளாகும். இது உலகில் பொதுவாழ்வில் சிவன்;கோவில் சொத்தினை அபகரித்து அனுபவிப்பார்களது குலத்தினை நாசம் செய்யும் என்று பொருள் கொள்ளப்படுகிறது. 

இது சரிதான் என்றாலும், இந்தப் பழமொழியில் உள்ள மறைவான பொருள் வேறு ஒன்றும் உள்ளது. சிவனார் வீரியம், சிவனார் விந்து என்ற பெயர்கள் பாதரசத்திற்கு உண்டு. அத்தகைய பாதரசத்தினை சிவனது சொத்தினை பயன்படுத்துபவர்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்பதே மறைபொருளாகும். அவர்களது குலம் எப்படி நாசமாகும் என்பதை இந்தப் கட்டுரையை முழுமையாகப் படிக்கும்போது உங்களுக்குப் புரியும்.

பாதரசத்தினை மருந்துக்கோ, இரசவாதத்திற்கோ பயன்படுத்தும் முன்பு அதன் தோஷங்களை நீக்குவதும், சட்டை எனப்படும் வேறு உலோகக் கலப்புக்களை நீக்குவதும் அவசியமாகும். பாதரசத்தில் எட்டுவகையான தோஷங்கள் உண்டு. அதேபோல் ஏழுவகையான சட்டைகள் உண்டு. 

இவற்றை முறைப்படி நீக்கிய பின்னரே இரசத்தினைப் பயன்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் பலவித தீமைகளுக்கும், நோய்களுக்கும் ஆளாக வேண்டியிருக்கும். எட்டுவகையான தோஷங்கள், அவற்றினால் உண்டாகும் நோய்களையும் முதலில் காண்போம்....

தொடரும்..

சிவன் சொத்து குலநாசம் என்பார்கள். அதாவது சிவன் சொத்தினை அபகரித்து அனுபவிப்பவர்களது குலம் நாசமாகும் என்பது இதன் பொருளாகும். இது உலகில் பொதுவாழ்வில் சிவன்;கோவில் சொத்தினை அபகரித்து அனுபவிப்பார்களது குலத்தினை நாசம் செய்யும் என்று பொருள் கொள்ளப்படுகிறது.

இது சரிதான் என்றாலும், இந்தப் பழமொழியில் உள்ள மறைவான பொருள் வேறு ஒன்றும் உள்ளது. சிவனார் வீரியம், சிவனார் விந்து என்ற பெயர்கள் பாதரசத்திற்கு உண்டு. அத்தகைய பாதரசத்தினை சிவனது சொத்தினை பயன்படுத்துபவர்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்பதே மறைபொருளாகும். அவர்களது குலம் எப்படி நாசமாகும் என்பதை இந்தப் கட்டுரையை முழுமையாகப் படிக்கும்போது உங்களுக்குப் புரியும்.

பாதரசத்தினை மருந்துக்கோ, இரசவாதத்திற்கோ பயன்படுத்தும் முன்பு அதன் தோஷங்களை நீக்குவதும், சட்டை எனப்படும் வேறு உலோகக் கலப்புக்களை நீக்குவதும் அவசியமாகும். பாதரசத்தில் எட்டுவகையான தோஷங்கள் உண்டு. அதேபோல் ஏழுவகையான சட்டைகள் உண்டு.

இவற்றை முறைப்படி நீக்கிய பின்னரே இரசத்தினைப் பயன்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் பலவித தீமைகளுக்கும், நோய்களுக்கும் ஆளாக வேண்டியிருக்கும். எட்டுவகையான தோஷங்கள், அவற்றினால் உண்டாகும் நோய்களையும் முதலில் காண்போம்...
அபூர்வ சக்தி ரசமணி செய்முறை எப்படி??

எட்டுவிதமான தோஷங்கள்

1. உண்பீனம் - தாங்க இயலாத வயிற்றுநோயினைத் தரக்கூடிய தோஷமாகும் இது.

2. கௌடில்யம் - தலைசம்பந்தமான நோய்கள், தலைக்குத்தல், ஒற்றைத்தலைவலி, மண்டையிடி போன்ற நோய்களை இந்த தோஷம் உண்டாக்கும்.

3. அனவர்த்தம் - மூளை சம்பந்தமான நோய்கள், பைத்தியம், மயக்கம், வாய்ப்பிதற்றல் போன்றவற்றை இந்த தோஷம் உருவாக்கும்.

4. சண்டத்வம் - சன்னியினால் உண்டாகக்கூடிய உடற்கோளாறுகளை இந்த தோஷம் உண்டாக்கும்.

5. பங்குத்வம் - பெருநோய் என்றழைக்கப்படும் குஷ்டம் மற்றும் தீராத தாகம் போன்ற நோய்களை இந்த தோஷம் ஏற்படுத்தும்.

6. சங்கரம் - பயம் படபடப்பு இவைகளை உண்டாக்கி மனபாதிப்புகளை உண்டாக்குதல் மற்றும் உடலிலுள்ள ஏழுவித தாதுக்களையும் பலமிழக்கச் செய்தல், வீரியத்தின் தன்மையை வீணாக்குதல் போன்றவற்றை இந்த தோஷம் செய்துவிடும். ஏழுவித தாதுக்குறைபாடும், வீரியத்தின் குறைபாடும் அவரது வாரிசு – வம்ச வளர்ச்சியை பாதிக்கும். அல்லது வாரிசு இல்லாத மலட்டுத்தன்மையை உருவாக்கிவிடும். இதைத்தான் பெரியோர் மறைமுகமாக சிவன் சொத்து குலநாசம் (வாரிசு நாசம்) என்று கூறினார்கள்.

7. சமலத்வம் - பலவித சுரங்கள், கிறுகிறுப்பு போன்ற நோய்களை இந்த தோஷம் உண்டாக்கும்.

8. சவிவிஷத்வம் - உடல் நடுக்கம், உடல் இளைத்தல், இரைப்பு நோய் போன்றவற்றை இந்த தோஷம் ஏற்படுத்தும்.

ஏழுவிதமான சட்டைகள்

1. நாகம் - நாகம் எனும் சட்டை கழற்றப்படாத இரசத்தைப் பயன்படுத்தும்போது அது மூலநோயை உண்டாக்கிவிடும்.

2. வங்கம் - வங்க சட்டை கழற்றாத இரசம் பெருநோய் எனும் குஷ்ட நோயை ஏற்படுத்தும்.

3. அக்கினி – அக்கின சட்டை கழற்றப்படாத இரசம் உடலில் தோல்நோயை உண்டுபண்ணும்.

4. மலம் - மலம் என்னும் சட்டை கழற்றப்படாத பாதரசத்தைப் பயன்படுத்துமபோது அறிவாற்றல் பாதிப்பு ஞாபகமறதி எனும் நினைவாற்றல் குறைபாடு உருவாகும்.

5. விடம் - விடம் என்ற சட்டை கழற்றப் பெறாத பாதரசத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு அந்த இரசம் மரணத்தை உண்டுபண்ணிவிடும்.

6. கிரி – கிரிசட்டை கழற்றாத ரசம் சாட்டியத்தை உண்டாக்கும்.

7. சபலம் - சபலச்சட்டை கழற்றப்படாத இரசம் உடலின் வீரியத்தில் குறைபாட்டை உண்டாக்கும்.

இந்த குறைபாடுகளை நீக்குவது உள்ளுக்கு உண்ணக்கூடிய இரச மருந்துகளுக்கான கட்டுப்பாடு என நினைக்க வேண்டாம். உடலில் மணியாக அணிந்து பயன்பெற நினைப்பவர்களுக்கும் இதுவே கட்டுப்பாடாகும். அதுமட்டுமல்லாமல் மணியைத் தயாரிப்பவர்களுக்கும் இது பொருந்தும். முறைப்படி சுத்தி செய்யாத இரசத்தை எந்தவிதத்தில் பயன்படுத்தினாலும் முன்கண்ட பாதிப்புகள் சிறதுசிறிதாக உடலில், மனத்தில் ஏற்பட்டு மெல்லமெல்ல வளர்ந்து சம்பந்தப்பட்டவர்களை பெரிய அளவில் பாதித்துவிடும். எனவே இரசத்தைக்கொண்டு இரசவாதம் செய்ய நினைப்பவர்கள் சரியான குருவிடம் நேர்முகமாக இருந்து முறையாகப் பயின்று இரசவாதத்தில் ஈடுபடவேண்டும்.


அபூர்வ சக்தி ரசமணி செய்முறை எப்படி?? 
 இரசத்திலுள்ளகு றைபாடுகளை நீக்குவது உள்ளுக்கு உண்ணக்கூடிய இரச மருந்துகளுக்கான கட்டுப்பாடு என நினைக்க வேண்டாம். உடலில் மணியாக அணிந்து பயன்பெற நினைப்பவர்களுக்கும் இதுவே கட்டுப்பாடாகும். அதுமட்டுமல்லாமல் மணியைத் தயாரிப்பவர்களுக்கும் இது பொருந்தும். முறைப்படி சுத்தி செய்யாத இரசத்தை எந்தவிதத்தில் பயன்படுத்தினாலும் முன்கண்ட பாதிப்புகள் சிறதுசிறிதாக உடலில், மனத்தில் ஏற்பட்டு மெல்லமெல்ல வளர்ந்து சம்பந்தப்பட்டவர்களை பெரிய அளவில் பாதித்துவிடும். எனவே இரசத்தைக்கொண்டு இரசவாதம் செய்ய நினைப்பவர்கள் சரியான குருவிடம் நேர்முகமாக இருந்து முறையாகப் பயின்று இரசவாதத்தில் ஈடுபடவேண்டும்.

எட்டுவகையான தோஷங்களும், ஏழுவகையான சட்டைகளும் சரியானபடி நீக்கப்படாவிட்டால் என்னென்ன விதமான நோய்களை உண்டாக்குமென பார்த்தீர்கள். அவற்றில் ஒருசில நோய்களுக்கு ஒருவர் ஆட்பட்டாலே அவர் நிலைமை மிகவும் பரிதாபகரமானதாக ஆகிவிடும். அதனால்தான் சிவன்சொத்து குலநாசம் என்று சொல்லப்பட்டது. இதனை முழுமையாக அறியாமல் சிலர் இரசமணி பயிற்சி, இரசவாத பயிற்சி என நடத்தி தான் பெற்ற அறைகுறை அறிவை அதில் மேலும் அறைகுறையாகச் சொல்லித்தந்து

'குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி
குருடும் குருடும் குழிவிழு மாறே' – என்ற சித்தர் வாக்குப்படி வீணாகிக் கொண்டுள்ளனர். (மற்றவர்களையும் வீணாக்கிக் கொண்டுள்ளனர்).

தன்னிடம் பயிற்சிக்கு வருபவர்கள் மூலமாக தாங்கள் பயிற்சி எடுத்துக் (கற்றுக்) கொள்கிறார்கள். இரசவாதத்தில் ஈடுபட நினைப்பவர்கள் அதன் அவசியத்தை முதலில் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். அத்துடன் மேற்கண்ட நொய் சம்பந்தமான எச்சரிக்கை வழிமுறைகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும். அனைத்திற்கும் மேலாக ஒழுக்கமான, உண்மையான குருவைத் தேர்ந்தெடுப்பதில் மிகமிக கவனமாக இருக்கவேண்டும். வெறும் வாய் வார்த்தைகளை நம்பாமல் செயல்பாட்டில் உண்மை, ஒழுக்கம் உள்ளதா என கவனித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் பெரியோர் சொன்ன சிவன் சொத்து குலநாசம் என்ற வாக்குப் பலித்துவிடும்.