Powered By Blogger

20 செப்டம்பர் 2013

மண்பானை சமையலும், இன்றைய சமையலும்...



40 வருடங்களுக்கு முன், இயற்கை விவசாய முறைப்படி கெமிக்கல் பூச்சிக்கொல்லி, பூஞ்சான் கொல்லி போன்றவைகளின் உபயோகம் குறைந்திருந்தது.

பேருந்து வசதியில்லாத காலகட்டத்தில் ஒரு கிராமத்தில் விளையும் காய்கறிகளை அந்தந்த கிராமத்திலேயே விற்று விடுவதால் கீரை மற்றும் காய்கறிகளின் உபயோகம் அதிகமாக இருந்தது. மலிவு விலையில் கிடைத்ததால் மக்கள் அதிகமாக உபயோகப்படுத்தினர்.

வீட்டு தோட்டத்தின் மூலமும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை எந்தவித கெமிக்கலும் இல்லாமல் வீணாகும் தண்ணீரை வைத்து பயிரிட்டனர் மற்றும் சாப்பிட்டு வந்தனர்.எந்த ஒரு திருவிழா மற்றும் விஷேங்களில் காய்கறிகளை மதியம் சாப்பாடிற்கு பயன்படுத்துவார்கள். விஷேங்கள் 3 முதல் 1 வாரம் வரை நடப்பதால், உணவுகளில் கூட்டு, பொறியல், மசியல், மற்றும் அவியல் என காய்கறிகளின் உபயோகம் அதிகமாக இருக்கும்.

கொய்யா,வாழைப்பழம், வாழைத்தண்டு, வாழைப்பூ மற்றும் கீரை வகைகளின் உபயோகம் அதிகமாக இருப்பதற்கு காரணம் பெண்கள் பெரும்பாலும் 80% வேலைக்கு செல்வதில்லை எனவே அவர்களுக்கு நிறைய நேரம் கிடைப்பதால், இந்த மாதிரியான காய்கறிகளை சுத்தப்படுத்துவது எளிதாக இருந்தது. இதன் மூலம் அவர்களுக்கு வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் மற்றும் நார்ச்சத்தும் கிடைத்தன.

மண்பானை சமையலில், கீரைகளை, திறந்த நிலையில் வேகவைக்கும் போது, அதிலுள்ள வேண்டாத மூலக்கூறுகள் வெளியேறுவதால், கீரையில் வாசனையும், ருசியும் கூடியது.விருந்தினருக்கு காய்கறிகள் மூலமாக தயாரிக்கப்பட்ட சூப்பை கொடுப்பது பழக்கத்திலிருந்ததால், ஒரளவு உயிர்ச்சத்துக்களும், தாதுப் பொருட்களும் கிடைத்தன.

தற்போது கீரைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் உபயோகம்

தற்போது காய்கறிகள் மற்றும் பழங்களின் உபயோகம் அதிகமாக இருந்தாலும், அவை விளைவிக்கப்பட் இடங்கள் பெரும்பாலும் செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மற்றும் கெமிக்கல் மருந்துகள் உபயோகப்படுத்தப்பட்டவையேயாகும். ஏன்? சாக்கடைகளில் கூட உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஆண் மற்றும் பெண்கள், இருவருமே வேலைக்குச் செல்வதால், கீரை வகைகளை சமைப்பது, வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமேயாகும். சிலர் வீடுகளில் கீரையை மாதத்திற்கு ஒரு முறைதான் சமைக்கின்றனர்.


//பச்சைக் காய்கறிகளை சாப்பிடும் போது, வைட்டமின் சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன என எண்ணி உண்கின்றனர். ஆனால் கொழுப்பால் கரையும் உயிர்ச்சத்துக்கான ஏ.டி,ஈ, மற்றும் கே சத்துக்கள் கொழுப்புச்சத்து சிறிதேனும் உணவில் இருந்தால் தான், இந்த சத்துக்களை கிரகிக்க முடியும் என்பதை அறியாமல் உள்ளனர். எனவே காரட், மற்ற முளைகட்டிய பருப்பு வகைகளை சிறிது தயிர் சேர்த்து சேலட் ஆக சாப்பிடும் போது உயிர்ச்சத்துக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. என்பதை அறிய வேண்டும்.//

விஷேங்கள் மற்றும் திருவிழாக்காலங்களில், தற்போது, ரிசப்சன் என்ற பெயரில், ஒரு நேரத்திற்கு சாப்பாடு, டிபனாக போடுவதால், காய்கறிகளின் உபயோகம் குறைகின்றது.பழங்கள், கீரைவகைகள் மற்றும் காய்கறிகளின் உபயோகம் குறைந்து, பாஸ்ட் புட் என்ற வகையில் தானியங்கள் மற்றும் கொழுப்பு சத்துக்களின் உபயோகம் அதிகரித்துள்ளது.

கீரைகளின் தண்டுகளை முன்னோர்கள் மாதிரி உபயோகப்படுத்தாமல், வெறுமனே கீரைத் தழைகளை மட்டுமே உபயோகப்படுத்துவதால் நார்ச்சத்து கிடைப்பது குறைகின்றது.