Powered By Blogger

17 டிசம்பர் 2012

மறைக்கப் பட்ட வரலாற்று உண்மை



மறைக்கப் பட்ட வரலாற்று உண்மை !

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் ? இந்தியர்களே நன்றி மறப்பது நன்றன்று !!!
இந்தியாவிற்கு சுதந்திரம் அடைய காரணமானவர் மாவீரன் சுபாஷ் சந்திரபோஸ் தான் .
அவரது அர்ப்பணிப்பும் தியாகமும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டியவை திட்டமிட்டு மறைக்க பட்டுவிட்டது .
இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யாரோ ?
அந்த பேரையும் புகழையும் அனுபவிப்பது யாரோ ?

சுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு .
சுருக்கமாக : அகிம்சை முறையில் போராடி கொண்டு இருந்த காந்தியிடம் சந்திரபோஸ் சொன்னார் . அகிம்சை முறையில் போராடினால் பல ஆண்டுகளாக இந்த போராட்டம் இழுத்து கொண்டே போகும் . கோடிகணக்கான இந்தியர்களை வெறும் இருபதாயிரம் வெள்ளையனைக் கொண்ட ராணுவம் அடிமை படுத்தி வைத்து இருக்கிறாது . ஏன் அந்த ராணுவத்தை அடித்து விரட்ட கூடாது . அவர்களை நான் ஆயுத ரீதியாக எதிர்கொள்ள திட்ட மிட்டு இருக்கிறேன் . உங்களின் கருத்து என்ன என்று காந்தியிடம் கேட்ட போது அகிம்சையை போதிக்கும் நான் இதை ஒருநாளும் ஏற்று கொள்ள மாட்டேன் என்று சொன்னார் . இருவருக்கும் நிறைய கருத்து மோதல் வந்த பின்னர் சந்திரபோஸ் அவர்கள் தனித்து போராட தயாராகினார் .

முதல் கட்டமாக தமிழ்நாடுக்கு வந்தார் . வந்து துடிப்பான இளைஞ்சர்களை சந்தித்து . வெள்ளையனை நாம் ஆயுத ரீதியாக தான் எதிர்கொள்ள வேண்டும் அதற்காக நாம் ராணுவ கட்டமைப்பை உருவாக்க வேண்டும் . என்று இளைஞர்களிடம் பிரச்சாரம் செய்தார் . பிறகு இதே பிரச்சாரத்தை இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கும் சென்று இளைஞ்சர்களின் ஆதரவை திரட்டினார் . ஆனால் அது அவருக்கு தோல்வியிலே முடிந்தது யாரும் ஆயுதம் எடுத்து போராட முன் வரவில்லை மீண்டும் தமிழகம் வந்த போது .

தமிழகத்தில் உள்ள ஆயிர கணக்கான இளைஞர்கள்
சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் போராட்டதிற்கு ஆதரவளித்தார்கள் . அந்த இளைஞர்களுக் கெல்லாம் மறைமுகமாக பயிற்சி அளிக்கப்பட்டது . தமிழகத்தில் காந்தியின் ஆதரவாளர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து கொண்டே போனது . தமிழர்கள் சுபாஷ்சந்திரபோசின் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு ராணுவத்தில் இணைய ஆரம்பித்தார்கள் .

அப்போது சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் ஆயுத புரட்சி ஒன்று ஆரம்பித்து உள்ளார்கள் என்று வெள்ளையர்களுக்கு தெரியவர . இவர்களை எல்லாம் வெள்ளையர்கள் வேட்டையாட ஆரம்பித்துள்ளார்கள் .

சந்திரபோஸின் இயக்கத்தில் பெரும் தமிழ் இளைஞர்கள் இணைந்து கொண்டதை அறிந்த காந்தியின் ஆதரவாளர்கள் . சுபாஷ் சந்திரபோசை காட்டி கொடுக்கவும் ஆரம்பித்தார்கள். அதனால் அவரால் இந்தியாவில் இருந்துகொண்டு செயல்பட முடியாமல் போனது . வெள்ளையர்களிடம் இருந்து தப்பித்து சுபாஷ்சந்திரபோஸ் வெளிநாடுக்கு சென்றார் .

சில வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து தனது போராட்டத்தின் ஆதரவை திரட்டினார் . ஒவ்வொரு நாடாக சென்று போருக்கான ஆயுத தளவாடங்களை ஹிட்லர் மூலம் சேகரித்தார் . எல்லாம் தாயாரான பின்பு இந்தியாவில் இருக்கும் வெள்ளையர்களின் ராணுவ முகாம்களின் எண்ணிக்கை எங்கே இருக்கிறது எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று உளவு பார்த்து தகவல் அறிந்து கொண்ட பின்னர் .

தமிழ் நாட்டில் இருக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கு தகவல் அனுப்பினார் . நான் வெளிநாட்டில் மிகப்பெரிய ராணுவ கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறேன் . இந்த ராணுவத்தில் இணைந்து நமது நாட்டு விடுதலைக்காக ஆயுதம் எடுத்து போராட விரும்புபவர்கள் . என்னுடன் இணைந்து கொள்ளலாம் என்று தகவல் அனுப்பி இருந்தார். இந்தியா முழுவதும் இந்த தகவல் பரவியது . இதை அறிந்த தமிழக தேச பற்றாளர்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் படகு மூலம் வெளிநாட்டுக்கு செல்ல ஆரம்பிதார்கள் .

அங்கே எல்லோருக்கும் போர்ப் பயற்சி அளிக்கப்பட்டது . அப்போது போராளிகளிடம் சுபாஷ்சந்திரபோஸ் பேசினார் . எமது தேசத்தில் வெறும் இருபது ஆயிரம் வெள்ளையனின் ராணுவம் இருக்கிறது . நாம் இங்கு மிகப்பெரிய ராணுவ கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறோம் . அவர்களை நாம் கப்பல் மூலம் சென்று டெல்லி வரை தாக்க போகிறோம் டெல்லியில் தான் வெள்ளையனின் முழு பலமும் இருக்கிறது எனவே டெல்லி வரை நாம் சென்று தாக்க போகிறோம் என்று சொன்னார் . ஆனால் இந்த ராணுவத்தில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பது குறிப்பிட தக்கது .

ஒரு பக்கம் காந்தியின் அகிம்சை போராட்டம் நடந்து கொண்டிருந்தது . சுபாஷ்சந்திரபோஸ் திட்டமிட்டபடி யுத்த ஆயுத கப்பல்கள் மூலம் சென்று டெல்லி வரை வெள்ளையர்களின் ராணுவத்தை அடித்தார்கள் . அப்போது வெள்ளையர்கள் பாரிய உயிரிழப்புக்களை சந்தித்தார்கள் . வெள்ளையர்களுக்கு வெளிநாட்டில் இருந்து வரும் ஆயுத உதவிகளை தடுத்தார்கள் முக்கியமான கடல்வழி பாதை சுபாஷ் சந்திர போஸின் கட்டுபாட்டுக்குள் வந்தது . அதனால் தொடர்ந்து வெள்ளையர்களால் யுத்தம் செய்யஇயலாமல் ஆயுத பற்றாகுறை வந்தது. பொருளாதார பிரச்சனையும் அவர்களுக்கு வந்தது. தொடர்ந்து அவர்கள் இந்தியாவில் இருப்பது பற்றி கேள்விகுறியானது .

சுபாஷ்சந்திரபோஸ் ராணுவத்தோடு நடந்து கொண்டிருக்கும் சண்டையில் வெள்ளையர்கள் தோல்வி அடைந்து கொண்டே வந்தார்கள். இந்த தோல்வியை அவர்களால் ஒப்பு கொள்ள முடியவில்லை. அதனால் வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தார்கள் .
ஆனால் இந்தியா முழுவதும் சுபாஷ்சந்திரபோஸ் அவர்களின் ராணுவ போராட்டம் தெரியவந்தது .

அதனால் காந்தி வழியில் போராடி கொண்டிருந்தவர்களுள் பெரும்பாலானோர் சந்திரபோஸ் அவர்களின் பின்னால் செல்ல ஆரம்பித்தார்கள். இதனால் வெள்ளையர்களுக்கு தொடர்ந்து இந்தியாவில் இருக்க முடியாத நிலைமை ஏற்ப்பட்டது . ஆயுத போராட்டத்தை காந்தி அவர்கள் கடுமையாக எதிர்த்து வந்தார் சுபாஷ் சந்திர போஸ் மக்களை தவறான வழியில் கொண்டு செல்கிறார் என்றும் கூறி வந்தார் .

காந்தியின் ஆதரவாளர்களால் சுபாஷ்சந்திரபோஸ் காட்டி கொடுக்க பட்டார் . அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள் வெள்ளையர்கள் . ஆனால் சிறையில் வேலை செய்தவர்களின் உதவியுடன் சுபாஷ் சந்திர போஸ் தப்பித்து வந்தார் . அதன் பிறகு
ஆயுத போராட்டம் கடும் தீவிரம் அடைந்து வந்தது
வெள்ளையர்கள் வெளியேறும் நிலைமையும் வந்தது .


ஆனால் நாங்கள் ராணுவ ரீதியாக தோற்கடித்து இந்தியாவில் விரட்டியடிக்க பட்டோம் என்று வந்து விடக் கூடாது என்பதற்காக . அப்படி ஒரு அவமானம் வந்து விட கூடாது என்பதற்காக காந்தியை நாடினார்கள் வெள்ளையர்கள் .

வெள்ளையர்கள் அகிம்சைரீதியாக போராடும் காந்தியை சந்தித்து நாங்கள் உங்கள் அகிம்சை போராட்டத்தால் உங்களுக்கு சுதந்திரம் கொடுக்க போகிறோம் நாங்கள் இந்தியாவை விட்டு போக போகிறோம் என்று சொன்னார்கள் . காந்தியின் அகிம்சை பெயரை சொல்லி வெள்ளையன் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்து விட்டு வெளியேறினான் .

ஆனால் தற்போது இந்திய அரசாங்கமும் இந்திய மக்களும் சுபாஷ்சந்திரபோஸை மறந்து விட்டார்கள் . அவரின் மகத்தான போராட்ட வரலாற்றை திட்ட மிட்டு மறைத்து விட்டார்கள். காரணம் காந்தியின் அகிம்சை போராட்டம் பாதித்து விடும் இந்த வரலாறு மறைந்து விடும் என்பதற்காக .

இந்தியர்களே தமிழர்களே நன்றி மறப்பது நன்றன்று.. எனவே இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த சுபாஷ்சந்திரபோஸ் அவர்களுக்கு எங்கள் வீர வணக்கம் இந்நாளில் அந்த வீரனை நினைவு கொள்வோம்.

அருணாசல சிவன்

செயசெய அருணாத்திரி சிவய நம ...
செயசெய அருணாத்திரி மசிவயந ...
செயசெய அருணாத்திரி நமசிவய திருமூலா ...
செயசெய அருணாத்திரி யநமசிவ ...

செயசெய அருணாத்திரி வயநமசி ...
செயசெய அருணாத் திரி சிவய நமஸ்த்து என மாறி ...
செயசெய அருணாத் திரி தனின் விழி வைத்து ...
அர கர சரணாத்திரி என உருகி ...
செயசெய குரு பாக்கியம் என மருவி சுடர் தாளை ...
சிவசிவ சரணாத் திரிசெய செயென ...
சரண் மிசை தொழுது ஏத்திய சுவை பெருக ...
திருவடி சிவ வாக்கிய கடல் அமுதைக் குடியேனோ ...
செயசெய சரணாத் திரி என முநிவர் கணம் ...
இது வினை காத்திடும் என மருவ ...
செட முடி மலை போற்று அவுணர்கள் அவிய சுடும் வேலா ...
திரு முடி அடி பார்த்திடும் என இருவர்க்கு ...
அடி தலை தெரியாப்படி நிண அருண சிவ சுடர் ...
சிகி நாட்டவன் இரு செவியில் புகல்வோனே ...
செயசெய சரணாத் திரி எனும் அடியெற்கு ...
இரு வினை பொடியாக்கிய சுடர் வெளியில் ...
திரு நடம் இது பார்த்திடும் என மகிழ் பொன் குரு நாதா ...
திகழ் கிளி மொழி பால் சுவை இதழ் அமுத ...
குற மகள் முலை மேல் புது மணம் மருவி ...
சிவகிரி அருணாத்திரி தலம் மகிழ் பொன் பெருமாளே. ...

அஜயஜெய அருணாசலா, சிவயநம,
அஜயஜெய அருணாசலா, மசிவயந,
அஜயஜெய அருணாசலா, நமசிவய, மூலப் பொருளே,
அஜயஜெய அருணாசலா, யநமசிவ,
அஜயஜெய அருணாசலா, வயநமசி,
அஜயஜெய அருணாசலா, சிவயநமஸ்த்து என்று மாறி மாறிச் செபித்து,
ஜெயஜெய என்று கூறி அருணாசலத்தில் கண்ணை வைத்து,
ஹர ஹர திருவடி மலையே (சிவ மலையே) என்று கூறித் தியானித்து,
ஜெய ஜெய என்னும் இந்த மந்திரம் எங்கள் குரு தந்த பாக்கியம் என்று என் உள்ளம் பொருந்தி, பேரொளியாக விளங்கும் திருவடியை
சிவசிவ திருவடி மலையே ஜெயஜெய எனப் புகழ்ந்து,
திருவடி (சிவமலை) யின் மீது வீழ்ந்து தொழுது போற்றிய இன்பம் பெருக
அந்தத் திருவடியின் (ஆண்டவனது) சிவ மந்திரமாகிய பாற்கடலில் இருந்து கிடைத்த அமுதம்போன்ற இன்பரசத்தைப் பருகி மகிழேனோ?
ஜெய ஜெய திருவடி மலையே என்று முனிவர்களின் கூட்டங்கள்
இத் திருமலை வினையினின்றும் நம்மைக் காத்திடும் என்று கூடிப் பொருந்திட,
தங்கள் உடலையும் முடியையும் கிரெளஞ்சம், ஏழு குலகிரிகள் என்னும் மலைகள் காப்பாற்றுவதாக நினைத்த அசுரர்கள் மடிந்து விழச்செய்து சுட்டெரித்த வேலாயுதனே,
திருமுடியையும் திருவடியையும் கண்டு பிடியுங்கள் எனக் கூறி திருமால், பிரமன் ஆகிய இருவருக்கும்
அடியும் முடியும் தெரியாதவண்ணம் நின்ற செந்நிறச் சிவ சுடராகிய
நெருப்புக் கண்ணை உடைய சிவபெருமானுடைய இரண்டு காதுகளிலும் (பிரணவ மந்திரத்தை) உபதேசம் செய்தவனே,
ஜெயஜெய திருவடி மலையே (சிவமலையே) எனத் துதிக்கின்ற அடியேனுக்கு,
எனது (நல்வினை, தீவினை ஆகிய) இரு வினைகளையும் பொடியாக்கிய ஒளி வெளியில்
திருநடனம் இதோ பார்ப்பாயாக எனக் கூறி மகிழ்ந்திடும் அழகிய குரு நாதனே,
விளங்கும் கிளி மொழி போலவும், பாலின் சுவை போலவும், வாயிதழின் ஊறல் அமுதம் போலவும் அமைந்த
குறப் பெண்ணாகிய வள்ளியின் மார்பின் மீது உள்ள புது மணத்தைச் சுகித்து,
சிவ மலையாகிய அருணாசலத் தலத்தில் மகிழ்கின்ற அழகிய பெருமாளே.

சிவபெருமான்

சிவபெருமான்

 கருத்திற்கு எட்டாத,
வண்ணமில்லாத,
குணமில்லாத,

அறியமுடியாப் பொருளாய்,
எங்கும் நீக்கமற நிறைந்துள்ளவராய்,
அழியா சோதியாய் அமைந்துள்ளவர் சிவபெருமான்.

அவர் அனைத்து ஆன்மாக்களிலும் ஆணவம் மட்டும் நிலையாக இருப்பதை அறிந்தார். அதனை அகற்ற அருள் செய்தார். அதனால் ஞானத்தை கொடுத்து அதன் மூலமாக ஆணவம், கன்மம், மாயையை அகற்றி இறுதியில் தூய்மையான தன்னை வந்து அடையும்படி செய்தார். எனவே ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், மறைத்தல், அருளல் என ஐந்து வகையானத் தொழில்களைச் செய்து வந்தார்.ஊழிக்காலத்தில் உலகிலுள்ள அனைத்து உயிரிகளும் தன்னிடம் ஒடுங்க, தன் தேவியும் அவரிடம் ஒடுங்கி விடுவார். இவர் மட்டுமே அழியாமல் இருப்பவர் என ஆகமங்களும் வேதங்களும் கூறுகின்றன.

இவர் எத்தனை ஊழிக்காலங்கள் வந்தாலும் அனைத்தும்
இவரிடமே ஆரம்பிக்கின்றன,
இவரிடமே முடிகின்றன.
இவர் தனியானவர் முதன்மையானவர்.
இவரிமிருந்தே அனைத்து விதமான சக்திகளும் பிறக்கின்றன.
இவரிடமே தஞ்சமடைகின்றன.
இவரை வணங்கியே அனைத்து தேவர், மூர்த்திகளும் அனைத்து வகையான செல்வங்களையும் பெற்றனர்.
இவர் உலகின் முதன்மையானவராவர்.

லிங்கம் விளக்கம்

லிங்கம் விளக்கம்: நம்முடைய புராணங்களும், வேதங்களும் பரசிவத்தை கீழ்கண்டவாறு விவரிக்கின்றது. .

மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களும் இல்லாதது. மனம்,சொல்,செயல் இவற்றிற்க்கு மேல் வேறொரு <உயர்வான நிலை இல்லை எனுமளவிற்கு உயர்ந்தது. உருவமற்றது. ஆகவே இன்னதென நம்மால் சுட்டிக்காட்ட இயலாதது. அதுவே அனைத்துமானது, பற்பல குணாதிசயங்களைக் கொண்டது. நிறமில்லாதது, அழிவென்பதே இல்

லாதது, ஈரேழு உலகங்களும் தோன்ற, அழிய காரணமாயிருப்பது, இதுதான் எனக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நிலையை நமக்கு கொடுக்காதது. இத்தகைய நம் அனைவரையும் இயக்க வைக்கும் சக்தியை நாம் பரமசிவம் என்றால் எல்லோரும் அறிந்தது என பொருள் படும்.

மேற்சொன்னவாறு ஐம்புலனில்லாத எட்டாத நிலையைக் கொண்ட, இதற்கு மேல் வேறொரு உயர்ந்த நிலையினை சுட்டிக்காட்ட முடியாத, உலகம் தோன்ற, அழிய காரணமான இதனை உருவம் உள்ளது, அதாவது சகளம் என்றும், உருவமற்றது அதாவது நிட்களம் என்றும் பிரிக்கலாம். மேற்ச்சொன்ன சகலநிட்கள நிலையையே நாம் லிங்கம் என்போம். லிங்கம் சிவரூபம் அதாவது மேலேயுள்ளது. அது பொருந்தியிருக்கும் பீடம் சக்தி வடிவமாகும். பொதுவாக லிங்கத்தை ஞான சக்தியின் மறுவடிவமாக கொள்ளலாம். இத்தகைய ஞான சக்தியின் மறுவடிவமான லிங்க உருவமே சிவபெருமானின் உடலாகும். லிங்கம் மூவகைப்படும் . அவ்வியக்தம், வியக்தம், வியக்தாவியக்கம். இதில் கை, முகம் வெளிப்படாமல் இருப்பது அவ்வியக்தம், வெளிப்படுவது வியக்தம். அருவுருவத் திருமேனியுடையது வியக்தாவியக்தம். சிவலிங்கத்தின் உருண்டையாக இருக்கும் பகுதி ருத்ரபாகம் என்றழைக்கப்படும். பீடத்தின் கீழாக உள்ள நான்கு மூலையும் பிரம்ம பாகம் என்றழைக்கப்படும். பீடத்தில் லிங்கம் பொருந்தியுள்ள எட்டு மூலையும் திருமால் பாகம் என்றழைக்கப்படும். ருத்ரபாகம் ஆணாகவும், திருமால் பாகம் பெண்ணாகவும் பிரமபாகம் பேடு எனவும் குறிக்கப்படும்.

கன்ம சாதாக்கியம் என்பதற்கேற்ப லிங்கத்தின் நடுவே சதாசிவனும், மேற்கே ஈசனும், வடக்கே பிரம்மனும், தெற்கே திருமாலும், கிழக்கே ஈசனும் அமைந்திருக்கின்றனர். இத்தகைய சிறப்பு பெற்ற லிங்கத்தைப் பற்றி மகாலிங்க தலம் எனும் சிறப்புப் பெற்ற ஊர் மயிலாடுதுறை அருகே உள்ள இடைமருதூர் ஆகும். இங்கு சிவபெருமான் தானே லிங்கம் அமைத்து, தானே பூஜித்து, பூஜைக்குறிய வழிமுறைகளை வகுத்தும் தந்துள்ளார். இங்கு காவிரி நதி வில்வத்தால் சிவனைப் பூஜித்தாள். நம்மிடமுள்ள மும்மலங்களை அகற்றும் வல்லமையுடையவர் இவர். பிரமஹத்தி தோஷ பரிகார தலமாகும். வில்வார்ச்சனையும், தயிர் அன்ன நைவேத்தியமும் செய்தால் மூளை, மனம் சம்மந்தப்பட்டவை தீரும். அக உடல் தூய்மையடையும். இறைவன் பெயர் மகாலிங்கேஸ்வரர். இறைவி பெயர் பெருநலமுலையம்மையார் என்பதாகும்.

முகலிங்கம்

முகலிங்க மூர்த்தி

சிவலிங்கத்திற்கென தனியானதொரு கீர்த்தி உண்டு எனலாம். சிவலிங்கத்தில் முகம் இருந்தால் நாம் அதை முகலிங்கம் என்போம். அத்தகைய முகலிங்கம் நான்கு வகைப்படும். அவை ஆட்யம், அநாட்யம், சுரேட்டியம், சர்வசமம் என்பனவையாகும். இதில் ஆடயம் என்பது 1001 லிங்கமுடையது. சுரேட்டியம் என்பது 108 லிங்கமுடையது. அநாட்டிய , சுரேட்டிய லிங்கங்கள் திருமுகங்களைப் பெறாதவையாகும்.சர்வசமம் என்பது ஐந்து முக வேதங்களைப் பெறும். ஈசானம், தத்புருடம், அகோரகம், சத்யோஜாதம், வாமம் என ஐந்தும் அடங்கும். முகலிங்கம் எதை விளக்குகிறது எனில் விளக்கும் ஒளியும் போல பிரிக்க முடியாத இறைவன் உள்ளார் என்று விளக்குகிறது. பிரம்ம, விஷ்ணு, ருத்ர, மகேஸ்வர, சதாசிவமே முகலிங்கம் எனப்படுகிறது. இந்த ஐவரும் ஐந்தொழில்களை நடத்துகின்றவர். இவற்றிற்கு ஆதார சக்தியாக உள்ளவன் இறைவன் அவனையே நாம் முகலிங்கத்தின் மூலமாக தரிசிக்க முடியும்.

முகலிங்க மூர்த்தியை தரிசிக்க நமக்கு மூன்று இடங்கள் அமைந்துள்ளது.

1. திருவக்கரை
2. கச்சபேஸ்வரர்
3. கொட்டையூர்

இதில் திருவக்கரையில் அமைந்துள்ள சங்கரமௌலீஸ்வரர் கோயிலில் முகலிங்கமூர்த்தி சிறப்பு பெற்றது. எப்படியெனில் சதுரமான அடி பாகத்தின் மீது அமைந்துள்ள வட்ட வடிவமான ஆவுடையாரின் மேல் மும்முகத்துடன் மூலவர் காட்சிக்கொடுக்கிறார். இங்குள்ள கோயில் தீர்த்தத்தில் நீராடி வில்வத்தால் அர்ச்சிக்க விரோதிகள் ஒழிந்து நட்பு பாராட்டுவர், இல்லையெனில் சிவனின் கட்டளைக்குக் கீழ்ப்படியும் வக்கிர காளியம்மன் அவர்களை கண்டிப்பாள். என்று நம்பிக்கை நிலவுகிறது. மேலும் பிரதோஷ காலங்களில் தும்பைப் பூ அர்ச்சனையும், சுத்த அன்னம் நைவேத்தியமும் செய்ய நல்வாழ்வு கிட்டும் என்பது உறுதி. மேலும் காஞ்சியிலுள்ள கச்சபேஸ்வரர் கோயிலிலும் முகலிங்கம் உள்ளது. மற்றொன்று கும்பகோணம் அருகே அமைந்துள்ள கொட்டையூரில் உள்ளது. இங்குள்ள முகலிங்க மூர்த்தி மிகுந்த சக்தி வாய்ந்தவர். அவரை சக்கரையால் அபிஷேகம் செய்தால் அனைத்திலும் ஜெயம் உண்டாகும் என்பது ஐதீகம்.

சிவன் - ஐந்து முகங்கள்



சிவன் தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம், ஈசானம் என்கிற ஐந்து முகங்களைக் கொண்டவர்.

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்கிற ஐந்து தொழில்களையும் செய்பவர். திருநீறு, ருத்ராக்ஷம், பஞ்சாக்ஷரம் ஆகிரயவற்றில் விருப்பமுடையவர். ருத்ரம், சமகம் முதலான மகாமந்திரகளால் மனம் மகிழ்பவர். கோபமான வடிவில் ருத்ரனாகவும், சாந்தமான வடிவில் தக்ஷிணாமூர்த்தியாகவும் திகழ்பவர்.

சிவன
ுக்கு அவதாரங்கள் இல்லை என்றாலும், காரியார்த்த காரணமாக உருவங்களைக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இவற்றில் தக்ஷனை கொல்வதற்காக வீரபத்திரர்; தாருகவனத்து ரிஷிகளின் கர்வத்தை அடக்க பிட்சாடண மூர்த்தி; மார்க்கண்டேயனுக்காக யமனைக் கொல்ல காலசம்ஹாரமூர்த்தி; பிரம்மாவைத் தண்டிக்க பைரவர்; ஞான வடிவாக அம்பலம் தன்னில் ஆனந்த நடமாடும் தில்லைக் கூத்தன் நடராஜ வடிவம் - இப்படியாக பல வடிவங்களில் சிவனை தரிசித்து மகிழ்ந்திட ஏதுவாகிறது. பதஞ்சலி முதலான முனிவர்கள் தரிசித்து மகிந்த குஞ்சித பாதம் தில்லை சிற்சபேசனின் பொற்பாதமன்றோ!

இதய ஆகாசம் - அதை தகராகாசம் என்பார்கள் - வெளியே வான்வெளி ஆகாசம் போலவே விரிந்து பரந்தது இந்த இதய ஆகாசமும். பரமாகாச சொரூபியான பரமன், ஆன்ம சிற்றணுவிலும் தகராகாத்திலும் திகழ்கிறார். "த்" என உச்சரிக்கையில், நுனிநாக்கு மேற்பல் அடியைத் தீண்டி நிற்பதுபோல, அகமதில் இறையதை உணர்த்தப்பெறும் இடம் தகராகாசம் ஆகும். "த"கரம் எனும் மெய்யெழுத்து, தமிழ் நெடுங்கணக்கில் ஏழாவது வரிசையில் இருப்பதுபோல், ஆறறிவுக்கும் மேற்பட்ட ஏழாவது அறிவு - மெய்யறிவு இந்த தகராகாசத்தில் சித்தியாகின்றதோ! தகரகன நடனபதி என்றும் தகராலய மூர்த்தி என்றும் வழங்கப்படுபவன் நதிப்புனை ஈசன். ஈசனின் திருவருளால் வள்ளாலாரெனும் அருட்கொடைவள்ளல் பெருமான் அருட்பெரும்ஜோதி அகவலதில் தான் பெற்ற காட்சியனுபவத்தை "உபய பக்கங்களும் ஒன்றெனக் காட்டிய அபய சிற்சபையில் அருட்பெரும்ஜோதி" எனப்பாடி மகிழ்கின்றார்.

சிவபெருமான் கோலங்கள்

சிவபெருமானுக்கு போகநிலை, வேகநிலை, யோகநிலை என்று மூன்று விதமான கோலங்கள் உண்டு.

மனைவி மக்களுடன் வீடு வாசல் என்று வாழும் வாழ்க்கையே போக வாழ்க்கை. இந்த விதத்தில் இறைவனும் கல்யாண சுந்தரனாக, உமா மகேஸ்வரராக அருள் செய்கிறார்.

தீமைகளைப் போக்கும் விதத்தில் சம்ஹார மூர்த்தியாக அவர் வேகவடிவமும் எடுக்கிறார். கஜசம்ஹாரர், மன்மத தகன மூர்த்தி, ருத்திர மூர்த்தி என்ற வடிவங்களில் தீமைகளைப்

போக்குகிறார்.

மிக உயர்ந்த நிலை ஞானநிலை. ஞானமூர்த்தியாக வரும்போது மவுனமே பிரதானம். இதுவே தென்முகக்கடவுளான தெட்சிணாமூர்த்தி ஆகும்.

இந்த மூன்று கோலங்களையும் ஒருசேர அருளுவதே நடராஜர் வடிவாகும்.

அதாவது, உல்லாசமாக தேவியுடனும், கோபத்துடன் ருத்ரமூர்த்தியாக சம்ஹார தாண்டவமும், பெருங்கூட்டத்துடன் ஹாஸ்யமாகவும் இவர் ஆடுகிறார். இவரது ஆட்டத்தில் நவரசங்களும் உண்டு.

இந்நடனத்தின் போது படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் (உறக்கத்தின் போது உணர்வற்று இறந்தவனைப் போல் நாம் மாறி விடுகிறோம். அந்நேரத்தில் நம் உயிரைப் பாதுகாப்பது இறைவனே. இதையே "மறைத்தல்' தொழில் என்பர்) அருளல் என்னும் ஐந்தொழில்களையும் செய்து, இந்த உலகத்தை இயக்குகிறார்.

சிவன் காயத்ரி மந்திரம்

துன்பங்கள் நீங்க சிவன் காயத்ரி மந்திரம்
 


ஓம் தத்புருஷாய ....வித்மஹே மஹாதேவாய
தீமஹி தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சதாசிவாய ......வித்மஹே ஜடாதராய
தீமஹி தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் பஞ்சவக்த்ராய .வித்மஹே அதிசுத்தாய
தீமஹி தன்னோ ருத்ரஹ்... ப்ரசோதயாத்

ஓம் கௌரீநாதாய ..வித்மஹே சதாசிவாய
தீமஹி தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்

ஓம் சிவோத்தமாய .வித்மஹே மஹோத்தமாய
தீமஹி தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்

ஓம் தன்மஹேசாய .வித்மஹே வாக்விசித்தாய
தீமஹி தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்

ஓம் மஹாதேவாய ..வித்மஹே ருத்ரமூர்த்யே
தீமஹி தன்னோ சிவ ப்ரசோதயாத்

ஓம் பஸ்மாயுதாய ...வித்மஹே தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய
தீமஹி தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்

ஓம் சூலஹஸ்தாய .வித்மஹே மஹா தேவாய
தீமஹி தன்னோ ஈசஹ் ப்ரசோதயாத்