சிவன் அடியர் துர்க்குணம் பெறார்
அந்த ரத்(து)அமரர் மந்த ரத்தைஒலி அலைக டற்றலைநி றுத்திநின்(று) அழலு றக்கடைய அமுத(ம்) முற்றடைய அதன்இ டத்துவிடம் உண்ணல்ஆர் கந்த ரத்திடைக றுப்பி னார்கவுரி கண்க ளித்திடும்உ றுப்பினார் கால காலகட வூரர் கோலம்அது கண்டு தண்டன்இட வல்லபேர் பந்தம்ஆசைஅவ மாண(ம்) நிந்தனை பழிப்(பு)அ சத்திய(ம்)ம னப்பயம் படிறு வஞ்சனைஅ னர்த்த(ம்) மால்கொடுமை பாப(ம்) மீறுகொலை சஞ்சலம் தொந்த(ம்) மோகம்அவி வேகம் மாசுசதி துயர(ம்) மூட(ம்)முழு வயிரம்நீள் தோத கம்*குடிலம் அவகு ணம்தவறு சோக மும்தவிரு வார்களே. 1 *குடிலம் = வஞ்சகம்சிவன் அடியர் சர்வ போகமும் பெறுவர்
வெங்க யத்(து)உரியர் பங்க யர்க்(கு)அரியர் வேத வாம்பரியர் தீதிலர் *வீதர் +வெம்சுகர்வி நோதர் #கஞ்சுகியர் வெற்றி மால்மகிழும் xஅத்தனார் கங்க ணத்தர்சிவ வெங்க ணத்தவர் **களத்தி சைந்தபெரு நிர்த்தநர் கால காலகட வூரர் கோலம்அது கண்டு தண்டன்இட வல்லபேர் திங்கள் வெண்குடைக விப்ப மும்முரசு சென்று சென்(று)எதிர்ஒ லிப்பஎண் திசைபு ரக்கு(ம்)ம(ன்)னர் கர(ம்)மு கிழ்ப்பைகல் தெவ்வ ரும்திறைஅ ளப்பமேல் மங்கை மார்கவரி கால்அ சைப்பநெடு மகர தோரணவ ளப்பமாய் மத்த யானைமிசை வெற்றி யாளர்என வைய கம்தனில்இ ருப்பரே. 2 *வீதர் = சாந்தர் (வீதர் = சாந்தம்). +வெம் = விரும்பத் தக்க. சுகர் = இன்ப மயமானவர். #கஞ்சுகியர் = பாம்பு அணிந்தவர். xஅத்தன் = அர்த்தன்; பாதியன். **களம் = சபை.அடியார்கள் ருத்ர சாரூபம் பெறுவார்கள்
திருகு வெள்எயிறு வரிநெ டுங்கயிறு செய்ய குஞ்சியொடு நஞ்(சு)எனச் சீறு கோபமுடன் ஏறு தீபவிழி தெறும்இ டிக்குரல்மு ழக்கியே கரு(ம்)ம லைக்குநிகர் எருமை யிற்பெரிய கால்ம லைக்குவடு போல்வரும் கால காலகட வூரர் கோலம்அது கண்டு தண்டன்இட வல்லபேர் பொரு(ம்)ம ழுப்படைஇ லங்கு செஞ்சடை பொருந்து வெள்விடைதி ருந்துவெண் பூதி ஆகம்ஒரு தோகை பாகம்அழல் பொங்கு நாகமணி கங்கணம் பெருகு கங்கைநதி முடிவி ளங்கிவதி பிஞ்சு மாமதிகொ ழுந்தழல் பெய்த பெற்றிபெறும் ஒற்ற நெற்றிவிழி பெற்(று)இ ருப்பர்அடை யாளமே. 3அடியார்கள் பெறும் மேலான பதவிகள்
*பெண்இ டும்(பு)அரிபு ரத்தி னார்ஒலி பிறந்தி டும்பரிபு ரத்தினார் பிறைமு டிக்குள்அணி கங்கை யார்மறைசொல் பிரமன் ஒற்றஅணி oகங்கையார் கண்இ சைந்த(து)ஒரு மூன்றி னார்உரிய கயிலை தாழxநக மூன்றினார் கால காலகட வூரர் கோலம்அது கண்டு தண்டன்இட வல்லபேர் மண்அ ளந்தசர ணர்க்கு(ம்) மென்முளரி மாலை ஆபரண ருக்கும்ஓர் வச்சி ரத்(து)இறைவ ருக்கும் எண்திகிரி ++மாதி ரத்துறைவ ருக்கு(ம்)மேல் விண்ண வர்க்கு(ம்)மிகு பண்ண வர்க்கும்உயர் வித்த கர்க்கு(ம்)மதி ஒத்துவாழ் மெய்த்த வத்துநிலை பெற்ற வர்க்கும்அவர் மேல்இ ருப்பர்அடை யாளமே. 4 *பெண் = பார்வதியின். இடும்ப்பு அரி = துன்பம் துடைத்த. புரத்தினார் = (இடப்பாக) சரீரம் உடையவர். oகம் = தலை; கபாலம். கையார் = கரத்தினார். xநகம் ஊன்றினார் எனப் பிரிக்க. ++மாதிரம் = திசை.அடியவர்கள் மிக நல்லவர்கள்
உரக குண்டலர்நெ ருங்கி விண்(டு)அலர் உறைந்த வண்டுமுரல் கொங்கையார் உத்த ரீகமலர் ஒப்(பு)இ லாதxசிலை ஒத்த நெற்றிமலை மங்கயார் கரக பாலர்திரி சூலர் நீலமணி கண்டர் +புண்டரிக ஆடையார் கால காலகட வூரர் கோலம்அது கண்டு தண்டன்இட வல்லபேர் விரகம் ஆனதில்உ ணங்கி டார்;உலகை வேண்டி ஈனரைவ ணங்கிடார்; வெகுளி ஆனதுசெ றிந்தி டார்; உடலம் வேத நைப்படஅ றிந்திடார்; நரகம் எனப்(து)இனி எய்தி டார்;கருமம் நல்ல(து) அல்ல(து)அவர் செய்திடார்; நமன்இ ருந்ததிசை கண்டி டார்;இறுதி நாளு மே*பருதி ஆவரே. 5 xசிலை = மலை; வில். (இடை நிலைத் தீவகம்). +புண்டரிக ஆடை = புலித்தோல் உடை. *பருதி = ஒளி.திருக்கடவூர் ஸ்தல புராணம்
துலைநி றுக்கும்ஒரு 1வணிக நுக்கு(ம்)2மது சூத நுக்கு(ம்)மநு நீத்சேர் தொல்பு விக்3கரச நுக்கு(ம்) மிக்கதமிழ் சொல்லு(ம்) ஓர்4புலவ நுக்கு(ம்)மெய்க் 5கலைய நுக்கு(ம்)6மதி 7நடுவ நுக்கு(ம்)8முநி காத லற்கும்இனி(து) அருள்செயும் கால காலகடவூர் மேவிவளர் கயிலை போலவரு(ம்) மயில்அனார் முலைஅ ரும்பிவரு 9வனஜ மேஇனிய மொழியும் இன்பமுறு 10பனசமே முத்தை ஒத்தமணி 11மூர லேஅணிகள் மொய்த்த தோள்கள்இள 12வேரலே சிலைஇ ரண்(டு)அனைய புருவ மேஇரதி தேவி ஒத்த(து)அவர் உருவமே திருமி டற்றழகு சங்க மேஅமுது சிந்து(ம்) 13மானடொபு ஜங்கமே. 6 1. வணிகன் - ரத்நாகரன்; இவன் விசாலாந்த்ரம் என்னும் நகரத்து வைச்யன். விரக்தனாய்த் தல யாத்திரை செய்து வருகையில் திருக்கடவூரைத் தரிசித்து, மூன்று நாட்கள் தங்கிப், பின் நான்காம் நாள் இறந்த போது, தேவ விமானத்தில் ஏறித் துறக்கம் புகுந்தவன்; இது திருக்கடவூர் (வடமொழி)த் தல புராண வரலாறு. மேலும், புறாவின் எடைக்கு சமமாகத் தன் உடலின் தசையை எடுத்துத் தராசில் நிறுத்துப் பருந்துக்குக் கொடுத்த சிபிச் சக்கரவர்த்தியையும் "துலை.... வணிகன்" என்னும் தொடர் குறிக்கலாம்; அம்ருத லிங்கத்தைச் சிபிச் சக்கரவர்த்தி வழிபட்டதாகத் தல புராணம் கூறுகிறது; தவிரக் குங்கிலியக் கலயரிடத்தில் தாலியைப் பெற்று அதன் விலைக்கு உரிய குங்கிலியத்தை விற்ற வியாபாரியையும், சிவனடியார் தந்த கோவணத்தின் எடைக்குத் தன் உடைமைகளை எல்லாம் கொடுத்தும் போதாத நிலையில் தானும் மனைவி, மைந்தனுடன் தராசுத் தட்டில் ஏறித், தன்னையும் தந்த வணிகரான அமர்நீதி நாயனாரையும் பொதுவாகக் குறிக்கலாம். 2. மதுசூதன் - திருமால். 3. அரசன் - தல புராணத்தில் குறிக்கப் பெற்றுள்ள ஹேம கிரீடன், ரத்ன கைடன், பிரமதி ராஜன், சந்த்ர பூஷணன், சிபி என்னும் மன்னர்களுள் எவரேனும் ஒருவரைக் குறிக்கலாம். 4. புலவன் - காரிக் கோவை பாடிய காரி நாயனார்; திருக்கடவூர் உய்ய வந்த தேவ நாயனார் எனினுமாம். 5. கலையன் - குங்கிலியக் கலயர். 6. மதி - சந்திரன். 7. நடுவன் - யமன். 8. முனி காதலன் - ம்ருகண்டு முனிவரின் மகனாம் மார்க்கண்டேயன். 9. வனஜம் - தாமரை. 10. பனசம் - பலாப் பழம். 11. மூரல் - புன்சிரிப்பு. 12. வேரல் - மூங்கில். 13. மான் அடி - மான் குளப்படி; புஜங்கம் - பாம்பு(ப்படம்); இவை இரண்டும் அல்குலுக்கு உவமை.சிவனுக்கும் பெண்டிர்க்கும் சிலேஷை
விதிசி ரத்தைஅரி பழியர் அஞ்சுகணை வேள்உ ரத்தைஎரி விழியர்மா மேரு விற்கையினர் நேர்க டுக்கையினர் வேள்வி யிற்பணியும் வள்ளலார் கதிர வன்தனது தந்தம் அம்புவியில் உதிர வன்பொடுபு டைத்திடும் கால காலட வூரர் மேவிவளர் கயிலை போலவரு(ம்) மயில்அனார் மதியில் நஞ்சமும்இ ருக்கு மோ?கரிய மஞ்சு மாலிகைக றுக்குமே? வாள்அ ராஅமுதம் ஊறு மோ?கனக வரையி லேபுளக(ம்) மீறுமோ? *விதிர்க லன்பதி ருத்து மோ?இடையில் விலகு(ம்) மேகலைபொ ருத்துமோ? விளங்கு தோட்+கழையி யக்கு மோ?இனிமை விண்ட சொற்++கழைவி ளக்குமே. 7 *விதிர் - சிதறிய. +கழை - மூங்கில். ++கழை - கரும்பு.கயிலையும் பெண்டிரும்
இகல்அ றிந்துவரு பகையி நார்புரம் எரித்தி டும்கொடிய நகையினார் எரிம ழுப்படைவ லத்தி நார்முடியில் ஏறு(ம்) மீறியஜ லத்தினார் ககன மண்டலமும் உருவி நின்றுவிதி காணொ ணாதஒரு தாணுவார் கால காலகட வூரர் மேவிவளர் கயிலை போலவரு(ம்) மயில்அனார் முகம திக்(கு)உவமை புகலு வார்அளிகள் மொய்கு ழற்(கு)உவமை நுவலுவார் முலையி னுக்(கு)உவமை பகரு வார்இனிய மொழியி னுக்(கு)உவமை மொழிகுவார் நகையி னுக்(கு)உவமை கூறு வார்சரண நடையி னுக்(கு)உவமை பேசுவார் நயம்அ றிந்(து)இளமை சொல்லு வார்எவரும் xநடு(வு)அ றிந்தவர்கள் இல்லையே. 8 xநடு(வு) - இடை; நியாயம்.முகில் விடு தூது
சிறைஅ(ன்)னத்தரெழு நறைவ நத்த்டர்இவர் தின(ம்)ம நத்திடைதி யானமே செய்து தங்கள்வரம் எய்து தற்(கு)உரிய தேவ தேவர்பரி பூரணர் கறைமி டற்(று)அரையர் அறைக டற்கரையர் கதித ரும்குரவர் வெருவிலார் கால காலகட வூரர் கோலம்அது கண்டு கைதொழுது கொண்டல்காள்! எறிதி ரைப்பறைமு ழக்கி அம்கைதனில் இக்கு வார்சிலைவ ணக்கிநீள் இருத லைக்கும்அளி நாண்இ றுக்கிமுன் எழுந்து மீசையை முறுக்கிவேள் வெறிம லர்க்கணைஎ டுத்த தும்கொடிய வேக மாய்அதுதொ டுத்ததும் மெய்யி னிற்படவி டுத்த தும்செவியில் விண்டு விண்டுசொல வேணுமே. 9வணு விடு தூது
குயில்மொ ழிப்புணர்மு லைக்க ரும்கண்ஒரு கோதை பாதிஉறை ஜோதியார் கொக்க ரித்துவரு தக்க னாருயிர் குறைத்(து)எ ழுந்திடு(ம்)ம றத்தினார் கயிலை நாதர்கண நாதர் பூதிஅணி காய நாயகமும் ஆயினார் கால காலகட வூரர் கோலம்அது கண்டு கைதொழுது வண்டுகொள்! அயிலி னும்கொடிய அம்பி னால் மதுர ஆர வாரம்இசை வேயினால் அந்த ரம்தனில்அ சைந்து நின்(று)அடரும் அம்பு லிக்கொடிய தீயினால் துயில்து றந்துமெய்ம றந்து வாடிமிகு சோக மோகம்பி றந்துளம் தோத கப்படவும் நான்அ கப்படுதல் சொல்லு வீர்!மதனை வெல்லவே. 10