வெண்டளை - தனத்தனத்தத் (சந்தம்)
என்று தொழுவேன்? எளியேன்; அளிமுரலும் கொன்றைஅணி தென்கடவூர்க் கோமானஏ! - துன்றும் கனற்பொறிக்கட் பகட்டில்உற்றுக் கறுத்ததெற்குத் திசைக்குள்உக்ரத் தனைச்சினத்திட்(டு) உதைத்தபத்மத் தாள். 1வெண்டளை - தனத்தனத்தம் (சந்தம்)
தொண்டருடன் கூடித் துதித்(து)இரண்டு கண்ஆரக் கண்டுதொழு வேனோ? கடவூரா! - பண்(டு)ஓர் அமு(து)இருக்கும் சிறுகடத்(து)அன்(ற்) அவதரித்(து) அன்பரைமருட்டும் சமனைஏற்றும் பரிபுரச்செந் தாள். 2வெண்டளை - தந்ததத்தம் (சந்தம்)
பற்றி பணிந்து பரவ வரம்தருவாய்! கற்றை சடையாய்! கடவூரா! - வெற்றிநெடும் கொண்டல்ஒக்கும் கண்டசத்தம் கொண்(டு)எதிர்த்(து)அங் கண்கறுக்கும் சண்டனைக்கண்(டு) அன்(று)உதைக்கும் தாள். 3வெண்டளை - தான தானா (சந்தம்)
மேகம் எழுந்ததுபோல் மேல்எழுந்த காலனைக்கண்(டு) ஆகம் தளர்த்துநெஞ்சம் அஞ்சாமுள் - மாகடவூர்ப் பூத நாதா! வேத கீதா! பூவி தாதா தேடு பாதா! மாது பாகா! கால காலா வா! 4வெண்டளை - தானன தானா (சந்தம்)
அன்(று)அயன்மால் காணா அடிமுடியைக் காண்பதற்குத் தெந்திசைக்கோன் என்னதவம் செய்தானோ? - வென்றிதிகழ் ஆடர வாளா! நீ(று)அணி தோளா! ஆதிரை நாளா! மாதும ணாளா! தோடணி காதா! மாகடவூரா! சொல்! 5வெண்டளை - த்ந்ததனத் (சந்தம்)
ஆற்றுமோ? நெஞ்சத்(து) அடங்குமோ? கொண்டமையல் கூற்(று)உதைத்த தென்கடவூர்க் கோமானே! - மாற்(று) உயர்பொற் கும்பமுலைத் திங்கள்நுதற் கொந்(து)அளகப் பெண்கொடி மெய்க்(கு) அம்புதொடுத்(து) அங்கஜன்விட் டால். 6வெண்டளை - தந்தன தந்தம் (சந்தம்)
தென்றல் உலவும் திருக்கடவூர் எம்பெருமான் மன்றல் செறிந்தே மதுஊ(று)உன் - கொன்றைக்க் பொன்பர வும்திண் கொங்கைஇ ரண்டும் புண்பட உந்(து) இன்(பு) அன்புதி ரண்டும் தும்ப(ம்)மி குந்(து)என் பெண்கொடி நெஞ்(சு)அஞ் சும். 7வெண்டளை - தான தந்தா (சந்தம்)
சுடுமோ? இளம்தென்றல்; தோகையின்மேல் அம்பு படுமோ? மெய் வாதைப் படுமோ? - கடவூரா! நீர்அ ணங்கார் வேணி நம்பா! நீல கண்டா! மேனி யின்பால் ஆர்அ ணங்கார் கால சங்கா ரா! 8 *இப்பதிகத்தில் 3, 6, 8 ஆகிய எண்கள் உள்ள பாக்கள் வெண்டளை பிறழாத பின்முடுகு வெண்பாக்காளாகவே உள்ளன.வெண்டளை - தனந்த தந்தம் (சந்தம்)
பாலனுக்கா அன்று பக(டு)ஏறி வந்(து)எதிர்த்த காலனுக்குக் காலா! கடவூரா! - மேலோர் கரும்பு கொண்(டு)அங்(கு) எதிர்ந்து நின்(று)அங் கஜன் பொரும்செஞ் சரங்கள் கண்(டு)உண் மருண்டு நெஞ்சம் கலங்கும் என்றன் மான். 9வெண்டளை - தனன தந்தம் (சந்தம்)
நீதிநெறி வேதியர்கள் நீங்கா மறைபயிலும் ஆதிகட வூரில்உறை அம்மானைப் - பாதம் பரவி அங்கம் புளகுகொண்(டு)எண் படவணங்கும் பொழுது நெஞ்சம் கரவு துஞ்சும் சமனும் அஞ்சும் காண்! 10